Like · Comment · Share
நாம் இருவருமே ஒன்றாக முதிர்ந்து கொண்டிருந்தோம்,
அவன் பசும் இலைத்திரள், நான் மறைந்த்திருக்கும் நீர்,
அவன் சூரியனின் ஒரு துண்டு ,மற்றும் நான் பின்னுள்ள ஆழம்,
அவன் மரணத்தின் ஒரு பகுதி, மற்றும் நான் வாழ்தலுக்கான ஞானம்,

அக்கணம் நான் மகிழ்வுடன் இருந்தேன் காலம் நம்மை நிழலில் காண்பிக்கிறது,
அவனது ஃபான் ஒத்த முகம், அதன் மென்சிரிப்பை நாம் கேட்கிறோம்,
காற்று மேலெழுந்து நிழலை ஏந்திச் செல்லும் தருணத்தை
உணர்வதை நான் நேசிக்கிறேன்,
அவனது ஃபான் ஒத்த முகம், அதன் மென்சிரிப்பை நாம் கேட்கிறோம்,
காற்று மேலெழுந்து நிழலை ஏந்திச் செல்லும் தருணத்தை
உணர்வதை நான் நேசிக்கிறேன்,
அந்த இறத்தல் அலைவுறுதலைக் காட்டிலும் கூடுதலானதில்லை,
கீழ்பகுதியற்ற நீர் ,
இருண்ட நீருற்று அதில் நீர் பருகும் படரிலைக் கொடி,
நான் காதலில் அமிழ்ந்திருந்தேன்,
கீழ்பகுதியற்ற நீர் ,
இருண்ட நீருற்று அதில் நீர் பருகும் படரிலைக் கொடி,
நான் காதலில் அமிழ்ந்திருந்தேன்,
நான் முடிவுறா கனாக்காணுதலில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தேன்.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
*(Faun a rural deity represented as a man with a goat's ears, horns, tail, and hind legs.)
நான் உன்னுள் உரையாடுவேன்..............
வாய் மூடப்பட்டுவிட்டது முகம் கழுவப்பட்டுவிட்டது,
உடல் தூயமைப் படுத்தப்பட்டுவிட்டது, இந்த விதி,
பூரண ஒளி வார்த்தைகளின் பூமி மேல் புதைக்கப்பட்டுள்ளது,
மிகுந்த எளிமையான மன- உறவு பூரணத்துவம் அடைந்தது.
உடல் தூயமைப் படுத்தப்பட்டுவிட்டது, இந்த விதி,
பூரண ஒளி வார்த்தைகளின் பூமி மேல் புதைக்கப்பட்டுள்ளது,
மிகுந்த எளிமையான மன- உறவு பூரணத்துவம் அடைந்தது.
எனது முகத்தில் அழ எத்தனிக்கும் அந்தக் குரல் அமைதிப்படுத்தப்படுகிறது,
நாம் விலங்குத்தன்மையோடு சற்றே தூரமாயிருந்தோம்,
மதில்சூழ்ந்த அந்த விழிகள் : நான் மரித்த douve வை ஏந்துகிறேன்.
இருத்தலின் தூய கசப்பினில் என்னுள் நான் மூடப்படுகிறேன்.
நாம் விலங்குத்தன்மையோடு சற்றே தூரமாயிருந்தோம்,
மதில்சூழ்ந்த அந்த விழிகள் : நான் மரித்த douve வை ஏந்துகிறேன்.
இருத்தலின் தூய கசப்பினில் என்னுள் நான் மூடப்படுகிறேன்.
உன்னிலிருந்து கிளம்பும் கடுங்குளிர் எத்தனை கொடியதாக இருப்பினும்,
உன்னுடனான எனது அன்மையின் பனி உலர்வுற்றபோதும் ;
நான் உன்னுள் உரையாடுவேன்;
மற்றும் உன்னை அருகாமையில் பற்றிக் கொள்வேன்
அறிந்து கொள்ளும் உள்ளுண்ர்விலும் மற்றும் பெயரிடுவதிலும்.
