________________
padippakam
தேவதாசிகளும் ஹரிஜனங்களும்
பிரேமிள்
தமிழகத்தில் தேவதாசி முறை, மரபின் கட்டாயமாகவும் அவ்வப் போது வறுமையின் கட்டாயமாகவும்தான் தொடர்ந்திருக்கிறது. பொட்டுக்கட்டுதல் என்ற சம்பிரதாயமே தான் தேவதாசியை உரு வமேயன்றி. அது ஒருகுலத்தொழில் அல்ல. கடவுளுக்கு அர்ப்பணிக்க பட்டவள்" என்று விதிப்பதற்காகவே, நெற்றியில் தங்கப்பொட்டு ஒன்று கட்டப்பட்டாலும், இப்படி விதிக்கப்பட்டவளின் கடமை கோவில் சார்ந்த தர்மவான்களின்காமத்தைத் தீர்ப்பதுதான். இந்த பழக்கம் சிந்து நதிப் பள்ளத்தாக்கின் பூர்வ திராவிடர்களிடமே ஆரம் பித்திருக்கலாம். (தர்மானந்த கோலம்பி முதலியோரின் கருத்து.) இதன் மனோவியல் பண்பு, தன்னிடம் வருகிறவனை இறைவனாக தேவதாசி காணவேண்டும் என்பதுதான் அவளிடம் போகிற தர்ம வானின் மனோவியல் பண்பு பற்றி எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இதன் பூர்வ திராவிடக்கூறுப்பற்றி இங்கே பின்னாடி சொல்கிறேன்.
தமிழகத்தில் இரண்டு குறிப்பான குலங்களில் இருந்தே இப்பெண்களை எடுத்து வந்திருக்கிறார்கள் இந்த இரண்டு குலங்களும் இசைவேளாளர், செங்குந்த முதலியார் என்பவை யாகும் . இவர்களுடைய குலத்தொழில் இசையும் பரதமும். இதனாலேயே இவர்களின் மத்தியிலிருந்து பெண்கள் தேவதாசி களாக எடுக்கப்பட்டுள்ளனரேயன்றிதேவதாசி முறைதான் இசையை யும் பரதத்தையும் ஆண்டு வந்தது என்று கூறுவது தவறு. நம் மிடையே தேவதாசிமுறை இருந்ததால், சங்கீதம், பரதம் போன்ற கலைகளை அது வளர்த்ததாகவும், இந்த முறை போனபிறகு, இந்த நுண்கலைகள் தமிழகத்தில் மறைந்து-விட்டதாகவும் கூறும் கோவில் கலாச்சாரம் பற்றிய இந்தியா டுடே'மலர் இந்த தவறையே இழைக் கிறது.
- - நிழல்/5 படிபபகம
***********************
இரண்டு பக்கம் விடுபட்டுள்ளதா ?
***********************
padippakam
...............................
இடங்களில் இன்றும் நடைபெறுகிறது. அங்கெல்லாம் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவு இயக்கத்தைப் போன்று கோவில் கலாச்சாரத்தையும் பகிஷ்கரிக்க எதுவும் நடந்ததில்லை என்பதே இதன் காரணம். அங் கெல்லாம், ஈ வே.ரா தமிழகத்தில் செய்த பணிபரவ சாகித்ய அகாதமி உதவ வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
'ஹரிஜனர்' என்ற காந்தியப் பிரயோகம் நம்மை இழிவு படுத்தும் சொல்' என்று குறிப்பிட்டு தலித்’ என்றே குறிப்பிட வேண்டும் என்று மனித உரிமை முரசு (ஜூன் - ஜூலை 94) இதழ் தலையங்கம் வாதிட்டுள்ளது. இத்தலையங்கத்தில்,இருந்து ஒரு விபரம் : 1929ல் நார்சி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞன் தன்னுடையப் பாடலில் இந்து கோயில்களில் தேவதாசிகளாகப் பொட்டுக் கட்டி விடப்பட்ட நம்மின பெண்களுக்கும் பிறந்த குழந்தை களைக் குறிப்பிடும்போது ஹரிஜன் என்ற சொல்லை பயன் படுத்தி னான். ஹரிஜன் என்றால் கடவுளின் பிள்ளை என்று பொருளாம். தேவதாசி என்ற இழிதொழிலை இந்து மதத்தின் மூலம் நம்மினப் பெண்கள் மீது திணித்த(து) ஆரியம் .."
