Thursday, 24 March 2016

பாதையற்ற உண்மை - ஜே. கிருஷ்ணமூர்த்தி


padippakam
ஜே. கிருஷ்ணமூர்த்தி

பாதையற்ற உண்மை

உண்மை என்பது பாதையற்ற பிரதேசம் என்பதை நான் வலியுறுத்துகிறேன். அதை எந்த மார்க்கத்தின் மூலமும் எந்த மதத்தின் மூலமும் எந்தக் குழுவின் மூலமும் அணுக முடியாது. உண்மை எல்லைகளற்றது; நிர்பந்தங்களற்றது. எனவே அதை எந்த அமைப்பினுள்ளும் ஸ்தாபிக்க முடியாது. எந்த ஒரு பாதை யிலும் மக்களைப் பிணைப்பதுக்கோ வழிநடத்துவதுக்கோ அமைப்புகளை நிறுவுவது தகாது. இதைப் புரிந்துகொண்டால், ஒரு நம்பிக்கையை அமைப்பாக மாற்றுவது எவ்வளவு அசாத்தியம் என்று தெரிய வரும். ஒரு நம்பிக்கை, தனிப்பட்ட விஷயமாதலால், அதை அமைப்பாக்குவது அசாத்தியம், தகாதது. செய்தால், அது மரத்துப்போய் ஜீவனிழக்கிறது. அது ஒரு சித்தாந்தமாகி, ஒரு குழுவாகி, மற்றவர் மீது சுமத்தப்பட வேண்டியதாகிறது. இதைத்தான் உலகெங்கும் யாவரும் செய்ய முயல்கின்றனர். உண்மை ஒடுக்கப்பட்டு, பலமற்றவர்களுக்கும் தற்காலிகமான அதிருப்தியை அடைவோருக்கும் ஒரு விளை யாட்டுப் பொருள் ஆக்கப்படுகிறது. உண்மையை உயர இருந்து கீழே கொண்டுவர முடியாது. தனியாக, தாமாக, ஒவ்வொரு வரும் அதை நோக்கி உயர வேண்டும். மலைச் சிகரத்தைப் பள்ளத்தாக்குக்குக் கொண்டு வரமுடியாது. பள்ளத்தாக்கைக் கடந்து, செங்குத்தான மலைச்சரிவுகளில் ஏறி ஆக வேண்டும்.

உங்கள் அகத்தேயுள்ள மனிதத்துவத்தை விடுவிக்கவோ, வளர்க்கவோ அமைப்புகளினால் தூண்டுதல் தரமுடியாது. உங்களுக்கு வெளியே உள்ள ஒருவரோ, அமைப்பு ஒன்றன் வழி பாட்டு முறைகளோ, லட்சியத்துக்கான பரித்தியாகங்களோ உங்களை விடுவிக்க மாட்டா. எனவே புதிய மதங்களையோ
18 സul D
படிப்பகம்
________________

padippakam
மதக் குழுக்களையோ புதிய சித்தாந்தங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை ஸ்தாபிப்பதிலோ நான் அக்கறை காட்டவில்லை. இதற்கு மாறாக, எனது ஒரே அக்கறை மனிதனது பரிபூரண சுதந்திரமாகும். மனிதனை எல்லாவிதமான வரையறைகளிலுமிருந்து, எல்லாவித அச்சங்களிலுமிருந்து மதத்தின் மேலுள்ள அச்சம், ரட்சணையின் மேலுள்ள அச்சம், ஆன்மீகத்தின் மேலுள்ள அச்சம், அன்பின் மேலுள்ள அச்சம், மரணத்தின் மேலுள்ள அச்சம், ஏன் வாழ்வின் மீதே அவன் கொண்டுள்ள அச்சத்திலுமிருந்து அவன் உடைத்தெறிந்து வெளி வருவதற்கு நான் உதவப் போகிறேன்.

உண்மையான முழுமை, தன்மயத்தின் லயம், எவ்வித சட்டதிட்டமும் அற்றது. அதைக் குழப்பம் என்று மொழி பெயர்க்கக் கூடாது. அது எல்லாச் சட்ட திட்டத்துக்கும் எல்லாக் குழப்பத்துக்கும் மேம்பட்டு நிலவுவது. ஏனெனில் அதுவே யாவற்றுக்கும் வித்து. அதிலிருந்தே எல்லாவிதமான மாற்றங் களும் விளைகின்றன. அதன் மீதே யாவும் தங்கி இருக்கின்றன. அந்தத் தன்மய லயத்தை, உண்மையினை, தன் நிலையினது சமன்பாட்டை, சிருஷ்டியின் ஊற்றை, நீங்கள் நாடுவதாயிருந் தால், தன்மயமாக உள்ள எல்லாரையும் எல்லாவற்றையும் நீங்கள் பேண வேண்டும். அதிலேயே உங்கள் முழு அக்கறையும் இருக்க வேண்டும்.

