இந்த பெண் நியூயார்கில் வசிப்பவள்,
ஆயினும் அவள் ;
அந்த இடத்தைச் சேர்ந்தவளில்லை
தன்னிலிருந்து வெகுதூரம்
இப்பெண் நியான் விளக்குகளை கடந்து ஓடுகிறாள்,
ஒழுக்கிவியலாளனின் திரைமறைவு ,
இவ்வுலகம்
அது இந்த பெண்ணுக்கு வெறுக்கதக்கது,
அவளுக்கான எந்த உண்மையையும் கொண்டிருக்கவில்லை,
உண்மைக்கான அவளது பதிலி சுழற்சி,
சீவப்படாத அவளது கேசம் ,
முறட்டு குளிராடை,
கண்ணாடி அணிந்த ,
இந்த ஒல்லியான
எதிர்- மறுப்பு;
அவளது குதிகால் உயர்காலணியில் நடமிடுகிறது,
உலகிலுள்ள அனைத்துமே அவளுக்கு பொய்யாக் தோன்றுகிறது,
விவிலியத்திலிருந்து தினசரிகள்வரை அனைத்துமே,
மொண்டேகுகளும் காபுளட்டும் இருக்கின்றன
ஆனால்
ரோமியோக்களும் ஜுலியட்டுகளும் காண்பதற்கில்லை.
மரங்களின் சிரங்கள் ஆழ்ந்த சிந்தையில் தொங்குகின்றன
நிலவு இருளடர்ந்து வெறிமயக்கில் ,
ஒரு பீட்னிக்கை போல்
சாவுகாசமாக
பாலொளி பாதையில் நடக்கிறது.
அது ஒரு மதுபானக்கடைக்கும் மற்றொன்றிற்குமாக
அலைவதுபோல்,
கவனமாகவும் தன்னந்தனியாகவும் ,
பேரெழிலுடனும்
ஆனால் குரூரத்துடனும் கீழ் நீள்கிறது...................
எல்லாமே குரூரமானது-
கூரைகளூம் ,
சுவர்களூம் ,
பெருநகரின் மேல் தொலைக்காட்சி ஏரியல்கள் -
எதற்காகவுமில்லை-
கிறிஸ்துவற்ற சிலுவைகளைப் போல் ................
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

மனிதர்கள் தொல்லைகளை பெருக்குபவர்கள்...............
இனியும் இது இப்படியே நிகழாது:
சாதாரணமாகச் சொன்னால்
இதுவும் ஒருவகையான அநீதிதான்,
எந்த வருடம் எப்படி இது ஒரு பாணியானது?
வாழ்தலுக்குள் வேண்டுமென்றே வேற்றுமையினமை செய்யபெறுகிறது;
வேண்டுமென்றே மரித்தோரை அறுவடை செய்தல்.
அவர்களது தோள்கள் தொய்வடைகிறது ;
சில சமயங்களில் குடிமையில் உழல்கிறார்கள்’
ஒருவர்பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றனர்,
பிரசங்கிகள் இடுகாட்டில் அலைகின்றனர்
வரலாற்றிடம் கருணை சுரக்கும் வார்த்தைகளை பேசுவர்.
எது மாயகோவ்ஸ்கியிடமிருந்து வாழ்வை கைப்பற்றியது?
அவனது விர்ல்களுக்கிடையில் கைத்துப்பாக்கியை எது திணித்தது
ஒருவேளை
அவனது அந்த குரல், அந்த தோற்றம்,
எந்த தருணத்திலாவது ;
கருணையின் சிறு துகள்கள்
அவனது வாழ்வில் எதையேனும் ஈந்திருக்கிறதா,
துயர் நிகழ்கிறது,
இன்னல் நிகழ்கிறது ,
அது கிடக்கட்டும்
யார் மகிழ்ச்சியின் விலையை அறியாதவனோ,
அவனால் மகிழ்ச்சியை துய்க்கவியலாது...
மனிதர்கள் வாழ்கின்றனர்.
மனிதர்கள் தொல்லைகளை பெருக்குபவர்கள்
மென்மை என்பதே
இறத்தலுக்கு பின்வரும் புகழஞ்சலி..
