here is only one way
to achieve happiness
on this terrestrial ball,
And that is to have
either a clear conscience,
or none at all.
-Ogden Nash-
உள்ளுறுதலை நேசி, நவ-படைப்பை,
அது கொணரும் பெருமாட்சியை நேசி,
வெளிப்புற பொருண்மையின் விளிம்புறும் கோட்டில்.
திடமான அடத்தளமிடுதலை நேசி .
-Edward D, Andrews --
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
நமது நிலம் துயரடைந்து மங்கியுள்ளது
ஆகையால்
பேருவகையில் நமது இல்லங்கள்
உயிர்தழைத்திருக்க வேண்டும் .
ஓளிர்ந்து கனலும் மெழுவத்திகளின்
வளமான மஞ்சள்நிறம் நமக்கு பிடிக்கும்.
மற்றிங்கு தூசும் கற்களும் பரவிய நிலவெளி.
-Mayan woman Kantuni.-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
முற்பிறப்பின் குரலொலிகள் இப்புலத்தில் ஒலிப்பதில்லை..............
இன்றுகாலை பாதைவழி நான் நடையிட்ட தருணம்
லேசான ஓளிமட்டுமே தென்படுகிறது.
மெலிந்திளைத்த வனங்களில்
நானொரு வளைவுறும் சிற்றோடையை கண்டேன்
அருகிலொரு தகரக் கூரை வேய்ந்த வீடு
என் இருத்தலுயிர்ப்பை சாட்சியுற
அங்கெங்கிலும் யாருமில்லை .
இதனிடையே காற்று
கிளைகளின் மீதெழுகிறது-
ஆனால் துரிதமாய் தரைசரிய.
ஹனிசக்கிள் செடியின் தளர்- நறுமணம்
தன்னை காற்றில் தக்கவைக்கிறது
செழித்து சரிந்த களைகளில்
தரிந்தலையும் குவெயில் பறவையை
என் விழிகள் விட்டகல அனுமதிக்காது.
இப்போது நான் என் பெரும் -பாட்டனை நினைக்கிறேன்
முற்கால நாளொளியில்
அவர் வனங்களில் நடையிட்டிருக்கிறார்
இக்கிராமத்தை இளம்பருவம் முதலாய் அறிந்திருந்தார்
அவரின் கொடிவழி- வாழ்விடத்திற்கு
நித்தியகாலமும் நன்றியீந்திருக்க
இங்கு-நானும்கூட
வயதுமுதிர வார்த்தைகள் தூர்ந்து
உயிர்த்துடிப்புடன் மற்றும் தூய்மையாய் நிலைத்த
உலகின் இப்பாகத்தில் நிற்கவே விழைகிறேன்.
நாயின் குரைப்பொலியை என்னால் கேட்கமுடிகிறது
அங்கெங்கோ வெகுதொலைவாய்
முற்பிறப்பின் குரலொலிகள்
இப்புலத்தில் ஒலிப்பதில்லை
அவர்களது ஆவிகள்
தங்களுக்குள்ளே ஆரவாரித்து குவிகின்றன
துறவிகளின் சகோரத்துவம் .
நாமிந்த தூய- பச்சைய உலகாக
அனைத்தையும் தன்னகத்தே வளமுற தொட்டிலிடுகிறது.
-Lenard D. Moore-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Gouthama Siddarthan liked this.
Add Friend
ஒடியன்
23 hrs ·
நீண்ட நாட்களுக்கு பிறகு பிஜாய் பழங்குடி இலக்கியம் குறித்து ஆழமாக பேசிக்கொண்டிருந்தார்
முக்கியமாக வார்லி பழங்குடியினரின் ஓவியங்கள் குறித்தான அவரது ஊடறுப்பு அற்புதமாக இருந்தது
வார்லிகள் குஜராத் மஹாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துவரும் ஒரு பழங்குடியினம் பல்வேறு குறியீடுகளோடு தத்தமது வீட்டுச்சுவர்களில் வரையும் அவர்களது ஓவியங்கள் இந்தியா மட்டுமல்ல மேலைநாடுகளிலும் கீழை நாடுகளிலும் புகழ்பெற்றவை, வசீகரமானவை. .