தன் மயம் என்பது என்ன? நான் என்பது என்ன? நான்' எங்குள்ளது? சிந்தனையில் மனமாக உள்ளது நான் . அன்பினில் உணர்ச்சியாக உள்ளது நான் மனசுக்கும் உணர்ச்சிக்குமிடையே சமன்பாட்டை நிறுவி ஒரு காலாதீதமான லயத்தை நிறுவுவதிலிருந்தே உண்மை மலரும். விளக்கமின்மை யின் விளைவாக, மனசுக்கும் உணர்ச்சிக்கும் இடையே உள்ள போராட்டம் பயமாக விளைகிறது. இந்தப் போராட்டம் பயத்தை விளைவித்து மனசுக்கும் உணர்ச்சிக்குமிடையே விளக்கத்தையும் லயத்தையும் ஏற்படுத்த விடாமல் செய்கிறது. இந்தப் போராட்டத்தினைச் சந்திப்பதை விடுத்து உங்களைச் சுற்றி பொய்மைகளை, கடவுளரை, இடைத்தரகர்களை, ரட்சகர்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள். இவை அச்சத்தி லிருந்து உங்களுக்கு ஆதரவு தரும் விளையாட்டுப் பொம்மைகள்.

அந்த லயத்தை நீங்கள் நிறுவினால், வழிபாடுகள், பிரார்த் தனைகள், இடைத்தரகர்கள், ஆறுதலைத் தேடுதல், எல்லாம்
I_ லயம் 19
படிப்பகம்
________________

padippakam
தேவையற்றவையாகும். அந்த லயத்துக்கு நீங்கள் வருவது ஒரு மலர் இயற்கையாகக் காலையில் மலர்வது போன்று இருக்க வேண்டும்.
அந்த லயத்தின் பரிசுத்த இயக்கத்தை நீங்களே போராடித் தான் அடையவேண்டும்; அதனை இடைவிடா விழிப்புடனும் தன்னுணர்வுடனும் நீங்களே அடைந்தாக வேண்டும்.
மனமும் இதயமும் ஒரே மூலக்கூறினால் ஆனவை. அந்த மூலக்கூறு பரிசுத்தம் பெறுவதற்காக நீங்கள் முயல வேண்டும். அந்த மூலக்கூறாகிய எண்ணமும் அன்பும் களங்கமடையாத வாறு காக்க வேண்டும். மனசினால் எண்ணம் இருமையடையும் போது வரையறையும் துக்கமும் விளைகின்றன. அன்பினில் விருப்பு வெறுப்பு கலக்கும்போது வரையறையும் துக்கமும் விளைகின்றன. மனசையும் இதயத்தையும் வரையறைகளி லிருந்தும் துக்கத்திலிருந்தும் விடுவிக்கும்போது ஆனந்தமும் விடுதலையும் உண்மையும் விளைகின்றன.

(ஐக்கிய அமெரிக்கா முழுவதும் ஒலிபரப்பப்பட்ட ரேடியோ பேச்சு, 1929)
பரிணாமம், இயக்கம், சாதனை
நண்பர்களே , இன்று நாம் பரிணாமம் என்பது பற்றிப் பேசுகிறோம். பரிணாமம் என்பது பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை தனைகளின் தொடர்ச்சியாக உள்ளது. முக்கியமற்றதைத் தவிர்த்து முக்கியமானதைத் தேர்ந்து கொள்ளும் செயல், பரி னாமம் என்று கொள்ளலாம். ஆன்மிக வளர்ச்சி என்பது இவ்விதமாகவே புரித்து கொள்ளப்பட்டுள்ளது.