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
துயர் நிகழ்கிறது,
இன்னல் நிகழ்கிறது ,
அது கிடக்கட்டும்
யார் மகிழ்ச்சியின் விலையை அறியாதவனோ,
அவனால் மகிழ்ச்சியை துய்க்கவியலாது...

அவனது மரணத்தை புனிதப்படுத்துவது....மிரட்சியுற செய்கிறது....
அந்த பள்ளத்தாக்கை என்னால் மறு-நினைவுப்படுத்த இயலுகிறது,
பன்னெடும் காலமாக அழுகும் பாலம்,
பெண்பரியில் கடற்கரையின் அகவளைவில் அவள் பறக்கிறாள்,
இருண்ட புழுதியின் படலத்தில்
,வெளிறிய கன்னங்களூடன், வனப்பற்றும்.
”படுகொலை”
என உச்ச ஸ்தாயில் கதறி அலறினாள்,
என்னால்
இந்த நினைவை எங்குமே தொலைக்க இயலாது,
எப்படி மக்கள் அவள் பின்னால் ஒடினார்கள்,
அரிவாளை புல்வெளியில் கீழே போட்டுவிட்டு ஓடினார்கள்,
சிறு மலையின் தொலைதூரத்தில் ஒருபக்கமாக
சோகம் கவிந்தும் இனமறியா விசித்தரத்தில் வீழ்ந்திருந்தான்,
விலாவில் புலப்படாத காயங்களுடன் கிடந்தான்,
பணத்திற்காக கபடமற்றவன் கொலையுண்டிருக்கிறான்,
அந்த மண்ணின் கறுமையினை
மீண்டும் நினைவு கொள்ள இயலுகிறது,
மெல்லொலி தடங்களை கேட்க முடிகிறது,
புழுதி படலத்தினூடே
அப்பெண்ணை என்னால் கனவில் காணமுடிகிறது.
”படுகொலை”
என் இதயத்தை கிழித்தெறிகிறது..........
இவ்வுலகில் வாழ்தல் சற்று சிரமமாக உள்ளது,
அந்த கதறலை கேட்டது வலிமையுறுகிறது,
மனித இறப்பிற்கு நான் இன்னும் பழக்கப்படவில்லை,
சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்,
உன் விருப்படி கண்டிக்கலாம்,
ஆனமாவின் புலப்படா அழிவு,
ஒரு மூத்த தோழரின் பணிக்கிடையில்
அவனது மரணத்தை புனிதப்படுத்துவது
என்னை மிரட்சியுற செய்கிறது,
அவனது முகம் மற்றும் அதன் பண்புகளின் மிது இறுகுகிறது
நான் திடமானவன் அல்லன்,
பற்களை இறுக கடித்து, அமைதியாக இருக்கிறேன்,
’படுகொலை’
என நான் உரக்க அலறுகிறேன்.........
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அம்மா;
உன் மகனது பிறந்தநாளன்று உன்னை வாழ்த்துகிறேன்,
அவனை எண்ணியெண்ணி வருந்துகிறாய்.
இங்குதான் அவன் உறைகிறான்,
அவன் சொற்பமாக சம்பாத்திக்கிறான்,
அவனது திருமணம் புத்திசாலித்தனமற்றது,
அவன் நீண்டு வளர்ந்திருக்கிறான்,
அவன் சவரமற்றிருக்கி்றான்,
ஓ, எத்தனை துயருறும்
காதல் ஊன்றிய பார்வை அவனுடையது.
உனது கவலைகளின் பிறந்த நாளன்று,
என்னால் இயன்றால் உன்னை நான் வாழ்த்துவேன்,
உன்னிடமிருந்துதான் அவன் இதை வரித்துக் கொண்டான்,
பரிதாப உணர்ச்சியற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள வயது
மூர்க்கதனமும் அருவருப்பும் மிகுந்த நம்பிக்கை,
உன்னிடமிருந்து அவன் நம்பிக்கையை தேர்ந்து கொண்டான்,
புரட்சி.
