இசை தேவைப்பட்ட தருணத்தில் இசையொலித்தது
சடங்குகள் தேவைப்பட்ட தருணத்தில் ஆசிரியர் தோன்றினார்,
மாணவர்கள் தேவைப்பட்ட தருணத்தில் தொலைபேசி ஒலித்தது.
கார்கள் தேவைப்பட்ட தருணத்தில் சக்கரங்கள் உருண்டு வந்தன
இடம் தேவைப்பட்ட தருணத்தில் மாளிகைத் தோன்றியது
தழல் தேவைப்பட்ட தருணத்தில் மரம் தோன்றியது
ஆழி தேவைப்பட்ட தருணத்தில் நீர் அதிர்ந்து அலையுற்றது
கடற்கரை தேவைப்பட்ட தருணத்தில் கரை பேராழியை சந்தித்தது
சூரியன் தேவைப்பட்ட தருணத்தில்
கிழக்கே சூரியோதயம் நிகழ்ந்தது.
-Allen Ginsberg-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
இன்று காலை,
குளிர்ந்த தேவாலயத்துள் நுழைந்த போது,
நான் முதலாவதாக சூரியனை தேடினேன்
புறசமயவன் செய்வதுபோலும்,
எந்த குறிப்பிட்ட காரணமுமின்றி ,
ஏனென்றால்
நானும்கூட , ஒரு உயிரனமாய்,
புகழ்தலுக்கான தேவையும்
மானுடனின் புராதன மனவுணர்வை அறிகிறேன்.
ஆகையால்,
மதகுருவை மற்றும் புறசமயவனைப் போல ,
சூரியனது நகர்வுக்கு ஒப்ப .
நானிந்த பண்டைய சடங்கை நிகழ்த்துகிறேன்
ஆயினும்
எப்போதும் அணுக இயலவில்லை
மீண்டும் மிண்டும் ஓளியால் அழிப்புற்று,
காலைப்பொழுதின் பூசைகிண்ணம் முன்பு நிற்கிறேன்,
நானிந்த சாதாரண அப்பத்தை
ஏதோ
இனமறியா புனிதத்துடன் உடைக்கிறேன் .
Paul Murray--
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
If you want to get the plain truth,
Be not concerned with right and wrong ,
The conflict between right and wrong
Is the sickness of the mind.
-Seng Ts'an-
There in your heart
There is something that never changes,
Always a part of
Something that never gets old
That is in your heart.
(George Harrison)
Automatically Translated