பரி. மத்தை நாம் சாதனைகளின் தொடர்ச்சியாகக் கருதினால், நமது செயல்களில் பூரணத்துவம் இல்லை என் றாகும். செயல் என்பது மேல் நிலை ஒன்றை நாடும் கீழ் நிலையிலேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இந்தப் பார்வை நம்மைத் தளையிடுகிற பார்வையாகும். நமது செயல்கள் இடைவிடாமல் ஒரு பாதுகாப்பையே நாடுகின்றன. பாதுகாப்பினை நடுவதனடியில் பயமும் பயங்கொண்டு

20 லயம் -
படிப்பகம்
________________

padippakam
உழலும் நான் னும் குடி கொண்டுள்ளன. இதனால் நமது வாழ்வு முழுவதும் வெறும் முயற்சிகளினாலேயே ஆளப் படுகிறது. சுதந்திரமான, முயற்சியற்ற தன்னிகழ்வான செயலின் இயக்கம் பிரவாஹம் இல்லாமயே போய்விடுகிறது.

சாதனை என்பது முடிவுக்கு உட்பட்டது. இயக்கம் என்பதோ காலமற்றது. ஆனால் பரிணாமமோ, இடையறாமல் ஒன்றை மறுத்து இன்னொன்றைத் தேர்ந்து மேலும் மேலும் பெரியதை அடைய நாடுவதாகும். மிக உந்நதமான பேரின்ப நிலை என்பது எவ்வித முயற்சியும் அற்ற ஒரு நிலையாகும். முயற்சி என நான் அர்த்தம் கொள்வது எதை? நம்முள்ளே வெறுமை கொண்ட நிலையில் வெறுமையை, நமது தனிமையை நிரப்புவதற்காகவே முயற்சியில் இறங்குகிறோம். இந்த வெறுமையும் அபூர்ணமுமே முயற்சியின் காரணம். உண்மை யான பிரச்சினை, இந்த வெறுமையை நிரப்புவது எப்படி என்பதல்ல, இந்த வெறுமை எப்படி வந்தது என்பதுதான். ஒன்றை விலக்கி இன்னொன்றைத் தேர்ந்து கொள்ளும். மனோபாவமே வெறுமையின் மூலக்கரு. இந்த வெறுமை நிரப்பப்பட முடியாதது. இதை நிரப்புவதற்காக நாம் செய்யும் முயற்சியானது, வெறுமையின் காரணமாக உள்ள தேர்வு முறையைத்தான் அனுசரிக்கும். ஒன்றை நீத்துஇன்னொன்றைத் தேர்ந்து கொள்ளும் முறையே வெறுமையின் காரணமாதலால் வெறுமையை நீக்கச் செய்யும் முயற்சியும் வெறுமையை நீத்துப் பூரணத்தை நாடும், தேர்வுமுறை ஆக உருவெடுக் கிறது. இது மேலும் வெறுமைக்கே நம்மை இட்டுச் செல்லும். -

தேர்வின் காரணம் விருப்பும் வெறுப்புமாகின்றன. இது எனக்குப் பிடித்தது, அது பிடிக்கவில்லை. இதன் விளைவாக கவர்ச்சியும் எதிர்ப்புமாக மனம் கூறுபடுகிறது. ஒன்றை வெறுத்து இன்னொன்றைத் தேர்ந்து கொண்டதுமே நாம் விரும்பித் தேர்ந்ததை வெறுக்கப் போகிற இன்னொரு நிலையை நோக்கித்தான் போகிறோம். இதுதான் நமது வாழ்க்கை. நீங்கள் இன்று விரும்பியது நாளை வெறுப்பூட்டுகிறது. எனவே தேர்வு என்பது தொடர்ச்சியான புலனுணர்வின் விளை வாகும்.

இருமையின் விளைவே தேர்வு. இது எதிரிடை நிலையினை நீடிக்க வைக்கிறது. முயற்சி இந்தத் தேர்வினை அடையும்
() லயம் 21
படிப்பகம்
________________

