Tuesday 14 July 2015



ஐந்து சுவாசங்கள் என்னுள் பிராத்திக்கின்றன:
சூரியன் நிலவு
மழை காற்று மற்றும் நெருப்பு
ஐந்து இருக்கையூன்றிய புத்தர்கள்
சுவாசங்களில் ஆட்சியுறுகிறார்கள்
ஐந்து மாயைகள்
ஒன்றே பிரபஞ்சம் :
வெண்சுவாசம் , மஞ்சள சுவாசம்
பச்சையசுவாசம், நீலசுவாசம் ,
செங்கனல் சுவாசம், . அமிதபா
அறிஞானம் , ஆசை.
அறிஞானத்தின், ஆசையின்
மோனத்துயில்.


-Thomas Merton-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





அமைதியிலாழ்ந்த மரங்களுக்கு
யாரும் செவிமடுப்பதில்லை
யாருமே கவனியாதிருக்க அங்கு
கதிரவன் குளத்திலிருக்கிறது
எங்கு யாருமே உணராதிருக்கிறார்களோ
அங்கு மழையின் முதல் துளி
அல்லது கடைசி நட்சத்திரம் பார்த்தறியபடுகிறது.


அல்லது
முதல் புலர்வை முகமன் கூறியழைக்க
இராட்சத உலகில்
அமைதி துளிர்க்கத் துவங்குகிறது
பெருசீற்றம் அந்தமுறுகிறது.

பறவையொன்று அசையாது சமைந்திருக்கிறது
இறைமையின் வினையை கவனித்திருக்கிறது:
வளைந்து சுழலும் ஒற்றையிலை,
வீழும் இரு அரும்புகள் ,
குளத்தின் மேற்பரப்பில் பரவும் பத்து வளையங்கள்.

மலைப்புறம் மிதந்திடும் மேகம் ,
பள்ளத்தாகில் சாய்ந்து படிந்த இரு நிழல்கள்

ஒளி இல்லத்தை தாக்கி அறைகிறது
இப்போது விடியல் கைப்பற்றலை ஆணையிடுகிறது
நெடிதுயர்ந்த நற்பேறு
சரணடைவு
குறைவிலா அற்புத பரிசாயிருக்கிறது.

ஆழ்ந்தும் மற்றும் தெளிந்தும்
வெற்றுசொல் குருக்கள் எவரைக் காட்டிலும்
நீயோர் உள்முக அந்நியன்
இதுவரை நான் தரிசித்ததிராதவன்.

ஆழ்மையாய் மற்றும் தூய்மையாய்
ஆர்ப்பரிக்கும் ஆழியைக் காட்டிலும் ,
எனது சலனமில் அமைதியை கைப்பற்று
என்னை உனது கரங்களில் தாங்கு!

இப்போது வினை வீண்
அவதி அற்றுப்போக
கட்டளைகள் வீணிலழிகிறது
எல்லைகள் கிழித்தெறியப்படுகிறது
பொறாமைக்கு உடைமையேதுமில்லை
போரார்வம் ஏதுமில்லை .

காட்சியடையுங்கள்,
விரியொளி அசைவை துறந்து நிற்கிறது,
நமது மாசில் ஓளி ஒன்றே!

-Thomas Merton-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-Thomas Merton-


(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






கோயில் குள தவளைகளுக்கு
தாமரைத் தண்டுகள் உயரமாயிருக்க
எவெரெஸ்ட் சிகர கடவுளருக்கு
யானையோ சிறுத்திருக்கிறது.


-John Blofield-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






It takes courage
to do what you want.

Other people
have a lot of plans for you.


Nobody wants you to do
what you want to do.

They want you to go on their trip,
but you can do what you want.

I did. I went into the woods
and read for five years .............

-Joseph Campbell-





Night is the Time of the Goddess-
Day is the Time of the God-

Night is the Time one enters the regions
of Demeter
Persephone
Isis
Mary the Mother of God
Hecate- the prostitute -


Death
change-
Renewal

The World of the Woman -
where continuity is the dynamic.

-Martha Graham-







Those who will not slip beneath
the still surface on the well of grief

turning downward through its black water
to the place we cannot breathe


will never know the source from which we drink,
the secret water, cold and clear,

not find in the darkness glimmering
the small round coins
thrown by those who wished for something else.

-David Whyte-



முதலில் நாமிங்கில்லை
பின்பு நாமிருக்கிறோம்
பின்பு நாமில்லை

நீ அதனூடே பார்த்தாய்
நமது வருகையும் போதலும்
நேருக்கு நேர் - முகமாக


நம்மில் யாரைக்காட்டிலும் நெடிதாய்
அதீத நெஞ்சுரத்துடன் மற்றும் அருளமையுடன்
நான் எப்போதும் பார்த்திராத வகையில்

நீ புன்முறுவளித்தாய்
வழியெங்கிலுமாக -

-Rick Fields-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












Where the dolphin jumps
(the sea is his kingdom,
they say, from the Ocean
to the Mediterranean) there
you can see the spring of God
which appears and disappears, joyous
acrobat with a witty beak.


He si the juggler of our
restless fate- the emblem
of the Other we eagerly
seek, and that
( dolphin is lively- he is the happy
companion to all navigation)
he enjoys himself ( he urges us )
mixing negation
(a submarine dive- a flight
elegant and improvised
in a white of foam)
with a cry of affirmation.

-Giorgio Caproni-
(Whales: A Celebrations)



எனது கல்லறையில் நின்று கதறியழாதே
நான் அங்கில்லை, நான் துயில்வதுமில்லை.
வீசும் ஆயிரமாயிரம் காற்றாயிருக்கிறேன்;
பனியில் மின்னொளிரும் வைரமாயிருக்கிறேன்.
முதிர்ந்த தானியத்தின் மீது பதியும் கதிரொளியாயிருக்கிறேன்
நான் மென்- இலையுதிர்கால மழை
நிசப்த விடியலில் நீ விழித்தெழும் கணம்
நான் துரிதமாய் உயர்ந்தெழும் நாணல்
அமைதியான பறவைகளின் சுழல்வட்ட பறத்தலில்
இரவில் மினுக்கியொளிரும் நானொரு மென்தாரகை
எனது கல்லறையில் நின்று கதறியழாதே
நான் அங்கில்லை.............


-Treya -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)