Tuesday, 7 July 2015

-Medieval Latin Lyrics - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நீ எனது பிராத்தனைகளை மறுதலிக்க கூடாது...............................

காதல், யாவருக்கும் பொதுவானது,
அதன் துளிர்த்தல் , இனித்தேயிருக்கிறது
பிறர் தன்னிலெதை எதிர்க்க வாய்ப்புள்ளதோ
இக்கணம் என்னுளது விழிப்புறுகிறது.
வெளிப்படையாய் மற்றும் இரகசியமாய்
நான் வதையிலுழல்கிறேன்
பல பிழைநிலைகளில்
நான் இளைப்பாறுதலை காணவியலும் ,
அன்பே , உனது கட்டிலில் .
ஓ, ஓ, ஓ.


காதல், காதல்,
அருவிந்தை காதல்,
யாராலும் எதிர்க்கவியலா
நீதான் பகையாளி
யாரை நீ குறியிட்டு
உனது தீயுமிழ் அம்பினை பாய்ச்சுகிறாயோ
தன்னையவன் நிச்சயமாக
அச்சுறும் அபாயத்தில் காண்பான்.
ஓ, ஓ,ஓ,

ஒருவேளை இக்கணம் உன் உடலை
நான் கண்ணுற நேர்ந்தால் ,
பளிங்காளாலான பலிபீடத்தை
நான் கட்டமைக்க விருப்பமுறவேன்,
அதன்மீது என்
கணக்கற்ற ஆன்ம- காணிக்கைகளை
சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகையால் நீ எனது பிராத்தனைகளை
மறுதலிக்க கூடாது.
ஓ, ஓ, ஓ, அமோர்!

-Medieval Latin Lyrics -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam


இலேசான மேற்கு காற்று எழுகிறது,
சூரியன், அதன் போக்கில், வெதுவெதுப்பாய் வளர்கிறது,
பூமி இப்போததன் கருவறையை திறந்து,
அதன் இனிமையை சொரிகிறது.


மகிழார்வ வசந்தம் விழித்தெழுகிறது,
தனதேயான சிறப்புறு ஆடைகளை அணிகிறது,
மலர்களைக் கொண்டு பூமியை பரப்பியுள்ளது,
மரக்கிளைகளை மலரரும்புகளால் நிறைக்கிறது.

பிராணிகள் பேரியற்கையின் சடங்குகளை பின்பற்றுகிறது,
இனித்த பறவைகள் தங்களது கூடுகளில்,
மலரரும்பிய மரக்கிளைகளினிடையே மகிழ்வை இசைக்கின்றன.

இதை நான் என்விழிகளால் நோக்குறும் தருணம்,
இதை நான் என்செவிகளால் கேட்டறிய ,
இவையெல்லாம் எனக்கு மட்டற்ற மகிழ்வாகிறது,
அந்தோ, அது பெருமூச்செறிதலின் காரணியாகிறது.

தனிமையில் தோய்ந்து நான் தனித்தமர்ந்துள்ளேன்,
இச்சிந்தனைகளால்
நான் சோகையில் வெளிரியிருக்கிறேன்,
தற்செயலாய் நான் என்சிரத்தை உயர்த்தினால்,
இரண்டற நான்
பார்வையுறவும் அன்றி செவியுறவும் இல்லை.

வசந்தத்தின் நிமித்தமாகவே, நீ,
இவ்விசையை கேள்.
மரக்கிளைகளை, மலரரும்புகளை,
பசும்புல்வெளிகளை யோசித்தறி,
எனது ஆன்மா மெலிந்து சோர்கிறது.

-Medieval Latin Lyrics -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






Now I lament the flower
brighter, by the star of Venus,
of my tender years.

What then was dove-like
tranquility of mind
is now serpentine bitterness.


Now you send away
normal suitors
with hostility,
your bed warms only
those who bring gifts.

You dismiss
those from whom you receive nothing.
Yet you Welcome
the blind, the crippled.

You deceive
important men
with venomous honey.

-Medieval Latin Lyrics-