padippakam
முறையாகும். எனவே செயல் என்பது நாம் தேர்ந்து கொண் டதைச் சாதிக்க நாடும் நிலை ஒன்றைச் சாதித்ததும் செயலின் இயக்கம் முடிவுறுகிறது. மீண்டும் முயற்சியின் மூலமாக அது இயக்கப்பட வேண்டும், ஆனால் தேர்வு எதுவும் அற்ற நிலையில் செயலின் இயக்க நிலை என்பது காலாதீதமானதாகும். அங்கே முயற்சி இல்லை.
இந்நிலையை அடைய வேண்டுமானால் நீங்கள்.எப்போதும் ஒரு உக்ரமான விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். இது ஒரு பெரும் பிரச்னையினைச் சந்திக்கும்போதே சாத்தியமாகும். ஏதும் பிரச்சினை பிறந்தால் அதை நமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற விதமாகவே தீர்க்க முயற்சிக்கிறோம். இதன் அடியில் உள்ள அபத்தத்தை முழுமனசுடன் உக்ரத்துடன் உணர்ந்தால் விழிப்புநிலை சுதாவாக ஆரம்பிக்கிறது. அந்நிலையில் நீங்கள் தேர்வு செய்ய மாட்டீர்கள். செயலின் இயக்கம் உடனடியாக நிகழ்வு பெறுகிறது. இதை அறிவுபூர்வமாக உட்கார்ந்து நீங்கள் ஆராய முடியாது. ஒரு பெரிய பிரச்சினையின் கனத்தில் தான் இதை நீங்கள் உணரலாம்.
|ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள அல்ப் பைனில் நிகழ்த்திய இரண்டாவது பேச்சு 1933)

கேள்வி பதில்
கேள்வியாளர்
 பாதை பாதையற்ற உண்மை என்ற இருவேறு புத்தகங்கள் ஒருவராலேயே எழுதப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது எப்படி?

கிருஷ்ணமூர்த்தி

 இதில் பிரச்சினையில்லை பாதை: ஆறு வ ருஷங்களுக்கு முன்பு என்னால் எழுதப்பட்டது. பாதை யற்ற உண்மை சமீபத்தியது. பாதை'யை எழுதிய சமயத்தில் வாழ்வை நான் உண்மை, உண்மையின்மை எனப் பாகுபடுத்திப் பார்த்த நிலையில் இருந்தவன். இன்றைய நிலையில் வாழ்வு எனக்குப் பிளவுபட்ட ஒன்றல்ல - ஏனெனில் உண்மை ஒவ்வொரு புல்லிலும், கல்லிலும், இலையிலும், ஒவ்வொரு மனித இதயத் திலும் உள்ளத்திலும் இப்போது நிலவுகிறது. அந்த உண்மைக்
22 லயம் )
படிப்பகம்
________________

padippakam
குப் பாதையில்லை. அன்றாட வாழ்வினைப் பற்றிய விழிப்பின் மூலமே அதை நாம் அடையலாம். அந்த விழிப்பு ஒரு பாதை ുഖ.
கேள் விழிப்பு நிலைபற்றி நான் அறிய விரும்புகிறேன். அதற்குக் கடுமையான முயற்சி தேவையல்லவா? ஒவ்வொரு எண்ணத்தையும் அது எழும்போது முயற்சியுடன் அவதானித் தால் தானே முயற்சியற்ற விழிப்பு நிலை பிறக்கும்?

கிரு . 
ஏன் விழிப்பாயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகி lர்கள்? இப்போதைய நிலை உங்களுக்குத் திருப்தியாக இருந்தால், இப்படியே இருங்களேன். நான் விழிப்பாயிருக்க வேண்டும் என்று சொல்வதென்பது விழிப்பு நிலையை இன்னொரு கட்டுப்பாடாக்கி விடுவதாகும். கட்டுப்பாட்டின் மூலம் நீங்கள் விழிப்படையவே முடியாது. எனவே பெரிய பிரச்சினைகளின் போதுகூட விழிப்படையாமல் துக்கிக்கி lர்கள். செளக்கியமாக இருக்கும்போது கவலையோ பிரச்சினையோ அற்ற நிலையில் அறிவு வாத அடிப்படையில் விழிப்பு நிலை என்ன என்று பார்க்கிறீர்கள். ஆனால் பெரிய பிரச்சினையின் போது அந்தப் பிரச்சினையை அவதானித்தால், அதற்கு உங்கள் மனம் தரும் எதிர்விளைவை சுதாவாக அவதானித்தால், அங்கே விழிப்புநிலை பற்றியபேச்சு இராது. விழிப்பு நிலைதான் இருக்கும். விழிப்புநிலையை ஒரு கட்டுப் பாடாக்கினால் நீங்கள் துக்கம் ஏற்படும்போது அதைச் சந்தித்து அதன் மூலம் உங்களையே சந்தித்து நிற்பதனின்றும் தப்பித்து விடத்தான் முயற்சிப்பீர்கள். இப்படித் துக்கத்திலும் உங்களிடத் திலும் இருந்து தப்பிப்பதற்காகத் தான் நீங்கள் விழிப்பு நிலை: யையும் ஒரு கட்டுப்பாடாக்குகிறீர்கள். இப்படிச் செய்தால் நீங்கள் விழிப்படையப் போவதில்லை.

