Tuesday, 30 June 2015

-Margaret Atwood - (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)

சுடப்பட்ட பறவை காற்றில் கவிழ்கிறது,
பிறரதை உன்னிக்க
எது நடக்கிறதென அவர்கள் அறியத் தேவையிருக்கிறது.
மர இலைகள் சடசடக்கிறது,
மான் வாலை இசிவுற்றிழுக்கிறது, 
முயல்கள் செவிகளை சுழற்றிட .
புற்களை மேய்வன பதுங்குகின்றன,
மாசகற்று உயிரிகள் தங்கள் பற்களை நக்கின,
சிந்திச் சிதறிய வாழ்வு அவர்களை கிலியுறச் செய்யவில்லை .
நம்மை எது எச்சரிக்கிறது?
நாம் எதில் உணவடைகிறோம் ?
நாம் அனைத்தையும் உள்ளிழுக்க
காயம் ஒன்றன்பின் இன்னொன்றாக நீளும்,
சிதறிய இடிமானம் - இடிமானமென துப்பாக்கி உரைக்கிறது
நம் முகங்கள் கண்ணாடி மினுக்கலில் மிளிர
புகையென கிளம்பும் இரவு.
ஓ; உன் விழிகளை ஒளித்து வை -
ஓலியமுங்கிய அறையில் சற்றே அமர்தல் நலம்,
கதவுகள் பூட்டப்பட்டுள்ளன, சாதனங்கள் பிடுங்கப்பட்டுள்ளன
ஏதுமின்மையுடன் ;
சென்றோடிய கோடையில் வாங்கிய
நயாகரா புகைப்பட காட்சியின்
நீரனைத்தும் தணிவு கிளர்த்தும்
செங்குத்துப்பாறையில் மெதுவாயியங்கும் காட்சி வழிந்து,
வெதுவெது பச்சைய இனிப்பு பாய,
நீச்சலிடும் பலவீனனை
அல்லது
தங்களது மஞ்சள் படகிலுள்ள இரு மழலைகளை
காணாதிருகக் முயற்சிக்கிறது.
-Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



That God is Coloring Newton does shew
And the Devil is a Black Outline, all of us know .
-William Blake -

இரகசியத்தனம் உன்னுடாக பாய்கிறது
வேறு தன்மையதான குருதி.
ஒரு துர்மிட்டாயை
நீ உட்கொண்டதைப் போல்,
வாய்க்குள் இட்டது போல்,
அது இனித்தபடியே நாவில் இளகிச் சரியட்டும்
உரைத்தலின் நேரெதிர் பயணமாய்,
குரலவளையொலியிலும் மற்றும் சீறொலியிலும்
வார்த்தை கரைந்தழிகிறது
நிதானமான சுவாச உட்கொள்ளுதல் -


இப்போது அது உன்னுளிழைகிறது, இரகசியத்தனம்.
பண்டையதாய் மற்றும் கயமையாய், மதுரமிகுந்தினிக்க,
அடர்கருமை வெல்வெட்
உன்னகத்தில் முகிழ்கிறது,
மையாலான பாப்பி .

உன்னால் வேறொன்றை குறித்தும் யோசிக்கவியலாது.
அது உன்னிடம் இருக்குமாயின் , மிகுதியாய் வேண்டுவாய்.
எத்தகைய மீ-ஆற்றலை கையளிக்கிறது!
அறிந்திராமலே அறிந்திடும் மாசக்தியை அளிக்கிறது,

கற்கதவத்தின் ஆற்றலும் ,
இரும்பு முகத்திரையின் ஆற்றலும்,
நொறுக்குண்ட விரல்களின் ஆற்றலும்,
மூழ்கடிக்கப்பட்ட எலும்புகளின் ஆற்றலும்

கிணற்றின் ஆழ்மையிலிருந்து பீறிடும் கூக்குரலொலி.

Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






Touch comes before sight,
before speech.

It is the first language and the last,
and it always
tells the truth.


-Margaret Atwood-





உன்னை நேசிப்பவன் அண்டையறையில்
தனக்குத்தானே உரையாடிக் கொள்ளுவதைக் கேட்டாயா.
நீ செவியுறுவதை அவன் அறிந்திருக்கவில்லை .
உன் செவியை சுவரின்மேல் பதிக்கிறாய் ஆனால்
ஒருவகையான உறுமல் சத்தம் மிக -
வார்த்தைகளை உன்னால் ஈர்த்தறிய இயலவில்லை
அவன் சினந்திருகிறானா? அன்றி உறுதி கூறுகிறானா?
கவிதையின் இருன்மையுற்ற நீள் பக்கமொன்றின் அடிக்குறிப்பா?
அல்லது ஒருவகை உரைகூறலா
கார் சாவியொத்த ஏதோ ஒன்றை
தன்வசமிருந்த்தை இழந்து தேடியலைகிறானா?
பின்பு சட்டென இசைக்கிறான்
நீ திகைத்ததிர்ந்தாய் , ஏனென்றால்
இது புதிதாயாயிருந்ததது ஆயினும்
நீ கதவுகளை திறக்கவில்லை, நீ உட் புகவுமில்லை,
ஆழ்தொனியிலவன் இசைத்திருந்தான்- சீரற்ற ஸ்தாயையில்
ஊதா பச்சை சலித்திருக்கும் ஒற்றைத்தொனி,
அடர்ந்த ஹீதரின் புதராக.
அவன் உனக்கெனவோ அன்றி,
உன்னைச் சுட்டியோ இசைக்கவில்லை.
அவன் மற்றொன்றின் மூலம் மகிழ்கிறான்
இவையேதும் உன்னைச் சார்ந்ததல்ல-
அவன் அறிந்திரா யாரோ ஒருவன்
தன்னந்தனியனாய் சொந்த அறையில் இசைக்கிறான்,
ஏனித்துனை வதையுணர்ந்தாய், ஆர்வமடைந்தாய்,
மகிழவும் செய்தாய்
கட்டற விடுவிக்கபட்டாய்?


-Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)








ஆடியின் ஊடாக சென்றடைந்து
உங்கள் மழலைகள் கண்ணாடியில் கைகளை
அறுத்துக் கொள்கிறார்கள்
அங்குதான் அன்பிற்கினியவர்கள் ஒளிந்திருந்தார்கள்.


சிறிதேனும் இதை நீ எதிர்பார்க்கவில்லை :
அவர்களுக்கு மகிழ்ச்சியே பிரதானமென நினைத்தாய்,
உள-சிறாய்ப்புகளல்ல.

மகிழ்ச்சி எளிதாய் முன் தோன்றுமென
நீ நினைத்திருந்தாய்
பிரயத்தனமேதுமின்றி அல்லது
எவ்வித வினையாற்றலின்றி

பறவையின் அழைப்பிசையாய் அல்லது
நடைவழி மலராய்
வெள்ளி கயல்திரளாய்

இப்போதவர்கள் காதலின் நிமித்தமாய்
தங்களையே அறுத்து
இரகசியமாய் கதறியழுகின்றனர்
உங்கள் சொந்த கரங்களே மரமரக்கின்றன

ஏனென்றால் உங்களால் இயல்வது ஏதுமில்லை
அப்படி செய்யாதேயென - நீ உரைத்தலில்லை;
ஏனென்றால்
நீயும் அதை அவசியமென எண்ணியிருக்கவில்லை
இப்போது நொறுக்குண்ட கண்ணாடித் சில்லுகள் இரைந்திருக்கின்றன
உங்கள் மழலைகள் செந்நிறம் தோய்ந்த கைகளுடனிருக்க

இறுக பற்றிய
நிலா மற்றும் எதிரொலிகள், , ஏதுமின்மை ,மற்றும் நிழல்
இன்னமும்
நீயதைச் செய்த நேர்த்தி.

-Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






The Eskimos had fifty-two names for snow
because
it was important to them:
there ought to be as many for love.


-Margaret Atwood-







Monday, 29 June 2015

-Frantisek Halas - (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


என்னால் சாபத்தை கவிதையாக உருமாற்றவியலும்
யாருக்கு நான் நன்றியறிவிக்க
முதிர்ந்திரா மற்றும் செறிந்த காலைப் பொழுதில்
யாருக்கு நான் நன்றியறிவிக்க


யாராலும் என்னை காணாபுலத்தினில்
இரகசியமாய் கனிந்தேன்
என் பிறப்பிட துயிலை நான் விடுத்து அகலவேண்டும்
முதுகுபுறமாய் சொர்க்கத்தின் கதவுகள் சாத்தப்பட்டன
நானறிந்த நிலம் வீணிலழிய கிடத்தப்பட்டுள்ளது

எனது அவலத்தையும் பிறனது உளத்துயரையும்
குழப்பத்திலாழ்த்தும் திறன் எனக்குண்டு
இழத்தலில் தேர்ந்தவனிடம் பயனில் பாடல்களை
நாளை எதிர்நோக்கியிருங்கள்.

-Frantisek Halas -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)








மகிழ்விலிருந்து புலம்பெயர்க்கப்பட்டேன்
அந்த இல்லம் என்னுடையதன்று
கனவின் விதைப் பயறுகளை
பகைமையுற்ற நகரத்தின் சுவர்கள் மீது எறிகிறேன்.
நான் நோக்குமிடமெல்லாம் அடரிருள்
நானொரு முள்ளம்பன்றியை காண்கிறேன்
நிலைபேறுடன் ஒவ்வொரு முள்ளின் கொட்டுதலுமிருக்க


ஓ என் முகத்தை சொந்தமாக்கிக் கொள்ளாதே
இது பிறிதொருவன் நெய்த முகத்திரை
நான் இரவலடைந்தேன்
என் பின்புற பெருவட்டியாளன்
பிணக்கிடங்கிலிருந்து களவிட விரும்புகிறான்
பிறனது கடன்களை நான் கண்டேன் - செலுத்திவிட-
முகங்களில் தோய்ந்த நகைப்பே இறுதி நிஜம் .