உன்னுடனான எனது அன்மையின் பனி உலர்வுற்றபோதும் ;
நான் உன்னுள் உரையாடுவேன்;
மற்றும் உன்னை அருகாமையில் பற்றிக் கொள்வேன்
அறிந்து கொள்ளும் உள்ளுண்ர்விலும் மற்றும் பெயரிடுவதிலும்.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
எதையுமே குணப்படுத்தாத இந்த மரணம் என்பது என்ன ?
இரவு முழுமையும் அந்த மிருகம் அறையில் இரைதேடி அலைந்தது,
முடிவடைய விரும்பாத இந்த சாலை என்பது என்ன?
முடிவடைய விரும்பாத இந்த சாலை என்பது என்ன?
இரவெல்லாம் நீளும் குரைப்பொலி நழுவி கரையை அடைய முற்படுகிறது,
என்ன இது?
இல்லாது போனவர்கள் மீண்டும் திரும்பிவிட விரும்புகின்றனர்,
இரவு முழுவதும்
வாள் காயத்துடன் தன்னை ஜோடியாக இணைத்துக் கொள்கிறது,
என்ன இது?
இல்லாது போனவர்கள் மீண்டும் திரும்பிவிட விரும்புகின்றனர்,
இரவு முழுவதும்
வாள் காயத்துடன் தன்னை ஜோடியாக இணைத்துக் கொள்கிறது,
எதையுமே கைபற்றாத இந்த சித்திரவதை எதற்காக,
இரவு முழுவதும் அந்த மிருகம் அறைக்குள் வேதனைக் குரலெழுப்புகிறது,
இரத்தத்தால் போர்த்தப்பட்டு , அறையின் ஒளி அதற்கு மறுக்கப்படுகிறது,
இரவு முழுவதும் அந்த மிருகம் அறைக்குள் வேதனைக் குரலெழுப்புகிறது,
இரத்தத்தால் போர்த்தப்பட்டு , அறையின் ஒளி அதற்கு மறுக்கப்படுகிறது,
எதையுமே குணப்படுத்தாத இந்த மரணம் என்பது என்ன ?
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
* (Douve may thus be read as the mise-en-scène of a ‘dialogue of anguish and desire’ -Judith Bishop)
Clouds,this evening
The same as always, like thirst,
The same red dress, unfastened.
Imagine, passerby,
Our new beginnings, our eagerness, our trust.
The same as always, like thirst,
The same red dress, unfastened.
Imagine, passerby,
Our new beginnings, our eagerness, our trust.
-Yves Bonnefoy-
பூரணமின்மை தான் உச்சநிலை...............
ஆகையால் அது அப்படியிருக்க நீ அழிக்க வேண்டியிருந்தது ,
அழித்து மற்றும் அழித்து,
அது அப்படியிருக்க இரட்சிப்பிற்கான விலை இதுதான்.
அழித்து மற்றும் அழித்து,
அது அப்படியிருக்க இரட்சிப்பிற்கான விலை இதுதான்.
பளிங்கிலிருந்து எழும் நிர்வாண முகத்தை சிதைத்துவிடு,
அழகின் அத்துனை வடிவங்களையும் இடித்து நொறுக்கு.
அழகின் அத்துனை வடிவங்களையும் இடித்து நொறுக்கு.
ஏனென்றால் அன்பின் பூரணத்துவம் எதுவெனில் வாசலிலிருக்கிறது
ஆனால் ஒருமுறை அறிந்ததை மறுத்துவிடு,
ஒருமுறை இறந்தால் அதை மறந்துவிடு,
ஆனால் ஒருமுறை அறிந்ததை மறுத்துவிடு,
ஒருமுறை இறந்தால் அதை மறந்துவிடு,
பூரணமின்மை தான் உச்சநிலை.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
நான் கற்களுக்கிடையே எழும் நாளை பார்க்கிறேன்,
நீ தனிமையில் இருக்கிறாய்
அதன்
வெளிறிய அழகில்
கறுப்பாடை உடுத்தி...