கேள் : 
பிரச்சாரத்தில் எனக்கு அக்கறை போய்விட்டது. உங்கள் கருத்துக்கள் உட்பட எல்லாக் கருத்துக்களின் பிரச் சாரத்திலும் தான். பிரச்சராத்தால் எவ்வித லாபமுமில்லை என்றே நினைக்கிறேன். மனித முன்னேற்றத்துக்கு எவ்விதம் உதவுவது என்பதில் எனக்குத் தெளிவில்லை. நான் என்ன செய்யட்டும்?
கிரு 
கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிறீர்களா அல்லது உங்கள் அன்றாட வாழ்வையா என்பதைக் கவனியுங்கள்.
எத்தகைய கருத்தாயிருந்தாலும் அதைப் பிரச்சாரம் செய்வது - லயம் 23
படிப்பகம்
________________

padippakam
அர்த்தமற்றது. எவரும் அதைப் பற்றி அக்கறை எடுக்கப் போவதில்லை. உங்களுக்கே அவற்றில் ஆர்வம் குன்றிவிடும். இது அல்லாமல் உயிருடனுள்ள யதார்த்தங்களை, உங்கள் போராட்டங்களை அன்றாட கணங்களின் போராட்டங்களை வெளிப்படுத்துவது பிரச்சாமல்ல. மக்கள் அந்த நிலையிலே உங்களிடம் வருகின்றனரேயன்றி நீங்கள் அவர்களிடம் போவ தில்லை. உங்கள் வாழ்வில் நீங்கள் பெறும் யதார்த்தங்களை யன்றி இன்னொருவருடைய கருத்துக்களையே நீங்கள் பிரச்சாரம் செய் கிறீர்கள். இதனாலேயே உங்களுக்கு அக்கறை போய்விடுகிறது. இதை உணர்ந்தால், அதே கருத்துகள் உங்கள் வாழ்வைப் பாதிக்கவில்லை என்பது புலனாம் உங்கள் கூண்டுக்குள் இன்னொருவரை இழுப்பது கலபம். ஆனால் உண்மையாக வாழ்பவன், ஆர்வத்துடன் போராடு கிறவன் தனது கூண்டுக்குள் பிறரை இழுப்பவனல்லன். அவன் கூண்டுகளை உடைத்தெறிபவன். எத்தகைய சித்தாந்த மும் எனது அக்கறை அல்ல. அவை மனசின் அப்யாசங்கள் தாம். ஆனால் வாழ்வின் சுகந்தத்தை நுகர்ந்து, வளர்ந்து அதன் செல்வத்தை அடைய 占10、 அனுபவங்களிலுடேதான் சென்றாக வேண்டும். இதற்குப் பிரச்சாங்கள் அவசியமல்ல. உங்கள் சொந்த வாழ்வே உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் துக்கத்தின் கூண்டுக்குள்ளிருந்து வெளியேறு கிறீர்கள்.

கேள் குழப்பம் நிறைந்த உலகில் ஒரு தளபதியின் தலைமையின் கீழ் பலர் திரள்வது போன்றதல்ல வாழ்வு' என்று கூறியிருக்கிறீர்கள். இது அன்றாடச் செயல் முறை வாழ்வுக்கும் சேர்த்துக் கூறப்பட்டதா? தீயணைப்பு, பஞ்ச திவாரணம், முதலிய வேலைகளுக்கு குழு ரீதியாகச் செயல் பட்டுத்தானே ஆகவேண்டும்? மரணதண்டனை ஒழிப்பு, அடிமை ஒழிப்பு, மிருகங்களைச் சித்ரவதை செய்வதையும் கொல்வதை பும் ஒழித்தல் - இதற்கெல்லாம் ஒருவருக்கு அயலில் உள்ளவர் களால் மட்டுமே இத்தகையவரென்று தெரிய வருகிற தனிப் பட்டவர்களிடம் பொறுப்பை விட்டால் போதுமா?