இழை இழையாக , அச்சமில்லாது,
முகத்திரையாயிருந்ததை நான் அவிழ்க்கிறேன்
காலத்தின் ஏமாற்றும் வஞ்சக சதியை நான் ஊடுருவியறிகிறேன்
என் குருதியை வட்டியாய் ஈந்திடேன் ஏனெனில்
என்னுடலம் காலத்தினது,வட்டி அவ்வாறன்று.

-Frantisek Halas -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



There's never one sunrise
the same or
one sunset the same.

-Carlos Santana-

Sunday, 28 June 2015

-Ruben Dario - (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam
18 hrs · Edited ·


முதலில் நானொரு பவழ படுகையாயிருந்தேன்
பின்பு ஒரு அழகான இரத்தினம் ,
பின்பு பச்சையம் , தண்டில் சரியும் படர்கொடி;
பின்பு நானொரு ஆப்பிள்,
விளைச்சல் வெளியில் தழைக்கும் லில்லி,
நளிரிளம் நங்கை இணங்கும் தருண- இதழ்கள்,
புலர்காலையில் இசைத்திருக்கும் வானம்பாடி,
இப்போது நான்
யகோவாவின் ஒளியில் தங்கிய
பாம் மரம்,
ஒரு ஆன்மா , அல்லது
தளிர்க்காற்றுக்கு இசைக்கபடும் சங்கீதம் .


-Ruben Dario -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





இரவிலிழையும் மெளனம் ,வலிகனிந்த மெளனம்,
இரவுசார்ந்து ............என் ஆன்மா ஏனிப்படி நடுங்குகிறது?
என் குருதியின் தாழ் முனகலை செவியுற்றேன்.
என் கபாலத்தினுள் கடந்தோடும் ,
அமைதியான புயலை கூர்ந்து கவனிக்கிறேன்
துயிலின்மை! துயிலவியலாது , ஒருவேளை கனவுறலாம்.
கூறுபடும் ஆன்மிகத்தின்
தன்னுறும் பேச்சின் முழுமையாய்,
என் சிற்றூரும் -நானும்!
என் சோகத்தை கரைத்திடவும்
ஓர் இரவின் வைனில் ,
படிக இருன்மையின் திகைப்பாய் .................
பின் நான் வியப்பிலாழ்கிறேன் : எந்நேரம் இன்று விடியும் ?
ஒரு கதவு சற்றுமுன் அடைத்தது ..............
யாரோ ஒருவர் சாலையில் கடக்கிறார்..........
கடிகாரம் மூன்றென ஒலிக்கிறது........................
அவளாகத்தான் இருப்பாள்.


-Ruben Dario -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






அருகே கடவுள் கடந்திட , அருளுயிர்த்து
யாரோ ஒருவன் நடுங்குகிறான்,
கவிதையின் ஒற்றைவரி ஒளியாய் மொட்டவிழ்கிறது;
மூளையின் அடியாழத்தினுள் எது எஞ்சியிருக்கும்
பெண்ணின் முகம், வான்நீல கனவு!


-Ruben Dario -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)-







You are an Universe of Universes
and your soul
a source of songs.

-Rubén Darío-


Saturday, 27 June 2015

கட்டுரை
ஜே.ஜே. - இருபத்தைந்து
சுகுமாரன்
http://www.kalachuvadu.com/issue-79/katturai01.htm


கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது:
"சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என் அபிப்பிராயம்."1
இருபத்து நான்காம் வயதில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முழுமையாக வாசித்து முடித்ததும் தோன்றிய மனநிலை ஏறத்தாழ இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் தமிழில் அன்றுவரை வெளியாகியிருந்த பெரும்பாலான நவீனப் படைப்புகளோடு அறிமுகம் கொண்டிருக்கிறேன் என்ற இறுமாப்பும் இதே எழுத்தாளர் அதுவரை எழுதி வெளியான எல்லாவற்றையும் படித்திருக்கிறேன் என்ற தற்பெருமையும் அந்த மனநிலையில் ஆடிச் சரிந்தன. மிகவும் பழக்கப்பட்ட நிலப் பகுதியில் மூடுபனி கவிந்த பொழுதில் நிற்க நேர்ந்தது போன்ற துலக்கமின்மையை உணர்ந்தேன். நூல் வடிவத்தில் வெளிவருவதற்கு முன்பே சில பகுதிகள் வாசிக்கக் கிடைத்ததன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நாவலும் அதுவாகவே இருந்தது. மலர்மன்னன் வெளியீடாக வந்த '¼' காலாண்டு இதழில் ஜே.ஜே: சில குறிப்புகளின் ஆரம்ப அத்தியாயங்கள் அச்சேறியிருந்தன. அதை வாசித்துப் பெற்ற குதூகலப் பதற்றம் நாவலை மிக நேர்த்தியான புத்தகமாகக் கைவசப்படுத்தும்வரை தொடர்ந்திருந்தது. முதல் வாசிப்பில் ஈர்க்கக்கூடிய பிரமிப்பையும் புரிபடாத் தன்மையையும் அனுபவித்ததற்கான காரணங்களைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடைவெளிவிட்டுப் பல முறை நாவலை வாசித்த பக்குவத்தில் வகைப்படுத்தினால் அவை பின்வரும் அம்சங்களைச் சார்ந்தவையாக இருக்கும்.
நாவல் என்பது கதையை முன்னிறுத்தி விரிவடையும் வடிவம் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு எதிரானதாக இருந்தது ஜே.ஜே: சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் ஆரம்பப் பிரமிப்பை ஏற்படுத்தியது.
புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் 'திட்டமிட்ட சதி'யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது. இந்த நோக்கில் தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி ஜே.ஜே: சில குறிப்புகள்.
சமகாலத் தமிழ் வாசகனை நாவலின் நடையே ஈர்த்தது; வெருட்டியது. மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது. ஆவணங்களுக்கான தெளிவு, புனைகதைக்கான ஜாலம், கவிதையின் வேகம், தொனி மாற்றங்களின் நுட்பம் ஆகிய எல்லாமும் இழைந்த மொழியில் அமைந்த நாவல். 'புறங்கழுத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடிகள் விழுவதுபோல' வீச்சுக் கொண்டிருந்த நடை, நாவலை நகர்த்திச் செல்வதற்கான காரணி என்பதைவிட நாவலின் ஆதாரப் புள்ளியாகவே உருவங்கொண்டிருந்தது. அறிவார்ந்த தளத்தில் முன் நகரும் படைப்பு என்பதால் இந்த இயைபு வலுவானதாகவும் இருந்தது. புனைவு மொழி சார்ந்து வழக்கத்திலிருந்த இலக்கணம் இந்த நாவலில் தகர்ந்தது. நடை காரணமாகவே கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீலனை செய்யத் தூண்டிவிட்ட முதல் படைப்பாக ஜே.ஜே: சில குறிப்புகள் இருந்தது.
வாசக ஈர்ப்புக்கு ஆரம்பமாக இருந்தன இந்தக் கூறுகள், எனினும் நாவலை அந்தரங்கமானதாக ஏற்றுக்கொள்ளத் தனிப்பட்ட நியாயங்களும் எனக்கிருந்தன. அந்தக் காலப் பகுதியில் எனது வாசிப்புக்கும் மனச் சாய்வுக்கும் இணக்கமாக இருந்த பலவற்றோடும் தொடர்பு கொண்டனவாகவும் அந்த நியாயங்கள் இருந்தன.
ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்கள் அன்று பெரும் அலையாக என் கருத்திலும் கவனத்திலும் மோதிக்கொண்டிருந்தன. ஜே.ஜே: சில குறிப்புகளின் முதல் வரியே காம்யுவை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, நாவலுடனான வாசக உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பைக் கூடுதலாக்கியது. ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் உயிர்ச் சாயல் சி.ஜே. ஜோசப் என்ற மலையாள எழுத்தாளனின் அடையாளங்களைக் கொண்டிருந்ததைவிடக் காம்யுவின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்புவது அன்றைய மனநிலைக்கு உவப்பாக இருந்தது. ஜோசப் ஜேம்ஸ் - ஆல்பெர் காம்யு என்ற பெயர்களின் உச்சரிப்பு ஒற்றுமையில் மனம் மயக்கம் கொண்டது. காம்யுவின் பிரச்சினை மனிதச் சூழலின் நெருக்கடியை ஆராய்வது, அந்த ஆய்வுக்குச் சுதந்திரமான சிந்தனையைச் சார்ந்திருப்பது என்பதாகக் கருத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தின் தமிழ் வடிவம் அல்லது திராவிட வடிவமே ஜே.ஜே. என்ற நம்பிக்கையும் கவனத்தில் வேரோடியிருந்தது.
அதே கால அளவில் வாசித்து ஆவேசம் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் அருண் ஜோஷி. குறிப்பாக அவர் எழுதிய பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு என்ற நாவல்2. வாசிப்பின் பல கட்டங்களில் ஜோசப் ஜேம்ஸும் பில்லி பிஸ்வாஸும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டார்கள். பில்லி என்கிற பிமல் பிஸ்வாஸுக்கும் ஜோசப் ஜேம்ஸுக்கும் புனைகதைப் பாத்திரங்கள் என்ற வகையில் எந்தப் பந்தமும் கிடையாது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன்; பில்லி அமெரிக்க வாழ் இந்தியன். அமெரிக்க வாழ்க்கையின் பகட்டு அவனை விரட்டுகிறது. அங்கிருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு வந்து கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறான். குடும்பம், காதல், சமூகத்தின் கோளாறுகள் எல்லாம் அவனைக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன. அமைப்புக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனக்குமான உறவு பற்றி ஓயாத கேள்விகளுடன் உழலும் பில்லி கடைசியில் காணாமற்போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ள முடியாமல் காவல் துறை வழக்கை மூடுகிறது. இந்த நாவலுடன் ஜே.ஜே: சில குறிப்புகளை ஒப்பிட முடியாது. ஆனால் பில்லி பிஸ்வாஸ் தனது கேள்விகளாக ஏற்றுத் துன்புறும் அனைத்தையும் ஜே.ஜே.யும் கொண்டிருந்தான் என்று தோன்றியது. என்னுடைய ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் தனது படைப்பின் நோக்கமாக அருண் ஜோஷி3 சுட்டிக்காட்டிய வாசகம் ஜோசப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளனுக்குப் பொருந்தக் கூடியதாகவேபட்டது. 'மனித மனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்ற அருண் ஜோஷியின் வாக்குமூலம் ஜே.ஜே.வுக்கும் இணக்கமானது என்பதே என் வாசிப்பின் நியாயம்.
ஜே.ஜே: சில குறிப்புகள் வெளிவந்த வேளையில் அந்த நாவல் இலக்கிய வாசிப்புக்கான பிரதி என்பதுபோலவே இலக்கிய அங்கீகாரத்துக்கான கையேடாகவும் இருந்தது. அதன் கணிசமான பகுதிகளை மனப்பாடமாகச் சொல்ல முடிந்திருந்தது. அதை ஓர் அங்கீகாரமாகவும் மனம் கொண்டாடியது. அன்று சீரிய இலக்கியச் சூழலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த பலரும் இந்தப் பயிற்சியை விளையாட்டாகவோ தீவிரமாகவோ மேற்கொண்டிருந்தார்கள் என்பது இன்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.
சுந்தர ராமசாமியை முன்பே அறிவேன். ஆனாலும் அவருக்கு எழுதிய முதல் கடிதம் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் கண்ட ஒரு பிழையைக் குறிப்பிட்டு எழுதிய அஞ்சலட்டையாக இருந்தது. நாவல் பாத்திரமான பாலு தனது நோய்ப் படுக்கையில் கிடந்து வீணையின் மீட்டலாக வரும் இசையைப் பற்றிச் சொல்லும் பகுதியில் 'லம்போதர'4 என்ற சங்கீத உருப்படியை 'வர்ணம்' என்று நாவலாசிரியர் எழுதியிருப்பார். அப்போது இசைப் பித்தம் முற்றியிருந்ததால் கீதத்தை வர்ணம் என்று எழுதிவிட்டீர்களே என்று சிணுங்கிக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றும் அடுத்த பதிப்பில் திருத்தப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அன்று பதிப்புத்துறை இருந்த நம்பகமற்ற சூழலில் அவருடைய வாக்குறுதி அடுத்த பிறவியில் நிறைவேறக்கூடும் என்றே எண்ணத் தோன்றியது. சீரிய இலக்கிய நூல்களின் விதியும் அவ்வாறாகத்தான் இருந்தது. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகளின் காரியத்தில் விதிவிலக்காக நிகழ்ந்தது ஓர் அற்புதம். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நாவல் இரண்டாம் பதிப்புக் கண்டது. 'லம்போதர' கீதம் என்று திருத்தமும் பெற்றிருந்தது. நான் சொல்லித் திருத்தம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை. பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். ஆனால் என் பொருட்டுத்தான் நாவலாசிரியர் அதை மேற் கொண்டார் என்ற அசட்டு மகிழ்ச்சி நாவலைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் மேலெழும். இன்றும்.
n
ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது. இவ்விரு காரணங்களாலேயே முன்சொன்ன எல்லாவிதச் சிந்தனைப் போக்கிலிருந்தும் இந்த நாவல் அணுகப்பட்டிருந்தது.
சிற்றிதழ் சார்ந்த கலாச்சாரச் செயல்பாடுகள், ஆர்வலரின் நடவடிக்கை என்னும் நிலையையும் வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் உளவியல் வினை என்ற நிலையையும் கடந்து கருத்துருவாக்கம் என்னும் அமைப்புப் பணியாக மாறியது எண்பதுகளில் எனக் கருதுகிறேன். அந்த மாற்றத்தின் எதிர் அதிர்வுகள் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை உருவாக்கியிருக்கின்றன. நாவலில் புலனாகும் அறிவார்ந்த தளத்துக்கான முகாந்திரம் இதுதான். எழுத்து, கலை, இசை, ஓவியம் என்று பண்பாட்டுச் செயல்பாடுகளில் எதார்த்த வாழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மை கொண்ட கருத்தாடல்தான் நாவல் எதிர்கொள்ளும் சவால். கருத்துகளை உருவாக்குபவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களுமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் நாவலின் மையப் பாத்திரங்களாவதற்கான காரணமும் இதுதான். துரதிருஷ்டவசமாக அந்தக் காலப் பகுதியில் இயங்கிய தமிழ் எழுத்தாளர்களோ கலைஞர்களோ பண்பாட்டுக் காவலர்களாக நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாவலின் பின்புலமாகக் காட்டப்படும் மலையாள இலக்கிய உலகில் கருத்தை உருவாக்குபவர்களாக எழுத்தாளர்கள் உண்மையாகவே போற்றப்பட்டனர். ஆக, நம்பகமான பின்னணியில் சமகாலத்தின் கோலங்களை நாவலாசிரியரால் பயமில்லாமல் விவாதிக்க முடிந்தது. இந்த அச்சமின்மைதான் அதன் வாசகரிடையே மாபெரும் வியப்பைப் படரவிட்டிருக்கிறது.
வெளிவந்து இரண்டரைப் பதிற்றாண்டுகளைக் கடந்திருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள்தான் சமகால நாவல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது என்று கருதுகிறேன். நாவலாசிரியரின் கூற்றுப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்றும் எழுதப்படுகின்றன. இனியும் எழுதப்படலாம். ஏறத்தாழ இவை அனைத்தும் ஒரே தொனியில் அமைந்தவை. பார்வையில் வேறுபாடுகள் கொண்டவையாகத் தோன்றினாலும் நோக்கத்தில் ஒரே தன்மை கொண்டவை. தாம் வரித்திருக்கும் கருத்து நிலையையொட்டி நாவலைப் பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்ட பிறகு, அதற்கு ஏற்ப நாவல் இல்லை என்ற விமர்சன மதிப்பீட்டுக்கு அவற்றை எழுதியவர்கள் வந்து சேருகிறார்கள். தீர்ப்பை நிர்ணயித்த பின் நடத்தப்படும் விசாரணையின் தந்திரத்தை ஒத்திருக்கிறது இது.
நாவலின் கட்டமைப்பு பல இழைகளால் பின்னப்பட்டது. சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்திருக்கிறேன். அதன் நடை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து என்னை ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்த உச்ச நடைகளில் (grand style என்பதற்குச் சமமாக இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்துகிறேன்) ஒன்றாக நாவலின் நடையை வகைப்படுத்தலாம். இது மொழிசார்ந்த உத்தியல்ல. எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைவது. பல தள இயக்கம் கொண்டது. பாதிப்புகளை உருவாக்கக்கூடியது. சிறுகதையில் இதன் துல்லியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன் கதைகள். நாவலில் சமகால உதாரணம் ஜே.ஜே: சில குறிப்புகள். தொடர்ந்து வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான படைப்பாகப் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நாவல் நிலைத்திருப்பதும் இந்தக் காரணத்தாலேயே என்பது என் எண்ணம்.
n
"ஜே.ஜே: சில குறிப்புகள் மலையாளக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்"5 என்று பிற்காலக் கட்டுரையொன்றில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
ஆரம்ப வாசிப்பில் ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸை நினைவூட்டுவதாக நம்பியிருக்கிறேன். நாடக ஆசிரியரும் ஓவியரும் விமர்சகரும் சிந்தனையாளருமாக வாழ்ந்து மறைந்தவர் சி.ஜே. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை முதன்மைப்படுத்தியவர்; நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான கலகத்தையும் உருவாக்கியவர். அவரது மொழி மலையாள இலக்கியத்தில் புதிய தடங்களை ஏற்படுத்தியது. மறைக்கல்வி பயிலக் குடும்பத்தினரால் தூண்டப்பட்டவர். மடாலயப் படிப்பை உதறி வெளியில் இறங்கியவர். சி.ஜே.யும் அற்ப ஆயுளில் மறைந்தவர். நாற்பத்திரண்டாம் வயதில். சி.ஜே.யின் மரணத்துக்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி ரோசி தாமஸ் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். 'இவன் என் பிரியமான சி.ஜே.'6 என்ற அந்தச் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பத்திலும் சி.ஜே.தான் ஜே.ஜே.யா என்று மயங்கியதுண்டு. அந்த அளவுக்கு நம்பகமான தகவல்களுடன் பின்புலத்தை நிறுவ நாவலாசிரியர் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். சி.ஜே. தாமஸ் வாழ்க்கையின் நிஜம். ஜோசப் ஜேம்ஸ் புனைவின் உண்மை.
மலையாள இலக்கிய உலகில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் வாசகனான என்னை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சி.ஜே. தாமஸ்தான் ஜே.ஜே. என்ற உரிமை பாராட்டலை அடக்கிய சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன். சி.ஜே. தாமஸின் தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய நூலின் பின்னுரையில் அதன் தொகுப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'சி.ஜே. தாமஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுத மலையாளியால் முடியவில்லை. அதற்கு ஒரு தமிழர் வேண்டியிருந்தார்.'7 இதை ஓரளவுக்கு உண்மை என்றும் பெருமளவுக்குப் புனைவின் வெற்றி என்றும் காண்கிறேன்.
நவீன மலையாளக் கவிஞர்களில் ஒருவரான ஆற்றூர் ரவிவர்மா ஜே.ஜே: சில குறிப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிமாற்றம் செய்த முதல் நாவலும் இதுதான். அளவுக்கு மிஞ்சிய வடமொழிச் சொற்களால் பின்னப்படும் மலையாள நடையே இலக்கியத் தன்மை கொண்டது என்ற கருத்துக்குச் சவாலாக இருந்தது ஆற்றூரின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவான சொற்களையும் தமிழ் வாக்கிய அமைப்புகளையும் அப்படியே கையாண்டிருந்தார் ஆற்றூர். சுத்தமான மலையாள நடையல்ல; என்றாலும் புதிய ஒரு திராவிட நடை மலையாள இலக்கியத்துக்கு வாய்த்தது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடம் இந்த நடையின் பாதிப்பைக் காணவும் முடிந்தது. நவீன கவிஞரும் விமர்சகருமான கல்பற்றா நாராயணன் சுந்தர ராமசாமி மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் குறிப்பில் இந்தப் பாதிப்பைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார். ஓர் அர்த்தத்தில் ஜே.ஜே: சில குறிப்புகளின் அறிமுகத்துக்குப் பின்னரே தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்று மலையாள இலக்கியவாதிகளும் வாசகர்களும் நம்ப முன்வந்தார்கள். அதுவரை அவர்களும் 'என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற குதர்க்கமான கேள்வியால் தமிழிலக்கியத்தைச் சீண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோசப் ஜேம்ஸை வரவேற்பதற்காக ஆற்றூர் ரவிவர்மா திறந்துவைத்த கதவுதான் இன்று புதிய தலை முறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மலையாள இலக்கிய உலகில் பிரவேசிக்கவும் உதவுகிறது.
n
ஜோசப் ஜேம்ஸின் பிரச்சினைகள் சமகால வாழ்வில் கருத்துலகம் வகிக்கும் பங்கைப் பற்றிய நெருக்கடிகளைச் சார்ந்தவை. ஜே.ஜே.யே கருத்துக்களின் நடைமுறையாளனாகத்தான் அறிமுகமாகிறான். மனித வாழ்க்கையின் ஆதாரமான தேவைகளுக்கும் கருத்துக்களுக்குமான மோதலையே அவன் சந்திக்கிறான். வாழ்வு, சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களுடன் நெருங்கும் போது இந்தக் கருத்தாக்கங்களைப் பின்னொதுக்கிவிட்டு வாழ்வும் சமூகமும் பிறவும் அவற்றின் எதார்த்தச் சிக்கல்களுடன் பூதாகரமாக முன் நிற்கின்றன. அப்படியானால் மனித குலம் தோன்றிய நாள் முதல் எனது காலம் வரையில் சிந்தனைப் போக்குகள் பேணிக் கடைப்பிடித்துவந்த கருத்துக்களின் தேவையும் பங்கும் என்ன? சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடிகிறதா? தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா? அப்படி அளிக்கப்படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது? திணிப்பதா? அந்தத் திணிப்பு அமைப்பின் அதிகாரத்தை அமல்படுத்துவது ஆகாதா? 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு ஆற்ற வேண்டும். அல்லது இறந்து போய்விட வேண்டும். இரண்டும் எனக்குச் சாத்தியமில்லை. இதுதான் என் பிரச்சினை' என்கிறான் ஜே.ஜே.
இருப்பு, நிகழ்வு, செயல்பாடு ஆகிய மூன்று நிலைகளில் ஏற்படும் முரண் குறித்த பதற்றமே ஜே.ஜே.யை உலுக்குவது. உலுக்கலிலிருந்து விடுபட அவன் காணும் வழி இவற்றின் மீது போர்த்தப்படும் திரைகளைக் களைவது. முன்வைக்கப்படும் ஆயத்தத் தீர்வுகளை மறுப்பது. அடிப்படை சார்ந்த கேள்விகளை எழுப்புவது. இந்தக் கேள்விகள் நிரந்தரமானவை. பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. இந்தப் பொருளில்தான் ஜே.ஜே.வும் அவனை மையமாகக் கொண்ட நாவலும் நிகழ்காலத் தன்மை கொண்டவையாக நிலைபெறுகின்றன. அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய வாசகர்களை ஈர்க்கவும் புதிய வாசிப்புகளுக்குத் தூண்டவும் இந்த நாவலைத் தகுதியுள்ளதாக்குகிறது என்று கருதுகிறேன்.
திருவனந்தபுரம்  
 சுகுமாரன்
31 மே 2006 
குறிப்புகள்
ஜே.ஜே: சில குறிப்புகள் (ஆறாம் பதிப்பு / காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோயில் / 2004) பக்: 29
2 'The Strange Case of Billy Biswas' (Orient Paperbacks, New Delhi / 1971)
3 அருண் ஜோஷி: 1939 - 93. ஆங்கிலத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அதிகம் கவனிக்கப்படாமல் போன எழுத்து இவருடையது. சாகித்ய அக்காதெமி பரிசு பெற்றவர்.
4 ஜே.ஜே: சில குறிப்புகள் (முதல் பதிப்பு / க்ரியா / சென்னை - 1981) பக்: 7
5 ஆளுமைகள் மதிப்பீடுகள் - சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோவில் - டிசம்பர் 2004) பக்: 356
6 இவன் என்டெ ப்ரிய சி.ஜெ - ரோஸி தாமஸ் (டிசி புக்ஸ், கோட்டயம் / 2005)
7 அன்வேஷணங்கள் - சி.ஜெ. தாமஸ் - தொகுப்பாளர்: கே.என். ஷாஜி. (நியோகம் புக்ஸ், கொச்சி / மே 2004) பக்: 109.
(காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன கிளாசிக் வரிசையின் சிறப்புப் பதிப்பாக வெளிவர இருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலின் பின்னுரை.)
சித்திரங்கள்: பாஸ்கரன்

