Saturday, 9 May 2015

பாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம்

உனது மனமெனும் பாழ்நிலத்தில்
நீ என்னைத் தேடி கண்டடைவாய்......................
சமவெளிகளின் குறுக்கே பார். நான் திரும்பி வருவதை,
உனது கண்களில் புகைமூண்டிருக்கிறது, நீயொரு புன்னகையை ,வரிக்கிறாய்,
நீ எனது கடிதங்களை எரிக்கும் தீயிடத்தின் அருகாமையிலிருந்து,
உனக்கு இதுகுறித்து சற்றே யோசிக்க நேரமிருந்தது,

சரி, நான் இருநூறு மைல்கள் நடந்து வந்திருக்கிறேன்,
இப்போதாவது என்னை முடிந்த அளவுக்கு பார்,
இதுதான் துரத்தலின் முடிவு ,நிலா உயர வீற்றிருக்கிறது,
உன்னை யார் காதலிக்கிறார்கள் என்பது பொருட்டல்ல,
நீ என்னை நேசிப்பாய் அல்லது நான் உன்னை நேசிப்பேன்,
இரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.
உனது சுவர்களின் ஊடாக என்னால் பார்க்க முடிகிறது,
நீ காயமுற்றிருக்கிறாய் என தெரியும் ,
சோகம் கடலை சுற்றிய முனைபோல் உன்மீது தன்னை போர்த்துகிறது,
நேற்றுதான் நீ இன்னொருவனுடன் பழகுவது தெரிந்தது,
அந்த பேரிடரிலிருந்து எப்படியோ நீ தப்பித்தாய்.
உனக்கு என்னால் எளிய பதில்களை தர வாய்பில்லை,
நீ யார் எதற்க்காக உன்னிடம் நான் பொய் சொல்ல?
உனக்கு எல்லாமே தெரியவரும் , என் அன்பே,
அது உனக்கு கையுறை போல் கச்சிதமாகப் பொருந்தும் ,
இரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.
நடுக்கத்துடன் பதறித் துடிக்கும் உன் இதயம் ஒரு நதியைப் போல் ஒலிக்கிறது,
நான் போனமுறை உன்னை அழைத்தபோது நீ யாரையோ பாதுகாத்து கொண்டிருந்தாய்,
உன்னால் தரமுடியாததை எதையுமே நான் உன்னிடம் கேட்கவில்லை,
நீ விழ்வதற்கு உன்னை நான் தயார்படுத்திக் கொள்ளவும் சொல்லவில்லை,
இருன்மையை விட்டு வெளியேறிய பல் -ஆயிரம் நபர்களை நான் கண்டிருக்கிறேன்,
ஒரு சோம்பலானவனின் காதலுக்காக , நான் அவர்கள் மடிந்ததை கண்டேன்,
என்னுடனே இருந்துவிடு ,நாம் இன்னும் இணங்கவில்லை,
என்னைத் தேடி காணாதே, நானே உன்னை காண்பேன்,
இரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.
உனது கண்ணீரில் ,என் சொந்த பிரதிபலிப்பை காண முடிகிறது,
நான் டெக்ஸாஸ் வடக்கு எல்லையில் இருந்தேன் அங்குதான் எல்லையைக் கடந்தேன்,
நேசத்திற்காக ஏங்கும் முட்டாளாக இருக்க எனக்கு பிடித்தமில்லை,
நான் வேறொருவரின் வைனுக்குள் மூழ்க விருப்பமில்லை.
அனைத்து நித்தியங்களையும் நான் நினைவு கொள்வேன்,
உனது கண்களில் ஊளையிடும் பனிக்காற்று.
உனது மனமெனும் பாழ்நிலத்தில் ,
நீ என்னை தேடி கண்டடைவாய் ,
இரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்
சரி, என் உண்ர்வுகளை கடிதமாக உனக்கு அனுப்பினேன்,
ஆனால் நீ ஆதரவுக்காக சூதாடிக் கொண்டிருந்தாய்,
இந்நேரம் நாளை உன்னை நான் நன்றாக அறிந்திருப்பேன்,
எனது நினைவாற்றல் குறுகியதல்ல,
இத்தருணம் நான் என் விடுதலையை கேட்கிறேன்.
நீ மறுதலிக்கும் உலகிலிருந்து விடுதலை,
அதை நீ எனக்கு இப்போது தருவாய்,
எப்படியாவது அதை எடுத்துக் கொள்வேன்,
இரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
I'm just average, common too
I'm just like him, the same as you
I'm everybody's brother and son
I ain't different from anyone
I ain't no use a - talking to me
It's just the same as talking to you.