கிரு நிச்சயமாக அப்படி அல்ல. நான் சொன்னதை நீங் கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். நிச்சயமின்மை. வேதனை, தனிப்பட்ட வாழ்வின் பொருளை அறியாத இருளில் தடுமாறல்-இவற்றின் விளைவாக, இருக்கிற குழப்பத்தை
நீங்கள் அதிகப்படுத்துகிறீர்கள். குழப்பம் நிறைந்த பலர் குழு
24 ബu1ു []
படிப்பகம்
________________

padippakam
வாகச் சேர்வதால் குழப்பமின்மை வந்துவிடாது. நீங்கள் செய்வதெல்லாம் இதுதான். ஆனால் உங்கள் தனிப்பட்ட அளவில் குழப்பமற்றவராக, அன்புள்ளவராக, பிறரையோ, மிருகங்களையோ சித்ரவதை செய்யாதவராக உள்ளவராக இருந்தால், உங்களைப் போன்றோர் கூடி இயங்குவது தெளி வான விளைவுகளையே ஏற்படுத்தும். வாழ்வின் பொருளைப் புரிந்துகொண்டவர்கள் கூடி இயங்குவது தூய்மையை விளை விக்கும். இதற்காக இந்த நிலை வரும்வரை சும்மா இருக்க வேண்டியதில்லை. ஏதோ ஸ்டேஷனுக்கு வந்து சேர்வது போன்றதல்ல இது. உண்மையை அடைய இடையறாத விழிப்பும் தேர்வும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இங்கே வருடா வருடம் கூடுகிற நீங்கள் ஏன் சிநேகபாவத்துடன்-- அதாவது சமூக ரீதியான மரியாதைச் சிநேகயாவத்துடனல்லஉண்மையான அன்புடன் கூடிச் செயல்படக் கூடாது. தீயணைப் பதற்கு ஒரு குழு வேண்டும். நிச்சயபுத்தி சம்பந்தப்பட்ட விஷய மல்ல இது மிருகங்களின் சித்ரவதை விஷயத்தை எடுத்துக் கொண்டால்-அவற்றுக்கு அக்கறை காட்ட முன்வரும் நீங்கள்' உங்கள் அயலார்கள் மீது கொடுரமான இரக்கமின்மையைக் காட்டக்கூடும். மிருகங்களையும் இயற்கையையும் நேசிப்பது எளிது. அப்படிப்பட்ட பலர், மனிதர்களை வெறுத்து ஒதுக்கு வது எனக்குத் தெரியும். மிருகங்களுக்கு அன்பு காட்டினால் அவை பதிலுக்கு அன்பு காட்டுகின்றன. இது எளிதான ஒரு விஷயம். எளிதானதை மட்டுமே மனிதர்கள் மேற்கொள்கிறார் கள். மனிதர்கள் உங்கள் அன்பை நிராகரிக்கலாம், உங்கள் கருத்துக்களுக்கு மாறானவற்றைச் செய்யலாம்; எனவே அவர் களை நீங்கள் துரத்தில் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய மேலோட்டமான கருணையில் அர்த்தமில்லை. உங்கள் இதயத் திலிருந்து குரூரம் முற்றாக நீக்கப்பட்டுவிட்டதா என்பதில்தான் அர்த்தமுண்டு. பொருள் மீதோ ஆன்மீக விஷயங்களிலோ பேராசை உள்ளவர்களின் இதயங்களிலிருந்து பிறக்கும் கருணை மேலோட்டமானது. தன்மயமற்று உண்மையிலேயே வாழ்வீர்களானால், மகிழ்ச்சி என்பது என்ன என்று அறிவீர் கள். அத்தகைய மனிதன் மிருகங்கள், அயலவர் உட்பட யாவற்றின் மீதும் கருணை கொண்டொழுகுபவன். இதன் விளைவாகவே யுத்தமும் சுரண்டலும் மறைய முடியும். எனவே, முக்கியமான கேள்வி, தனிப்பட்டவராக நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து குரூரத்தை அகற்றிவிட்டீர்களா இல்லையா
என்பதுதான்.
I_ லயம் 25
படிப்பகம்
________________

padippakam
கேள் :
 உண்மையை அறியாவிட்டால் எந்தவிதமான வேலையிலும் சீர்திருத்தத்திலும் வெறும் ஒட்டு வேலைகளைத் தானே ஒருவர் செய்ய முடியும்?
கிரு
 சமூக சேவை ஒர் ஒட்டு வேலை என்பதுதான் எனது பார்வை. ஆனால் அது தவறு என்று நான் கூறவில்லை. அது நிச்சயமாகவே தேவையான ஒன்றுதான். சமூக நிலையைத் திருத்தியமைத்தாக வேண்டும். இது அத்தியாவசியமானது. ஆனால் தவறான கருத்துகளின் அடிப்படையில் புதிய சமூகம் ஒன்று கட்டி எழுப்பப்படுவதைத் தடுப்பதற்கும் சேவையாளர் கள் வேண்டும்.

