Saturday, 18 July 2015

-Pablo Neruda - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்), --Hadewijch- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



எனது யாத்திரையிலிருந்து வட்டமுற்று ஏன் திரும்பினேன் -
நான் ஏன் எனது தாய்நிலத்திற்கு திரும்பவில்லை
தெருக்கள் , நாடுகள் , கண்டங்கள், தீவுகள்
அன்று சொந்தமெனவும் ,வாழ்விடமெனவும் அழைத்தேனே?
ஏன்,
மாற்றாய் எல்லைநிலம் என்னை தேர்ந்து கொண்டதா;
இந்த புகலிடம் எதை கொடையளிக்கிறது
ஆனால் காற்று முகத்தில் கசையடியாகிறது
நீள்-குளிர்கால தாக்கில் வீழ்ந்த பூக்கள் கருகிக் கறுத்துள்ளன .
ஓ, அவை என்னை பழிக்கின்றன, பகர்கின்றன;
அவன் அதி-சோம்பலானவன், துருவின் எஜமானன்,
அவனது கடிய புகலிட துறத்தலை
தாங்கும் திராணியற்றவன் -
அவன் சற்றே வேகதளர்வுற்றான்
பிறகு நின்றான்
அவனது விழிகள் கற்களுள்ள திசையில் திரும்பும்வரை
ஐவி படர் கொடி தனது பார்த்தலை திரையிட்டது.


-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












இன்று உழவர்கள் என்னை சந்திக்கின்றனர்,
சகோதரனே, முற்றிலுமாக
நீரில்லை, பாப்லோ சகோதரனே
நீரில்லை, மழை பொழிவில்லை.


ஆற்றின்
போதாமை நீரோட்டம்
ஏழுநாட்கள் சுழல்கிறது,
ஏழுநாட்கள் உலர்ந்தோடுகிறது.

நமது மலையடுக்கங்களில் கால்நடைகள் மரித்தன.

வறட்சி நமது மழலைகளை கொல்ல துவங்கியுள்ளது.
இதற்கும் மேலாய் , புசிக்க பலருக்கு ஏதுமில்லை.
சகோதரர் பாப்லோ, அமைச்சரிடம் பேசுங்கள்.

( ஆமாம்; சகோதரர் பாப்லோ அமைச்சரிடம் பேசுவார்,
ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை
சாய்வுநாற்காலிகளின் இழிந்த தோலுரை
எப்படியென்னை வரவேற்று பெறுமென,
பிறகு அமைச்சிரிய மரம்
அடிமை எச்சிலால் தேய்த்து மெருகூட்டப்பட்டிருக்கிறது.)

அமைச்சர் பொய்யுரைப்பார், கைகளை கழுவி நழுவுவார்,
எளியோனின் கால்நடைகளும் ,
அவனது பொதிகழுதையும் , நாயும் வீழ்ந்து மடியும் ,
பசியிலிருந்து பசிக்குமாய்,
இழையிழையாய் நசிந்த பாறைகளினிடையே.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












என்னால் அவ்வழகொளியை பற்றி
உன்னுடன் பேசவியலாது.
இன்று நான்
தொலைந்த ரோஜாவை கண்டடைய விழைகிறேன்.
அது மணலகத்தில் பதுங்கியிருக்கிறது.
நான் மறதியின் கவனமின்மையை பகிர எத்தனிகிறேன்.


கொடிகளாக காட்சியடைந்து
நீட்சியில் வளர்ந்த நிமிடங்களை
நான் தரிசிக்க வேண்டும்,
மெளனத்துள் மறைந்து .

முழுமையாய் மறைந்துள்ள நேசனை நோக்கியறிய வேண்டும்.

நான் தெளிந்துணர விரும்புகிறேன்.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






Why is sky blue or grass green?
That's just their way. Let's heed the voice .
Come along, Eve, follow me.

-Imre Madach-








The not-happening was so sudden
that I stayed there forever,
without knowing, without their knowing me,
as if I were under a chair,
as if I were lost in night.
Not being was like that,
and I stayed that way forever.


-Pablo Neruda-
'The not-happening was so sudden
that I stayed there forever,
without  knowing, without their knowing me,
as if I were under a chair,
as if I were lost in night.
Not being was like that,
and I stayed that way forever.

-Pablo Neruda-'

இப்போது நாம் தனிமையடைவோம்.
இப்பெண் செருக்கியுடன் தனித்திருக்க.
ஊதா மின்னலை
தன்னிச்சையாய் உடுத்தியவளுடன் தனிமைடைய .
மூன்று வர்ணங்களின் பேரரசியுடன்
க்யுட்டோவின் சுழலும் வைனுடன்.