--

Bob Dylan

கான்கிரிட் உலகில் ஆன்மாக்கள் நிரம்பி வழிகிறது.........
மூன்று தேவதைகள் சாலைகளின் மேல் உயரத்தில் நிற்கின்றனர்,
ஒவ்வொன்றும் கொம்பூதிக் கொண்டிருக்கிறது,
பச்சைநிற ஆடைகளில் இறக்கைகள் வெளியே புடைத்திருந்தது,
அவை கிரிஸ்துமஸ் நாள் காலையிலிருந்து அங்கிருக்கின்றன ,

மொண்டானாவின் காட்டுப் பூனை ஒரு பளிச்சிடலில் கடந்து போகிறது,
அதன்பிறகு பளிச்சிடும் ஆரஞ்சுநிற ஆடையில் பெண்ணொருத்தி,
இழுவை படகு, சரக்குவண்டி சக்கரங்களின்றி இருக்க ,
பத்தாம் அவென்யு பேருந்து மேற்கில் பயணிக்கிறது,
நாய்களும், புறாக்களும் சுற்றிப் பறந்து படபடக்கின்றன,
பேட்ஜ் அணிந்த ஒருவன் தவிர்த்துவிட்டுப் போகிறான்,
மூன்று பேர் ஊர்ந்து வேலைக்கு திரும்பிச் செல்கிறார்கள்,
யாரும் அவர்களை நிறுத்தி என்னவென்று கேட்கவில்லை,
அந்த வேலியின் அருகில் பேக்கரி வண்டி நிறுத்துப்படுகிறது
அங்குதான் தேவதைகள் உயர் கம்பத்தில் நிற்கின்றனர்.
ஒட்டுனர் ஒருவன் நோட்ட்மிட்டு, முகமொன்றைக் காண எத்தனிக்கிறான்,
இந்த கான்கிரிட் உலகில் ஆனமாக்கள் நிரம்பி வழிகிறது
தேவதைகள் நாளெல்லாம் கொம்பூதி இசைக்கின்றனர்,
இந்த உலகம் முழுமையும் அதன் முன் -நகர்வில் கடந்து போகிறது,
ஆனால்;
யாராகிலும் ஒருவன் அவர்கள் வாசிக்கும் இசைக்கு செவிமடுக்கிறானா?
யாராவது ஒருவன் முயற்சிக்கிறானா?
.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

அடுத்த பாடலை இசைக்க துவங்குகிறேன்..................
நான் அந்த பாடலை மெல்ல பாடினேன்
அவள் நிழலில் நின்றிருந்தாள்
அவள் வெளிச்சத்திற்குள் அடியெடுத்து வைத்தாள்
எனது வெள்ளி தந்திகள் நூற்கத் துவங்கின
நான் மீட்டும் எனதான பாடலுக்கு
அவளது விழிகளால் அழைக்கத் துவங்கினாள்
ஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது
நான் துவங்கியிருக்கிறேன்.

ஒளித் தோட்டாவின் ஊடாக
அவளது முகம் பிரதிபலிக்கத் துவங்கியது
துரிதமாய் மங்கும் வார்த்தைகள்
எனது நாவை சுருட்டியது
ஒரு தொலைதூரப் பார்வையில்
அவளது விழிகள் எரிந்து கொண்டிருந்தன
ஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது
இன்னும் அதிகமாய் பாட வேண்டியிருந்தது.
அவளது தெளிவான புறவெளி கோட்டிற்கிடையே
எனது கண்கள் வட்டமாய் நடமிட்டது
அவளது தலை பக்கவாட்டில் சாய்ந்திருந்தது
மீண்டும் என்னை அழைத்தாள்
இசை மெல்ல நகரத் துவங்கியது
எதிரொலிக்கு ஊடாக அவள் கடினமாக முச்சை இழுத்தாள்
ஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது
பாடல் முடிய இன்னும் வெகுதூரமிருந்த்து.
நான் எனது கிடாரை நோட்டமிட்டேன்
அதை மீட்டுவதைபோல் பாசாங்கு செய்தேன்
அங்கிருந்த அத்தனைக் கண்களுக்கிடையே
என்னால் ஒன்றைகூட காண இயலவில்லை
அம்பின் கூரிய ஊடுருவலைப் போல்
அவளது யோசனைகள் வலிமையாக இடிக்கத்துவங்கின
ஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது
அது நிறைவடையத்தான் வேண்டியிருக்கிறது.
இறுதியாக் இசை இணைவுறுகிறது
நான் கிடாரை கீழே கிடத்துகிறேன்
பிறகு அந்த பெண்ணை தேடினேன்
யார் நெடிய நேரம் என்னுடன் தங்கினாளோ
அவளது நிழலைக் காணவில்லை
எனது அனைத்து தேடல்களும் ஒருபுறமிருக்க
ஆகையால் எனது கிடாரை கையிலெடுத்து
அடுத்த பாடலை இசைக்க துவங்குகிறேன்.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.