Friday, 26 June 2015

ஒரு புத்திசாலி முக்கோணம் '''''''''''''''''''''''''''''''''''''''''' -Vasko Popa (Translator: Brammarajan)









Gouthama Siddarthan liked this.




அ. பிரபாகரன் added 2 new photos.
8 hrs ·



ஒரு புத்திசாலி முக்கோணம்
''''''''''''''''''''''''''''''''''''''''''
-Vasko Popa
(Translator: Brammarajan)


ஏதோ ஒரு காலத்தில்
ஒரு முக்கோணம் இருந்தது
அதற்கு மூன்று பக்கங்கள் இருந்தன
நாலாவதைத் தனது ஒளிரும்
மையத்தில் மறைத்துக் கொண்டது.

பகலின்போது தனது மூன்று
முகடுகளிலும் ஏறிக்கொள்ளும்
தனது மையத்தை வியக்கும்
இரவின்போது
தனது மூன்று கோணங்களில்
ஒன்றில் ஓய்வெடுக்கும்.

விடியலில் தனது மூன்று பக்கங்களையும் கண்காணிக்கும்
மூன்று ஒளிரும் சக்கரங்களாய் மாற்றப்பட்டு
திரும்புதலே இல்லாத நீலநிறத்தில் மறைந்துவிடும்.

தனது நான்காவது பக்கத்தை வெளியில் எடுத்து
முத்தமிட்டு மூன்று முறை ஒடித்து
மீண்டும் அதன் பழைய இடத்தில் மறைத்துவிடும்.

மீண்டும் அதற்கு மூன்று பக்கங்கள் இருந்தன.
மீண்டும் அது பகலில் தனது மூன்று முகடுகளில் ஏறிக்கொள்ளும்.

தனது மையத்தை வியக்கும்
மீண்டும் இரவில் அது ஓய்வெடுக்கும்
தனது மூன்று கோணங்களில் ஒன்றில்.


Tuesday, 23 June 2015

-Paul Verlaine- (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)

நீ ஓய்வுறும் சிறுபொழுதில் நானொரு கணம் துயில்கிறேன்...........

இங்கிருக்கின்றன , கனிகள் , மலர்கள் ,கிளைகள், தழைகள் ,
என் நெஞ்சே, இங்கும் கூட, நீ மட்டுமே கட்டளையிடுகிறாய்.
ஓ, உன் வெண்கரங்களால்
இதை துண்டு துண்டாய் கிழித்தெறியாதே,
ஆனால், உன் நேர்த்தியான விழிகளால் ,
என் புனிதயாத்திரையை ஆசீவதித்தருள்.