உலகுற்ற அத்துனை மெளனங்களைக் காட்டிலும்,
அவளிந்த சோக ஆழிநுழைவை தேர்ந்தாள்
பாய்தா புறநகரின் வெளிர்த்த ஆழிநீரையும்.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

நீயே அறிந்து கொள்வாய்
நானுன்னை காதலிக்கவும் அவ்வாறல்லாதும் இருக்கிறேன்,
வாழ்வு இரட்டை மனமுற்றிருப்பதைப் போல,
ஒரு வார்த்தை மெளனத்தின் ஒற்றை சிறகாயிருக்கிறது,
நெருப்பு அரைவிகிதம் பனியாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.


நானுன்னை காதலிக்கிறேன் உண்மையாகவே,
நானுன்னை காதலிக்கத் துவங்குவேன்,
வரம்பற்றலில் புதிதாய் துவங்குவேன்
உன்னை காதலித்தலை
எக்கணமும் நிறுத்த சாத்தியமற்றிருக்க:
இக்காரணங்களுக்காகவே,
உன்னை இன்னமும் நான் காதலடையவில்லை.

நானுன்னை காதலிக்கவும் அவ்வாறல்லாதும் இருக்கிறேன்,
எவ்வாறெனில்
ஒவ்வொர் மகிழ்வின் திறவுகோல்களை
என் கரம் கொண்டிருத்தலில் நிச்சயமற்றும் ,
களிப்பொழிந்த அவ-விதியாய்.

உன்னை காதலிக்க,
என் காதலுக்கு இரு வாழ்நாளிருக்கிறது.
அப்படித்தான் என்னாலுன்னை காதலிக்க இயலும்,
அவ்வாறல்லாத கணத்திலும்,
மற்றும்
நான் அவ்வாறுள்ள கணத்திலும்,
உன்னை காதலிக்கிறேன்.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

சமதானம் என்பது புறாவின் சமாதானம் தானா?
சிறுத்தைகள் எங்கேனும் போர் நிகழ்த்துமா?

எதற்காய் இந்த பேராசிரியர்
மரணத்தின் புவியியலை கற்பிக்கிறார்?


தாமதமாய் பள்ளிக்கு வரும்
தூக்கணாங்குருவிகளுக்கு என்ன நேரும்?

அவை தெள்ளிய எழுத்துருக்களை
விண்ணெங்கும் விசியெறிந்திருப்பது நிஜம்தானா?

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-
Shanmugam Subramaniam's photo.

எதிர்காலமொரு வெளி,
பூமி- வண்ணமுற்ற வெளி,
மேகம்- வண்ணத்தாலானது,
நீரின் வண்ணம் -காற்று,
எண்ணிறந்த கனவுகளுக்கான கறுவெளி அறைகள்,
அளவிலா பனிக்கான வெண்வெளி அறைகள்,
யாவற்றிற்குமாய் இசை.


துன்பியலார்ந்த காதல் பின்புறம் அமைவுற்றிருக்க
முத்தம் பதிவதற்கான இடமுமின்றி
ஒவ்வொருவருக்கான ஓரிடம் வனங்களிலுள்ளது
வீதிகள், வீடுகள் ,
நிலத்தடியாழ்வின் வெளி, நீரடியாழ்வின் வெளி,
இறுதியில் இன்மை கிரகத்த்னால்
அளப்பெரிய களிப்பு, எழுகிறது.

மாபெரும் தாரகைகள் தெளிந்த வோட்காவாயிருக்க
புழங்கா, தெளிப்படிக புலப்படலாய்,
அங்கு முதல் தொலைபேசியுடன் வர,
இதுவரையிலான பலரும்
தங்களது நோய்மையின் பலவீனங்களை
பின்னர் சற்றே பரிமாறிக்கொள்ளலாம் .

தன்னைக் குறித்தே அரிதாய் உணர்ந்திருத்தல்
முக்கியமானது
கரடுமுரடான மலைத்தொடரிலிருந்து விரிட்டு கதற,
அங்கிருந்து பிறிதொரு மலைமுகட்டை நோக்க
புதிதாய் வந்தடைந்த நங்கையூன்றிய பாதங்களாய்.

வாருங்கள்,
நாமிந்த திணறடிக்கும் ஆறுகளை
விடுத்தேகுவோம்
அதுனுள்ளுறும் பிறவான மீன்களோடு நீந்துவோம்
புலர்விலிருந்து பெயர்ந்திடும் இரவுள்
இப்போது கண்டெடுத்த இவ்வெளியிலிருந்து
திளைத்த தூய- ஏகாந்தத்துள் பறந்திடுவோம்.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-


விழியிமை மகரந்தங்களில் திறக்கிறது..............

ஒளியின் ஜனித்தல் சம்பவிக்க
பறவை வந்திறங்கியது
அதன் ஒவ்வொர் நடுங்கொலியதிர்விலும்
நீர் உயிருறுகிறது.


நீருக்கும் ஓளிக்குமான இடையிடலின்
எதிர்சுழ்ற்சியில் காற்று அவிழ்கிறது,
நிகழ்தருணத்துள் வசந்தவிழா சடங்குறுகிறது ,
விதை தன் சுயதுளிர்வை பிரக்ஞையடைகிறது;
வேர் மலர்வட்டத்தில் வடிவமடைகிறது,
முடிவாய் விழியிமை மகரந்தங்களில் திறக்கிறது.