புகை கவிந்த இலையுதிர்கால இரவு,
நட்சத்திரங்கள் வானில் மேலிருக்கிறது,
கடற்கரையின் அகவளைவில் படகுகள் பயணிக்கின்றன
ஈகுலிப்டிஸ் மரங்கள் விதிகளில் மேலிருக்கின்றன
பிறகு என் சிரத்தை திருப்புகிறேன்,நீ என்னை நோக்கி நெருங்குகிறாய்,
நீரின் மீது நிலாவொளி, மீனவமகள் என அறைக்கு மிதந்து வருகிறாள்,
புகைமூட்ட பொற்தோற்றத்துடன்.

முதலில் நிலைபேறுடைய தேவாலயத்தின்அருகாமையில்,
வாயிலில் பாதங்களைக் கழுவுகிறோம்,
பின்பு எங்கள் நிழ்ல்கள் சந்தித்துக் கொண்டன,
இருவரும் வைன் பருகினோம்,
பசித்த மேகங்களை உன் முகத்தின் மேல் கண்டேன்,
பிறகு விழிநீர் உருண்டோடியது,எத்தனை துவர்ப்பான சுவை,
அதன் பிறகு நீ
காட்டு பூக்கள் முகிழும் கோடை நாளொன்றில் மிதந்து போகிறாய்
உனது புகைமூட்ட பொற்தோற்றதுடன்.
துயாராந்த ஓளியில் பாலத்தின் ஊடாக நடந்து செல்கிறேன்,
அங்கு இரவின் வாயிலிற்கிடையில் கார்கள் அகற்றப்பட்டிருக்கிறது,
தாமரை வாலுள்ள நடுங்கும் சிங்கத்தை நான் காண்கிறேன்.
அதன்பிறகு உனது முக அங்கியை உயர்த்தி
நான் இதழ்களில் முத்தத்தைப் பதிக்கிறேன் ,
ஆனால் நீ சென்றுவிட்டாய்
என்னால் அந்த நறுமணத்தின் வாசனையை மட்டுமே நினைவுகொள்ள முடிகிறது.
மற்றும உனது புகைமூட்ட பொற்தோற்றம்.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

குளிர்காலத்திற்கு வசந்தம் வாய்த்திருக்காது...............
ஒருவேளை நீயின்றி இருந்தால்
என்னால் கதவுகளை கண்டடைந்திருக்க முடியாது,
தரையைக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை,
நான் சோககத்தில் ஆழ்ந்து நீலமாயிருப்பேன்,
ஒருவேளை நீயின்றி இருந்தால்.

ஒருவேளை நீயின்றி இருந்தால்
முழுஇரவும் நான் கண்விழித்து படுத்திருப்பேன்
காலையின் புலர் ஒளிக்காக காத்திருப்பேன்
அதனுள் ஒளிர்ந்து உட்செல்ல
ஆனால் அதுவொன்றும் புதிதல்ல ,
ஒருவேளை நீயின்றி இருந்தால்
ஒருவேளை நீயின்றி இருந்தால்
எனது வானம் ஒடிந்து வீழும்.
மழையும் சேகரமாகும்
நீயின்றி என் காதலியே நான் எங்குமின்றி மறைந்திருப்பேன்,
நீயின்றி நான் தொலைந்திருப்பேன்
உனக்குத் தெரியும் இது உண்மை என்று.
ஒருவேளை நீயின்றி இருந்தால்
குளிர்காலத்திற்கு வசந்தம் வாய்த்திருக்காது,
ராபின் இசைப்பதை என்னால் கேட்டிருக்க முடியாது.
என்னிடம் எவ்வித சங்கேதமும் தோன்றியிருக்காது,
எப்படியாகிலும் அது உண்மையாய் ஒலித்திருக்காது
ஒருவேளை நீயின்றி இருந்தால்
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

