Tuesday 5 May 2015

-Marina Tsevtayeva - poems - Shanmugam Subramaniam

How quiet the
writing,
how
noisy the printing....
-Marina Tsevtayeva -
Shanmugam Subramaniam
19 hrs ·
சிரத்தின் மீதொரு முத்தம்- வறுமையை நீக்கிவிடுகிறது.
நான்
உன் சிரசை முத்தமிடுகிறேன்.
விழிகள் மீதொரு முத்தம்- துயிலின்மையை போக்கிவிடுகிறது.
நான்
உன் விழிகளை முத்தமிடுகிறேன்.

இதழ்களின் மீதொரு முத்தம் - ஆழ்ந்தமிழ்ந்த தாகத்தை தணிக்கிறது.
நான்
உன் இதழ்களை முத்தமிடுகிறேன்.
சிரத்தின் மீதொரு முத்தம்- ஞாபகத்தை துடைத்தெறிகிறது
நான்
உன் சிரத்தை முத்தமிடுகிறேன்.
-Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
இதோ
இங்கேயொரு ஜன்னல்
இன்னும் அதிக எண்ணிக்கையில் உறக்கமிழந்தவர்கள்!
ஒருவேளை- வைன் பருகிக் கொண்டிருக்கிறார்கள்
அல்லது
இரு காதலர்கள் பிணைந்த கரங்களை
பிணைப்பகற்ற இயலாமல் தவிக்கிறார்கள் .

ஒவ்வொரு வீட்டிலும்
இப்படியொரு ஜன்னல் இருக்கத்தான் செய்கிறது,
சந்தித்தலையும் பிரிதலையும் எண்ணி
இரவில்
ஒரு ஜன்னல் விம்மி அழுகிறது.
ஒருவேளை-
எண்ணற்ற விளக்குகள் எரிகின்றன
ஒருவேளை -
மூன்றே முன்று மெழுகுவத்திகள்.
ஆனால்
நிம்மதி என் மனதில் எங்குமில்லை,
என்னுடைய வீட்டிலும் இல்லை,
இவைகள்தான் துவக்கம்.
விழித்திருக்கும் வீட்டிற்க்காக பிராத்தியுங்கள் , நண்பரே,
ஜன்னலை ஒளியூட்டுங்கள்.
-Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo. 

கரங்களை முத்தமிட நான் விரும்புகையில்,
எல்லாவற்றையும் பெயரிட விழைகிறேன் ,
இரவின்
கதவுகளை விசாலமாகத் திறக்கவும் விரும்புகிறேன்.
எனது தலையை அழுத்திக் கொண்டு
வன்மையான ஒலியொன்று -மெலிந்து வளர்வதை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்,
அன்றியும்
தூக்கமினமியில் அயர்ந்திருக்கும் வனங்களை
காற்று உலுக்குகிறது.
ஆ, இந்த இரவு,
சிறிய நீராறுகளின் தண்ணீர் உயர்ந்து
துயிலின் திசை நோக்கி வளைகிறது.
(நான் சற்றேக்குறைய உறங்குகிறேன்.)
இரவின் ஏதோவொரு மூலையில்
ஒரு மனித உயிர் மூழ்குகிறது.
-Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

கவலையில் தோய்ந்து வளைந்திருக்கிறேன்,
சிரிப்பதற்கு,
கடவுள் சற்று தயங்கினார்,
பாருங்கள்
கணக்கற்ற புனித தேவதைகளுக்கு
ஒளிரும் உடலைத் தந்திருக்கிறார்,

 Shanmugam Subramaniam's photo.
அதில்
சிலவற்றிற்கு மிகப்பெரும் சிறகுகள் உள்ளன
மற்றவை சிறகின்றி இருக்க;
அதனால்தான் நான் அரற்றி அழுகிறேன்
ஏனென்றால்
நான்
கடவுளைக் காட்டிலும்
அவரது வெண்ணிற தேவதைகளை அதிகமாக நேசிக்கிறேன்.
-Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
நீ என்னை காதலித்தாய்.
உனது பொய்மை
தன்னளவில் நேர்மையை கொண்டிருந்தது,
ஒவ்வொடு பொய்மையினுள்ளும்
ஏதொவொரு உண்மையிருந்த்து,
உனது காதல் அறியப்பட்ட எல்லைகளுப்பால் விரிந்தது
வேறு யாராலும் இயலாத அளவுக்கு.

காலத்தைக் காட்டிலும்
உன்னுடைய காதல் நீண்டிருப்பதாகத் காட்சியுறுகிறது.
இபோது நீ மெல்ல கையசைக்கிறாய்-
திடீரென்று
என்மீதான உனது காதல் இறுதியுறுகிறது!
அதுதான் ஐந்து வார்த்தைகளினுள் உறையும் உண்மை .
Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்
"Love for me is over"
Shanmugam Subramaniam's photo.


உன் பெயர் : துயில்..................
உனது பெயர் எனது உள்ளங்கையிலுள்ள பறவை
என் நாவிலுள்ள சிறிய ஐஸ்கட்டி
இதழின் சிறு அசைவு
உனது பெயர் :
உயர பறத்தலில் மிதக்கும் பந்து,
வாயினுள் ஒலிக்கும் வெள்ளி மணி,
நிர்ச்சலனமான குளத்தில் எறியப்பட்ட கல்
உனது பெயர் நீரை வாரியிறைக்கிறது,

மற்றும்
அந்த ஓசை இரவின் குளம்படியில் கடகடக்கும் ஒலி
இடியின் பேரோசையை ஒத்த ஒலியெழுகிறது
அல்லது;
எனது நெற்றிப் பொட்டொடு நேராக பேசுகிறது
நிமிர்த்தப்பட்ட கைத்துப்பாக்கியின் கூர்மையொலியை ஒத்திருக்கிறது.
உனது பெயர்- எத்தனை இணக்கமற்றிருக்கிறது,
அது
அசைவற்ற இமைரோமங்களைக் கொண்ட
எனது விழிகளில்-உனது
முத்தம் இனிமையும் குளுமையுமாய் பதியும்,
உனது பெயர் உறைபனியின் முத்தம்
குளிர் ஊற்றின் நீரை விழுங்குதல்,
புறாவின் நீலம்.
”உன் பெயர் : துயில்”.
-Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
*அலக்ஸாண்டர் பிளாக்கிற்கான கவிதைகள்
Shanmugam Subramaniam's photo. 



Shanmugam Subramaniam
16 hrs · Edited ·
இது என்ன?
பிரிதலுக்கான நாடோடியின் பேருணர்ச்சி
வேகமாக பிரிந்து போதலுக்கான இந்த தயார்தன்மை-
எதற்கு இது ,
நாம் சற்றுமுன்னம் தானே சந்தித்தோம்?
நான் இதை உணரும் கணத்தில்
எனது தலை என் கைகளில் ஓய்ந்திருகிறது ,
இரவிற்குள் உற்றுப் பார்க்கிறேன்.
நமது கடிதங்களைப் புரட்டி பார்க்காத
யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள்
நாம் எத்தனை முழுமையான-
ஆழமான நம்பிக்கையின்மையில் உழல்கிறோம்.
அதுவே சொல்லும் :
நாம் நமக்கு எத்தனை உண்மையாக இருகிறோம் என்பதை.
-Marina Tsevtayeva -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)