Saturday, 11 July 2015

-Ogden Nash- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்), -Miroslav Holub- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Canto Xii From The Heights Of Macchu Picchu - Poem by Pablo Neruda

Arise to birth with me, my brother.
Give me your hand out of the depths
sown by your sorrows.
You will not return from these stone fastnesses.
You will not emerge from subterranean time.
Your rasping voice will not come back,
nor your pierced eyes rise from their sockets.

Look at me from the depths of the earth,
tiller of fields, weaver, reticent shepherd,
groom of totemic guanacos,
mason high on your treacherous scaffolding,
iceman of Andean tears,
jeweler with crushed fingers,
farmer anxious among his seedlings,
potter wasted among his clays--
bring to the cup of this new life
your ancient buried sorrows.
Show me your blood and your furrow;
say to me: here I was scourged
because a gem was dull or because the earth
failed to give up in time its tithe of corn or stone.
Point out to me the rock on which you stumbled,
the wood they used to crucify your body.
Strike the old flints
to kindle ancient lamps, light up the whips
glued to your wounds throughout the centuries
and light the axes gleaming with your blood.

I come to speak for your dead mouths.

Throughout the earth
let dead lips congregate,
out of the depths spin this long night to me
as if I rode at anchor here with you.

And tell me everything, tell chain by chain,
and link by link, and step by step;
sharpen the knives you kept hidden away,
thrust them into my breast, into my hands,
like a torrent of sunbursts,
an Amazon of buried jaguars,
and leave me cry: hours, days and years,
blind ages, stellar centuries.

And give me silence, give me water, hope.

Give me the struggle, the iron, the volcanoes.

Let bodies cling like magnets to my body.

Come quickly to my veins and to my mouth.

Speak through my speech, and through my blood. 

என்னிடம் சொல்லேன், ஓ ஆக்டோபஸ்,
நான் மன்றாடுகிறேன்,
அவையனைத்தும் கரங்களா, அன்றி கால்களா?
உன்னில் வியந்திட, ஆக்டோபஸ்;
நான் நீயாயிருக்கும் பட்சத்தில் ,
என்னை நான்
’நாம்’ என்றே அழைப்பேன்.


-Ogden Nash-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




கடந்தழிந்த நாட்களை நான் நினையும் தருணம்
சாய்ந்த மாலை புலர்வை பின்- தொடர்வது
எவ்வாறென யோசிகிறேன்;
நான் நேசித்த பலர் இன்னமும் மாயவில்லை ,
நான் நேசிக்கும் பலர் இன்னமும் ஜனிக்கவில்லை.


-Ogden Nash-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நான் நினைக்கிறேன்
மரம் போலும் எழிலுற்ற விளம்பர பலகையை
இனியென்றும் என்னால் கண்ணுறவியலாது.
மெய்யாகவே,
விளம்பர பலகைகள் வீழ்ந்தாலொழிய
என்னால்
ஒரு மரத்தைகூட கண்ணுறவியலாது.


-Ogden Nash-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






Middle age is when
you're sitting at home
on a Saturday night
and the telephone rings
and you hope it isn't for you.


- Ogden Nash-



வயோதிகர்கள் மரிப்பதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
அவர்கள் நிஜத்தில் வயோதிகர்களுக்காக துயருறுவதில்லை
வயோதிகர்கள் சற்றே வித்தியாசனமானவர்கள்.
மக்கள் பார்க்கின்றனர்
அவர்களை விந்தை பொங்கு விழிகளுடன் எப்போதென.........
அதிர்ச்சியுறா விழிகளுடன் மக்கள் கூர்நோக்க ;
ஆனால்
வயோதிகர்கள் நன்கறிந்திருக்கிறார்கள்
ஒரு வயோதிகன் எக்கணம் மரிப்பானென.


-Ogden Nash-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



அவனது வீட்டை தானேயவன் கட்டியமைத்தான்,

அவனது அடித்தளங்களை,
அவனது கற்களை,
அவனது சுவர்களை
அவனது சிரமீதான கூரையை ,
அவனது புகைகூண்டையும் மற்றும் புகையை,
அவனது சாளரவழி விரியும் இயற்காட்சியை.

அவனது தோட்டத்தை தானேயவன் அமைத்தான்,

அவனது வேலியை ,
அவனது நறும் தைம் தாவரத்தை,
அவனது மண்புழுவை,
அவனது அந்திநேர பனியை.

அவனுக்கான துண்டு வானை
மேற்புறம் அவனே கத்தரித்தான்.

வீட்டை தோட்டத்துள்ளாகவும்
அவனது தோட்டத்தை வானில் உறையிட்டும் பொதிந்தான்
கைகுட்டைக்குள் ஏராளமானவற்றை மூட்டையிட்டு
போய் விட்டான்
தனித்த ஆர்டிக் நரியாய்
குளிர்மை ஊடே
நிறுத்தமுறா

மழையுறுகிறது
உலகத்துள்.

-Miroslav Holub-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)