என்னுள்ளிருக்கும் ஆன்மா பாடுகிறது,.............
உன்னைக் குறித்த ஏதோவொன்று என்னில் நீ இணைவுறக் காரணமாயிருக்கிறது,
உனது உடல் அசையும் லயமா?
அல்லது கட்டற்று காற்றில் படபடக்கும் உன் கேசமா?
அல்லது நீ எதுவாக இருந்தாயோ அதை நினைவுபடுத்துவதாலா?
வேறொரு நூற்றாண்டிலிருந்து கடந்து வந்த ஏதோ ஒன்றா?

நான் நினைக்கிறேன் அந்த அதிசயத்தையும்,
எனது இளமையின் பேயுருவையும் அசைத்துவிட்டேன்,
கிரேட் லேக்ஸின் மழை நாட்கள்,
பழம் தெலுத் மலைகளில் நடத்தல்,
அங்கு நானிருந்தேன் டேனி லோபஸ்,
குளுமை விழிகள்,
கறிய இரவு அங்கு ரூத்து இருந்ததும்,
உன்னைக் குறித்து
நீண்டநாட்கள் மறந்து போன உண்மை நினனவுறுகிறது,
திடீரென்று உன்னை கண்டேன் என்னுள்ளிருக்கும் ஆன்மா பாடுகிறது,
இதைக்காட்டிலும்; மேலும் நோக்கத் தேவையில்லை
நீ பலவற்றின் ஆன்மா
நான் உண்மையாக இருப்பேன் என்று சொல்ல முடியும் ,
அதை ஒரேயொரு இனிய மூச்சால் சொல்வேன்,
ஆனால்
உனக்கு அது கொடூரமானதாகும் ,எனக்கு மரணமாகும்,
உன்னைக் குறித்த ஏதோவொன்று உன்னோடு கூடவே தனிப்பாணியாக ,கவர்ச்சியாக அசைகிறது,
நான் ஒரு சுழற்காற்றில் சிக்கியுள்ளேன்,
இப்போது சற்று மேலான இடத்தில் இருக்கிறேன்,
எனது கரம் கொடுவாளில்; நீயோ கேடயத்தின் கைப்பிடியை பிடிக்க,
உன்னைக் குறித்த ஏதோவொன்று ,அதில்,
என் விரல்களை முழுமையாக பதியவிடாமல் தடுக்கிறது.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
எங்கிருந்து நான் துவங்குவது.............
ரைம்போவின் குதிகாலிலிருந்து
நடமிடும் ஒரு தோட்டாவைப் போல்
இரவில்
நியூ ஜெர்ஸியின் ரகசிய தெருக்களில்
நஞ்சும் ,அதிசயங்களும் நிறைந்துள்ளன...

-Bob Dylan-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.

உன்னை எப்படி சந்தித்தேன் ? எனக்கே புலப்படவில்லை,

நான் ஒரு மணல்மேட்டில் படுத்திருந்தேன்,
ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்,
குழுந்தைகளும் சிறுவர் சிறுமிகள் கடற்கரையில் விளையாடினர்,
நீ சந்தடியின்றி என்பின்புறமாய் வந்தாய்,
என்னைத் தாண்டிச் செல்வதையும் பார்த்தேன்,
நீ எப்போதும் என்னருகில் இருந்தாய்,
ஆயினுக் அடையும் தூரத்தில் நின்றாய்.