தேவதாசி முறையின் காரணர்கள் ஆரியர் என்பது கேள்விக் குரியது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அதேசமயத்தில் சிந்து நதிப் பகுதிக்கு வரு முன்பு ஆகியர்கள் நிலையூன்றியிருந்த மெளலப்பத் தேமியப் பகுதிகளில் கோவில் நடனக்காரர்கள் இருந் திருக்கிறார்களே அங்கிருந்து இம்முறையை ஆரியர் கொண்டு வந்திருக்கலாமே என்று வாதிடவும் சிலர் முனையலாம்._ஆனால் சிந்து நதி நாகரிகத்தின் அம்சங்களுள் மிக உயரிய ஆன்மிகப் பயிற்சி முறையாக, சரீரம் சார்ந்த விகாரங்களை மாற்றியமைக்கும் மனோவியல் ரஸவாதமாக இது பயிலப் பட்டிருக்கலாம் என்றுதான் ஒரு ஆழ்ந்த பார்வை காட்டும்.
ஏனெனில் இந்த ரஸவாதம் ஆண் மார்த்திகளிடையே ரகசியக் கல்வி முறையாக இந்தியாவில் காலம் காலமாக நீடித்து வந்திருக் கிறது. இவ்வகையில் இதன் ஆத்மார்த்தம் பிரிந்துபட கோவில் சார்ந்த விஷயமாகத் தொடர்ந்த மேலாதிக்க விபச்சார முறையே தேவதாசி முறை.ஆத்மார்த்தமானதாக மெளலப்பத் தேமிய முறையை காண இடமில்லை. அங்கிருந்து வந்த ஆசியர்களின் நூல்களினது பூர்வ வடிவமான ரிக் வேதத்தின் பகுதிகளை நாம் பார்த்தால், தந்தை வழியற்றுப் பிறந்த வசிஷ்டனை நாம் மறந்துவிடமுடியாது. இவன் தந்தை தெரியாமல் ஒரு பொய்கையில் மின்னல்கள் சூழ்ந்து கருக்கூடி தான் பிறந்ததாக தன்னை அவமதித்த விஸ்வாமித்திர னுக்கு பதில் கூறுகிறான்.
நிழல்/8 படிப்பகம்
padippakam
இந்தக் கட்டத்தில் சிந்து நதியின் பூர்வ மரபும் ஆரியமும் இணைவதாக நிபுணர்கள் கருதுகின்றனர் வசிஷ்டன் சிந்து நதி யின் மரபை அனுசரித்துப் பிறந்த ரிஷியாகக் கொள்ள இங்கே இடம் உண்டு அன்றைய ஆழ்ந்த ஆன்ம விழிப்பின் அடிப்படை யில் பயிலப்பட்ட முறையில் தான் கருக் கொண்டமையை மின்னல் கள் சூழப்பட்டு கருக் கொண்டதாக வசிஷ்டன் கூறியிருக்கிறான் எனலாம். இதில் இழிவு இல்லை அன்றைய அந்த மரபின் உயர் குடியினரே இவர்கள் தாம் என்று கூறத்தான் இது வழி வகுக்கும் ஹரிஜன் என்பதில் இதுவே பொதிந்து நிற்கிறது என்று வாதிக்க இடம் தருவதாகத்தான் பொட்டுக்கட்டப்பட்ட பெண்களின் குழந்தை கள் இவர்கள் என்ற விபரத்தைப் பார்க்கலாம் ஆனால் 'ஹரிஜன்" என்பதற்கு காந்தி இந்த அர்த்தம் தந்து அதைப் பயன் படுத்திய சரித்திரமே இல்லை. சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இவர்கள் எத்தகைய ஆழமான பொறுமை கொண்டவர்கள் என்பதை தென்னாப்பிரிக்காவில் இவர் கள். செய்த சத்தியாகிரக இயக்கம் காந்திக்கும் ஆன்ட்ரூஸிற்கும் காட்டியிருக்கிறது.
இதன் விளைவாக இந்த ஆழத்தைச் சுட்டுவதற்காகவேதான் காந்தி இவர்களை ஹரிஜன் என்றார். மேலும், தென்னாப்பிரிக்கா வில் காந்தியை சத்யாக்ரகத்துக்குத் தூண்டிய காரணி என்ன என் பதைப் பார்த்தாலே, பின்னாடி அம்பேத்கரும் இப்போது தலித் காரர்களும் காந்தியின் ஹரிஜன இயக்கத்தைக் கொச்சைப்படுத்தியே நிராகரிக்கிறார்கள் என உணரலாம். தென்னாப்பிரிக்க அரசு, காந்தி போன்ற உயர்மட்ட ஹிந்துக்கள், ஆப்ரிக்கர்கள், கீழ்மட்ட ஹிந்துக் களாக, தொழிலாளர்களாக அங்கிருந்த தீண்டப்படாதோர் யாவரை யும் ஒரேபட்டிக்குள் அடைத்து, அவர்களிடையே நடக்கும திருமணம் தென்னாப்பிரிக்கச் சட்டப்படி செல்லுபடியாகாது என்று விதித் திருந்தது.