கேள் 

உங்களிடமிருந்து தொழில் கட்சியினர் பெறக் கூடிய பலன் என்ன? என்று ஒரு முக்கியமான இடதுசாரித் தலைவர் என்னிடம் கேட்டார். உங்கள் பதில் என்ன என்று சில வார்த்தைகளில் கூற முடியுமா?

கிரு 
எந்தக் கட்சியிலும் இல்லாத ஒருவனிடமிருந்து எந்தக் கட்சியும் பலனடைய முடியாது. எனது முதலாவது பதில், வாழ்வு கட்சிகளாகப் பிளவுண்ட ஒன்றல்ல என்ப தாகும். வாழ்வு ஒன்றே. இதனால் யாவருக்கும் சம அளவிலான சந்தர்ப்பம் கிடைத்தாக வேண்டும் ஒரு சிலருக்கோ பன முள்ளவருக்கோ, பிறப்புரிமையுள்ள வர்க்கத்தினருக்கோ மட்டு மின்றி, எல்லோருக்கும் சமமான கந்தர்ப்பம் கிடைத்தாக வேண்டும். இதற்கான சட்ட ஒழுங்குகளை நிலைநிறுத்த உண்மையிலேயே ஒர் அரசு செயல்படுமாயின் அதை அரசு என நாம் வழங்கலாம். அப்போது அது இடதுசாரி அரசுமல்ல, வலதுசாரி அரசுமல்ல. அந்நிலையில் ஒரு பகுதியினரை மட்டு மன்றி எல்லா ஜனங்களையும் அது பாதுகாக்கும். அரசியல் என்பது ஒரு விருட்சத்தின் கிளைகளுள் ஒன்று என்பது எனது அடுத்த ப்தில் ஒரு விவேகி விருட்சத்தின் எந்த ஒரு தனித்த கிளிையிலும் அக்கறை கொண்டவனல்ல. அவன் விருட்சத்தின் வேர்களை புழு அரித்துவிடாமல் பாதுகாப்பவன். அவன் வேர் களையே போஷிப்பவன். இதன் விளைவாக முழு விருட்கமும் மரங்களும் இலைகளும் ஆரோக்கியமடைகின்றன: உயிரும் உத்வேகமும் பெறுகின்றன.
கேள் 
நேற்று நீங்கள், மனிதனது அச்சமே கடவுளை உருவாக்கிற்று என்கிறீர்கள். அப்படியானால் சிருஷ்டிகர்த்தா,
கடவுள் என ஏதும் இல்லையா? நீங்கள் கடவுளைப் பற்றிச்
26 ു []
படிப்பகம்
________________