நீ அவனை பிரிசித்திபெற செய்யவில்லை
வளமாக்கவுமில்லை,
அச்சமின்மை ஒன்றுதான் அவனது திறன்,
அவனது சாளரங்களை அகல் திற.
இலைகள் அடர்ந்த கிளைகளிலுள்ள
பறவையொலியை உள்ளே அனுமதி
முத்தமிட்டு கண்களைத் திற.
அவனது குறிப்பேட்டையும் , மைபுட்டியையும் தந்துவிடு,
பாலை பருகத தந்து
அவன் போவதை பார்த்தபடி இரு.
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Only when the sense of the pain
of others begins
does man begin..............

கவிதை பறவை போன்றது
அது
அனைத்து எல்லைகளையும்
உதாசீனப்படுத்துகிறது.
அது
அனைத்து எல்லைகளையும்
உதாசீனப்படுத்துகிறது.
Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

நாம் வயது முதிரும்போது நேர்மையடைய துவங்குகிறோம்
அது இனமறியாதவொன்று,
இந்த பருன்மையான வகைமாற்றங்கள்
மொழியோடும்
எனது மாற்றத்தோடும்
தொடர்புடையதாக தோன்றுகிறது.
அது இனமறியாதவொன்று,
இந்த பருன்மையான வகைமாற்றங்கள்
மொழியோடும்
எனது மாற்றத்தோடும்
தொடர்புடையதாக தோன்றுகிறது.
ஏதோ ஒன்றில்
உன்னை நான் இப்போது காண்பது
அப்போது உன்னை கண்டவிதமல்ல,
இப்போது உன்னில் நான் காண்பது புதியதெனில்
அது
என் சுய-காணுதலால் கண்டடைந்ததுதான்.
நான் இப்போது உணர்கிறேன் இந்த இருபது ஆண்டுகள்,
சற்று பக்குவமடையாதவைதான்,
அனால் ஒரு மறுபரிசீலனை:
நான் எதை சொன்னேனோ
அதை சொல்லியிருக்க தேவையில்லை,
எதைச் சொல்லியிருக்க வேண்டுமோ
அதற்கு மாற்றீடாக மெளனமானேன்..
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
உன்னை நான் இப்போது காண்பது
அப்போது உன்னை கண்டவிதமல்ல,
இப்போது உன்னில் நான் காண்பது புதியதெனில்
அது
என் சுய-காணுதலால் கண்டடைந்ததுதான்.
நான் இப்போது உணர்கிறேன் இந்த இருபது ஆண்டுகள்,
சற்று பக்குவமடையாதவைதான்,
அனால் ஒரு மறுபரிசீலனை:
நான் எதை சொன்னேனோ
அதை சொல்லியிருக்க தேவையில்லை,
எதைச் சொல்லியிருக்க வேண்டுமோ
அதற்கு மாற்றீடாக மெளனமானேன்..
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

மனிதர்கள் தொல்லைகளை பெருக்குபவர்கள்...............
இனியும் இது இப்படியே நிகழாது:
சாதாரணமாகச் சொன்னால்
இதுவும் ஒருவகையான அநீதிதான்,
எந்த வருடம் எப்படி இது ஒரு பாணியானது?
வாழ்தலுக்குள் வேண்டுமென்றே வேற்றுமையினமை செய்யபெறுகிறது;
வேண்டுமென்றே மரித்தோரை அறுவடை செய்தல்.
அவர்களது தோள்கள் தொய்வடைகிறது ;
சில சமயங்களில் குடிமையில் உழல்கிறார்கள்’
ஒருவர்பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றனர்,
பிரசங்கிகள் இடுகாட்டில் அலைகின்றனர்
வரலாற்றிடம் கருணை சுரக்கும் வார்த்தைகளை பேசுவர்.
எது மாயகோவ்ஸ்கியிடமிருந்து வாழ்வை கைப்பற்றியது?
