Friday, 29 May 2015

FOR JANE BY CHARLES BUKOWSKI - ஜேனுக்காக -மொ.பெ. ராஜசுந்தர ராஜன் raja sundara rajan

FOR JANE BY CHARLES BUKOWSKI

 FOR JANE 

BY CHARLES BUKOWSKI

225 days under grass and you know more than I. they have long taken your blood, you are a dry stick in a basket. is this how it works? in this room the hours of love still make shadows. when you left you took almost everything. I kneel in the nights before tigers that will not let me be. what you were will not happen again. the tigers have found me and I do not care. (போதை தெளிந்தபின்): ஜேனுக்காக _____________ 225 நாட்கள் புல்லுக்கு அடியில்  நீ என்னிலும் கூடுதல் அறிவாய். எப்போதோ பறித்துவிட்டார்கள் உன் குருதியை, ஒரு சுள்ளி நீ கூடையில்.   இப்படித்தானா அது நடந்தேறுகிறது? இந்த அறையில்  காதலின் காலநீட்சிகள் இன்னும் இருள்கவிக்கின்றன. போகையில்  கிட்டத்தட்ட எல்லாவற்றையும்  கூடவே கொண்டுபோய்விட்டாய். என்னை இருக்கவிடாத  புலிகளின் முன்  இரவில் மண்டியிடுகிறேன். நீ இருந்த நிலை  மீண்டும் நிகழப்போவதில்லை. புலிகள் என்னைக் கண்டுவிட்டன,  எனக்கதில் அச்சமில்லை.
 

raja sundara rajan

Shared publicly  -  7 May 2015
எளிமை, படுத்தப்படாமல், இயல்பாகவே இயலும் ஒரு கவிதை எடுத்துக்காட்டு:

ஜேனுக்காக
_______________

225 நாட்கள் புதைமேட்டுப் புல்லுக்கு அடியிலான
நீ என்னிலும் நன்றாக அறிவாய்.
எப்போதோ உன் உயிர்நீரை எடுத்துவிட்டார்கள்,
இப்போதொரு சுள்ளி நீ கூடைக்குள்.
இப்படித்தானா அது இயல்கிறது?
இந்த அறையில்
காதலின் மணிக்கூறுகள்
இன்னும் நிழற்பூச்சி காட்டுகின்றன.
போனதோடு
எல்லாவற்றையும்
கொண்டுபோய்விட்டாய்.
என்னை இயல்பில் விடாத
புலிகளின் முன்
இரவில் மண்டியிடுகிறேன்.
இடம் உனது இனி
நிரப்பப்படப் போவதில்லை.
எனது இருப்பையும் புலிகள் கண்டுகொண்டனவா,
கவலையில்லை.

- சார்ல்ஸ் புக்கவ்ஸ்கீ


FOR JANE BY CHARLES BUKOWSKI

225 days under grass
and you know more than I.
they have long taken your blood,
you are a dry stick in a basket.
is this how it works?
in this room
the hours of love
still make shadows.
when you left
you took almost
everything.
I kneel in the nights
before tigers
that will not let me be.
what you were
will not happen again.
the tigers have found me
and I do not care.

(போதை தெளிந்தபின்):

ஜேனுக்காக
_____________
225 நாட்கள் புல்லுக்கு அடியில்
நீ என்னிலும் கூடுதல் அறிவாய்.
எப்போதோ பறித்துவிட்டார்கள் உன் குருதியை,
ஒரு சுள்ளி நீ கூடையில்.
இப்படித்தானா அது நடந்தேறுகிறது?
இந்த அறையில்
காதலின் காலநீட்சிகள்
இன்னும் இருள்கவிக்கின்றன.
போகையில்
கிட்டத்தட்ட எல்லாவற்றையும்
கூடவே கொண்டுபோய்விட்டாய்.
என்னை இருக்கவிடாத
புலிகளின் முன்
இரவில் மண்டியிடுகிறேன்.
நீ இருந்த நிலை
மீண்டும் நிகழப்போவதில்லை.
புலிகள் என்னைக் கண்டுவிட்டன,
எனக்கதில் அச்சமில்லை.