padippakam
சொல்கிறவை என்னைப் புண்படுத்துகின்றன. கடவுள்தானே வாழ்வு; அன்பு? அல்லது மரத்துப் போன கருத்துகளை மட்டும் தான் நீங்கள் சாடுகிறீர்களா?
கி , ஒரு திட்டத்தை உருவாக்கிய தனிப்பட்ட கடவுள் என்று எதுவும் எனக்குக் கிடையாது. வாழ்வுக்குத் திட்ட மில்லை. மனிதருக்கு ஒரு நிறை நோக்கமுண்டு. இது எந்த மகானாலுமோ கடவுளாலுமோ வகுக்கப்பட்டதல்ல. பெரும் பாலோரின் உள்ளங்களில் இந்தக் கடவுள் ஸ்தாபிதமாகி விட்டவர் - இது இன்னொரு நான் இதை மனிதர் வழிபடு கின்றனர். எனக்கு வாழ்வே எல்லாவற்றையும் எல்லாரையும் சிருஷ்டிக்கும் சக்தியாகும். அந்த வாழ்வு எல்லாவற்றிலும் எல்லாரிலும் வாழ்கிறது. இந்தப் பரிசுத்த வாழ்வை அடைவது தான் மனிதனது நிறை நோக்கம். தனிப்பட்ட உணர்வுகளி லிருந்து விடுபட்டு இந்த வாழ்வை அவன் அடைய வேண்டும். இவ்விதம் வாழ்வைப் பார்த்தால் நீங்கள் யாவற்றையும் யாவரையும் வழிபடுகிறீர்கள். முன்னிலைப்படுத்தப்பட்ட ஏதோ ஒன்றையோ ஒருவரையோ அல்ல. இதிலிருந்துதான் உண்மையான தர்ம நோக்கமும் செய்கையும் பிறக்கும். ஆனால் இதைவிட்டு, இப்போது நீங்கள் கொண்டுள்ள மனோ பாவத்தை நேர்மையுடன் பார்த்தால், உயர்ந்தவர்கள் என நீங்கள் நினைப்பவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறீர்கள், தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் என நீங்கள் நினைப்பவர் களை எவ்வளவு இகழ்வுடன் பார்க்கிறீர்கள் என்று தெரிய வரும.
கேள் : ஒரு ஏழையின் வாழ்வு உங்களுக்கு இருந்ததில்லை. உங்களது பணக்கார நண்பர்களின் துணை எப்போதும் உங் களுக்கு இருந்திருக்கிறது. பாதுகாப்பினை ஒரேயடியாக விட்டு விடும்படி நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்க ளுக்கு பாதுகாப்பே இல்லை. ஒருவர் அனுபவியாததை அவரால் அறிய முடியாது என்று கூறும் நீங்கள் வறுமையை அனுபவியாதவர்; எனவே அதை அறிய முடியாதவர்.
கிரு . இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்பட்டு எனது பதிலைப் பெற்றுள்ள ஒன்று எனினும் இதற்கு மீண்டும் பதில் தருகிறேன். சரீர ரீதியான பாதுகாப்பைத் துறக்க வேண்டும் என்று நான் கூறியதில்லை. அந்தப் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று. மனம் தன்னைத் தானே நிரந்தர மாக்குவதற்காக ஏற்படுத்திக் கொள்கிற மனோரீதியான பாது
() லயம் 27
படிப்பகம்________________

padippakam
காப்புகளே துறக்கப்படவேண்டியவை. நம்மில் ஒவ்வொருவரும் சரீரப் பாதுகாப்பை மட்டுமின்றி மனசின் பாதுகாப்பையும் கூட நாடுகிறோம். மனப்பாதுகாப்புக்காக அதிகாரங்களை நிறுவு கிறோம். இந்த மனப்பாதுகாப்பு வெறும் மாயையினால் ஆனது என உணர்ந்தால், அதை நாடுவது நின்றுவிடும். அப்போது ஒரளவுக்கு சரீரப் பாதுகாப்பு தேவைதான் என்றாலும், அதுகூட அசாத்ய முக்யத்துவம் வாய்ந்த ஒன்றல்ல என்பது விளங்கும். இந்த நிலையில் சரீரப் பாதுகாப்புக்கும் பெரிய முயற்சிகளை நீங்கள் எடுக்க மாட்டீர்கள். உதாரணமாக, தீமையை நிராகரித்துப் புனிதத்தை நீங்கள் நாடும்போது பாதுகாப்பை வேண்டியே அதை நாடுகிறீர்கள். புனிதத்தின் தன்மை அன்றி, உங்கள் பாதுகாப்புத்தான் இங்கே முக்கிய மடைகிறது. என்னைப் பொறுத்தவரை உணர்வும் மனமும் பாதுகாப்பாகத் தங்குகிற கூரை ஏதும் அற்ற நிலைதான் முக்கியமானது. ஏழ்மையை அனுபவியாமல் அதை நான் புரிந்துகொள்வதெப்படி என்கிறீர்கள்எனக்கு மனோரீதியாகவோ சரீரரீதியாகவோஉள்ள பாதுகாப்புகளில் அக்கறையில்லாததால், பிறர் எனக்குத்தருவதை ஏற்கிறேனா, உழைத்து உணர்கிறேனா என்ற பேதம் எனக்கு இல்லை. நான் இந்தப் பிரயாணங் களைச் செய்வதிலும் எனக்கு அக்கறை இல்லை. அழைத்தால் வருகிறேன். அவ்வளவுதான். என்னுடைய தேவைகள் மிகவும் சுருக்கமானவை. உலகத்துச் செல்வமும் வறுமையும் பிரச்னை ஆகாதவிதமாக அவனுடே வாழ்வு பிரவகிக்கிறது. 1929-44) )
தமிழில் பிரேமிள்
28 லயம் )
படிப்பகம்