அவனது விர்ல்களுக்கிடையில் கைத்துப்பாக்கியை எது திணித்தது
ஒருவேளை
அவனது அந்த குரல், அந்த தோற்றம்,
எந்த தருணத்திலாவது ;
கருணையின் சிறு துகள்கள்
அவனது வாழ்வில் எதையேனும் ஈந்திருக்கிறதா,
துயர் நிகழ்கிறது,
இன்னல் நிகழ்கிறது ,
அது கிடக்கட்டும்
யார் மகிழ்ச்சியின் விலையை அறியாதவனோ,
அவனால் மகிழ்ச்சியை துய்க்கவியலாது...
மனிதர்கள் வாழ்கின்றனர்.
மனிதர்கள் தொல்லைகளை பெருக்குபவர்கள்
மென்மை என்பதே
இறத்தலுக்கு பின்வரும் புகழஞ்சலி..
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
துயர் நிகழ்கிறது,
இன்னல் நிகழ்கிறது ,
அது கிடக்கட்டும்
யார் மகிழ்ச்சியின் விலையை அறியாதவனோ,
அவனால் மகிழ்ச்சியை துய்க்கவியலாது...
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

அவனது மரணத்தை புனிதப்படுத்துவது....மிரட்சியுற செய்கிறது....
அந்த பள்ளத்தாக்கை என்னால் மறு-நினைவுப்படுத்த இயலுகிறது,
பன்னெடும் காலமாக அழுகும் பாலம்,
பெண்பரியில் கடற்கரையின் அகவளைவில் அவள் பறக்கிறாள்,
இருண்ட புழுதியின் படலத்தில்
,வெளிறிய கன்னங்களூடன், வனப்பற்றும்.
”படுகொலை”
என உச்ச ஸ்தாயில் கதறி அலறினாள்,
என்னால்
இந்த நினைவை எங்குமே தொலைக்க இயலாது,
எப்படி மக்கள் அவள் பின்னால் ஒடினார்கள்,
அரிவாளை புல்வெளியில் கீழே போட்டுவிட்டு ஓடினார்கள்,
சிறு மலையின் தொலைதூரத்தில் ஒருபக்கமாக
சோகம் கவிந்தும் இனமறியா விசித்தரத்தில் வீழ்ந்திருந்தான்,
விலாவில் புலப்படாத காயங்களுடன் கிடந்தான்,
பணத்திற்காக கபடமற்றவன் கொலையுண்டிருக்கிறான்,
அந்த மண்ணின் கறுமையினை
மீண்டும் நினைவு கொள்ள இயலுகிறது,
மெல்லொலி தடங்களை கேட்க முடிகிறது,
புழுதி படலத்தினூடே
அப்பெண்ணை என்னால் கனவில் காணமுடிகிறது.
”படுகொலை”
என் இதயத்தை கிழித்தெறிகிறது..........
இவ்வுலகில் வாழ்தல் சற்று சிரமமாக உள்ளது,
அந்த கதறலை கேட்டது வலிமையுறுகிறது,
மனித இறப்பிற்கு நான் இன்னும் பழக்கப்படவில்லை,
சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்,
உன் விருப்படி கண்டிக்கலாம்,
ஆனமாவின் புலப்படா அழிவு,
ஒரு மூத்த தோழரின் பணிக்கிடையில்
அவனது மரணத்தை புனிதப்படுத்துவது
என்னை மிரட்சியுற செய்கிறது,
அவனது முகம் மற்றும் அதன் பண்புகளின் மிது இறுகுகிறது
நான் திடமானவன் அல்லன்,
பற்களை இறுக கடித்து, அமைதியாக இருக்கிறேன்,
’படுகொலை’
என நான் உரக்க அலறுகிறேன்.........
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
வாலிபர்களிடம் பொய் சொல்வது தவறானது.
அவர்களிடம் பொய்மையை உண்மை என்று நிருபிப்பது தவறு
கடவுள் சொர்கத்தில் இருக்கிறார்
உலகிலுள்ள யாவுமே நல்லது
என்று சொல்வதும் தவறானதுதான்
அவர்களிடம் பொய்மையை உண்மை என்று நிருபிப்பது தவறு
கடவுள் சொர்கத்தில் இருக்கிறார்
உலகிலுள்ள யாவுமே நல்லது
என்று சொல்வதும் தவறானதுதான்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்
இளைஞர்கள்தான் மக்கள்
சிரமங்களை கணக்கிடுவது கடினம் என்று சொல்லுங்கள்,
என்ன இருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கட்டும்
ஆனால் தற்காலத்தை தெளிவாக காணட்டும்.