இன்னமும் புலர்காலை பனியால்,
நான் முழுமையாய் போர்த்தப்பட்டிருக்கிறேன்.
தவழ்ந்து கடக்கும் தென்றல் என் முகமீது குளிர்கிறது,
என் அயர்ச்சி உன் தாளில் அருளடைந்து சாந்தமுறட்டும்,
என் அன்பின் கணங்கள அதை நவமுறச் செய்யும் .

ஓ என் சிரம் உன்னிளம் மார்பினில் சாய்ந்திருக்கட்டும் ,
இப்போதும் ,உன் இறுதி முத்தத்திலும் எதிரொலிக்கிறது,
இனிந்து வீசிய புயல் இவ்வாறே சமதானத்தை ஈந்திட ,
நீ ஓய்வுறும் சிறுபொழுதில் நானொரு கணம் துயில்கிறேன்.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





ஒரு பண்டைய சுடுமண் ஃபான்
படர் பச்சைப் புல்லின் இதயத்துள் நகைக்கிறது
முன்னறிவித்த அவநிகழ்வு வந்துறும்
இந்த அமைதியின் நீள் -கணங்களுக்கு பின்னதாய்


உன்னையும் என்னையும் எது வழிநடத்தியதோ
மகிழ்வற்ற தோற்றத்தினரின் புனிதயாத்திரைகள்
இத்தருணம்வரை ,கடந்தேகி கொண்டிருக்க
டாம்பரின்களின் இசையொலிகளுக்கு இன்னுமும் சுழ்லகிறது.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




அவள் செல்ல பூணையோடு விளையாடிக் கொண்டிருந்தாள்
காண்பதற்கு மிகவும் விந்தையாய் தோன்றியது
வெண்மை கரங்கள் மற்றும் அதிவெண் உள்ளங்கைகள்
மருளொளியில் அவர்களின் களியாட்டத்தில்


அவள் மறைவாய் ஒளிந்திருந்தாள் - குற்றமுள்ளவளாய்!
மிட்டன் கையுறையின் கீழ்புறமாயுள்ள கறும் நூலிழைகள்
உயிர்மாய்க்கும் மணிக்கல் விரல்நகங்கள்
கூர்மைகுவிந்து மற்றும் சவர மென்கத்தியாய் பளிச்சிடுகிறது.

மற்றொன்றும் அடக்கமாய் தோற்றமளிக்கிறது
அறுத்திழுக்கும் வளைவுற்ற நகம் இழுக்கிறது
ஆனால், பேய்த்தனமாய் , அவள் அனத்தையும் கண்டாள்.

அறையுள் அங்கு
தொனிவிஞ்சிய நகைப்பை
அவளோ வான்மேவ ஓலிக்கிறாள்
அங்கு நான்கு பாஸ்பரஸ் சுடர்- புள்ளிள் ஒளிமிளிர்ந்தது.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



ஓ , அவளது எழிலான விழிகளை
எப்படியெல்லாம் நான் நேசித்திருக்கிறேன்,
தாரகைகள் நிரம்பிய வானைக் காட்டிலும் ஜொலித்திருக்க
அவளது விழியில் துள்ளும் குறும்பை நேசித்திருக்கிறேன்.


நாம் துடிப்புற நடமிடுவோம்

காதலர்களை கலக்கத்தில் நிரப்ப
நிச்சயமாக தனக்கென வழிகொண்டிருக்கிறாள்
அது அவர்களை மாயத்துலாழ்த்தியது
இதை நான் சொல்லியாக வேண்டும் !

நாம் துடிப்புற நடமிடுவோம்

ஆனால், இன்னும் மேன்மையுற்றிருக்க ,அல்லது
என் மனதிலிருந்து மறைந்தகல துவங்கியதிலிருந்து.
அவள் விடுத்து சென்ற முத்தமதை காண்கிறேன்,

நாம் துடிப்புற நடமிடுவோம்

நான் நினைவை மீட்கிறேன் , ஓ, நான் நினைவை மீட்கிறேன்
களியாட்டத்தின் சில கணங்களில்
மற்றனைத்தினும் நான் அவைகளையே
அதீத பரிசென கொள்கிறேன்

நாம் துடிப்புற நடமிடுவோம்

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



வெள்ளியாய் நிலா
மரங்களில் பிரசாசித்திருக்கிறது
ஒவ்வொரு கிளையும் மென்தென்றலில்
வார்த்தைகளை கீழனுப்புகிறது
பச்சையத்தின் தொல் பிராத்தனையாய் ...............


அன்புக்குரியவளே

குளம் பிரதிபலிக்கிறது
ஆடியின் ஆழ்தல்
விளிம்புருக்கள்
எங்கு வில்லோக்கள் தாழ்கிறதோ
தளிர்க்காற்று விழிநீர் சொரிகிறது.......

கனவே ,இதுவே தருணம்

நேசிக்கும்,
விரிந்தாழ்ந்த அமைதி
இறுதியாய் தாழந்திறங்க
தாரகை ஒளிரும் வான்
வானவில்லின் மாடத்திலிருந்து.............

வானுலகு நேரிட்டுவிட்டது.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




ஆழ்ந்துபதியும் விசித்திரமான கனவை,
அவ்வப்போது நான் காண நேரிட்டிருக்கிறது
முன்னறியா யுவதி பற்றியதாய் ,
நான் யாரில் நேசம் கனிந்திருக்கிறேனோ.
என்னையவள் நேசிக்கிறாள்,
கணமுறும் ஓவ்வொர் சந்தர்ப்பத்திலும்,
அவள் முற்றிலும் வேறாயிருப்பதில்லை,
அவளுக்கு நன்கு புரிந்திருக்கிறது .


உணர்ந்துமிருக்கிறாள் என்னை நன்கறிந்திருக்கிறாள்
என் உள்ளம் தெளிந்திருக்க
அவளுக்கென மட்டுமே , அந்தோ விரித்துரைக்க ,
அவளுக்கென மட்டுமே,
வெளிரிய என் புருவத்தின் மீதுற்ற வியர்வை
அவளது விழிநீரைக் கொண்டே
தன்னையவள் கிளர்த்திட இயலும்.

அவள் சிவந்த குழலுடையவளா அல்லது ஒளிர்நிறமுடையவளா?
நான் அறிந்திலேன்
அவள் பெயர் ? உரத்தும் இனித்திருப்பதையும் நானறிவேன்
நாம் நேசித்திருந்த பலரும் இப்போது மாய்ந்திருக்கிறார்கள்

சிலைகளின் வெறித்தலை ஒத்திருகிறது அவளது பார்த்தல்,
அவளது குரலெழில் ,தொலைவாயும் மற்றும் சாந்தமாயும் ஆழ்ந்தமைய
அவளது குரலில்,
அன்பிழைந்து அன்மித்த அசைவின்மையில்
தொனி வளைவுற்றிருக்கிறது.

Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




வான் கூரையினும் நெடிதுயர்ந்திருக்கிறது:
அப்படியொரு நீலம், அப்படியொரு ஓசையின்மை,
கூரையைக் கடந்து நெடிதுயர்ந்து துளிர்த்த மரம்
தன் உள்ளங்கையை உலுக்கியசைக்கிறது


மணியினை , நீலம் கவிந்த வானில் காண்கிறேன்
சாந்தமாய் ஒலிக்கிறது
மரத்தின் மீதமர்ந்த பறவை
வருந்தி கிளர்ச்சியற்று இசைக்கிறது

என் இறைவனே , என் இறைவனே , உலகு அருகிருக்கிறது
வாழ்வு தன்னிச்சையாய் தொடர்கிறது
நான் கேட்கும் ,மோனத்தின் முணுமுணுப்பு
நகரத்திலிருந்து எழுகிறது

அவர்கள் எங்குற்றார்கள் , ஓ உன்னை நான்
இடையறா கண்ணீர் உகுத்தலில் பார்க்கவும்,
அவர்கள் எங்குற்றார்கள், ஓ எனக்கு பதிலளிக்க.,
உன் முன்னிளம் வருடங்கள் ?.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





உன்னுடன் இயைந்து நான் கேட்ட இசை
இசையைக் காட்டிலும் இன்னும் மிகை,
உன்னுடன் இயைந்து நான் முறித்த அப்பம்
அப்பத்தைக் காட்டிலும் இன்னும் மிகை
இக்கணப் பொழுதில் நீயியற்றிருக்கிறேன். யாவுமே பாழில்;
முன்னொரு கணத்தினில் திளைத்த அழகு
இப்போது உயிர்நீங்கியிருக்கிறது.


முற்பொழுதொன்றில்
இந்த மேசையை ,வெள்ளியை நின்கரங்கள் தீண்டியுள்ளன,
இக்குவளையை நின் விரல்கள் பற்றியிருந்ததை கண்ணுற்றிருக்கிறேன்,
இங்குள்ள பொருட்கள் உன்னை ஞாபகம் கொள்வதில்லை, அன்புக்குரியவளே-
ஆயினும் நின் தீண்டலின் தடயம்
அவைகளில் மறைந்தொழியாது,

அவைகளை நின் கரங்களாலும் நின்விழிகளாலும் ஆசிர்வதித்தருளேன்;
அவை என் நெஞ்சில் ஞாபகமடையும் என்றென்றைக்கும்
அவை உன்னை முன்பறிந்திருக்கும் ,
ஓ மீ-எழிலே, நிறை ஞானமே.

-Conrad Aiken-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




The Poet
is a madman
lost in adventure.

