Monday, 18 May 2015

-Fernando Pessoa- (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


அழகு அனைத்துமே ஒரு கனவுதான்,
அது ஒருவேளை உளதென்றாலும்,
அழகு எப்போதுமே
தன்னைக் காட்டிலும் மிகையாகவே இருக்கிறது
உன்னில் நான் காணும் அழகு 
என்னருகில் இல்லை, இங்கில்லை,
உன்னில் நான் காண்பதெல்லாம்
நான் கனவுறும் புலத்தில் வாழ்கிறது.
இங்கிருந்து வெகுதொலைவில் , நீ இருப்பாயெனில் ,
நான் ஒருவன் மட்டுமே அதை அறிவேன்
ஏனென்றால்
அதை நான் கனவுற்றேன்.
அழகு என்பது இசை, கனவுகளில் செவியுறுவது,
வாழ்வினுள் நிறைந்து வழிவது
ஆனால் ,
அது மிகச் சரியான வாழ்வே அல்ல :
வாழ்வுதான் கனவு கண்டது
,-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

ஒரு குழந்தையைப் போல், நான் அயர்ந்து போனேன்.......................
ஒருவேளை, நான் மரித்தபின் ,
யாராவது எனது சரிதையை எழுத முற்பட்டால்,
அதில் எளிதாய் ஏதுமில்லை.
அதனிடம் இரண்டே தேதிகளே உள்ளது-
நான் பிறந்த நாள் ஒன்று; நான் மரித்த நாளொன்று,
இந்த இரண்டிற்குமிடையே,
அனைத்து நாட்களுமே என்னுடவை.
வரையறுக்க நான் எளியவன்,
பார்க்க சபிக்கப்பட்டவனைப் போல நான் பார்த்தேன்,
உணர்ச்சிவயப்படாமல் எல்லாவற்றையும் நான் நேசித்தேன்,
என்னால் தணிக்கவியலாத ஆசை ஒன்றுமில்லை,
ஏனென்றால் நான் குருடாயிருந்ததில்லை.
கேட்டல் என்பது எனக்கு காணலுக்கான துணையிருத்தல்
எனபதைக் காட்டிலும் அதிகமாயிருந்ததில்லை,
பொருட்கள் யாவும் உண்மை
தன்னிலிருந்து மற்றவை ஒவ்வொன்றும்
வேறானவை என்று புரிந்து கொண்டேன்,
இதை நான் என் கண்கொண்டு புரிந்து கொண்டேனே தவிர
என் மனதைக் கொண்டல்ல,.
எல்லாமே ஒத்ததாயிருக்கிறது என்பது
மனதைக் கொண்டு புரிந்து கொள்வது.
ஒரு நாள்,
ஒரு குழந்தையைப் போல், நான் அயர்ந்து போனேன்.
எனது கண்களை மூடிக் கொண்டு துயின்றுவிட்டேன்.
இவை ஒருபுறமிருக்க
நான் ஒருவனே
இயற்கையின் கவிஞனாய் இருந்திருக்கிறேன்.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.


நான் சூரியனைப் பற்றி மட்டுமே யோசிக்கிறேன்...........
மலைப்புற மேய்ப்பனே,
என்னிலிருந்து நீ வெகுதூரத்தில் ஆடுகளூடன் இருக்கிறாய் ,
உன்வசமுள்ளதாகத் தோன்றும் மகிழ்ச்சி 
உன்னுடையதா அல்லது என்னுடையதா?
உன்னைக் காணும தருணங்களில்
நான் உணரும் அமைதி உனக்குச் சொந்தமானதா அல்லது எனதா?
இல்லை, மேய்ப்பனே,
அது உன்னுடையதோ அல்லது என்னுடைதோ
நம் இருவருடையதுமன்று,
அது அமைதிக்கும் மகிழ்விற்கும் மட்டுமே சொந்தமானது.
உன்னிடம் அதில்லை ,
ஏனென்றால் உன்னிடமுள்ளதென்று உனக்குத் தெரியாது
அது என்வசமும் இல்லை ,ஏனென்றால் எனக்கு அது தெரியும்,
அது சுயமாகவே இருத்தலுறுகிறது
நம்மேல் சூரியனாய் விழுகிறது,
உன் பின்புறமாக அறைந்து வெதுவெதுப்பூட்டுகிறது,
நீ அசட்டையாக ஏதோவொன்றைப் பற்றி யோசிக்க
அது என் முகத்தில் அறைகிறது
என் கண்களை கூசும்படி செய்கிறது,
நான் சூரியனைப் பற்றி மட்டுமே யோசிக்கிறேன்.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.