தடைகள் நிறைந்திருக்கும்
அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்,
உங்களால் அங்கீகரிக்க இயன்ற தவறினை மன்னியாதீர்கள்
அது மீண்டும் தன்னை இருத்தி பல்கிப் பெருகும்
அதன் பிறகு நமது மாணவர்கள்
நாம் எதை மன்னித்தோமோ
நம்மிடமுள்ள அதை;
அவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
இளைஞர்கள்தான் மக்கள்
சிரமங்களை கணக்கிடுவது கடினம் என்று சொல்லுங்கள்,
என்ன இருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கட்டும்
ஆனால் தற்காலத்தை தெளிவாக காணட்டும்.
தடைகள் நிறைந்திருக்கும்
அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்,
உங்களால் அங்கீகரிக்க இயன்ற தவறினை மன்னியாதீர்கள்
அது மீண்டும் தன்னை இருத்தி பல்கிப் பெருகும்
அதன் பிறகு நமது மாணவர்கள்
நாம் எதை மன்னித்தோமோ
நம்மிடமுள்ள அதை;
அவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

உன் மகனது பிறந்தநாளன்று உன்னை வாழ்த்துகிறேன்,
அவனை எண்ணியெண்ணி வருந்துகிறாய்.
இங்குதான் அவன் உறைகிறான்,
அவன் சொற்பமாக சம்பாத்திக்கிறான்,
அவனது திருமணம் புத்திசாலித்தனமற்றது,
அவன் நீண்டு வளர்ந்திருக்கிறான்,
அவன் சவரமற்றிருக்கி்றான்,
ஓ, எத்தனை துயருறும்
காதல் ஊன்றிய பார்வை அவனுடையது.
உனது கவலைகளின் பிறந்த நாளன்று,
என்னால் இயன்றால் உன்னை நான் வாழ்த்துவேன்,
உன்னிடமிருந்துதான் அவன் இதை வரித்துக் கொண்டான்,
பரிதாப உணர்ச்சியற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள வயது
மூர்க்கதனமும் அருவருப்பும் மிகுந்த நம்பிக்கை,
உன்னிடமிருந்து அவன் நம்பிக்கையை தேர்ந்து கொண்டான்,
புரட்சி.
நீ அவனை பிரிசித்திபெற செய்யவில்லை
வளமாக்கவுமில்லை,
அச்சமின்மை ஒன்றுதான் அவனது திறன்,
அவனது சாளரங்களை அகல் திற.
இலைகள் அடர்ந்த கிளைகளிலுள்ள
பறவையொலியை உள்ளே அனுமதி
முத்தமிட்டு கண்களைத் திற.
அவனது குறிப்பேட்டையும் , மைபுட்டியையும் தந்துவிடு,
பாலை பருகத தந்து
அவன் போவதை பார்த்தபடி இரு.
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Only when the sense of the pain
of others begins
does man begin..............
-Yevgeny Yevtushenko-
காதல் ஒரு அஜாக்கிரதையான காவலன்................
கசங்கிச் சுருங்கிய என் வாழ்வின்மீது
தோன்றிய உன் முகத்தினால் ,
கசங்கிச் சுருங்கிய என் வாழ்வின்மீது
தோன்றிய உன் முகத்தினால் ,
என் வாழ்வில் பொதிதிருந்த வறுமையை
முதன்முதலாக உணர்ந்து கொண்டேன்,
பிறகு
ஒரு வனத்தின் , நதியின் ,ஆழியின்
மீது ...........
ஒரு குறிப்பிட்ட ஒளி....