நீ தனிமையில் இருக்கிறாய்
அதன்
வெளிறிய அழகில்
கறுப்பாடை உடுத்தி...
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்
ஆடி ,துள்ளிப் பாயும் நதி, இன்று காலை,
அறையின் ஊடாக ஒன்றையொன்று அழைத்துக் கொண்டது,
இரு விளக்குகள்,
இருளின் இடையே சந்தித்தும், மணந்தும் கொள்கின்றன.
அறையின் ஊடாக ஒன்றையொன்று அழைத்துக் கொண்டது,
இரு விளக்குகள்,
இருளின் இடையே சந்தித்தும், மணந்தும் கொள்கின்றன.
அடைக்கபடாத அறையிலிருக்கும் வீட்டுப் பொருட்கள்.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
The same abundance
Our eyes
open or shut :
The same light...
-Yves Bonnefoy-
அமைதியைப் புசிக்கத் தருகிறான்.............
அவன் தீயைப் பார்க்கிறான், அது எவ்வாறு வருகிறது,
இருண்ட ஆன்மாவிற்குள தன் இடத்தை எப்படி கண்டடைகிறது,
ஜன்னல் கண்ணாடியில் விடியல் எப்படித் தோன்றுகிறது,
எப்படி நெருப்பு அமைதியில் வீழ்கிறது,
இருண்ட ஆன்மாவிற்குள தன் இடத்தை எப்படி கண்டடைகிறது,
ஜன்னல் கண்ணாடியில் விடியல் எப்படித் தோன்றுகிறது,
எப்படி நெருப்பு அமைதியில் வீழ்கிறது,
தீயினைக் காட்டிலும் இன்னும் கூடுதலாய் துயில்கிறது.
அவன் அதற்கு அமைதியைப் புசிக்கத் தருகிறான்.
அவன் நம்புகிறான் ,நித்திய அமைதியின் அடுக்கு,
அதன்மீது மணல் போல் விழும்,
நிலைபேற்றை மென் மேலும் மிகைப்படுத்தும் .
அவன் நம்புகிறான் ,நித்திய அமைதியின் அடுக்கு,
அதன்மீது மணல் போல் விழும்,
நிலைபேற்றை மென் மேலும் மிகைப்படுத்தும் .
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
தேவதை தன் சாம்பல் கரங்களுடன் வருகிறது.............
இந்த எளிய பூமியின்மீது நீ படுத்துக் கொள்வாய்,
எதனிலிருந்து நீ வந்தாயோ
அதை உன்னுடயதென்று எண்ணிக் கொள்கிறாய்?
எதனிலிருந்து நீ வந்தாயோ
அதை உன்னுடயதென்று எண்ணிக் கொள்கிறாய்?
மாற்றமில்லா வானிலிருந்து வெளிப்பட்டு,
அலைவுறும் ஓளியில்.
நித்திய காலையொன்று மீண்டுமொருமுறை துவங்குகிறது.
ஆழ்ந்த பொழுதுகளில் நீயே வாழ்விலிருந்து நெகிழ்ந்து முளைப்பதை உணருவாய்.
அலைவுறும் ஓளியில்.
நித்திய காலையொன்று மீண்டுமொருமுறை துவங்குகிறது.
ஆழ்ந்த பொழுதுகளில் நீயே வாழ்விலிருந்து நெகிழ்ந்து முளைப்பதை உணருவாய்.
ஆனால், தீயினிடத்திலிருந்து விடுப்பட்டாலும்
அதனை உன்னால் அணைக்க இயலவில்லை.
அதனை உன்னால் அணைக்க இயலவில்லை.
