கருவறை நீரில் மேலும் கீழுமாக அசையும்
சிறு இறைமை, பத்து கால்விரலகள், பத்து கைவிரல்கள்
மற்றும் அளப்பெரிய நம்பிக்கை,
தலைகீழாய் உலகினூடே பயணக்கிறது.
எனது எலும்புகளை , நானறிவேன்,
அவை மாய்தலுக்கான் கூண்டு.
தியானிக்கிறேன், எனது கபாலத்தை காணவியலுகிறது,
மாய்வின் கரம்,
உள்முகமாக ஒளியேற்றம்
மெழுகுவத்திகள் மூலம்
சூரியன்கள்
பிற பால்வெளிகளின் சாத்தியங்களாக இருக்கலாம்.
எனக்குத் தெரியும் மரணமென்பது
ஒளி நோக்கிய நகர்வு
ஒரு மகிழ் கனவிலிருந்து
விழித்தெழ விருப்பற்றிருக்க,
ஒரு நிலத்திலிருந்து
அன்பர் விடைபெற
அதற்கான நுழைவிசைவின்றி,
எனக்கு நன்கு தெரியும்
ஆன்மாவின் பரிகளது பாய்ச்சல், பாய்ச்சல்,பாய்ச்சல்
காலத்தின் புறமுற்று
நிகழ்சமயமென அழைக்கப்பட்ட இக்கணம்.
பின் எதற்காக
நான் இந்த தலைகீழ் புத்தன் பற்றி
அக்கறையுற வேண்டும்
உலகினூடே மேலும் கீழுமாக அசையும் ,
அவனது கால்விரல்கள் , அவனது கைவிரல்கள்
குருதியுடன் ஜீவித்திருக்கின்றன
அது இசைக்க மற்றும் மரிக்க மட்டுமே ?
எனது கபாலத்திலொரு ஒளி வசிக்கிறது
அவனுள் ஒரு ஓளி
நாம் நமது எலும்புகளின்மீது தியானிக்கிறோம்
அவை ஊதி -வீசப்பட்டுவிட
குறைவான வருதத்துடன்
மாம்சம் ஒரு பாடம்,
நாமதை கற்று
கையளித்து கடக்கிறோம் .
-Erica Jong –
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
இதற்கென நான் வாழ்க்கைக்கு நன்றியறிவிக்கிறேன்:-
எதை நான் பின்னே விடுத்து சென்றேனோ
அது என்னை விட்டு செல்லவில்லை.
நான் யாரையெல்லாம் கைவிட்டேனோ
அவர்கள் என்னை கைவிடவில்லை,
யாரையெல்லாம் நான் நேசிக்க்வில்லையோ
கேடுற்ற நிலையிலும் அவர்கள் நேசித்தனர்.
நான் காணாததையும்
அல்லது காணத்தவறியதையும்
கொடையாக விடுக்கிறேன்.
நான் பயணிக்காத நிலங்கள்
நான் உறங்கும்போது
அதன் பாதைகளை ஈந்திருக்கிறது.
இப்பூமியை நான் நேசித்ததில்லை-
ஆயினும் என்னை ஏந்திக் கொள்ளும்
நானதன் கீழே கிடத்தப்பட்ட போதும்.
அனைத்துமாக இருத்தலுற்றவைக்கு
ஏதுமற்றிருக்கும் நானிலிருந்து
அனைத்தையும் தருவேன்.
வாழ்க்கையினூடே
நான் விழிசாத்தி நடையிட்டிருக்கிறேன்,
அதற்கென் பலகீனத்தின் பார்வையை அளிக்கிறேன்.
இதற்கென நான் வாழ்க்கைக்கு நன்றியறிவிக்கிறேன்:-
பெரும் தோல்வியின் வழியே ஒற்றை வலிமையினோடு
யாவற்றிற்குமான அற்புத வாய்ப்புகள்.
-David Whyte-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
The Gods have meant
That I should dance
And in some mystic hour
I shall move to unheard rhythms
Of the cosmic orchestra of heaven,
And you will know the language
Of my wordless poems
And will come to me,
For that is why I dance.
-Ruth St. Denis-