சாம்பல் நிறத்தின் பல்வேறு சாயல்கள்
ஒன்றாயிருக்க ,
அதன்
மேற்புறமும் எடையும் ஒத்ததாயிருக்கிறது.
எனது உடலினுள்
இன்னொரு உடல்,
அதன் வரலாறு,
காத்திருத்தலில் இசைக்கிறது.
இதைத்தவிர
வேறொரு உடல் இல்லையென
வேறெந்த உலகு இல்லையென
இசைக்கிறது.
-Jane Hishfield-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)