ஆனாலும், தேவதை தன் சாம்பல் கரங்களுடன் வருகிறது
தணிக்க முடியாத பேராவாவைத் தணிக்கும் எத்தனிப்புடன்.
தணிக்க முடியாத பேராவாவைத் தணிக்கும் எத்தனிப்புடன்.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
நான் ஒரு ஏதுமின்மை
ஆனால்
இன்மைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்ட வார்த்தை,
இன்மை
எனது அனைத்து மீள் -வலியுறுத்தலையும் சிதைத்துவிடும்.
ஆனால்
இன்மைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்ட வார்த்தை,
இன்மை
எனது அனைத்து மீள் -வலியுறுத்தலையும் சிதைத்துவிடும்.
உண்மையில் ,
ஒரு வார்த்தையாக மட்டுமே இருத்தல்
துரிதமாய் மரித்தலாகும்,
ஒரு வார்த்தையாக மட்டுமே இருத்தல்
துரிதமாய் மரித்தலாகும்,
பணி அழிவுறுகிறது
அதன் மகுடமிடல் வீணிலழிகிறது.
அதன் மகுடமிடல் வீணிலழிகிறது.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
எத்தனை நட்சத்திரங்கள் அப்பால் கடந்து போயிருக்கும்,
பூமியை எப்போது வேண்டுமானாலும் நிராகரித்துவிடலாம்,
ஆனால் உன்னைத் தெளிவாகத் தக்கவைத்திருக்கிறாய்,
அந்த புராதன ஞானத்தை.
பூமியை எப்போது வேண்டுமானாலும் நிராகரித்துவிடலாம்,
ஆனால் உன்னைத் தெளிவாகத் தக்கவைத்திருக்கிறாய்,
அந்த புராதன ஞானத்தை.
நீ தாவரமொத்தவனா?
மாபெரும் மரங்களிடமுள்ள ஆற்றலுள்ளவன் நீ,
இங்கு கட்டப்பட்டு இருக்கிறேன், ஆனால் சுதந்திரமாய்
உயரவீசும் காற்றிற்கு இடையே.
மாபெரும் மரங்களிடமுள்ள ஆற்றலுள்ளவன் நீ,
இங்கு கட்டப்பட்டு இருக்கிறேன், ஆனால் சுதந்திரமாய்
உயரவீசும் காற்றிற்கு இடையே.
பொறுமின்மையோடு பிறந்து வர
வறண்ட பூமி விரிசலடைகிறது,
நீ உனது பார்த்தலின் மூலமாக மறுக்கிறாய்,
வின்மீணார்ந்த களிமண்ணின் ஈர்ப்பில் .
வறண்ட பூமி விரிசலடைகிறது,
நீ உனது பார்த்தலின் மூலமாக மறுக்கிறாய்,
வின்மீணார்ந்த களிமண்ணின் ஈர்ப்பில் .
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
இறவா உன் இருத்தலின் நிறைதல் சுடர்ந்தெரிகிறது..............
அவள் தனிமையிலும் கீழ்மையிலும்
,இருள் சூழ்ந்த அறையில் பிராத்திருக்கிறாள்,
அவளது ஆடை மரணத்தை எதிர்நோக்கும் வண்ணதில் இருந்தது,
,இருள் சூழ்ந்த அறையில் பிராத்திருக்கிறாள்,
அவளது ஆடை மரணத்தை எதிர்நோக்கும் வண்ணதில் இருந்தது,
உலகத்தால் அரிதாய் அறியக்கூடிய , சாயம்போன நீலம் ,
நிர்வானமான கற்களின் மஞ்சள் காவி நிறத்தை உரித்துக்காட்ட ,
குழந்தைப் பருவம் தனிமையானது,
யாரெல்லாம் முன் வருகிறார்களோ
அவர்கள் இருண்மை அடைந்தவர்கள்,
அவர்களிடமுள்ள விளக்குகளுடன்
அவளது உடலைக் குனிந்து பார்க்கின்றனர்,

ஓ, நீ நித்திரையில் இருக்கிறாய்?
