Monday, 4 May 2015

Alice Walker கவிதைகள் - (தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

ஒரு மரத்துடன்
உணர்வுவயமான கூடலை
தக்க வைத்துக் கொள்ள... பித்தாக வேண்டும் .
காட்டிற்குள் 
இருள்அடர்ந்த இரவொன்றில்
நான்
என் தடம் பிறழ்ந்தேன்.
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
காதலைக் குறித்து இப்படி யோசிப்பவளை.....................................................................................
எனக்கொரு நண்பி இருக்கிறாள்
அவளுக்கு நரைவீழத் துவங்கியிருக்கிறது,
அவளது கூந்தல் மட்டுமல்ல
ஆனால்
அது ஏன் அப்படியாகிறது
எனக்குத் தெரியவில்லை.
இது வைட்டமின் ஈ குறைபாடா
பாந்தோதெனிக் அமிலம்; அல்லது B-12?
அல்லது
மூர்க்கமான தனிமையில் வசிப்பதாலா?
ஒருவனைக் காதலிக்க உனக்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?
என அவளை கேட்டேன்.
”ஒரேயொரு கதகதப்பான கணம் என்று பதிலளித்தாள்”
.
எத்தனை காலம் அவனைக் காதலிப்பாய்
ஏறக்குறைய பல மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றாள்,
காதலிப்பதிலிருந்து விடுபட்டு காதலர்களை மறக்க
உனக்கு எத்தனை காலம் பிடிக்கிறது?
மூன்று வாரங்கள் என்று அவள் சொன்னாள்.
எனக்கும் நரைவிழ துவங்கியுள்ளதை சொன்னேனா?
ஏனென்றால்
காதலைக் குறித்து இப்படி யோசிப்பவளை.
நான் வியக்க துவங்கிவிட்டேன்.
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
மென்காற்று வீசும் படுக்கையில்
நமது உடல்களை தீண்டிக்கொள்ள
நீ எத்தனை வெது வெதுப்பாய் இருக்கிறாய்.....
நாளை வரை 
சிறிய சச்சரவை
நாம் சேமித்து வைத்துக் கொள்ள இயலாதா?
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

இன்றைய இரவு திராட்சை ரசம்,
அல்லது
திராட்சை ரசம் இல்லை
அல்லது
உன்னிடமிருந்து வந்த கடிதம்,
அல்லது
உன்னிடமிருந்து வராத கடிதம்.
நான் அமர்ந்திருக்கிறேன்,
பதற்றமற்ற மழையின் சப்தத்தை கேட்கிறேன்.
கவிதையொன்றை எழுதுகிறேன்,
அங்கேயே என்னை கொல்கிறேன்.
அது மெல்லிய வலியை கொணர்கிறது.
இன்றிரவு மழைபெய்கிறது , நாளை பிரகாசமாய் ஒளிரும்.
நாளை சொல்வேன்,
நேற்று வழக்கமாய்தான் இருந்தது ,
அதே மழை மட்டுமே ......
எனது காலணிகள் அதீத - இறுக்கமடைகிறது.
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

உண்மையாக உன்னை நான் மனமாற நேசிக்கிறேன்’
என்றான்.
எனக்கு நேசம் என்ற பதம் பிடித்தமில்லை.
இது
ஒரு நாயிடம் சொல்வதைப் போல்
எனக்கு ஒளிக்கிறது என்றேன்.
எனக்கு காதலை மட்டுமே தா
அல்லது
ஏதுவும் தேவையில்லை.
உன் நேசத்தை ஒரு குளத்தில் எறிந்துவிடு
என்றேன்.
ஆனால்,
அவனை குறித்து நான் உண்ர்ந்தது
வெதுவெதுப்பும் , மகிழ்வான துள்ளலும்,
என் ஈரம் செறிந்த வாய்,
பேரார்வம்.
அப்படி நான் நிர்பந்திக்கபட்டால்
அதைவிடுத்து நீந்திச் சென்றுவிடுவேன்.
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
நான் என் சுயமாக இருக்க துவங்கினேன்..........
அவன் சொன்னான் :
நீ சந்தோஷாமாய் இருக்க வேண்டும் நினைக்கிறேன்.
அவன் சொன்னான்: நான் உன்னை நேசிக்கிறேன்.
பிறகு
அவன் பிரிந்து சென்றான்.
இரண்டு நாட்கள் நான் சந்தோஷமாக இருந்தேன்.
அந்த இருநாட்கள்
அவன் என்னை அவ்வளவு நேசித்தான்.
இரண்டு நாட்கள் மட்டுமே, நான் சந்தோஷமாக இருந்தேன்.
பிறகு
நான் என் சுயமாக இருக்க துவங்கினேன்.
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

நான் உன்னை ஆரத்தழுவிக் கொண்டிருக்கும் வேளையிலும்
வெகுதூரம் விடைபெற்று சென்ற யாரோயொருவன
உன்னை நினைக்கிறேன்.
பாத்திரத்திற்குள் நிறைந்துள்ள் கறுநிற தேனுக்குள் 
செப்பு நாணயங்களாக உன் கண்கள்,
வேறு யாரோ ஒருவருக்கு இனிய ஒளியை வழங்குகிறது,
கறுநிற கேசம் என் விரல்களின் இடுக்குகளில் நழுவுகிறது
ஒரு மின்னல்வெட்டில்
உன் சிரம் மூலையில் சுழல்கிறது,
உன் புன்முறுவல் என்முன் உடைந்து நொறுங்குகிறது,
ஒரு சுழல் கதவை போல்
துடுக்குத்தனமான் கடைசி சுழற்சி
உன்னை தூர்த்துவிடுகிறது,
என்னிலிருந்து
நீ வேறுபட்டுத் தொலைந்துவிடுகிறாய்.
உன்னை என்வசத்தில் வைத்திருக்கும் தருணத்திலும்
உன்னைப் போக அனுமதிக்கிறேன்........
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
எனது குரலை இழந்துவிட்டேன்
நிச்சயமாக,
நீ சொன்னாய்
“காதலையும் மலர்களையும் பேசும் கவிதைகள்
படாடோபமானது
புரட்சியால் அதை பெறவியலாது.
இங்கு கதகதப்பான இனியசாறு ததும்பும்
குரல்வளை இருக்கின்றது.
என் தொண்டையிலிருந்து
ஒழுங்கற்று எழுகிறது.
உனது விரல்களின் மீது
அதை அழுத்த என்னை அனுமதியேன்,
சில இடங்களில்
அதற்கு பேசத் தெரிந்ததில்லை ,
எப்படி நம்புவது என்பதையும் அறிந்ததில்லை.
அப்போது
எவ்வாறு உன் குருதிபடந்த குரலை
நீ அழுத்தினாயோ அப்படி............
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
உனது கண்கள் ;அகல விர்ந்த மலர்கள்,
புதிர்மைகளை தன்னுள் மறைக்க
அதன் மையம் மட்டுமே இருன்மையாக இறுகியுள்ளன
அது என்னை கவர்ந்திழுத்து ,
நான் அறிந்த்தைக் காட்டிலும்
என்னை கவனமாய் மலரச் செய்கிறது,
நான் என்னுள்ளேயே
வைத்துக் கொள்ளதக்க ரகசியத்தை உறுதியளிக்கிறது.
-Alice Walker -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)