-Paul Verlaine-









Everything,
in the world,
exists to end up
in a book.
-Stephane Mallarme-




I've got you on my mind, I'm feeling kind of sad and low.
Got you on my mind, feeling kind of sad and low.
I'm wondering where you are, wondering why you had to go.


[Chorus:]
Tears begin to fall every time I hear your name.
Tears begin to fall every time I hear your name.
But since you went away, nothing seems to be the same.

No matter how I try,
My heart just don't see why
I can't forget you.
If ever it should be
You want to come back to me,
You know I'd let you.

[Repeat First Verse]

[Chorus]

[Repeat First Verse]

I'm wondering where you are, wondering why you had to go.
I'm wondering where you are, wondering why you had to go.





Bell bottom blues, you made me cry.........................


Bell bottom blues, you made me cry.
I don't want to lose this feeling.
And if I could choose a place to die
It would be in your arms.


Do you want to see me crawl across the floor to you?
Do you want to hear me beg you to take me back?
I'd gladly do it because
I don't want to fade away.
Give me one more day, please.
I don't want to fade away.
In your heart I want to stay.

It's all wrong, but it's all right.
The way that you treat me baby.
Once I was strong but I lost the fight.
You won't find a better loser.

[Chorus 2x]

Bell bottom blues, don't say goodbye.
I'm sure we're gonna meet again,
And if we do, don't you be surprised
If you find me with another lover.

[Chorus]

I don't want to fade away.
Give me one more day please.
I don't want to fade away.
In your heart I long to stay.

- Eric Clapton -



I've never missed a gig yet.
Music makes people happy,
and that's why I go on doing it -
I like to see everybody smile.


-Buddy Guy-






Everybody is a stranger,
but
that's the danger in going my own way.

- John Mayer-









Who I am as a guitarist
is defined
by my failure to become Jimi Hendrix.

-John Mayer-...See More


City Love (Live) by John Mayer (Crossroads Guitar Festival)
Yes I know, everyone says John Mayer is a bone-head, slime ball but this song is pretty damn good and isn't that what really counts?





I've got you on my mind, I'm feeling kind of sad and low.
Got you on my mind, feeling kind of sad and low.
I'm wondering where you are, wondering why you had to go.


[Chorus:]
Tears begin to fall every time I hear your name.
Tears begin to fall every time I hear your name.
But since you went away, nothing seems to be the same.

No matter how I try,
My heart just don't see why
I can't forget you.
If ever it should be
You want to come back to me,
You know I'd let you.

[Repeat First Verse]

[Chorus]

[Repeat First Verse]

I'm wondering where you are, wondering why you had to go.
I'm wondering where you are, wondering why you had to go.








கேளுங்கள்
உலர்நில பூர்வகுடிகளே
யாழ்மீட்டும் பாணன் விரல்களிலிருந்து
மழையுறுகிறது.


-W.S.Merwin -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம)



நாள் இன்னும் கனிந்திரா பொழுதில்
மரித்த செஸ்நட் இலைகளின்
நூற்றாண்டுகள் மீது நடை பதிக்கிறேன்,
துயர்படரா இடத்தில்
ஒரீயோல் பறவை எனினும்
மற்றுமொரு ஜீவதத்திலிருந்து என்னை கதகதப்பூட்டுகிறது
நான் விழித்திருக்கவும்


இருன்மை ஆழ்ந்திருக்கும் கணமதில் மழைசொரிந்திருக்கும்
பொன்னொளிர் காளான்கள்
என்னினல்லாத துயிலுதலுக்குள் உந்திசெல்ல
என் துயிலவிழும்
அவ்விதம் மலையேகி அவைகளை காணவும் வந்தேன்

அவை தோன்றியெழுமிடம் நானங்கு முன்னம் இருந்திருக்கிறேன்
அவைகளின் அமானுஷ்ய பீடித்தலை
இன்னொரு ஜீவிதத்தை ஞாபகமடைவதாய் இனம்காண

வேறெங்கு நான் நடைபதிக்கிறேன்
என்னை கண்ணுறவே இக்கணம்.

-W.S.Merwin -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)



அவர்கள் உன் ஆடையை அணியத் துவங்கியதும்
அவர்களது கனவுகள் உன்னுடையதைப் போலிருக்க நேர்கிறதா
யாரைப் போல் அவர்கள் தோன்றுகிறார்கள்

அவர்கள் உன் மொழியை புழங்கத் துவங்கியதும்
நீ கூறுவதையே அவர்களும் கூறுகிறார்களா
உன் வார்த்தைகளில் அவர்கள் யாராயிருக்கிறார்கள்


உன் பணத்தை அவர்கள் செலவிட துவங்கியதும்
உன்னுடைய தேவையை ஒத்திருக்கிறதா அவர்கள் தேவையும்
அன்றி பொருண்மையில் ஏதேனும் மாறுபடுகிறதா

அவர்கள் உன் கடவுளுக்கு உகந்தவராய் மாற்றப்பட்டதும்
அவர்கள் யாரிடம் பிராத்திக்கிறார்களென நீ அறிவாயா
பிராத்திருக்கிறவர்கள் யாரென நீ அறிவாயா
நீ அங்கிருக்க போவதில்லை.

-W.S.Merwin -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)


Monday, 22 June 2015


MONDAY, FEBRUARY 14, 2005

காதல் கவிதைகள்:8 மனுஷ்ய புத்திரன்

காதலர் தினத்தை ஒட்டி நான் திட்டமிட்டபடி விரிவான அளவில் கவிதைகளை உள்ளிடமுடியாதபடி பல்வேறு வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டன. ஆனாலும் சில கவிதைகளையேனும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பி.கே. சிவக்குமார் போன்ற நண்பர்கள் சில கவிதைகள் தொடர்பாக எழுதியுள்ள ஆழமான குறிப்புகள் மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. கவிதைகளையோ பிற இலக்கியப் பிரதிகளையோ முன்னிட்டு இத்தகைய பேச்சுக்களை உயிர்மை வலைப்பதிவில் உருவாக்க பேராவல் எழுகிறது. திரு நாராயணன் இப்பதிவை தொடர்ந்து தன்னுடைய வலைப்பதிவில் மேலும் சில கவிதைகளை இட்டிருந்தார்.

மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...


இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்


அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்

Posted by உயிர்மைat 9:36 AM4 comments:




காதல் கவிதைகள்:7 மாலதி மைத்ரி

காதல் கடிதம்

ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா

Posted by உயிர்மைat 12:56 AM3 comments:




SUNDAY, FEBRUARY 13, 2005

காதல் கவிதைகள்:6 ஞானக்கூத்தன்

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?

Posted by உயிர்மைat 11:11 PM5 comments:




காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.

Posted by உயிர்மைat 6:19 PM4 comments:




காதல் கவிதைகள்:4 நகுலன்

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?


நான்(2)


நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.

Posted by உயிர்மைat 5:33 PM1 comment:




காதல் கவிதைகள்-3 சுகுமாரன்

ஸ்தனதாயினி


இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.


உன் பெயர்

உன்பெயர்-

கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.

காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?

உன் பெயர்-

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

* தன் காதலிக்கு பரிசாக தன் காதை அறுத்துத் தந்த வான்கோ
** யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்


Posted by உயிர்மைat 9:29 AM3 comments:




காதல் கவிதைகள்-2 பூமா ஈஸ்வரமூர்த்தி

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.

(நன்றி:காதலைக் காதல் என்றும் சொல்லலாம்)

Posted by உயிர்மைat 4:27 AM3 comments:




காதல் கவிதைகள்-1 ஆத்மாநாம்

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.


உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)

Saturday, 20 June 2015



Saravanan
12 hrs · Edited ·



பிரதிபா நந்தகுமார் (கன்னடம்) கவிதைகள்
---------------------------------------------------------------
தமிழில்: கா.நந்தகுமார்

காப்பி அருந்துவதும் ஒரு கலை என்று சொன்னவன் யாரென சொல்லத் தேவையில்லை,
மாபெரும் தத்துவஞானியாக இருக்கிறானே, அவன்தான்
அவனைப் பொறுத்தவரையில், காப்பி அருந்துவது உடலுறவுபோன்றதாகும்


சூடாக இருக்கவேண்டும், ஆயினும் தொண்டையைச் சுட்டுவிடக்கூடாது
இனிப்பாய் இருக்கவேண்டும், ஆயினும் அளவு அதிகமாகிவிடக்கூடாது
அளவோடு இருக்கவேண்டும், ஆயினும் போதவில்லை என்றும் தோன்றிவிடக்கூடாது

காப்பிக் கோப்பையை உதட்டருகில் வைக்கும்போது அது நினைவிலெழுந்து மெய்சிலிர்த்தது

அவனைப் பொறுத்தவரையில் உடலுறவு என்பது ஒரு கலை

உடலுறவு என்பது காப்பி அருந்துவதைப் போல
சூடாக இருக்கவேண்டும், ஆயினும் தொண்டையைச் சுட்டுவிடக்கூடாது
இனிப்பாய் இருக்கவேண்டும், ஆயினும் அளவுக்கதிகமாக போய்விடக்கூடாது
அளவோடு இருக்கவேண்டும், ஆயினும் போதவில்லை என்றும் தோன்றிவிடக்கூடாது

அவன் உடலை என் உதடுகள் தீண்டும்போது அது நினைவிலெழுந்து மெய்சிலிர்த்தது

2-

மீண்டும் அதே பழைய காப்பி கெஃபே

இம்முறை இருபத்தி இரண்டு வயது நண்பன் விட்டுச் சென்ற துண்டுச்சீட்டைப் பற்றியபடி டபல் ஸ்ட்ராங் சொன்னேன்

இனி முடியாது

அதாவது, பொறுமையின் எல்லையைப்பற்றிச் சொல்லப்பட்டதா, அல்லது அவனுடைய கணினியின் டவுன்லோடின் திறமையைப்பற்றியதா
தெரியவில்லை.