வண்ணத்திலான உலகில் எனது துவக்கமானது,
எதிர்பாராத சூரியோதத்தின் அந்தத்தில்
நான் அச்சுறுகிறேன் , நான் அச்சுறுகிறேன்,
நான் அதை எதிர்த்து போராட போவதில்லை
எனது காதலே... இந்த அச்சம்தான்,
,
எதையுமே
வளர்த்துக்கொள்ள திராணியற்றவனான
நான்
இதை இன்ப பெருக்காக வளர்தெடுக்கிறேன்
காதல் ஒரு அஜாக்கிரதையான காவலன்.
அச்சம் நுனிதாய் என்னை தன்னில் இழுக்கிறது,
உனது முகம் பொருந்தும் தருணத்தில்
இந்நொடிகள்
குறுகியதென்ற பிரக்ஞையுடன் இருக்கிறேன்.
,
என் விழிகளில் நிறைந்திருக்கும் வண்ணங்கள் இன்மையாகிது..
Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

அவர்களின்
விதியென்பது கோள்களின் தொடர் சரிதை.
அதிலுள்ள எதுவுமே குறிப்பானதல்ல,
ஒவ்வொரு கோளும் மற்றொன்றின் வேற்றுமையுருக்கள்.
ஒரு மனிதன் இருன்மையில் வாழும்போது
இருன்மயில் நண்பர்களை கண்டடையும் போதும்
இருன்மை
என்பது சுவராஸ்யமற்றதல்ல.
ஒவ்வொருவனின் உலகுமும் தனியானது,
அந்த உலகில் ஒர் அற்புத நிமிடம்.
அங்கு எந்த மனிதன் இறக்கிறானோ
தன்னுடனேயே தனித்திருக்கிறான்
அவனது முதல் பனி ,
முதல் முத்தம்,
முதல் பிணக்கு,
அவனுடனேயே அற்றுப் போய்விடுகிறது.
அவை;
விடைபெற்ற புத்தகங்கள்,
பாலங்கள்,
மற்றும்
ஓவியம் தீட்டிப்பட்ட கான்வாஸ்,
இயந்திரங்கள்,
அவைகளின் விதி வாழ்தல் .
ஆனால்
எதை இழந்தோமோ அது ஏதுமற்றதுமல்ல
பேராட்டத்தின் சட்டத்தில் ஏதோவொன்று அற்றுப் போயிற்று.
மனிதர்கள் இறப்பதில்லை ,
ஆனால்
உலகம் அவர்களுக்குள் இறக்குகிறது.
நாம் யாரை பிறழ்ந்தவர்கள் என்று எண்ணுகிறோமோ,
அவை
புவியின் உயிரனங்கள்,
அவர்களுள் ,
அவசியமானவர்களைப் பற்றி
நாம் எதை அறிந்திருக்கிறோம்?
சகோதரனின் சகோதரனே?
நண்பர்களின் நண்பனே?
காதலரின் காதலரே?
நாம் நமது தந்தையர்களை அறிந்திருக்கிறோம்.
ஒவ்வொன்றிலும் ஒன்றுமில்லை.
அவை அழிகின்றன ,
அவைகளை மீண்டும் உயிப்பிக்க இயலாது.
இரகசிய உலகங்களை மீண்டும் மீளுருவாக்க முடியாது.
ஒவ்வொரு காலத்திலும்
மீண்டும் ........மீண்டும் ...........
கையறவு பாடலை
அழிவிற்கு எதிராக
நான் இசைக்கிறேன்.
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

அப்போது....
கண்விழித்தல் கனவு காணுதல் போன்றது
விழித்தல்; தனிமை கனவுக்கு ஒப்பானது,
இந்தக் குடியேற்றத்தில் ,இந்த குடிலில்
ஆழ்ந்து யோசிப்பது,
காளான்களைச் சேகரிக்கச் செல்வது,
விழிப்பூட்ட ,
உன் கேசத்தை விரல்களால் சிலுப்பி
உனது கண்களை முத்தமிட்டு திறத்தல்
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய் கண்டைதல்,
இந்த குடியேற்றத்தில் ஒரு மாதம் தங்கியிருந்தோம்,
தோட்டங்கள்,
சங்கேத ஒலியெழுப்பும் பறவைகள்,
பசும்புல்வெளியின் வழித்தடம்
கோதுமை வயல்கள் பக்கம் வளைந்தோடுகிறது,
பாதங்களின் கீழுள்ள தரையின் -கிரிச்சொலி அடர்கிறது.
