Monday, 27 July 2015

மரணத்தின் பெர்லின் நடனம்-Gunter Kunert. Translator:(Brammarajan)

Gouthama Siddarthan liked this.
மரணத்தின் பெர்லின் நடனம்
''''''''''''''''''''''''''''''''''''''''''
-Gunter Kunert.
Translator:(Brammarajan)
நகரங்கள் சூழ்ந்திராத கல்லறைகள்
காட்டுகின்றன ஒருவித
மட்டுமீறிய பெருக்கத்தை
நிலக்காட்சியில் அங்கே
பொருத்தப்பட்டு
நிருபிக்கின்றன அவை
நம்மால் தாங்கிக்கொள்ள முடியும்
மரணத்தை என்று:
நம் அண்டைப் புறத்தை
இட்டு நிரப்புமளவுக்குப்
போதுமான சவங்கள்
நம்மிடம் இருக்கின்றன
மேலும் பற்றாக்குறையால்
பாதிக்கப்படுவதை விட
காற்றின் அலைவில்
சிறு முடிக்கற்றைகள் படபடக்கும்
வெளுக்கப்பட்ட எலும்பு அடுக்குகள் கொண்டு
போர்த்தி விடாமல்
நாம் புவி முழுவதையும்;
மறக்கப்பட்ட நீதியின் திசையில்
பிரபஞ்சத்தினூடே நாம் மேற்கொள்ளும் பயணத்தில்
நீதியின் முன் நாம் பரப்பி வைப்போம்
நம் எலும்புகளை
கருணைப் பிச்சை கேட்டு.
****** ****** ******