நீலப்படங்கள்மீது ஏன் இந்தப் பைத்தியம் என்று கேட்டதற்கு வறண்ட குரலில் சொன்னான்

வேறு யார் இருக்கிறார்கள் துணைக்கு?

முதல்முறை அவன் அழுதுகொண்டே அணைத்த கணத்தில் ஆறுதலடையும் பொருட்டு உதட்டோடு உதடுசேர்க்க நெருங்கிய சமயத்தில் விலகியது நினைவிலெழுந்தது.

அன்று முத்தமிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?





ஆதிக்க சாதி - ஆதிக்க சமூகம் - ஆதிக்க பண்பாடு ,புதிர்க் கதை போடுகிறாள் பொம்மக்கா..., கதாநாயகனும் கதாநாயகியும் முதன்முதலில் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி--- --- கௌதம சித்தார்த்தன்






Gouthama Siddarthan
June 16 at 7:15pm · Edited ·



ஆதிக்க சாதி - ஆதிக்க சமூகம் - ஆதிக்க பண்பாடு
-----------------------------------------------------------------------------
சமீபத்தில், ஊரில் என் அத்தை மகளைச் சந்தித்தேன்..

அவளைப் பற்றிய அறிமுகத்தை பாரதிராஜாவின் தமிழ் சினிமாவில் ஒரு காட்சியாகவே வைக்கலாம்..

இது எப்படி இருக்கு? என்ற பரட்டைத் தலையோடு என் உதடுகளுக்கு மேல் மெல்லிய பூனை ரோமம் அரும்பிக் கொண்டிருந்த 16 வயதினிலே. எங்களூரில் மாரியம்மன் திருவிழா போட்டிருந்தார்கள். திருவிழா முடிந்ததும் அடுத்த நாள் கம்பம் பிடுங்கிய பிறகு மஞ்ச நீர் ஆடும் விழாதான் என் போன்ற சின்னப் பையன்களுக்கு மிக மிக முக்கியமான விழா. வயசுப் பையன்கள் தங்களுக்குப் பிடித்த மாமன் பெண்களின் மீதும் அத்தை பெண்களின் மீதும் மஞ்ச நீர் ஊற்றுவார்கள். வயசுக் குமரிகள் மாமன்மகன் அத்தைமகன்களின் மீது மஞ்ச நீர் ஊற்றுவார்கள். இருசாராரும் முறையாள்களின் மீதுதான் ஊற்ற வேண்டும். வேறு உறவுமுறைக்காரர்கள் மீது ஊற்ற மாட்டார்கள். தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் காதலுக்கான சமிக்ஞையாகவும் இந்த ஐதீகம் அமையும். ஒரே ஓட்டமும் துரத்தலுமாக ஊரேகொண்டாட்டமாகஇருக்கும் இந்தவிழாவை, இருசாராரும் மிகவும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள். திருவிழாக் கொண்டாட்டங்களை விடவும் இந்த மஞ்ச நீர் கொண்டாட்டத்திற்காகவே வருடம் முழுக்கக் காத்திருப்பார்கள் இளவட்டங்கள்.

அப்படியான பிரசித்தி பெற்ற மஞ்ச நீர் விழாவும் வந்து சேர்ந்தது. நான் ஏராளமான கனவுகளைச் சுமந்துகொண்டு எனக்கான நீண்ட பட்டியலுடன் காத்திருந்தேன். சாமி கம்பம் பிடுங்கப்பட்டு அதன்பிறகு அருள் வந்து ஊர் முழுவதும் சுற்றி வர சாமி புறப்பட்டு விடும்.. கொட்டுமுழக்குடன் சாமி புறப்பட்டு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நின்று அவர்களுக்கு அருள் பாலிக்கும். சாமி அருள் வந்து புறப்பட்டு விட்டால் போதும், அதன்பிறகு மஞ்ச நீர் ஆட்டம் தொடங்கிவிடும். சாமி ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு மீண்டும் சாமி கோவில் பிரகாரத்திற்குத் திரும்பும் வரை மஞ்ச நீர் ஆட்டம் அமர்க்களமாக நடக்கும். சாமி நிலையை அடைந்தவுடன் மஞ்ச நீர் ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அதன் பிறகு யாரும் யார் மீதும் மஞ்ச நீர் அடிக்கக் கூடாது.

மஞ்ச நீர் என்பது, மஞ்சள் துண்டுகளை மாவுபோல் சாந்தாக அரைத்து அந்த மாவை வெள்ளைத் துணியில் முடிந்து வைத்துக்கொண்டு, சொம்பில் நல்ல தண்ணீரை மொண்டு அதில் வெள்ளைத்துணியில் முடிந்து வைத்துள்ள மஞ்சள் மாவுப் பொட்டலத்தைப் போட்டு முக்கினால் போதும்.. மஞ்சள் தண்ணீர் தயார். அவைகளை உடல்மீது அடிக்கும்போது குளுமையாகவும் உடலின் நிறம் மஞ்சள் தன்மையுடன் பளபளப்பாகவும் இருக்கும்.

நானும் என் சேக்காளிகளும் கையில் சொம்புகளையும் வெள்ளைத் துணியில் முடிந்து வைத்திருந்த மஞ்சச் சாந்தையும் வைத்துக் கொண்டு சாமி ஊர்வலம் புறப்படுவதற்காகக் காத்திருந்தோம். கொட்டுமுழக்குகள் கொட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது பறையடிக்கும் ஒரு பெரியவர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அவர் குரலை செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. அவர்தான் பிரதான பறை கொட்டுபவர். அவர் போய்ப் பறையை எடுத்தால்தான் சாமி ஊர்வலம் புறப்படும். நான் அவசரமாக என் கையில் வைத்திருந்த சொம்பை டக்கென்று அவரது கையில் கொடுத்து விட்டேன். அவர் வெலவெலத்துப் போய்விட்டார். சொம்பை வாங்கியதும் கீழே நழுவ விட்டுவிட்டார். அது பலத்த ஓசையுடன் கீழே விழுந்ததும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

அடுத்த கணம் எல்லாமே தலை கீழாக மாறியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவரை நான் தொட்டு விட்டேனாம். உடனே போய் ஊர்ப் பூசாரியிடம் தீட்டுக் கழித்து வரவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். பூசாரி அருள் வந்து ஆடிக்கொண்டிருந்தார். என் ஒரு வருட மஞ்ச நீர்க் கனவுகள் கானல் நீராகப் போயின. சாமி ஊர்வலம் புறப்பட்டது. மஞ்சநீர் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பமானது. யாரும் என்மீது தண்ணீர் ஊற்றவில்லை. என்னை மஞ்ச நீர் விழாவில் அனுமதிக்கவில்லை. அந்தக்கணத்தில் முடிவு செய்தேன், இந்த சாதித் தீண்டாமையின் வேர்களை - ஆணி வேர், சல்லி வேர், என அனைத்து விழுதுகளையும் கெள்ளிக் கெள்ளி எடுக்க வேண்டுமென்று உடலெங்கும் பற்றிக் கொண்டது பெருந்தீ ..

நான் அப்போது ரொம்பச் சின்னப்பையன். யாரையும் எதிர்த்து எதுவும் பேச முடியாது.

ஒருவழியாய் சாமி நிலையை வந்தடைந்தது. மஞ்ச நீர் ஆட்டம் முடிவுற்றது. பூசாரி என்னை அழைத்து தீட்டு நிவர்த்திச் சடங்கு செய்து அனுப்பினார். காலிச் சொம்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.. துயரத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன். அம்மா, எங்கே காணாமப் போயிட்டே? என்று விசாரித்தாள். நான் எதுவும் பேசாமல் தாழ்வாரத்தில் வந்தமர்ந்தேன். சரேலென என்மேல் அடித்தது மஞ்சத் தண்ணி. திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் என் அத்தை மகள் நின்றிருந்தாள்!

அவள் அடித்த அந்த மஞ்ச நீர் தீண்டாமையின் மீது அடிக்கப்பட்ட கொதி நிலை வெந்நீர். சமூகக் கட்டுப்பாடுகளின் மீதும் சடங்குகளின் மீதும் காறி உமிழ்ந்த எச்சில். 2000 வருட ஆதிக்க சாதிகளின் மீது வீசப்பட்ட அக்னி திராவகம்...

நான் மருள் வந்தவன் போல ஆட ஆரம்பித்தேன்.

அக்னி குஞ்சொன்று கண்டேன்.. தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்...









Gouthama Siddarthan
22 hrs ·



கதாநாயகனும் கதாநாயகியும் முதன்முதலில் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி---
----------------------------------------------------------------
எப்படிச் சொல்வது முதல் காதலை?

