பிரம்மராஜன் தொகுத்து அவரே வெளியிட்ட அழகிய தொகுப்பிலும் இல்லை
காலச்சுவடுக்காக பிற்பாடு தொகுத்ததிலேயும் இந்த மொழிபெயர்ப்பு காணப்படவில்லை
யான் யி கவிதை
மொழிபெயர்ப்பு ஆத்மாநாம்
நான் விழித்துக் கொண்ட போது
மூன்று பகல் மூன்று இரவு கடும்போருக்குப் பின்
ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்தேன்
நான் விழித்துக் கொண்ட போது
சட்டென்று ஒரு உருவம் கடந்ததைப் பார்த்தேன்
ஒரு பெண் என்பது வெளிப்படை
அவள் பின்னலின் முடிவில் சிகப்பு கம்பளி ரிப்பன்
என் தங்கையின் அப்பட்டமான வடிவமாகத் தெரிந்தாள்
எவ்வளவு மோசம் நான் அவளை சரியாகப் பார்க்காதது
நிமிர்ந்து உட்கார்ந்து தூசியைத் தட்டினேன்
எங்கே போயிற்று என் சட்டையில் இருந்த புல்லட்டின் துளை?
ஒரு ஜதை புதிய கருப்புக் காலணிகள் என் காலடியில்
ஒரு பளிச்சிடும் வேறுபாடு என் பழைய வைக்கோல் செருப்புடன்
பாருங்கள் அற்புதமான தையல் வேலையை
காலணிகள் எனக்கும் பொருத்தமாய், லகுவாக, சௌகரியமாக,
நன்றி உணர்வுடன் அவற்றை உற்றுப் பார்த்தேன்
அந்தப் பெண்ணின் உருவம் என் கண் முன் பளிச்சிட்டது மீண்டும்.