Saturday, 30 May 2015

-Charles Tomlinson --Maureen Burge--Friedrich Holderlin - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    எதுவுமே நிகழவில்லை
    ஏதுமின்மை
    ஒரு துளிநீர்
    ஒசையின்றி சிதறுகிறது
    சிலந்தி இழை தளர்கிறது
    உபயோகிக்காத இவ்வெளிக்கெதிராக
    ஒரு பறவை
    யோசனையின்றி தன் குரலில் முயல்கிறது
    ஆனால் வேறெந்த பறவையும் செய்யவில்லை
    மிதியுற்ற தரையின் மீது
    காலடிச் சுவடுகள்
    ஒலியாயின்றி
    தாமே அதித- துடிப்பாய் உயிர்க்கிறது
    திரும்பி வரும் கணம்
    லேசாக மயக்குற்று
    காற்றினில்
    அதை உணர்ந்திருக்க,
    ஏதுமின்மை
    நிகழ்ந்தேறுகிறது.
    -Charles Tomlinson -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    ஒரு மதுக்கடையில் அமர்ந்திருந்தேன்
    மது கட்டற்று பாய்ந்து வழிகிறது
    எல்லோருமே கொண்டாட்டத்திலிருக்க
    அளவாய் உண்ணும் வயோதிக நான்
    பட்டினியாயிருக்கிறேன்,
    நான் ஒரு மூலையில்
    அமர்ந்திருக்க வேண்டியிருந்தது
    அனைத்தும் அமைதியாயிருக்க
    நீ காணும் சிக்கல்
    நான் உணவு கட்டுப்பாட்டிலிருக்கிறேன்
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    விஸ்கியும் அல்ல , ஜின்னும் அல்ல
    நான் இங்கு ஏன் வந்தேன்
    உழுபவன் உணவல்ல இது
    அந்த பேராசை கொண்ட கூட்டத்தைப்போல்
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    நான் அந்த மதுக்கூடத்திற்கு நடக்கட்டுமா
    அதிக தூரம் போகமாட்டேன்
    ஒரு பாக்கட் நொறுவைகள்
    ஒரேயொரு கோப்பை மது
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    பிறகு நான் யோசிக்கிறேன்
    இந்த சிகரெட்டை புகைத்தபின்
    எனக்கு ஒரு கூடையில்
    கொஞ்சம் சிக்கன் கொஞசம் சிப்ஸ் கிடைக்கும்
    நான் பட்டினியாயிருக்கிறேன்
    இல்லை
    என்னால் இனி அமைதியாக இருக்க இயலாது
    நான் உரக்க கூச்சலிடுவேன்
    உணவுக் கட்டுப்பாட்டை விட்டுத் தள்ளு
    நான் முழு பட்டினியாயிருக்கிறேன்.
    -Maureen Burge-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.

    News Feed

    வேறு யாருமே அறிந்திருக்கவில்ல
    இதற்கிடையே நான் திரிய துவங்குகிறேன்
    பெர்ரிகளை சேகரிக்கிறேன்
    உன்மீதான என் காதலை அமைதியாக்க 
    உனது பதைகளின் மீது,
    ஓ பூமியே
    இங்குதான் ரோஜாக்களின் முட்களில்
    இனிமையான லிண்டன் மரங்கள் தனது நறுமணத்தை வார்கிறது
    பீச்கள் ஒருபுறமிருக்க , நண்பகலில் ,
    வெளிறிய ரை
    அடர்ந்து செழித்த மெலிய தண்டுகளோடு சலசலக்கிறது,
    அதன் செவிகள் பக்கமாக சாய்ந்தன
    இலையுதிர்காலத்தை போல்,
    ஆனால் மேலோங்கி உயரே வேய்ந்த ஓக்கின் கவின்மாடம்,
    நான் அகம்- நெகிழ்ந்து கவியுற
    வானத்தை வினவ , மணிகளின் ஓசை
    எனக்கு நன்கு தெரியும்
    தொலைவாய் ஒலிக்கும் பொன்மணிகள்
    பறவைகள் மறுவிழிப்புறும் நேரத்தில் .
    அவ்வாறாக நிகழ்கிறது.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.