Monday, 25 May 2015

-George Garrett- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


    நமது நீல மலைகள் உருவற்று புகையொத்திருக்கிறது.
    ஏப்ரலில் நாம் கனவுறுகிறோம் மற்றும் விழித்திருக்கிறோம்.
    நமது கனவுகள் டாக்வுட் மரங்களாய் இருக்கின்றன.
    இளம்சிவாப்பாய் வெண்மையாய்
    கற்கண்டாய் இனித்திருக்கிறது.
    அதன்பிறகு
    சாத்தான் தன் பின்னங்கால்களில்
    ஒரு கரடி போல் நடந்து வருகிறது
    பிடில் இசைஞன் அனைத்தையும் நடமிடச் செய்கிறான்.
    ஓ மார்டின் லூதர், ஓ ஜாக் கால்வின்,
    அந்த மெட்டுக்களை
    என் செவியுறுதலுக்குப்பால் வைத்திருக்க மாட்டாயா?
    ஏப்ரலில் , மே மாதத்தில் ,
    பூக்களில் இசைக்கும் பருமனான வண்டினைப் போல்
    சாத்தானும் இசைக்கிறது.
    ஆண்டவனுக்கு நன்றி,
    நெடிய காய்ந்த கோடை தினங்கள்
    நீண்ட நாட்களுக்கு பின் வரும்.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    ஆணிகளாலான படுக்கையில் என்னை காதல்செய்..................
    நீதான். ஏழு முகத்திரையினில் நடனமிடும் ஆன்மா
    (ஆணிகளாலான என் படுக்கையிலிருந்து
    உன்னை உற்று நோக்கி வருகிறேன்.)
    ஆழியின் ஆழ்ந்த புலங்களை நீ அறிவாய்
    ஒளியில் கூத்திடும் நீருற்றுகளை நீ அறிவாய்
    ஏழு முகத்திரையினில் நடனமிடும் ஆன்மா நீதான்.
    குளிர்ந்து ஆர்வமுறும் மலைகளின் காற்றை சுவாசிக்கிறாய்
    இதயம் துயருறும் அமைதியான இடங்களின் கூசும் ஒளியைக் கண்டிருக்கிறாய்.
    (ஆணிகளாலான படுக்கையிலிருந்து
    நான் உன்னை உற்று நோக்கி வருகிறேன்.)
    வசந்தகால பச்சைய இதயத்தை நீ எனக்கு கொணர்ந்தாய்
    நான் சுவைக்கிறேன்.
    அது கசந்தும் சுவையுமாயிருக்கிறது
    ஏழு முகத்திரையினில் நடனமிடும் ஆன்மா நீதான்.
    நீதான் எனக்கான ஒளிநிறை
    நான் தேவதைகளுடனும் மற்றும் சாத்தானுடனும் சண்டையிடும் போது
    வா,
    ஆணிகளாலான படுக்கையில் என்னை காதல்செய்.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.