சாரா ,சாரா,
என மனதை மாற்ற உன்னை எதுவோ தூண்டியது?
சாரா ,சாரா,
பார்க்க எளிதாயிருக்கிறாய்,வரையறுக்க கடினமாகிறது.
இன்னுமும் அவர்கள் விளையாடுவதை காணமுடிகிறது,
வாளிகளுடன் மண்ணில் விளையாடுவது தெரிகிறது,
அவர்கள் தண்ணிரை நோக்கி ஒடுகிறார்கள், வாளிகளை நிறைக்க.
இன்னும்கூட அவர்களது கரங்களிலிருந்து கிளிஞல்கள் விழுவதை பார்க்கிறேன்,
ஒருவர்பின் ஒருவராக மணற்குன்றில் ஏறுகின்றனர்.
சாரா .சாரா.
இனிமை கன்னிமை தேவதையே, என் வாழ்வின் இனிமை காதலே,
சாரா சாரா
ஒளியுமிழும் அணிகலனே,அனுபூதி துணைவியே
இரவொன்றில் வனத்துள் எரியும் தீயினருகில் உறங்குகிறாய்,
வெண் ரம்மை போர்த்துகிசிய மதுபானக்கடையில் அருந்துகிறாய்,
துள்ளியெழும் தவளை விளையாட்டு
மற்றும் பனி இளவரசி கதைகேட்டும்,
Savanna-la -Mar ன் மார்கெட்டில் உன்னை கண்டேன்.
இரவொன்றில் வனத்துள் எரியும் தீயினருகில் உறங்குகிறாய்,
வெண் ரம்மை போர்த்துகிசிய மதுபானக்கடையில் அருந்துகிறாய்,
துள்ளியெழும் தவளை விளையாட்டு
மற்றும் பனி இளவரசி கதைகேட்டும்,
Savanna-la -Mar ன் மார்கெட்டில் உன்னை கண்டேன்.
சாரா,சாரா,
இவையெல்லாம் தெளிவானது, நான் மறக்கவே மாட்டேன்,
சாரா,சாரா,
உன்னை காதலிப்பது ஒன்றே, நான் வருந்த மாட்டேன்,
அந்த மெத்தொடிஸ்ட் மணியில் ஒலியினை
என்னால் இன்னும் கேட்க முடிகிறது,
குணமடைதலை வரித்துக் கொண்டு தொடர்ந்தேன்,
செல்சியா ஹோட்டலில் பலநாட்கள் தங்கியிருந்தேன்,
உனக்காகவே
தென் ஸ்காட்லாந்தின் சோகம் கவிந்த விழி நங்கையை புனைகிறேன்.
சாரா, சாரா,
நாம் எங்கு பயணித்தாலும் நம்மில் நாம் வேறானதில்லை,
சாரா, சாரா,
என் பேரழகியே, என் இதய அன்பே,
உன்னை எப்படி சந்தித்தேன் ? எனக்கே புலப்படவில்லை,
தூதுவன் ஒருவன் வெப்ப புயலை என்னுள் அனுப்பினான்,
நீ பனிக்காலத்தில் இருந்தாய், பனிமீது நிலவொளியாய்
மற்றும் அல்லி குளம் சாலையில் வெது வெது்ப்பான வானிலையில்.
சாரா, சாரா,
ஸ்கார்பியோ ,ஸ்பிங்க்ஸ் கலிகோ உடையில்
சாரா,சாரா,
எனது மேன்மையின்மையை மன்னித்தருள்.
இப்போது கடற்கரை வெறிச்சோடியுள்ளது ஒருசில் கடற்பாசியைத் தவிர
ஒரு சிதிலமடைந்த பழைய நாவாய் துண்டு கரையோரம் கிடக்கிறது,
உனது உதவியை வேண்டிய தருணங்களில் எல்லாம் நீ பதிலிறுத்தாய்.
உனது கதவின் திறவுகோலையும் அதன் வரைபடத்தையும் தா,
சாரா, சாரா,
வில்லும் அம்பும் கையிலேந்திய மயக்குறும் நீர்நங்கையே .
சாரா, சாரா,
எத்தருணத்திலும் என்னை விடுத்து விலகாதே,
எந்நிலையிலும் என்னை பிரியாதே .
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.
வேலன்டைன்கள் அவளை வாங்கவியலாது...............
என் காதலி மெளனத்தை போல் பேசுகிறாள்,
பெரும் கொள்கைகளின்றி வன்முறையின்றி
அவள் உண்மையாக இருக்கிறாள் என்பதைச் சொல்ல தேவையில்லை
ஆம்,
அவள் ஐஸ்கட்டிபோல், தீயைபோல்,
மக்கள் ரோஜாக்களை கைகளில் ஏந்தி செல்கின்றனர்,
ஒவ்வொரு மணிநேரமும் சத்தியமிடுகின்றனர்,
என் காதலி பூக்களைப் போல் நகைக்கிறாள்,
வேலன்டைன்கள் அவளை வாங்கவியலாது.

