Saturday 30 May 2015

-Friedrich Holderlin - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    எளிதாய் மருளும் சேயே , நான் உன்னை பயிரிட்டேன்
    வனப்புறும் செடியே !
    இப்போது எத்தனை மாறியிருக்கிறோம்
    ஒருவரையொருவர் நாம் பார்த்துக் கொள்வதில்
    அதி அற்புதமாய் நீ நிற்கிறாய் அங்கே
    ஒரு சேயாய்.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.

    முகத்துக்கு முகம் நேர்முகமாக ................
    அனைத்துமே அகமுகமாகவே உள்ளது
    இதுதான் வித்தியாசம்
    இவ்வாறாக கவிஞன் மறைக்கிறான்
    கவனமின்மையோடு!
    ஆன்மாவை ஆழ்ந்து தரிசிக்க விழைகிறான்
    முகத்துக்கு முகம் நேர்முகமாக
    நீ
    தீ ஜூவாலையுள் அமிழ்ந்து போகிறாய் .
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


    இரவு முழுமையுமாய் கிராமத்தில் நான்
    ஆல்பின் தளிர்காற்று
    சமவெளிச் சந்தின் ஊடாக
    வீடு மீள்-இணக்கம் . பிறப்பிட சூரியன்
    படகுசவாரி,
    நண்பர்கள் ஆண்கள் மற்றும் அன்னை,
    நித்திரையிலாழ்தல்.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    கடவுள் என்பது யாது? அறியப்பட்டதில்லை,
    ஆயினும்
    வான் முகத்தில் அவனது அம்சங்கள் நிறைந்துள்ளன .
    மின்னல் கடவுளின் கடுங்கோபம் .
    இன்னும் கூடுதலான புலப்படாமை
    இதிலொரு
    அறிமுகமின்மை இசைந்திருக்க
    ஆனால்
    இடி கடவுளின் மகிமையாயிருக்க. நிலைபேற்றின் அன்பும்
    ஒரு உடைமைதான் , நம்முடையது போன்று,
    கடவுளடையது.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    மனிதனின் வாழ்வென்பதென்ன? இறைமையின் படிமமா?
    அவர்கள யாவரும் வானத்தின் கீழ் அலைகின்றனர்,
    அழிவுறு மனிதர்கள் அதை நோக்குகிறார்கள்.
    ஒரு புனிதநூலைப் படிப்பதைப் போல
    மனிதர்கள் இன்மையை போலச் செய்கின்றனர்,
    செல்வத்தையும் கூட.
    சரி, எளிய வானும் வளமார்ந்ததா?
    வெள்ளி மேகங்கள் பூக்களை ஒத்திருக்கின்றன .
    ஆயினும் பனியாய் பொழிந்து ஈரப்படுத்துகிறது.
    ஆனால்
    எளிய நீலம் அழிப்புற்றிருக்கிறது
    பளிங்காய் விரிவுறும் வான்
    தாதுவைப் போல் மிளிரும்
    வளங்களையெல்லாம் சுட்டியும்.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)