    News Feed

    நான் என்னையே சந்தேகிப்பேன் .......................
    நான் ஐந்தாயிருக்கிறேன் ஒன்றாயிருக்கும் பட்சத்தில் :
    தீர்க்கதரிசி கடலின் மீது நடந்து செல்கிறார்,
    வேடன் மரத்தினுள் மறைந்திருக்கிறான்,
    சர்ப்பம் மற்றும் புனிதம் இரண்டாயிருக்க ,
    நான் ஐந்தாயிருக்கிறேன் ஒன்றாயிருக்கும் பட்சத்தில் ,
    நான் பொய்மையாயிருக்கிறேன் மற்றும் சத்தியமாயிருக்கிறேன்.
    நான் வதைக்கப்ப்ட்டிருக்கிறேன்,
    தவிரவும் கிழித்தெறியப் பட்டிருக்கிறேன்
    சுய-வதையாளனை எனக்கு நன்கு தெரியும்
    ஒரு வெள்ளிக் காசிற்கு என்னிலொருவனை விற்பேன்
    நொறுக்குண்ட இதயத்தின் வாக்கியத்தை
    முத்தமொன்றில் அடைத்துவிடுவேன்
    இதைக்காட்டிலும் குறைவான ஒன்றிற்கு
    என்னையே நானே கொல்வேன்.
    நான் யாருமற்றவன் நான் ஐந்தாயிருக்கிறேன்,
    என்னை வேட்டையாடும் வேடனை பின் தொடர்வேன்,
    எனது உடலை மரத்தில் அறைந்து கொள்வேன்,
    நான் உறுதியளித்துவிட்டு பின் மறுப்பேன்.
    ஆயினும்
    தசையும் எலும்புகளும் ஜீவனுற்று மீள்- உயிர்புறும் ,
    நான் என்னையே சந்தேகிப்பேன் ,
    நான் அறிவேன்.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    யாரோ ஒருவன்
    ஒருவேளை ஆணாக இருக்கலாம்
    பெரும்பாலும் கேமிராவுடன் உள்ள ஒருவன்
    உன்னைக் காதலிக்கிறான்
    உனது தோற்றத்தை அன்புறுகிறான்
    ஏறக்குறைய
    உனக்கு இணையாக மிகையாகவே நேசிக்கிறான்
    ஏதோ ஒன்று
    ஆணோ அன்றி பெண்ணோ
    பெரும்பாலும் காமிராவாகவும் இருக்கலாம்
    மருட்சியுறும் உனது ஆன்மாவை
    கடத்திச் செல்கிறது
    நாசிகளையும் மற்றும் முழங்காலையும் கைப்பற்றுகிறது
    யாரோ ஒருவன்
    பெரும்பாலும் என்னையொத்த ஒருவன்
    உனது பெயரில் காதலடைகிறான்.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    நான் வார்த்தைகளை வார்த்தைகளை வார்த்தைகளை எழுதுவேன்......
    வெகு விரைவில் ஏதோ ஒரு தருணம்
    நாளொன்றை
    வெற்றுத் தலையணையுரையைப் போல் 
    அல்லது புதிய பனிவெளியைப் போல்
    என் வசம் வைத்திருப்பேன்
    அதன் பிறகு அங்கு மீண்டுமொருமுறை
    நான் என் தலையை கிடத்துவேன்,
    அந்த ஈரமுற்ற பனியில் தேவதைகளைச் செய்வேன்
    நான் வார்த்தைகளை வார்த்தைகளை வார்த்தைகளை எழுதுவேன்,
    உன்னைப் போலவே,
    எனது பெயரை கையொப்பமிடுவேன்,
    குழந்தைகளைப் போல்
    எனது புதிய கவிதைகளுக்கும் பெயரிடுவேன் ,
    இருளிலிருந்து அவர்களை வீட்டிற்குள் அழைப்பேன்.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    உன்னிலும் குருடனாய்.......
    எங்களிடம் பேசு
    யாரெல்லாம் பிளவுற்றிருக்கிறீர்களோ.
    நாம் நேசிக்கும் மற்றும் வெறுக்கும் 
    இரண்டினிடத்திலும் பேசு.
    நீ இரண்டாகவும் இருந்திருக்கிறாய்
    உனக்கு இரட்டை உண்மையும் தெரிந்திருக்கிறது
    அதுபோன்றே
    தூய்மையும் மற்றும் வெறுப்பும்.
    நீதான் காதலியாக இருந்திருக்கிறாய்
    மற்றும்
    காதலிக்கப்பட்டவளுமாய் இருக்கிறாய்.
    அதைப் பெற்றவளான
    நீதான்
    அதை வழங்கியவளும்கூட.

    இப்போது சொல் நாமிருவரும்
    எப்படி
    ஒருவருள் ஒருவராய் இருப்பதென்று.
    எங்களிடமும் பேசு
    யார் ஒற்றைகோபத்தில்
    வாழ்விற்கும் அல்லது மரணத்திற்கும்
    உண்மையாய் இல்லாமலிருக்கிறானோ.
    உன்னிலும் குருடனாய்.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.