வெள்ளி நாணய அங்காடிகளில் மற்றும் பேருந்து நிலையங்களிலும்,
மக்கள் சூழ்நிலைகளை விவாதிக்கிறார்கள்,
புத்தகங்களை வாசிக்கிறார்கள்,
மேற்கோள்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறார்கள்,
சுவர்களில் முடிவுரைகளை எழுதுகிறார்கள்,
சிலர் வருங்காலத்தை பற்றி பேசுகிறார்கள்,
என் காதலி மென்மையாக பேசுகிறாள்,
அவளுக்குத் தெரியும் தோல்வியைக் காட்டிலும் வெற்றியொன்றுமில்லை,
அத்தோல்வி வெற்றியே அல்ல.
மேலங்கியும் குத்துவாளும் பளபளக்கின்றன,
குதிரைகாரரகளின் சடங்குகளில்
சீமாட்டிகள் மெழுகுவத்திகளை ஏற்றுகின்றனர்.
பிணைகளும்கூட வன்மத்தை தக்கவைத்து கொள்கின்றனர்,
வத்திகுச்சிகளால் செய்யப்பட்ட சிலைகள்,
ஒன்றிற்குள் ஒன்று குலைகிறது,
என காதலி கண்சிமிட்டுகிறாள்,
அவள் அக்கறை கொள்ளவில்லை,
அவளுக்கு நெடிதாய் வாதிடவும் , தீர்பளிக்கவும் தெரியும்.
நள்ளிரவில் பாலங்கள் நடுநடுங்குகின்றன,
கிராமபுற மருத்துவர் சுற்றித் திரிகிறார்,
வங்கிகளின் தமையரின் வாரிசுகள் நிறைவைத் தேடுகிறார்கள்,
ஞானவான்களின் பரிசுகளை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
காற்று அலறுகிறது,
இரவு குளிரிலும் மழையிலும் வீசுகிறது,
என் காதலி அண்டங் காக்கையை ஒத்திருக்கிறாள்,
முறிந்த சிறகுகளுடன் என் ஜன்னலில் வந்தமர்கிறாள்.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

'எங்கிருந்து நான் துவங்குவது.............
ரைம்போவின் குதிகாலிலிருந்து 
நடமிடும் ஒரு தோட்டாவைப் போல்
இரவில்
நியூ ஜெர்ஸியின் ரகசிய தெருக்களில் 
நஞ்சும் ,அதிசயங்களும்  நிறைந்துள்ளன...

-Bob Dylan-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)'

உனது கணத்த ஒப்பனையை கலைத்துவிடு...............
திருகப்படும் சாவியின் ஒலியை என்னால் கேட்க முடிகிறது
என்னுள்ளிருக்கும் கோமாளியால் நான் ஏமாற்ற படுகிறேன்,
அவன் நேர்மையானவன் என்று நம்பியிருந்தான் ,
ஆனால் அவன் வெறுமையானவன்,
ஓ, ஏதோவொன்று சொல்கிறது ஒரு குழிழையும் சங்கலியையும் அணிந்துகொள்ள,