ஏற்கனவே வெறுமையான எனது புருவத்தின்மீது
இறந்த அந்த இளைஞனின் கேசம் வெண்மையடைகிறது
என் கன்கள் இன்று குறைவாய் ஓளிர்கிறது
என் இதழ்கள் முத்தமிடலின் உரிமையை இழந்துள்ளது,
இன்னமும்கூட 
நீ என்னை காதலித்தால்
காதலின் நிமித்தம் காதலிப்பதை நிறுத்திவிடு:
என்னுடன்.....
என்னையே ஏமாற்றாதே .
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.


I don't know who I am right now .
I dream.
Steeped in feeling myself ,
I sleep .
In this
Calm hour my thought forgets its thinking,
My soul has no soul.
-Fernando Pessoa -


'I don't know  who I am right now .
I dream.
Steeped in feeling myself ,
I sleep .

In this 
Calm hour my thought forgets its thinking,
My soul has no soul.

-Fernando Pessoa -'

நீ பூக்களை சேகரிப்பதை பார்ர்த்துக் கொண்டே.......................
நிலா வானத்தில் உயர எழுந்துள்ளது
இது இலையுதிர்காலம்
நான் உன்னை நினைத்துக் கொள்கிறேன் 
என் அகத்துள் நான் முழுமையடைந்திருக்கிறேன்.
பனிபடர்ந்த வெளியின் ஊடாக
மென்காற்று என்னை நோக்கி வருகிறது.
நான் உன்னை எண்ணிக் கொள்கிறேன்
உனது பெயரை குசுகுசுக்கிறேன்
நானல்லன்- நான் :
நான் சந்தோஷமாக இருக்கிறேன்.
நாளை நீ வருவாய்
வந்து
என்னுடன் அந்த வெளியில் பூக்களை சேகரிப்பாய்
நீ பூக்களை சேகரிப்பதை பார்ர்த்துக் கொண்டே
உன்னுடன் நான் அந்த வெளியில் நடப்பேன்.
நாளை
நீ என்னுடன் பூக்களை சேகரிப்பதை நான் பார்க்கத் துவங்கிவிட்டேன்,
ஆனால்
நாளை நீ நிஜமாகவே வந்து என்னுடன் பூக்களைச் சேகரிக்கும் போது,
எனக்கு பேருவகையாகவும் புதுமையாகவும் இருக்கும்.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.

காதல் ஒரு உடனிருத்தல் ,
இனி தன்னந்தனியாக சாலைகளில் நடப்பது
எப்படியென எனக்குத் தெரியாது,
இனியும் தனியாக நடந்து செல்ல என்னால் இயலாது,
புலனாகும் சிந்தனை என்னை வேகமாக நடக்க வைக்கிறது
குறைவாகவே காண்கிறேன்,
அதேநேரம் நான் காண்பதையெல்லாம் நன்கு அனுபவிக்கிறேன்,
அவளது இன்மையும் என்னுடனேயே இருக்கும் ஒன்றுதான் ,
அவளை எனக்கு நிரம்பவே பிடிக்கும்
அவளை வேட்கையுற எனக்குத் தெரியவில்லை.
நான் அவளைக் கானாவிடில்,
அவளை நான் கற்பனை கொள்வேன் ,
நெடிய மரங்களைப் போல் திடமாக இருக்கிறேன்.
ஆனால் அவள் நடுங்குவதைக் கண்டால்
அவளது இன்மையில் ஏற்பட்ட உணர்தலில்
எனக்கென்ன நிகழ்ந்ததெனத தெரியவில்லை,
என்னை கைவிடும் ஆற்றலாக என் முழுமையிருக்கிறது.
ஒரு சூரியகாந்தி பூவின் மைத்திலிருக்கும்
அவளது முகத்துடன் மெய்மை என்னப் பார்க்கிறது.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.

சூரியன் ஒளிரும் தருணத்திலேயே
அமைதியாயிருந்து அதை அனுபவிக்கலாம் ,
வானத்தை விடுத்து அது சென்றபின் ,
நாம் ஓய்வெடுக்கலாம்.


மீண்டும் அது திரும்பும் போது
ஒருவேளை
அதனால் நம்மைக் காண இயலாது.
ஒருவேளை இப்படியும் இருக்கலாம்

நாமும்கூட மீண்டும் திரும்பி வரலாம்.