    News Feed

    அவளை வார்த்தைகளில் புகழ்ந்துரைத்தல்
    ஒரு ஜெபமாக இருக்கிறது...............
    1
    அவள் ஒரு திகைப்பொளி 
    எப்படி அவளது வார்த்தைகள் பறந்தன!
    விசித்திரமான பறவைகளைப்போல்.
    யாரால் அதன் சிறகுகளின் சினத்தை
    அதன் சீற்ற்முறும் பாடல்களை?
    கையகப்படுத்த இயலும்.
    நான் எங்கு விதைத்தேனோ
    ஏதும் விளையப்போவதில்லை.
    ஏதும் வளமுறவில்லை.
    இருளுறும் பறவைகள் இப்போது வரட்டும்
    என்னைக் கண்டடையட்டும்.
    எனது விழிகளைப் பிடுங்கட்டும்.
    2
    எனது மகிழ்வு மகிழ்வற்றதாயிருக்கிறது.
    அவளது பிரகாசமான புன்னகை
    ஒரு ஜோடி கத்தரிகள்.
    அரிதானது அவளது தசை!
    ஆனால் எனது தீண்டலில்
    அவள் கல்லாகிறாள்.
    என்னால் அறுவடை செய்யக்கூடயவை
    காயங்களின் பயிர்களை மட்டுமே.
    பதர்கள் வாயை நிரப்பியுள்ளது.
    நான் வேடனை கண்டு பரிதாபப்படுகிறேன்
    அவனது வில்நாண் தளர்வுற்றுள்ளது.
    நொண்டும் அம்புகள் படபடக்கின்றன.
    3
    எனது காதலி வளமானவள்
    அவளுடல் பொன்மயம்.
    அவளது கண்களுக்கு நாணயங்கள்.
    என் காதலி ஒரு புதையல்
    நானொரு கடற்கொள்ளையன்.
    வரைபடம் பிறழ்வானது.
    கிரிடத்தினிடத்தில்
    நான் முட்களை சூட்டிக் கொண்டேன்.
    ரொட்டிக்கு பதிலாக உள்ளங்கையை சுவைக்கிறேன்..
    ஒரு வில்லோவை காண்பி
    கனிதரிப்பது எவ்வாறென
    அந்த தருவிற்கு காண்பிக்கிறேன்.
    4
    எனது காதலி தரிசாய் கிடக்கிறாள்.
    அவளது இதழ்மீது தூசு
    என் கண்களில் பச்சையம் .
    என் காதலி துயில்கிறாள்.
    நெடிய கோபுரத்தில்
    நான் அவளது கனவுகளைத் தாக்கினேன்.
    என் காதலி பூந்தோட்டம்
    முரட்டுக் குழந்தைகள்
    அவளது கரங்களில் அமைதியாக வளர்கின்றனர்.
    என் காதல் புனிதமானது.
    அவளை வார்த்தைகளில் புகழ்ந்துரைத்தல்
    ஒரு ஜெபமாக இருக்கிறது.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    காண்பதற்கு ஏதொவொன்று
    உண்மையில் அறிந்துணர ஏதோவொன்று,
    எப்படி,
    எதிர்பாராதும் மற்றும் அருளார்ந்தும் ,
    அந்த செந்நிற சிறகுடைய கறும் பறவை
    நாணல் நுனிக்கு ஒளியூட்ட இயலும்
    இப்போது
    அதோடு கூடவே பயணிக்கும்,
    ராக் அண்ட் ரோல் நடமிடும்,
    பிறகு
    சீரான டிக் டாக் சப்தம் எழ
    வெறுமை காற்றிற்குள் நேரத்தைக் கொண்டு வை.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    வெம்மைச் சூரியன் இனிமைக் காற்று
    நினைவைக் காட்டிலும் பச்சையமான புதிய இலைகள்
    மணப்பெண்களினும் மிருதுவான இலையுதிர் மரம்
    கதலுவகையின் பின் நெகிழும் துலிப்
    வெம்மைச் சூரியன் இனிமைக் காற்று
    சூரியனின் கீழ் யோசிப்பதற்காக நான் படுத்திருக்கிறேன்
    நான் மகிழ்ச்சியோடு இருப்பேன் என நினைக்கிறேன்
    நீ என்னிடம் வந்தாய் இங்கே இப்போது
    கதிரொளியை அணிந்து கொண்டு
    ஓ தென்றலினும் இனிமையாய்,
    உன்னைக் கனவுற்றபடி போதையில் அமிழ்ந்துள்ளேன்
    இப்போதே நீ வந்துவிடு
    முத்தங்களின் அங்கியால்
    உன்னை நான் முழுமையாக மூடுவேன்
    நான் குசுகுசுக்கும் கணத்தில் மோன மலராயிரு,
    என் ரகசியங்களிலிருந்து
    உனது ரகசிய புலங்களுக்கு.
    -George Garrett-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.