என்னை இரட்சிக்கும் புனிதர் பேயொன்றுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்,
எனக்கு தேவையிருக்க்கும் போதெல்லாம் அவர் எங்கோயோ இருக்கிறார்,
ஸ்பானிய நிலா மலையொன்றின் மீது எழுகிறது,
ஆனால்
என் இதயம் சொல்கிறது இன்னும் நான் நேசிக்கிறேன் என்று,
தகித்து எரியும் நிலவிலிருந்து நான் எனது நகருக்குத் திரும்புகிறேன்,
நான் உன்னை தெருக்களில் கண்டேன், நான் மயங்கிச் சரியத் துவங்கினேன்,
ஆடியின் முன் நீ ஆடையுடுத்துவதை காண நான் விரும்புகிறேன்,
நான் இறுதியாக மறையும் முன்பாவது
உனது அறைக்குள் ஒருமுறையேனும் என்னை அனுமதிக்க மாட்டாயா?
எல்லோருமே பொய்வேடம் அணிந்திருக்கிறார்கள்,
தங்களது விழிகளின் பின்புறம் உள்ளதை மறைக்க,
ஆனால் நானோ,
நான் என்னவாக இருக்கிறேனோ
அதை என்னால்முடிமறைக்க இயலாது,
குழந்தைகள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் நான் தொடர்கிறேன்,
விடுதலைக்கான அணிவகுப்பில் நான் நடையிடுகிறேன்,
ஆனால் நீ என்னை நேசிக்கும்வரை நான் விடுதலையடையப் போவதில்லை,
இத்தகைய அவதூறுக்கு இன்னும் எத்தனைக் காலம் ஆளாக வேண்டும்
உன்னை போகவிடும் தருணத்திலாவது நீ நகைப்பதை நான் காணவேண்டாமா?
இந்த விளையாட்டை கைவிடப் போகிறேன், நான் விடைபெற வேண்டும்,
தங்கக் குவியல் என்பது ஒரு நம்பிக்கைச் சித்திரம் மட்டுமே
தேடியலைபவனால் பொக்கிஷத்தை கண்டடைய முடியாது,
அவனது கடவுளர்கள் மரித்துவிட்டனர்
அவர்களது ராணிகள் தேவாலயங்களில் இருக்கின்றனர்,
ஆட்களற்ற திரையரங்கில் அமர்ந்து நாம் முத்தமிட்டுக் கொண்டோம் ,
உனது பட்டியலிலிருந்து என்னை அழித்துவிடு என கேட்டேன்,
எனது அறிவு சொல்கிறது இதுதான் மாற்றத்திற்கான தருணம்.,
ஆனால்
என் இதயம் சொல்கிறது நான் நேசிகிறேன்,
நீயோ விசித்திரமானவள்,
மீண்டுமொருமுறை நள்ளிரவில்,அந்த சுவருக்கு அருகில்
உனது கணத்த ஒப்பனையை கலைத்துவிடு
உனது கம்பளி போர்வையை நீக்கிவிடு,
நீ அமர்ந்திருக்கும்
சிம்மாசனத்திலிருந்து சற்று இறங்கிவர மாட்டாயா?
உனது நேசத்தை நான் மீண்டும் ஒருமுறை உய்த்துணர்ந்து கொள்கிறேன்,
நான் அதை கைவிடுமுன்,
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)


தொலையாத ஒன்றை உன்னால் எப்படி தேடமுடியும்?
நீ தேடிக் கொண்டிருப்பாய்
எப்படியாகிலும் ,
இன்னும் எத்தனை காலம்,
தொலையாத ஒன்றை உன்னால் எப்படி தேடமுடியும்?
அனைவரும் உனக்கு உதவுவார்கள்,
சிலர் கனிவானர்வர்கள்,
ஆனால் ,
உன்னை நான் ஏதாவதொரு சந்தர்பத்தில் காப்பாற்ற இயன்றால்,
வா வந்து என்னிடம் தந்துவிடு,
அதை என்னுடன் என்னுடையதோடு வைத்து கொள்வேன்.

என்னால் உதவ இயலாது,
நான் சற்று விசித்திரமானவனென்று நீ எண்ணிக் கொள்வாய்,
நீ என்னவாக இருக்கிறாயோ அதற்காக உன்னை,
நான் காதலிக்கவில்லை,
ஆனால்,
நீ எதுவாக இல்லையோ அதற்காக காதலிக்கிறேன்,
எல்லோரும் உனக்கு உதுவுவார்கள்,
எதைத் தேடி சென்றாயோ அதை கண்டடை,
ஆனால் ,
உன்னை நான் ஏதாவதொரு சந்தர்பத்தில் காப்பாற்ற இயன்றால்,
வா வந்து என்னிடம் தந்துவிடு,
அதை என்னுடன் என்னுடையதோடு வைத்து கொள்வேன்.
பத்தறை மணிக்கு இரயில் கிளம்பி செல்கிறது ,
ஆனால்,
நாளை இந்நேரம் திரும்பி இங்கேயே வந்துசேரும்,
கண்டக்டர் சோர்வுற்றிருக்கிறார்
இன்னும் அவர் அந்த தடத்திலேயே சிக்கியுள்ளார்,
ஆனால் ,
உன்னை நான் ஏதாவதொரு சந்தர்பத்தில் காப்பாற்ற இயன்றால்,
வா வந்து என்னிடம் தந்துவிடு,
அதை என்னுடன் என்னுடையதோடு வைத்து கொள்வேன்.
-Bob Dylan -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.