-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)பூமி முழுமையிலும் என்னுடைய பற்களை ஆழமாக அமிழ்த்த முடிந்தால் 
உண்மையாகவே அதை ருசிப்பேன்,
நான் ஒரு கணம் மகிழ்வில் திளைப்பேன்.......
ஆனால் நான் எப்போதுமே மகிழ்வாக இருக்க விரும்பவில்லை.
அவ்வப்போது மகிழ்வற்றிருத்தல் 
இயற்கையாயிருத்தலின் ஒரு பகுதிதான்.
எல்லா நாட்களுமே சூரிய- ஓளி நிறைந்திருப்பதில்லை
மழைப்பொழிவு அரிதாயியிருக்க , நாம் அதற்க்காக பிராத்திக்கிறோம்.
ஆகையால்
நான் மிகிழ்ச்சியின்மையை மகிழச்சியுடன் ஏற்கிறேன்
இயற்கையாகவே ,
நான் வியப்புறாதது போல்
அங்கு மலைகளும் சமவெளிகளும் இருக்கின்றன
மேலும் அங்கு பாறைகளும் , புற்களும் உள்ளன........
இயற்கையாயும் அமைதியாயும் இருத்தலே முக்கியமாகிறது
மகிழ்விலும் மற்றும் மகிழ்வின்மையிலும் ,
உணர்தலே பார்த்தல் என உணர்ந்து கொள்வது
சிந்தித்தல் நடைபயில்வது போன்றதுதான்
என நினைப்பது,
மரணம் நெருங்கும் தருவாயில் ,
நாள் ஒவ்வொன்றும் மரணமடைவதாய் நினைத்துக் கொள்வது,
சூரிய அஸ்தமனம் அழகாயிருக்கிறது,
எஞ்சும் இரவும் அவ்வாறேயிருக்க,
நான் எப்படியிருக்க வேண்டுமென நினைத்தேனோ
அது அப்படித்தான் இருக்கிறது.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

காணும் முன்பே நறுமணத்தை உணர்கிறேன்...............
இப்போது நான் காதலை உணர்வதால்
நறுமணங்களில் நான் ஆர்வம் கொள்கிறேன்
பூக்களில் நறுமணம் கமழ்வது 
எப்போதுமே என்னை ஈர்த்ததில்லை
புதிதாய் ஒன்றைக் காண்பதைப்போல்
என் இருத்தலை நான் உணரும் முன்பே
அதன் நறுமணத்தை நான் உண்ர்கிறேன்
அவை நறுமணத்துடன் இருந்தன
இவையெல்லாம் நாம் புறவயமாக அறிந்தவை.
ஆனால் ;இப்போது
என் சிரத்தின் பின்புறம் நிகழும் சுவாசமுறுதலில் அறியமுடிகிறது
இப்போது பூக்கள் அதீத ருசியுடன் இருப்பதை முகரந்துணருகிறேன்
சிலசமயங்களில்
நான் விழித்தெழும் தருணங்களில்
காணும் முன்பே நறுமணத்தை உணர்கிறேன்.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.




ஆண்களின் மொழி கொண்டே குறிப்பிட்டுப் பேசுகிறேன்..........
இயற்கை ஒன்றே புனிதமாயிருக்கிறது,
ஆனால், அவள் ஒன்றும் புனிதமானவள் அல்ல..............
சிலசமயங்களில் அவளை ஒரு நபராக குறிப்பிட்டு பேசுகிறேன்
அது ஏனென்றால் ,
நான்
அவளை ஆண்களின் மொழி கொண்டே குறிப்பிட்டுப் பேசுகிறேன்,
அது பொருட்களின் மீது பெயர்களைத் திணிக்கிறது
அவர்களுக்கான ஆளுமையைத் தந்துவிடுகிறது.
ஆனால்
பொருட்களுக்கு பெயரோ அல்லது ஆளுமையோ இருப்பதில்லை
அவை இயல்பாய் இருக்கின்றன,
வானம் விசாலமானது,
பூமி பரந்துள்ளது,
நமது இதயம் இறுகமூடிய கையின் அளவேயானது................
நான் அறியாதவைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்,
உண்மையில் அது ஒன்றே நான்.........
யாவையும் ;
நான் ஒன்றாகவே அனுபவிக்கிறேன
யார் அறிவார் சூரியனின் இருத்தலை...........
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





மெளனத்தின் சிற்றுறக்கம் ..................
இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும்
ஒரு வரலாறு இருக்கிறது
எனது நினைவின் அடியாழத்தில்
கரகரப்பொலியிடும் தவளைகளைத் தவிர.

உலகிலுள்ள ஒவ்வொரு இடமும்
வேறங்கோ இருக்க நேரிடுகிறது
இந்த கரகரப்பொலி எழும்
அந்தக் குளங்களைத் தவிர.
என்னுள் ஒரு பொய்மை நிலா எழுகிறது
நாணற் புதருக்கிடையே
குளம் தோன்றுகிறது,
கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ
நிலவினால் ஒளிபடர்கிறது.
நான் ஞாபகம் கொண்டிருப்பதெல்லாம்
வேறெந்த வாழ்வில் ,
எங்கு, எப்படி, இருந்தேன்
நான் எதை மறந்தேன்?
அந்த விழிப்பில் கரகரப்பொலியிடும்
அந்த தவளைகளுக்கு நன்றி
ஏதுமில்லை-
நாணற் புதருக்கிடையே மெளனத்தின் சிற்றுறக்கம்
முடிவில்
என் பெருத்த பழைய ஆன்மாவில்
நான் இன்றி
தவளைகள் கரகரப்பொலியிடுகின்றன.
-Fernando Pessoa-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)