இறவா உன் இருத்தலின் நிறைதல் சுடர்ந்தெரிகிறது
இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆன்மாவைப்போல்
உன்னிடம் மீண்டுமொருமுறை கொணர்கிறேன்.
இறவா உன் இருத்தலின் நிறைதல் சுடர்ந்தெரிகிறது
இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆன்மாவைப்போல்
உன்னிடம் மீண்டுமொருமுறை கொணர்கிறேன்.
நீ தனித்திருக்கிறாய்,
இந்த அறையிலேயே நீ முதிர்ந்துவிட்டாய்,
ஆயினும்,
நடுங்கும் ஒற்றை தாழ் குரலினூடாகப் பார்,
காலம் மற்றும் மரணம் நோக்கிய நாட்டத்துடன்
செயல்பட முனைகிறாய்,
விடியலுக்கு இதுபோதும்
சாளரத்தின் வழியாக முன்னோக்கி பாய்ந்துவரவும்,
மறு-தோற்றம் கொள்ளவும்,
இந்த அறையிலேயே நீ முதிர்ந்துவிட்டாய்,
ஆயினும்,
நடுங்கும் ஒற்றை தாழ் குரலினூடாகப் பார்,
காலம் மற்றும் மரணம் நோக்கிய நாட்டத்துடன்
செயல்பட முனைகிறாய்,
விடியலுக்கு இதுபோதும்
சாளரத்தின் வழியாக முன்னோக்கி பாய்ந்துவரவும்,
மறு-தோற்றம் கொள்ளவும்,
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
நிர்வாணமான ஆயர்நில பேரழகு........................
கனவுகளே, அழகிய குழந்தைகள்
ஒளியின் இடையே
அவர்கள் ஆடைகள் கிழிந்துள்ளன,
அவர்கள் தோள்கள் வர்ணங்களால் வரையப்பட்டிருக்கிறது.
ஒளியின் இடையே
அவர்கள் ஆடைகள் கிழிந்துள்ளன,
அவர்கள் தோள்கள் வர்ணங்களால் வரையப்பட்டிருக்கிறது.
"அதுமுதல் எதற்குமே அர்த்தமில்லை”’
குரலை சுவாசிக்கிறது,
“நமது உடல்களை நாம் ஏன் வரைந்து கொள்ளக்கூடாது,
சிவப்புநிற மேகங்களைக் கொண்டு.
குரலை சுவாசிக்கிறது,
“நமது உடல்களை நாம் ஏன் வரைந்து கொள்ளக்கூடாது,
சிவப்புநிற மேகங்களைக் கொண்டு.
பாருங்கள், நான் இந்த மார்பை பளிச்சிடச் செய்கிறேன்
ஒரு சிறிய களிமண் துண்டை வைத்து
மகிழ்வை மீட்டளிக்கிறேன் அது ஏதுமாக இல்லை,
பாவத்தின் இருத்தலாக இருப்பதைக் காட்டிலும்.
ஒரு சிறிய களிமண் துண்டை வைத்து
மகிழ்வை மீட்டளிக்கிறேன் அது ஏதுமாக இல்லை,
பாவத்தின் இருத்தலாக இருப்பதைக் காட்டிலும்.
...............................
அவர்கள் நடந்தனர், வெறுங்காலுடன்
அவர்களின் இன்மையில்
நதியின் பூமிக் கரையை வந்தடையலாம் .
அவர்களின் இன்மையில்
நதியின் பூமிக் கரையை வந்தடையலாம் .
அவர்கள் கேட்கிறார்கள்,
அவர்கள் தருகிறார்கள்,
அவர்களது விழிகள் மூடியிருக்கின்றன,
அவர்களது முழங்கை சிவந்திருக்கிறது
படிமங்களின் சகதியிலிருந்து வருகிறது.