எனவே காந்தி உட்பட ஐரோப்பியரல்லாத எல்லாருமே அந்தச் சட்டத்தின் கண்களில் bastards - தகப்பன் பெயர் தெரியாதவர்கள்தேவடியாப் பசங்க. இதை இப்படி பச்சையாக மேல்மட்டம் கீழ் மட்டம் எல்லாம் உட்பட்ட பகிரங்கத்தில் விளக்கினார் காந்தி சட்டப் படிப்பை முடித்த பின்பு பம்பாயில் ஒரு வழக்காளிக்காக முதன் முதலில் ஆஜரான பழைய காந்தி, பேச்சே எழ முடியாமல் வழக்கை வேறொரு வக்கீலிடம் கொடுத்தவர். அதே காந்தி மேற் படி தென்னாப்பிரிக்க பிரச்சனைக் கட்டத்தில் உலகின் மிகப்பெரிய பேச்சாளிகளுள் ஒருவராகினார் இதன் உந்துதல், ஆதிக்க சக்தியின் முன்னால் அவர் தீண்டத்தகாதோரோடு உணர்ந்த சகோதரத்வம்.
padippakam
அவர்களது தோட்டி வேலையைத் தாமே செய்ததுடன் தமது மனைவியாளையும் அவர் செய்ய வைத்திருக்கிறார். இவ்வளவு தூரம் அவர் தம்மை அவர்களுடன் பிணைத்த பின்னணியில், தமது போதகர்களாகவே அவர்களைக் காந்தி கணித்தார். இந்த மனோ பாவத்துடன் தான் காந்தி தீண்டத்தகாதோரை ஹரிஜன் என்றார்.
இது காந்திய சரித்திரம் என்றும் காந்திய நிறுவனங்களுக்கு அச்சாணியாக கருதப்படும் மனோபாவம் இது. ஆனால் அதிகாரமும் செல்வமும் செல்வர்க்கும் மட்டுமே உயர்நிலை என்ற மனோபாவம் இந்த மனோபாவத்துக்கு எதிரானது. அடக்கத்தின் மூலம் ஆழ்ந்த மனோதர்மங்கள்ை விருத்திசெய்கிற மார்க்கங்களுள் ஒன்று காந்தியம். அதில் குறைபாடுகள் இருந்தால் அவை அதன் வழிமுறைகள் ஒட்டி யவை. நிச்சயமாக அப்பேத்கரிஸ்டுகளும் மனித உரிமை முரசு' ம் கருதுகிற விதமான குறைபாடுகள் அல்ல காந்தியத்தினுடயவை. பார்க்கப்போனால் சுய இனத்துக்கான அதிகார வேட்கைன்யவே முன்வைக்கும் குறைபாடு அம்பேத்க்ரிஸ்த்தில் உண்டு. ஏனெனில் அவரது பிரகடனங்கள் யாவுமே, சுய இனச்சார்பு கொண்டவைதான்.
ஒரு அதிகாரக்கட்டுமானத்தினை இந்த இயக்கம் நிறுவினால் சுய இன் ரீதியாகவே அது சலுகைகளை வழங்குமா? தகுதியை முன்னிறுத்தி அது செயல்படாதா? ஆனால் காந்தியத்தின் அடிப் படை சுய இனச் சார்பு கொண்டதல்ல கரந்தியத்துடன் எல்லா மதத்திற்கும், சித்தாந்தங்களுக்கும் உரிய சிந்தனை த்தெளிவு கொண் டோர் ஒத்துழைத்திருக்கின்றனர் கிறிஸ்துவ பாதிரியான ஆன்ட் ரூஸிலிருந்து மார்க்ளியே சரித்திர நிபுணரான தர்மானந்த கோலம்பி வரை. இவ்வளவு ஆழ்ந்தகன்ற ஒரு இயக்கமாக தலித் இயக்கமோ அம்பேத்கரிலமோ இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் ஹரிஜனா தலித்தா என்ற பிரிவினைப் பேச்சு எழுப்புகிறது. தலித் இயக்க வாதிகள் ஒரு நிறுவனத்தை நடத்தினால், அதில் ஹரிஜன் என்று தன்னை அழைப்பவனை மட்டமாக நடத்துவார்களோ? இந்தக் கேள்விக்கு இடமில்லாமல் இல்லை. ஏனெனில் அம்பேத்கரிலத்தை யும் அதை ஒட்டிய தலித் இயக்கத்தையும் நிராகரித்து தங்களை காந்தி வழியினர் என்றும் ஹரிஜனர் என்றும் கொள்வோர் உள்ளனர்.