பசுமை பூசிய கிளையின் அமர்விடத்திலிருந்து
இவையாவும் ஒரு எளிய பறவையால் பூரணமடைகிறது.
.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-






உனக்கு ராணியென பெயரிட்டிருக்கிறேன்
உன்னிலும் உயரமானோர் உள்ளனர், நீளுயரமாய்
உன்னிலும் தூய்மையானோர் உள்ளனர், அதிதூய்மையாய்
உன்னிலும் எழிலானோர் உள்ளனர், அதியெழிலாய்.


நீ வீதிவழியே நடையிட்டு செல்லும் வேளையில்
யாருமே உன்னை இனமுறுவில்லை .
உனது படிக கிரீடத்தை யாருமே நோக்கவில்லை,
செந்நிற பொற் -கம்பளத்தை யாருமே நோக்குவதில்லை.
நீயதில் தீர்க்கமாய் கால்பாவி நடக்கிறாய்
உருவிளதான கம்பளத்தில்.

நீ எப்போது தோற்றம் கொள்கிறாயோ,
எனதுடலில்
ஆறுகளெல்லாம் ஆர்ப்பரிக்கின்றன
மணிகள் வானை உலுக்கிறது,
புகழ்பாசுரம் பூவுலகை நிறைக்கின்றன.

நீயும் நானும் மட்டுமே
நீயும் நானும் மட்டுமே, என் அன்பியே,
அதற்கு செவிமடுப்பாய்.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-















போய் வா, வருகையாளனே
இனிய நாள்,
உனக்காகவும் , யாருக்குமன்றியும்,
அனைவருக்காகவும்
எனது கவிதை சம்பவிக்கிறது.


நான் யாசிக்கிறேன் ; என் மனவுலைவில் தனித்திருக்கவிடு,
இயைவிலா ஆழியுடன் நான் வசிக்கிறேன்,
மெளனம் குருதிகசிந்து என்னை உலர்த்துகிறது.

ஒவ்வொரு அலையோடு அன்றன்று மரிக்கிறேன்,
ஒவ்வொரு அலையோடு அன்றன்று மரிக்கிறேன்,
ஒருபொழுதாகிலும்
நாள் மரிப்பதேயில்லை-

அது மரிப்பதே இல்லை
அலையும்கூடத்தான்?
மரிப்பதே இல்லை.

நயந்த நன்றிகள்.............

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-









What will you do with so many days

left over, and even more,

with so many missing days ?




Do you know there's nobody in the streets

and nobody in the houses?







There are only eyes in the windows.



-Pablo Neruda -

யூம்பெல்!
யூம்பெல்! யூம்பெல்!
கதிரொளியில் உன் பெயர்
எங்கிருந்து வெளிப்படுகிறது?
ஏனிந்த ஒளி
உனது பெயரில் ரீங்ககரிக்கிறது?


ஏன், இந்த அதிகாலையில்
உனது பெயர் ,
கொல்லன் பட்டறைகளில் சப்தமிடும்
சக்கரத்தின் விளிம்பாய் அணுகி வருகிறது.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

என்னை மன்னியுங்கள, ஒருவேளை
என் வாழ்வின் கதையை
நான் கூறிட விரும்பினால்
நான் நிலத்தைக் குறித்தே பேசுகிறேன்.
இதுவே அந்நிலம்.


அது உமது குருதியில் வளர்கிறது
நீங்களும் வளர்கிறீர்கள் .
உமது குருதியில் அது மரித்தால்
நீங்களும் மாய்ந்தழிகிறீர்கள்.

-Pablo Neruda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


எனது துர்விதி மாபெரிதாயிருக்கிறது......................

காதல் என்புறத்தே ; என்னை அலைந்து திரிய செய்கிறது,
காதலெனும் ஏதோவொன்றை எங்கு கண்டடைவது
எனது இதயத்தின் அதிமகிழ்வில் இசைய,
அவ்விதமே எனது வாதையை இனிமையடையச் செய்வேன்?
ஆயினும்
அவள் பின்னே செல்கிறேன், அவள் பறக்கிறாள்;
இருப்பினும் அவளது பயிலகத்தில் உடனுற்றிருக்கிறேன்,
அவள் என்னுடன் எதிலுமே உடன்பட்டதில்லை
ஒரு கணப்பொழுதில் அவ்வளவும் தெளிவுறுகிறது
அந்தோ! எனது நெஞ்சின் இன்னலினூடே பேசுகிறேன்
எனது துர்விதி மாபெரிதாயிருக்கிறது
எனக்கோ
காதல் துறந்து உயிர்கொள்ளல் மாய்தலாகும்
அதுமுதல்
என் வேட்கையின் அவா அவளில் பூர்த்தியுறாது.


-Hadewijch-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)