அவர்கள் தருகிறார்கள்,
அவர்களது விழிகள் மூடியிருக்கின்றன,
அவர்களது முழங்கை சிவந்திருக்கிறது
படிமங்களின் சகதியிலிருந்து வருகிறது.
எதுவுமே முந்தியிருக்காது, எதுவுமே இறுதியுறவில்லை,
அவை பகிரப்படுகிறது, சிறிதளவு நீர்.
அது நீட்டித்து செல்லும் ,
நிர்வாண விலாக்களில்
நட்சத்திரம் பிரதிபலிக்கிறது.
அவை பகிரப்படுகிறது, சிறிதளவு நீர்.
அது நீட்டித்து செல்லும் ,
நிர்வாண விலாக்களில்
நட்சத்திரம் பிரதிபலிக்கிறது.
அவை கடந்து செல்கிறது, பங்கேற்றுக் கொண்டே
மினுமினுக்கும் தண்ணீரில்
உன்னுள், கல் வீசிப்படுகிறது.
அங்கிருக்கும் உலகங்கள், பெரிதாக வளர்கின்றன.
மினுமினுக்கும் தண்ணீரில்
உன்னுள், கல் வீசிப்படுகிறது.
அங்கிருக்கும் உலகங்கள், பெரிதாக வளர்கின்றன.
...................
அவர்களது கால்தடங்கள் இணைந்திருக்கிறது
தாவரங்களால், அப்பழுக்கற்று
யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்
தனது பாப்பிகளை வீசுகிறது.
தாவரங்களால், அப்பழுக்கற்று
யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்
தனது பாப்பிகளை வீசுகிறது.
நிர்வாணமான , ஆயர்நில பேரழகு,
திறக்கப்பட,
ஈரமான மிருகங்களுக்கு நாளின் குளிர்ச்சியில்
எளியதின் அடைக்கலம் .
திறக்கப்பட,
ஈரமான மிருகங்களுக்கு நாளின் குளிர்ச்சியில்
எளியதின் அடைக்கலம் .
-ஆனால்
புகையின் சாம்பல்நிற அழகு
எழுகிறது,
வளைந்தும் நெளிந்தும் ,அதற்கு புறம்பாக
சிறிதளவேயான சுவாசித்தல்.
புகையின் சாம்பல்நிற அழகு
எழுகிறது,
வளைந்தும் நெளிந்தும் ,அதற்கு புறம்பாக
சிறிதளவேயான சுவாசித்தல்.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
இறுதியடைய மறுக்கும் அதே இரவு......................
நீ இப்போது தனித்திருக்கிறாய்
இந்த நட்சத்திரங்களெல்லாம் ஒருபுறமிருந்தாலும்,
மையம் உனக்கு அருகாமையிலும்
ஆயினும்
உன்னிலிருந்து தொலைவிலும் இருக்கிறது.
இந்த நட்சத்திரங்களெல்லாம் ஒருபுறமிருந்தாலும்,
மையம் உனக்கு அருகாமையிலும்
ஆயினும்
உன்னிலிருந்து தொலைவிலும் இருக்கிறது.
நீ நடந்திருக்கிறாய்,
நீ தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கலாம்,
எதுவுமே இனி மாறப்போவதில்லை,
நீ தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கலாம்,
எதுவுமே இனி மாறப்போவதில்லை,
எப்போதுமே இறுதியடைய மறுக்கும் அதே இரவு .
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
உன்னை அணுகிவருபனுக்கான
ஒரு இடம் செய்யப்பட்டிருக்கட்டும் ,
குளிரில் உறைந்திருப்பவன் , வீடற்று இருப்பவன்.
ஒரு இடம் செய்யப்பட்டிருக்கட்டும் ,
குளிரில் உறைந்திருப்பவன் , வீடற்று இருப்பவன்.
