Wednesday, 22 July 2015

-Rabia al -Basri- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



Aldous Huxley
of sand I had picked up on my hand, when I suddenly saw the exquisite beauty of every little grain of it; instead of being dull, I saw that each particle was made up on a perfect geometrical pattern, with sharp angles, from each of which a brilliant shaft of light was reflected, while each tiny crystal shone like a rainbow. . . . The rays crossed and recrossed, making exquisite patterns of such beauty that they left me breathless. ... Then, suddenly, my consciousness was lighted up from within and I saw in a vivid way how the whole universe was made up of particles of material which, no matter how dull and lifeless they might seem, were nevertheless filled with this intense and vital beauty. For a second or two the whole world appeared as a blaze of glory. When it died down, it left me with something I have never forgotten and which constantly reminds me of the beauty locked up in every minute speck of material around us."
--from "Heaven and Hell" (1954)

6 Likes






"GURU PADMA SIDDHI HUNG


The ultimate mode of being, the ground wherein both we and Guru Rinpoche are primordially inseparable—namely, the selfarisen primordial wisdom, which is subject to no movement of discursive thought—is referred to as Guru. Because deluded perceptions are themselves primordially pure, the path is free from all striving and the fruit is present spontaneously like a lotus in full flower. Therefore [the path itself] is referred to as Padma, or lotus. For the fruit is not something that occurs at a later stage as a result of the practice. In the ultimate expanse, which is selfarisen and spontaneously present, the primordial wisdom of selfawareness is clearly [and already] manifest. This is referred to as Siddhi, or accomplishment. And, although in terms of conceptual distinctions the self-arisen primordial wisdom may be classified as ground, path, and fruit, these three are not different in nature. This is directly perceived by self-cognizing awareness and is indicated by the syllable Hung.


—White Lotus: An Explanation of the Seven-Line Prayer to Guru Padmasambhava, by Jamgon Mipham www.shambhala.com/white-lotus-3725.html

Just as none of us is outside or beyond geography, none of us is completely free from the struggle over geography. That struggle is complex and interesting because it is not only about soldiers and cannons but also about ideas, about forms, about images and imaginings.”
Edward Said, Culture and Imperialism




ஒரு கையில் தீப்பந்தத்தையும்
இன்னொரு கையில் நீர்வாளியையும் ஏந்தியிருக்கிறேன்;
இவைகளைக் கொண்டு
நான் சொர்க்கத்திற்கு தீமூட்டவும்
நரகத்தின் தீ ஜுவாலைகளை அணைக்கப் போகிறேன்.
இறையேகும் யாத்திரீகர்கள் முகத்திரைகளை
கிழித்தெறிந்துவிட்டு
மெய்யான இறையிலக்கை கண்டடையலாம்.


-Rabia al -Basri-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நரகத்தின் அனைத்து வட்டங்களிலுள்ள
எண்ணிறந்த வதைகளெல்லாம்
ஒற்றை ஊசியில் பொருத்தப்பட்டால்;

அத்தகைய பல ஊசிகள்
எனது வலதுகண்ணில் வரிசைப்பட்டால்;,
அவையாவுமே ஒரே வரிசையில் குத்தப்பட்டால்,


எனது இடதுகண் ஒரேயொரு முறையேனும் இசிவுற்று
தொழுகையை குலைத்தால்
நானதை விழியகழ்விலிருந்து கிழித்தெடுப்பேன்.

-Rabia al -Basri-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




ஒருநாள் பசராவின் அசன்
தனது ஜன்னலின் வெளியே சிரத்தைத் துருத்தி
தாழேயுள்ள தெருவழியே கடக்கும் ரபியாவின்மீது
கண்ணீரின் தூறல் வீழும்வரையிலும் அழுதார்.


அவை செருக்கின் கண்ணீர் , ஆசானே, எனக் கூறினாள் ரபியா,

“ உனது நெஞ்சினுள் உற்றுநோக்கி
நீயேன் மெய்மையுற்று கதறியழக்கூடாது-
நதியை ஆழப்படுத்தும் வரை அழுதிரு,
அதில் வலைவீசி
உன் நெஞ்சை பிடித்திட எத்தனிக்கும் தருணம்
உனக்கது அங்கு காணவும் சிக்காது,
இறுதியாய் வல்லமையின் இறை
உனது கொக்கியை அகற்றும்வரையிலும்.

-Rabia al -Basri-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





That whole desolate worn-out world:
only a yawn away
from Bliss........

-Alessandro Boffa -
(You're an Animal Viskovitz! )
'That whole desolate worn-out world:
only a yawn away 
from Bliss........

-Alessandro Boffa -
(You're an Animal Viskovitz! )'

திருமணம் இருத்தலோடு உறவுடையது,
இவ்விருத்தல் எங்கு காணக்கிடைக்கும்?
நான் உனக்கே உரியவாளாயிருக்க வேண்டும்?
நான் எனக்கே உரியவளென
உன்னையெது யோசிக்கத் தூண்டுகிறது?


நானோ அவனதாய் -அவனதாயிருக்கிறேன்.

-Rabia al -Basri-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

பின்புறமாய் திரும்பி நோக்கும்
அனைவரின் முகத்திலும்
நானுன்னை;
உன்னையே தேடியலைகிறேன்.
மரித்தலை நோக்கி திரும்பும் சூரியனை ஒத்திருக்க,
உன்னில் அச்சமடைந்தோர் எவரை பார்வைகொள்வர்.


எங்கெங்கிலுமாக
உனது உறைப்புலத்தை விசாரித்தபடியிருக்கிறேன்.
பூமியிலமைந்த இடங்களெல்லாம்
எனக்கென வெளிப்பட்டு படர்கிறது
நான் காண்பதையெல்லாம்
என்னால் வசப்படுத்த இயலவில்லை.

இக்கணம், நானுன்னை நினைவடைந்தாலும் ,
நானதை ஒளித்திட திராணியற்றிருக்கிறேன்.
உன்னை குறித்து நுவலாதிருக்க,
சந்தை வெளியில் எனது குரலை பின்னிழுக்கிறேன்
இந்நாள் இதயமிழந்த ;
தனியர் யாரையும் நான் சந்திக்கவில்லை.
நான் நாடியலைந்தவருடன் விழைந்து
ஏற்கனவே உடனிருப்பதை
நம்பாத யாரொருவரையும் சந்திக்கவில்லை.

ஆண்கள், பெண்கள் யாவருக்கும்
அளிக்கப்பட்ட கற்கள் இவையே.
நம்மில் யாரொருவரும்
ஒருநாளேனும்
இக்கற்குவியல் மீதமர்ந்து ஜிவிக்கவியலாது.

-Jennifer Doane-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
.
ஒருவேளை எனது பாவங்களை நான் வெறுபுற்றால்,
இறைவன் என்னை நேசிப்பாரா?

”இல்லை -


ஆனால் அவருன்னை நினைவுறுங்கால்,
பின்னர் நீயும் அவரை நினைவுறுவாய்-

ஆகையால் காத்திருத்தலில் நின்றிரு.”

-Rabia al -Basri-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்