Monday 18 May 2015

நிலாந்தனின் கவிதை ஒன்று - வற்றிய குளத்தில் அலைகரையில்


நிலாந்தனின் கவிதை ஒன்று.

Mahaa Nillanthan's photo.
வற்றிய குளத்தில் அலைகரையில்
வராத காலங்களுக்காக
வாடியிருக்கும் ஒற்றைக் கொக்கா
நான்?
அலைகரையில்
நாகமுறையும் முதுமரவேர்களை விடவும்
மூத்தவனன்றோ?
கைவிடப்பட்ட கிராமங்களின்
தானியக் களஞ்சியம் நானே
கூரையற்ற தலைநகரத்தின்
முதற் பாடலும் நானே
இறந்து போன யுகமொன்றின்
இரங்கற்பா பாடவந்தேன்
பிறக்கவிருக்கும் புது
யுகமொன்றின்
பெருங்கதையை கூறவந்தேன்
கட்டியக்காரனும் நானே
யுகசக்தி
எனது புஜங்களில் இறங்கினாள்
யுகமாயை
எனது வயதுகளை மீட்கிறாள்
எங்கேயென் யாகசாலை?
எங்கேயென் யாகக் குதிரை?
இனி
எனது நாட்களே வரும்.
கிருஷ்ணா !
உனது புல்லாங்குழலை
எனக்குத்தா