விளக்கின் ஒலியினால் கவரப்படுபவன்
தனிமையுற்றிருக்கும் வீட்டின் பிரகாசமான கதவுவழியே வருபவன்.
தனிமையுற்றிருக்கும் வீட்டின் பிரகாசமான கதவுவழியே வருபவன்.
வேதனையிலும் கடும் உழைப்பிலும் எஞ்சியவனை
நைந்துபோய் கொண்டே இருப்பவனை;
குணமடையச் செய்யும் வார்த்தைகளை
அவனிடம் இன்னுமொருமுறைச் சொல்லாம்,
நைந்துபோய் கொண்டே இருப்பவனை;
குணமடையச் செய்யும் வார்த்தைகளை
அவனிடம் இன்னுமொருமுறைச் சொல்லாம்,
அதற்கு என்ன தேவையாயிருக்கிறது, இந்த இதயம் தன்னை அமைதியுள் கரைக்கிறது,
வார்த்தைகள் அன்றி
அது குறியாகவும் மற்றும் பிராத்தனையாகவும் இருக்கின்றன.
வார்த்தைகள் அன்றி
அது குறியாகவும் மற்றும் பிராத்தனையாகவும் இருக்கின்றன.
இரவில் திடீரெனத் தோன்றும் சிறு -துண்டு தீ,
ஒரு ஏழையின் வீட்டிலிருக்கும் மேசையைக் காணும் கணத்தோற்றம் .
ஒரு ஏழையின் வீட்டிலிருக்கும் மேசையைக் காணும் கணத்தோற்றம் .
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
நாளின் கற்களில் நீரின் காயம்............
நான் மீண்டும் வாழதலுக்குள் வருவதைக் கேள்
இந்த வனங்களின் ஊடாக.
பசுமையான நினைவுகளின் அடியாழத்தில்
எங்கு பச்சைநிறமுள்ளதோ அதில் கடக்கிறேன்,
தாவரங்களின் கருகிய புன்னகை அவைமுன்பு பூமியில் எங்கிருந்தனவோ அங்கே,
கரிமத்திலிருந்து சந்ததியடையும் நாள்.
இந்த வனங்களின் ஊடாக.
பசுமையான நினைவுகளின் அடியாழத்தில்
எங்கு பச்சைநிறமுள்ளதோ அதில் கடக்கிறேன்,
தாவரங்களின் கருகிய புன்னகை அவைமுன்பு பூமியில் எங்கிருந்தனவோ அங்கே,
கரிமத்திலிருந்து சந்ததியடையும் நாள்.
நான் மீண்டும் வாழ்தலுக்குள் வருவதைக் கேள்,
தோட்டங்களின் உள்ளார்ந்த இருத்தலுக்குள்
நான் உன்னை நடத்துகிறேன்,
அந்த மாலையில் எது கைவிடப்பட்டதோ மற்றும் நிழலால் எது மூடப்பட்டதோ,
தோட்டங்களின் உள்ளார்ந்த இருத்தலுக்குள்
நான் உன்னை நடத்துகிறேன்,
அந்த மாலையில் எது கைவிடப்பட்டதோ மற்றும் நிழலால் எது மூடப்பட்டதோ,
புதிதாய் கண்டடைந்த நேசம்
நீ இப்போது வாழ தகுந்த இடம் .
நீ இப்போது வாழ தகுந்த இடம் .
நேற்றைய பாலையின் எல்லையில் நானொரு காட்டு இலை,
அது இறந்து போயிருக்கலாம்,
ஆனால் காலம் ஆழ்கிறது,
பள்ளத்தாக்குகளின் இருண்ட முறையீடு,
நாளின் கற்களில் நீரின் காயம்.
அது இறந்து போயிருக்கலாம்,
ஆனால் காலம் ஆழ்கிறது,
பள்ளத்தாக்குகளின் இருண்ட முறையீடு,
நாளின் கற்களில் நீரின் காயம்.
-Yves Bonnefoy-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)