Thursday 21 May 2015

Poetry slips into dreams
like a diver who's dead
in the eyes of God .
-Roberto Bolano-
'Poetry slips into dreams
like a diver who's dead 
in the eyes of God .

-Roberto Bolano-'
இனி எப்போதைக்குமாய் நான் தனிமையுறுவேன்...............
நான் மறக்க முயற்சிக்கிறேன்.
பனிப்பொழிவின் கணத்தில் தோன்றிய உடலை
நாம் அனைவருமே தனிமையுற்றிந்த தருணம்.
பூங்காவில் , பின்புறமிருந்த குறுமலையில்
கூடைப்பந்து திடல்களில்,
நான் போகாதே நில் என்றேன், அவள் திரும்பி வந்தாள்:
வெண்முகம் ஞானமுற்ற இதயத்தினால் ஒளிர்ந்தது
அதுபோன்ற பேரழகை நான் இதுவரை கண்ணுற்றதில்லை
நிலவு பூமியிலிருந்து தன்னை பின்னிழுத்துக் கொண்டது
நெடுஞ்சாலைகளின் அதி-தூரத்திலிருந்து
கார்களின் ஒலி அன்மையுற்றது:
மக்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
நாம் அனைவரும் தொலைக்காட்சி வணிகக் காட்சியில் வாழ்ந்திருக்க
அடுத்தடுத்தப் பனியின் திரைகளிலிருந்து விடைபெறும்வரை,
அவளது முகத்தை சற்றே கண்ணுறுகிறேன்:
அவளது பார்த்தலில் வலியுறும் உலகின் பேரெழில்
நுண்- காலடித் தடங்களை நான் பனியில் கண்டேன்
எனது கன்னத்தில் உறைந்த மென்காற்றினை உணர்ந்தேன்
பூங்காவின் மறுபுறம் யாரோ மின் விளக்குடன் சமிக்ஞை செய்தனர்.
ஒவ்வொர் பனித்துகளும் உயிர்ப்புடன் இருந்தன
ஒவ்வொர் பூச்சியின் கருமுட்டையும் ஜீவனுடன் கனவுற்றிருந்தது.
நான் நினைத்தேன்:
இனி எப்போதைக்குமாய் நான் தனிமையுறுவேன்
ஆனால்
இடைவிடாது பனி - பொழிய பொழிய அவள் பிரியவில்லை.
-Roberto Bolano -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
மழை பொழிந்து கொண்டிருக்கிறது
மேகங்கள் அழுவதற்கு ஒப்பாக இருக்கிறது என்கிறாய்.
பின்பு வாயை மூடிக் கொண்டு வேகமாய் நடையிட்டுச் செல்கிறாய்
மெலிந்த மேகங்கள் ஏதோ அழுது அரற்றுவதுபோல்?
அப்படியிருக்க வாய்பில்லை,,பின் ஏனிந்த சீற்றம்,
இந்த நம்பிக்கையின்மை நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்கிறது?
இயற்கை சில முறைமைகளை
அவளது மாற்றாந்தாய் சகோதரன் புதிர்மையினுள்
ஒளித்து வைத்திருக்கிறாள்.
அதனால்;
இதை ஊழிறுதியின் மாலையாக நீ கருதும் முன்பு ,
துயருறும் மதியமாகவே தோன்றும் ,
நினைவுகளில் தொலைந்த தனியிறுத்தலான மதியம் ,:
இயற்கையின் ஆடி.
அல்லது .....
ஒருவேளை நீங்கள் அதை மறந்தும் போகலாம்.
மழை,
அழுதல்,
நடைமுகட்டில் மறுஒலியுறும் உனது கால்தடங்கள்
அது பொருட்டல்ல,
இக்கணத்தில் அந்த மரப்பாதையின் நெடுகிலும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியில்
நீ அழுது உன் படிம உருவைக் கரைக்கலாம்,
ஆனால்,
உன்னையே நீ தொலைக்க இயலாது.
-Roberto Bolano -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.

நாம் மரணத்தின் நிகழ்ச்சியுள் இருக்கிறோம்...........
கவனமாக கேள், என் மகனே:
மெக்ஸிகோ நகர்மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன
ஆனால் யாருமே அதை கவனிக்கவில்லை.

திறந்த ஜன்னல் மற்றும் சாலைகளினூடே
காற்று நஞ்சை ஏந்திச் செல்கிறது.
சற்றுமுன்பு உணவருந்திவிட்டு கார்ட்டூன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாய்.
நான் அடுத்துள்ள படுக்கையறையில் வாசித்துக் கொண்டிருந்தேன்
நாம் மரிக்கப் போகிறோமென உணர்ந்தேன்.
தலைச்சுற்றலும் வாந்தியும் ஒருபுறமிருக்க
நான் என்னையே சமையலறைக்கு இழுத்துவர
நீ தரையில் வீழ்ந்து கிடப்பதை பார்த்தேன்.
நாம் அணைத்துக் கொண்டோம்
என்ன நடக்கிறது என்று நீ கேட்டாய்
நாம் மரணத்தின் நிகழ்ச்சியுள் இருக்கிறோம்
என்று சொன்னேன், ஆனால்
அதற்குமாறாக; நாம் மற்றொரு பயணத்தில் இருந்தோம்
இன்னொன்று நீ பயப்படாதே
அது விடைபெற்றபோதும்
மரணம்
நமது விழிகளைக்கூட மூடவில்லை.
நாம் யார்? என்று ஒருவாரம் அல்லது
ஒரு வருடம் கழித்து கேட்டாய்,
எறும்புகள் ,
தேனிக்கள்,
பிறழ் எண்கள்,
தற்செயல் கணத்தின் குழைந்த கெட்ட சூப்பின்
இடையே ,
என் மகனே
நாம் மனிதஜீவிகள்,
ஏறக்குறைய பட்சிகள்,
பொது ஹிரோக்கள் , மற்றும் இரகசியங்கள்...........
-Roberto Bolano -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam's photo.