Friday, 8 May 2015

http://writerpayon.tumblr.com/post/118435216501

ஒரு காதையின் கதை



சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதத் தொடங்கிய புதிதில் பயங்கரப் பரிசோதனை ரீதியான ஒரு குறுநாவலை எழுதினேன். சாமுவல் பெக்கட்டின் Molloy என்ற நாவலையும் The End என்ற குறுநாவலையும் படித்த தீவிர பாதிப்பு அதில் இருந்தது.


கதை: ஒருநாள் ஒரு சுயசரித இளைஞன் தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறுகிறான். என்னுடைய அந்த நாளைய சிந்தனைப் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில், புலன்கள் தனக்குக் காட்டுவதெல்லாம் பொய், தானும் பொய் என்று நினைக்கிறான். ஓர் இலக்கற்ற பயணத்தைத் தொடங்குகிறான். போகிற வழியில் கண், காது, நாக்கு ஒவ்வொரு புலனுறுப்பையும் சேதப்படுத்தித் தொடுதலையும் முகர்தலையும் மிச்சம் வைக்கிறான்.


முழுவதும் உணர்ச்சியற்ற நடையில் எழுதப்பட்ட இந்தக் கதையில் ஒரு கட்டத்தில் பொருட்கள் அதன் பெயர்களால் அல்லாமல் அரூப வர்ணனைகளால் விவரிக்கப்படும், பிறகு அதற்கு அடுத்த கட்டம் போல் சொற்கள் கைவிடப்பட்டு கட்டங்கள், கோடுகள், அம்புக்குறிகள் போன்ற சின்னங்களால் விவரிக்கப்படும். மொழியிலிருந்து காலத்தைக் கழற்றி விடும் முயற்சியாக, பின்பு பாலினத்தை உதிர்க்கும் முயற்சியாக சொற்களிலிருந்து காலத்தையும் பின்பு பாலினத்தையும் குறிக்கும் பின்னொட்டுகள்/விகுதிகள் (எ.கா., சொல்கிறான் என்பதில் சொல்+கிறு+ஆன்) நீக்கப்பட்டன. கதையை எப்படி முடித்தேன் என்று நினைவில்லை.


பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒருநாள், மறைந்த மாக்ஸ்முல்லர் பவன் நூலகத்தில் ஜெர்மானிய எழுத்தாளர் பீட்டர் ஹாண்ட்கேயின் (Peter Handke) The Goalie’s Anxiety at the Penalty Kick என்ற அருமையான சிறிய நாவலைப் படிக்க நேர்ந்தது. நாவலின் இறுதிப் பகுதியில் ஹாண்ட்கே சொற்களுக்கு பதிலாக நிறைய சின்னங்களை/குறியீடுகளை சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார். நமக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதே சமயத்தில் ஒரு வருத்தம்: மிக முதிர்ச்சியற்ற அந்தப் படைப்பைக் கிழித்துப் போடாமல் விட்டிருந்தால் அதன் சில அம்சங்களையாவது வேறு எதிலாவது பயன்படுத்தியிருக்கலாம் என்று.


பிறகு கிட்டத்தட்ட சமீபத்தில் அது கவிதையாகத் தோன்றியது. இதுதான் அது.
தலைப்பிடாதது
முதலில் கண்களைக் குத்திக்கொள்வேன்
காணாமல் இடங்களில் அலைவேன்
காதுகளுள் குத்திக்கொள்வேன்
கேளாமல் இடங்களில் அலைவேன்
நாக்கை அறுத்தெறிவேன்
பேச்சின்றி இடங்களில் அலைவேன்
சுவாசம் எரிபொருளாக
உடலது வாகனமாக
எங்கும் சென்று தொலைந்துபோவேன்.
அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு போர்ஹெஸ் கவிதை. இதை ட்விட்டரில் பகிர்ந்த பின்பு வேண்டாத வேலையாய் ஒரு மொழிபெயர்ப்பைப் பார்க்க நேர்ந்தது. கிடக்கட்டும்.

The Suicide

Not a star will remain in the night.
The night itself will not remain.
I will die and with me the sum
Of the intolerable universe.
I’ll erase the pyramids, the coins,
The continents and all the faces.
I’ll erase the accumulated past.
I’ll make dust of history, dust of dust.
Now I gaze at the last sunset.
I am listening to the last bird.
I bequeath nothingness to no-one.
image

THE SUICIDE By Jorge Luis Borges

June 03, 2001

Not a single star will be left in the night.
The night will not be left.
I will die and, with me,
the weight of the intolerable universe.
I shall erase the pyramids, the medallions,
the continents and faces.
I shall erase the accumulated past.
I shall make dust of history, dust of dust.
Now I am looking on the final sunset.
I am hearing the last bird.
I bequeath nothingness to no one.
TRANSLATED FROM THE SPANISH BY ALASTAIR REID


From "Selected Poems" by Jorge Luis Borges, edited by Alexander Coleman (Viking: 477 pp., $40