ஒரு சூரியகாந்திப் பூவை இரண்டாக பிளக்கும் போது
எந்த பிரத்யேக விள்க்கத்திற்கான தேவையுமில்லை
சூரியோதத்தில்;
வருதீங்கின் முன்னுணர்தலில்
ஆற்றிற்குள் இறங்கி ஓடினோம்
தூண்டிலிறை ஆற்றெல்லையில்
உன் பாதங்களை ஊறசெய்கிறது,
அங்கு சிக்கலான கேள்விகளுக்கு இடமில்லை
மனித அறிவெல்லைக்குள் விளக்கமளிக்கக் கூடிய்தாக
அந்த புதிர்மை இருக்கவில்லை,
இரவில் என்னருகில் சயனித்துக் கொண்டு கனவில் திளைக்கிறாய்
விதியின் தற்செயலென இதை நினைத்தேன்,
ஒவ்வொரு காலையின் புலர்வும்
உன்னை சங்கமிக்குமிடமாகிறது
அது நிகழவும் நொறுங்கவும் வாய்பில்லை.
நான் என்னையே தற் -ஸ்துதி செய்துகொண்டேன்
காலத்திற்கு காலம்
உனக்க்குள்ளிருக்கும் எதுவும்
என் அறிதலுக்கு அப்பாலில்லை,
என்னுள் நானே நிறுவிக் கொண்டேன்
மனதின் கணக்கிட்டிற்கு.. உரியவள்ள நீ,
என் ஒவ்வொரு நிகழ்த்துதலையும் நீ தவறென நிருப்பிக்கிறாய்
உனது உண்மை எதிர்பாராதது,
அதுமுதல்
நான் அறிந்ததிலிருந்து,
நீ என்னிடம் வந்தடையவில்லை,
நாட்கள் மீண்டும் மீண்டும் திரும்பிவரலில் இல்லை
ஆனால்
புதிய துவக்கங்கள், புதிய ஆச்சர்யங்கள்,
அந்த ரீங்கரிக்கும் பறத்தலில் நாம் பிணக்குற்றதில்லை
ஆனாலும்
உனது முன் தோன்றல்
வட்டம் வட்டமாய் நம்மைச் சுற்றி
நம்மோடு பறந்து கொண்டே
நம்மை அளந்து வண்ணமிருக்கிறது.

எனது காதலி வருவாள்
அவளது கரங்களை அகல விரித்து
அதில் என்னை மடித்து கொள்வாள்,
எனது அச்சஙளை புரிந்து கொள்வாள்,
எனது மாற்றங்களை உன்னிப்பாய் உள்வாங்கிக் கொள்வாள்,
பொழியும் இருளின் அகத்துள்ளிருந்து ,
அதி-கறுமையின் இரவிலிருந்து
வாடகை காரின் கதவுகளை அறைவதை தவிர்க்காமல்
சிதிலமடைந்த தாழ்வாரத்தின் ஊடே மேல்மாடி நோக்கி ஓடுவாள்.
காதலில் கனன்று பொசுங்கியபடியும்...
காதல் வேட்கையின் மகிழ்வுடனும்,
மாடிக்கு சொட்டு சொட்டாக விரைவாள்,
அவள் கதவினை தட்டமாடாள்,
எனது தலையை கரங்களில் ஏந்திக் கொள்வாள்,
தனது மேல்கோட்டை நாற்காலியில் கிடத்துகிறாள்,
அது
தரையின் மிது நீல குவியலாய் நழுவிக் குவிகிறது......

அதன் இடத்தை
மெளனம் பிடிக்கும் போது;
மெளனமும் ஒரு பொய்மையாகிறது...
-Yevgeny Yevtushenko-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

is his poetry.
Anything else
is just a footnote...
-Yevgeny Yevtushenko-