இவர்கள் மிகவும் உறுதியான உள்ளம் கொண்டவர்கள். அம் பேத்கரை இவர்கள் நிராகரிப்பதன் முக்கிய காரணம், அவர் தீண் டப்படாதோரை புத்த மதத்தினர் ஆக்கியமை ஆகும் இது இவர் களுடைய கணிப்பில் ஒரு கலாச்சார வன்முறையாக கருதப்படுகிறது. இந்த உள் விபரத்தை தலித் இயக்கம் நேர்கொண்டதாகத் தெரிய வில்லை. சகட்டுமேனிக்கு காந்தி பற்றி அம்பேத்கர் சொன்னவற்றை
நிழல் | 10 படிப்பகம்
padippakam
ஆராயாமல் ஏற்றுக் கொண்டு, ஹரிஜனர்களை தலித்துகள் அந் நியப்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. இவ்விடத்தில் பொட்டுக் கட்டப் பிறந்தவர்கள் பற்றிய வம்ச சரித்திரங்கள் தாம் பொருத்தமாகும். இதைத் தைரியமாக வெட்கமின்றி ஆராய்வது தான் உறுதியான இயக்க லட்சணம்.
தகப்பனார் பெயர் தெரியாதவன் இழிஞன் என்றால், யேசு கிறிஸ்துவை விட இழிஞன் என்று தன்னை வேறு எவனும் சொல்லி விட முடியாது. ஆனால் கிரீஸிலும் பெளத்தத்திலும் பிறந்த ஜன நாயகம், தகப்பனார் பெயர் தெரியாத யேசுவின் மூலம் தான் உல கெங்கும் பரவிற்று. இதன் அதிர்வில் விளைந்தவைதாம் காந்தியமும் ஈ.வெ.ராவிலமும் அம்பேத்காரிசமும் இந்த பின்னணியை சுவாதீனம் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்துத் தலைவர்களான செங் குந்த முதலிகளுடையவும் இசை வேளாளர்களுடையவும் நெருங்கிய உறவுக்காரப் பெண்கள் பொட்டுக்கட்டப்பட்ட விதிக்கு ஆளானதை நாம் இங்கே குறிப்பிட வேண்டும். - -
அதிகாரக் கட்டுமானத்தைப் பிடித்த பிறகு இது வெட்கக் கேடானது என்று மறைக்கப்படுகிறது அப்படியானால் பொட்டுக் கட்டும் மரபு, தேவதாசி முறை, தீண்டாமை எதிலுமே இந்திய சரித்திரத்தில் இருந்ததே இல்லை என்று சொல்வதுதான் இப்படித் தங்கள் சரித்திரத்தை மறைப்பவர்களுடைய சரித்திர உணர்வாக இருக்க வேண்டும். அதாவது பெர்சனல் ஆனாலும் சரி, தேசிய மானாலும் சரி சரித்திரம் சரித்திரமே. இந்த அளவு சரித்திர உணர் வற்ற மனோபாவத்தின் விளைவுதாைே இந்தியாவின் முதல்பட்ச சாபக்கேடு? எனவே பொட்டுக்கட்டப்பட்ட சரித்திரப் பின்னணி உள்ளவர்கள் அதை ஏற்று இன்றைய பிரச்சனையச் சந்திப்பதுதான் வெட்கங்களைத் தாண்டிய ஒரு அச்சமற்ற இயக்கமாகும் அத்தகைய அச்சமின்மை இல்லாதவர்கள் தங்களை தலித் பேந்தர் (சிறுத்தை) இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்வது பரிதாபகரமானது. தகப்பன் பெயர் தெரியாத அடிமை முறையில் பிறந்த அமெரிக்க நீகிரோக்களின் பிரதிநிதி நான் என்று காட்ட, தமது பெயரை MALCOLM X என்று கொண்ட கறுப்பரை இங்கே வணங்குகிறேன்.
படிப்பகம் நிழல்/11
நிழல் 9 படிப்பகம்