Friday, 24 July 2015

நான்,
எனது ஆன்மாவின் பெயரையே அறிந்திராதவன், ,
ஆயினும் முன்னம் அவளை பார்த்தறிந்தேன்,
பொய்மைக் கோலமுற்ற ஆற்றின் நிழலாய்,
என்னிடம் சொல்கிறது:
”உன்னால் இயலுமட்டும் அழு
இறைவனை சந்திக்காமல் .
உன்னால் மேலுமொரு நாளை உயிர்க்கவியலாது
இதனினும் கூடுதலாக உன்நெஞ்சத்தை தகர்க்கவியலாது.
நான் மீண்டும் இவ்வுலகுற்ற தருணம்
என்னை செய்வித்த உலகனைத்தும்
உன்னை மறதியுற செய்தது
இறைவனை நேசிக்கும் யாரைக் காட்டிலும்
நான் உன்னை அபரிமிதமாய் நேசித்தேன்.
அதீதமாக நேசிக்க வைத்து
இறைவன் என்னை வதைப்பாரென எல்லோரும் சொன்னார்கள்,
உன்னை அறிந்திராதவனாய்
நான் எவ்வாறு பாசாங்கிப்பேன்,
நான் ஜனிக்குமுன்பிருந்தே உன்னை நான் நேசித்திருக்கிறேனே?
நீ புதியவர்கள் மத்தியில் இன்றிருக்கிறாய்
என் ஆன்மா இங்கு இறங்கியதே
உன்னை அகழ்ந்தறியத்தான்.
உனக்கேயான இறுதி- பற்றையும் துறந்துவிடு
என சொல்கிறாள்
”நீ கடைசியாக புசித்த உணவையும் வாயிலிருந்து அகற்றிவிடு.
இந்த ஜீவிதத்தையும் கைவிட்டு துற.”
-Jennifer Doane-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)