Friday 3 July 2015

Li Po- (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்), -Wang Wei- (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)

வாழ்க்கையொரு பெருங்கனவு
எதற்கென நீ கடினமுற உழைக்கிறாய்?

நாள் நெடுக
முன்வாசல் கதவின் புறத்தே
படுத்தபடியே குடிக்கிறேன்


விழிப்புற்று தோட்டத்திலுள்ள
மரங்களினுடாய் மேல் நோக்குற

அங்கொரு பறவை பூக்களில் இசைத்துக் கொண்டிருக்கிறது
பறவையே, இதென்ன பருவம் ?
வசந்தம் !
நானொரு மாங்கோ பறவை
வசந்தத்தின் இன்காற்று என்னை பாட இசைவிக்கிறது.

இப்போது நான் சோகத்தின் வசமுற
மிகு- சோகத்திலாழ்கிறேன்

இன்னமும் என்னிடம் வைன் மீதமிருக்கிறது
நான் இசைக்கிறேன்
மிக உரத்தும்;

பிரகாசித்தெழும் நிலா மேலுறும்வரை
எதன் நிமித்தம் நிலை-பிறழ்தேனென
என்னால் ஞாபகமுற இயலவேயில்லை.

-Li Po-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






எங்கு ஏரி இறுதியுறுகிறதோ,
அங்கவள்,
இத்தருணம் குழலிசைத்து அமர்ந்திருக்கிறாள்.
அந்திமங்கும் தருவாயில் கணவனுக்கு விடையளிக்கிறாள்.
தெளிவிலா-ஏக்கத்திலாழ்ந்து நீரின் குறுக்கே வெறிக்கிறாள்,
நீலமலை பக்கம்
புரளும் வெண்மேகத்தை கவினித்தாழ்கிறாள்.


-Wang Wei-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






நீலம்நிறை நீர்
எரிதணல் நிலா

தென்புறத்து ஏரியில்
அவன் லில்லி மலர்களை சேகரிக்கிறான்


தாமரை பூக்கள்
தாழ்குரலில் குசுகுசுக்க

தனியனான படகுக்காரன்
பெருமூச்செறிகிறான்.

-Li Po-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






have something here;
when you look at it,
it's there.
but when you look for it,
it's not.


What is it ?

-Tzu-te -









நாளுக்கு நாள் முதிர்வதை நம்மளவில் தவிர்க்கவியலாது,
வருடத்தை தொடரும் வருடத்தில்
வசந்ததின் இளமைபூச்சை நம்மளவில் தவிர்க்கவியலாது.
வா!
நமது வைன் கோப்பையை இன்று துய்க்கலாம்
இனி வீழ்ந்த- பூக்களுக்காய் இரங்காதே!


-Wang Wei-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





எனது நடுத்தர வயது முதலாய்
ஆர்வமிகு பெளத்தனாய் இருந்திருக்கிறேன்

நானிப்போது வயது முதிர்ந்து கனிய
இம்மலைக் கிராமத்தில் குடியமைந்தேன்


சில தருணங்களில் மட்டில்லா களியில்
ஒற்றையில் நானே வழியேகினேன்

அங்கு திகைப்பில் சமைந்த இடங்களை
நான் தனியனாய் அறிந்திருக்கிறேன்

ஓடையின் தோற்றுவாயை
நான் ஏறி அடைகிறேன்

அமர்கிறேன்
மேலழுந்து படரும் பனிமூட்டத்தை உன்னிக்கிறேன்

பழுத்த சில தருணங்களின் பூரணத்தில்
வனக்கிழவனை எதிரிட்டிருக்கிறேன்

நாங்கள் உரையாடி, நகைத்திருந்தோம்
வீடு திரும்புதலின் நினைவழித்திருந்தோம்.

-Wang Wei-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






இம்மலைகளில் மறைந்துள்ள ,
எண்ணிறந்த பெளத்த துறவிகள்
சூத்திரங்களை இசைக்கின்றனர் ,
சங்கமித்து தியானிக்கின்றனர,;
தொலைதூர நகரத்தின் சுவரிலிலுறுவோர்,
மலையுச்சியை வெறிக்க,
கவிந்து போர்த்திய வெண் மேகங்களே புலனாகின்றன.


-Wang Wei-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





If you have form'd a Circle to go into,
Go into it yourself & see how would you do.

-William Blake -





Some dance to remember, some dance to forget.....................................

Her mind is Tiffany twisted, she got the Mercedes Benz, uh
She got a lot of pretty, pretty boys that she calls friends
How they dance in the courtyard, sweet summer sweat
Some dance to remember, some dance to forget


So I called up the captain, "Please bring me my wine"


The Eagles-Hotel California (Live Melbourne 2005)-720p DTS.mkv