‘’வார்லி பழங்குடிகளைப்பொறுத்தவரை ‘பெயிண்டிங்ஸ்’ என்பது வெறும் ஓவியங்கலல்ல அங்கே நடக்கும் சம்பவங்களை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதற்க்கான ஒரு ஊடகம். அவர்களின் ஒவ்வொரு ஓவியத்துக்கும் பின்னாலும் ஒரு சம்பவம் புதைந்திருக்கிறது’’ என்று தனக்கான அனுபவங்களோடு நிறுவினார்
குறிப்பிட 25 ஓவியங்களை சேகரித்து அந்தந்த ஓவியங்களின் கீழ் அது பேசும் சம்பவங்களையும் அகழ்ந்து அவரின் நண்பரின் முயற்சியால் வெளிக்கொண்டுவந்திருந்த wisdom of wildness என்ற நூலையும் காண்பித்தார்.அற்புதமான அந்த நூலை ஏனோ என்னால் இந்த முற்றுகையில் கைப்பற்றமுடியவில்லை.
பேச்சு முடிந்து கிளம்பும் தருவாயில் ''இதே போல் சப்பெ கொகாலு,ஒடியன், உட்பட நீங்கள் சேகரித்திருக்கும் , இருளர் இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் கொண்டுவரலாம், அடுத்த சந்திப்பில் இது குறித்து இன்னும் விரிவாக பேசலாம் என்று முடித்தார்
மலையாள மொழியாக்கம் குறித்த பேச்சு இரண்டாம் முறையாக எழுந்திருக்கும் இந்த சூழலில் ஆங்கில மொழியாக்கம் குறித்த அவரது அக்கறை இன்னும் உற்சாகம் கொடுப்பதாக இருந்தது
அவரது பார்வையில் இலக்கியங்கள் முக்கிய இடத்தை பிடிக்கத்தொடங்கியிருப்பது கோண்டுகள் முரியாக்கள் போன்ற பல்வேறு பழங்குடி இனங்களின் புகழ்வாய்ந்த வாய்மொழி இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவந்துவிடமுடியும் என்ற ஒரு உத்வேகத்தை தந்தது
#பிஜாயுடனானஒருபின்மாலைப்பொழுது 1
குளிர்கால இரவுகளில் வீடு உறங்குகிறது,
பனியில் உலர் முளைவிதை
வீழ்கிறது, வீழ்ந்து நசிகிறது,
வெண்மை இருன்மை அதன் ஆழத்துள் ,
மெளனத்தின் மந்த தாக்கம் தொடர்கிறது.
இருளறைகளில்
நம் சிரங்களை தலையணைகள் ஏந்தியுள்ளன,
காத்திருத்திலில் நாள்,
தொடர்ச்சியற்ற கனவுகளிடை - இருன்மை
பனி வீழ்கிறது , வீழ்ந்து நசிகிறது
மூளை வளைப்பொந்துற்று
தனது நிலத்தில் துயில்கிறது,
புலர்வில் நம்பிக்கையுற,
சூரியனின் ஓளி முன்னிகழ்வற்ற ஓளியாகும்,
புலர்தல் நிகழுமுன் நிருபனமாவதில்லை,
நம்பிக்கையால் ஆக்கமுற்ற விதிக்கென காத்திருக்கிறது.
-Wendell Berry -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
கிழிறங்கும் சாலையில்
அந்த அரவம்
மலைமுகடுகளில் ,
எங்குமின்றி விரைகிறது.
கடந்தேகிய கார்களின் இசைக்கோர்வைகள்
மலைப்புறங்களில் படர்ந்திருக்கின்றன,
மங்கும் பொருண்மைகள்
புழங்கா இறந்தகால இல்லங்கள்
நிழலடைய ஆநிரைகள் கூட்டமிடுகின்றன .
குழிகளின் பக்கவாட்டில்
பீர் குவளைகள் வீடுகளை அழைக்கின்றன.
அடிமைகள் நிர்மானித்த வீடுகளின்
கற்சுவர் கதவுகளினூடே.
அச்சாலை மீதிருக்கும்
முட்களுரு மப்ளர்கள் ,
நொறுங்கிய திருகு- சுருள்கம்பிகள் ,
வழங்கப்பட்ட சக்கரங்கள்
தமக்கென சுய- மனதுடனியங்க
விரிபடர் பரப்பில் வந்தடைய
கீழ்பரப்பு மலைகளாலும் மற்றும் ஆறுகளாலும் சூழ
முதல் விரிநோக்கில்
நமது சுவாசத்தை அள்ளிச்சென்றது..
-Jonathan Greene -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)