Tuesday, 28 July 2015

raja sundara rajan 19 Jul 2015 முரண் __________


raja sundara rajanShared publicly - 19 Jul 2015

முரண்
__________

நாடார் முரண்படுவதில்லை
பறையரோ பள்ளரோ அப்படி இல்லை

இது ஒரு கட்டுக்கதை

எழுதப்பட்ட வரலாற்றுக்கு முன்னரே
செத்துப் போனார்கள் போராடிச் செத்த சாணார்கள்
.
ஆடை களையப்படும் முன்பே செத்துப்போனாள்
அவள் பிணத்தைப் புணர்ந்தார்கள்
அந்த வீடியோவைப் பார்க்கிறோம்

நாம் தமிழர்

நம் மாளிகைத் தெருமுனையில்
ஒரு கண்டன விளம்பரத்தட்டி வைக்கிறோம்.

மேற்கத்தியர்கள் காலூன்றிய நிலப்பகுதி
சாணார்களின் தேரியாக நேர்ந்தது
மேரிமாதாவின் கருணையா என்ன

மதீனா ஓர் இளைப்பாறல்
அல்லது பின்வாங்கல் அவ்வளவே

உலகாளும் யூதர்களின் செழிப்பின் கீழ்
உரமாகி ஒரு பிணக்குழி உள்ளது
இஸ்ரவேலர் உடல்களே எல்லாம்

இது கவிதை இல்லை
அழுத்தம் வேண்டி மடக்கி எழுதினேன்
பா.ஜ.க. தலைவராம் நாடார் அண்ணாச்சிக்கு
வணக்கம் வைக்கிற இவ்வேளை
அவரது உரக்குழியை வியக்கிறேன்.