வேட்டைக்காரன் கோயிலில் அதிகாலையிலேயே முழங்கிய கொம்புகளின் முழக்கம் சிலம்பனைக் குதியாட்டம் போடவைத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் “வேட்டைவலம்’ நடக்கும். செலம்பனார் கோயில், மூங்கில்பட்டி, கருமந்துறை, மானூத்து, மயிலம்பாடியென சுற்று வட்டாரங் களிலிருந்து மக்கள் வேட்டைக்காரன்கோயிலை நோக்கித்திரளுவார்கள். தாரைதப்பட்டைகளின் ஓசை இளவட்டங்களின் உடலெங்கும் சூட்டைக்கிளப்பும்.
வேட்டைக்காரன் கோயிலிலிருந்து மேற்கால்பக்கமாக அடர்ந்து விரிந்து கிடக்கும் காட்டுப்பகுதியில் வேட்டை ஒருவாரம் நடக்கும். இந்த வேட்டையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். பெண்கள் வரக்கூடாது. அதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அனுமதியில்லை. அவர்கள் தாரைதப்பட்டை முழக்கிக்கொண்டு வேட்டைக்கு முன்னால் செல்லலாமே தவிற வேட்டையில் பங்குபெறக்கூடாது. அந்த வரலாற்றைத்தான் மாற்றப்போகிறாள் மலாலா.

மலாலா. கூடைமுறம் பின்னும் செம்பானின் மகள். அவருக்கு ஒரே பெண்ணாதலால் அப்பாவோடு மூங்கில் காட்டுக்குப்போவதும், அவைகளை சூரிக்கத்தியில் செலார்செலாராக நார்பிரித்து, நுட்பமாய்க்கூடை, முறம், தக்கைகளாக மாற்றும்போது அவளது கைகளின் வீச்சு ஒரு நுட்பமான கலைத்திறம் கொண்டவளாய்க் காட்டும். அதேசமயம், மூங்கில் மரங்களில் மரம்மரமாய்த் தாவுவதும், அவைகளின் வளைச்சலில் கரணமடித்து நிலத்தில் குதித்து நிற்பதுமான கால் அடவுகளில் சீற்றம் மிக்க வனச்சிறுத்தையாக உருமாற்றும்.

அப்படியான ஒருநாளில் சோங்காய் அடர்ந்திருந்த புதரிலிருந்து ஓடிய ஒருமானை மரம்மரமாய்த் தாவித்துரத்தி வீழ்த்தியபோது ஏற்பட்ட வெற்றிக்களிப்பு தீருவதற்கு முன்பே அங்கு வந்து சேர்ந்தார் நாட்டாண்மையார். “தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த அவள் வேட்டையாடியது தவறு’ என்று திட்டியவாறே மானைத் தூக்கிக்கொண்டு போனார். அந்தக் கணத்தில் அவளுக்குள் பெருந்தீ சூழ்ந்து கொண்டது. எப்படியாவது அந்த வேட்டையில் தானும் பங்கு பெற்றால்தான் அந்தத் தீ அடங்கும்.

இந்த வேட்டைவலத்துக்காக இளவட்டங்கள் தங்களது வீரதீரப்பிரதாபங்களைக் காட்ட வருடம் முச்சூடும் காத்திருந்ததுபோல அவளும் காத்திருந்தாள். வளைபந்து மட்டையைப்போன்ற முனை திரண்டு வளைந்துள்ள தங்களது வேட்டைத்தடிக்கு வாரம் ஒருமுறை வெண்ணெய் போட்டுத்தடவி அதன்முனைக்கு இரும்புப்பூண் போட்டு அலங்கரித்து வைத்திருப்பது போல, அவளும் ஒரு வேட்டைத்தடியைப் பேணி வைத்திருந்தாள்.

வேட்டையில் அதிகமாக முயல்களும் நரிகளும்தான் கிடைக்கும். அவைகளை வேட்டையாடுவது பெரிய வீரனுக்கு அழகல்ல. மான்களையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடி வருபவன்தான் பெரிய வீரனாக மதிக்கப்படுவான். எல்லா ஊர்மக்களும் அதைப்பற்றியே பெருமை பேசுவார்கள். அதுவும் கோரைப்பற்களோடு கூடிய காட்டுப்பன்றியை வேட்டையாடுபவனைப் பெண்கள் தங்களது நெஞ்சுக்கூட்டுக்குள் ரகசியமாகப் பொத்தி வைத்துக் கொள்வார்கள்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுத்தைப்புலியை அடித்துத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த மல்லய்யாவை அவரது மீசை நரைத்த பிறகும் பெண்கள் ஒருவித மயக்கத்தோடுதான் நினைவில் வைத்திருந்தார்கள்.

வலைகட்டியோ, கண்ணிவைத்தோ, மருந்து வைத்தோ வேட்டையாடக்கூடாது. வேட்டையைத் துரத்தித்தான் வீழ்த்த வேண்டும். அதேபோல, வேட்டைக்காரர்கள் எந்தத் தோட்டத்திலும் புகுந்து பழம் பச்சை என்று பறித்துச் சாப்பிடலாம். கேள்வி கேட்கக் கூடாது. அந்திசாயும்போது கொம்புகள் ஊதப்பட்டால் அப்போழுதே வேட்டையை நிறுத்திவிட்டு கோயில் மைதானத்துக்கு வந்துவிட வேண்டும். தாங்கள் கொண்டு வந்த வேட்டைகளை மைதானத்தில் விரித்து, ஒருபங்கு வேட்டைக்காரன் சாமிக்கும், இன்னொரு பங்கு ஊர் நாட்டாண்மைக்காரர்களுக்கும், மற்றொரு பங்கு தாரைதப்பட்டைக்காரர்களுக்கும் மீதியைத் தனக்குமாகப் பிரித்துக் கொள்வார்கள்.

அதிகாலைச்சூரியனின் இதமான வெப்பம் மாறி சுள்ளென்று இறங்க ஆரம்பித்திருந்தது. சுற்று வட்டார ஊர்மக்கள் சாரிசாரியாகத் திரண்டிருந்தனர். பெண்கள் பால்கரகமும், தீர்த்தக்கரகமும் எடுத்துக்கொண்டு வர, ஆண்கள் வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு வேட்டைத்தடியைத் தோளில் சார்த்தியபடி குழுமியிருந்தனர்.

மூங்கில்பட்டி மக்களுடன் மக்களாக தனது வேட்டைத்தடியைச் சுழற்றியவாறு தூரத்தே தெரிந்த கானகத்தை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான் சிலம்பன்.

திடீரென தாரைதப்பட்டைகள் முழங்க, திரண்டிருந்த கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு கோயில் வாசலுக்குப் பல்லக்கில் வந்திறங்கினார் பூசாரி. அவரைக் கைலாகு கொடுத்து நாட்டாண்மைக்காரர் வரவேற்க, கோயிலுக்குள் நுழைந்தார். பூசைக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்க, பூசாரி நாட்டாண்மைக்காரரை அழைத்தார். அவர் பவ்வியமாய் முன்னால் வந்து நிற்க, தாரைகள் முழங்க, அவருக்குப் பரிவட்டம் கட்டினார் பூசாரி.

சுங்குவிட்டுக் கட்டியிருந்த பரிவட்டத்தின் முனையில் எட்டுப்பட்டிகளுக்கான நாட்டாண்மை என்னும் பட்டம் ரெக்கை விரித்தாடிக் கொண்டிருக்க, தனது நரைத்த மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கூடியிருந்த மக்களை தோரணையாகப் பார்த்தார். கூடியிருந்த இளவட்டங்களுக்கு அவரது பரிவட்டமும், தோரணையும் சற்றும் பிடிக்காமல் முகம் சுழித்தபடி வேட்டைத்தடியால் முதுகைச் சொரிந்து விட்டுக் கொண்டனர். அவர்கள் அங்கு கூடியிருப்பது, நாட்டாண்மையைக் கௌரவப்படுத்த அல்ல, வேட்டைக்கார சாமியின் அருளைப் பெற. ஆனால், ஒரு சில நல்ல அம்சங்களை முன்வைத்து ஒரு சில மோசமான அம்சங்களும் அரங்கேறி விடுகின்ற அவலம் எப்போது மாறப்போகிறதோ என்று பெருமூச்சு விடும் சத்தம் அந்த மைதானமெங்கும் ஒலிக்கிறது.

வேட்டைக்குப் போவதற்கு முன்பு வேட்டைக்காரனிடம் உத்தரவு வாங்க வேண்டும்.

பூசாரி கோயில் கர்ப்பக்கிருகத்திலிருந்து கண்களைக் கட்டிக்கொண்டு வெளியே வந்து நின்று ஓங்காரமிட்டார். அவருக்கு முன்னால் ஒரு காட்டுப்பன்றியை நிறுத்த, அதன் நெற்றியில் திலகமிட்டு அதை அவிழ்த்து ஓடவிடுகிறார். கூடியிருந்த சனங்கள் அதைக் காட்டை நோக்கி முடுக்கிவிட பெண்கள் குலவை கொட்டுகிறார்கள். அந்தக் குலவைச்சத்தம் அதை ஓடஓட விரட்டுகிறது.

அந்தக்குலவையின் சுழற்சி பூசாரியின் காதில் அலையலையாய் அடித்து அவருக்கு மருள் ஏற்றுகிறது. ஒரேயடியாய் உடம்பு நிலத்தில் படாமல் குதிக்க, அவரது கையில் கொடுத்த வில்லைப் பெற்று அம்பு பூட்டி வானத்தை நோக்கி ஏவினார். கூடியிருந்த மக்களும் தங்களது வேட்டைத்தடிகளை வானை நோக்கி உயர்த்தி கோஷமிடுகிறார்கள்.

சற்றைக்கெல்லாம் வானிலிருந்து கீழேவந்து விழுந்த அம்பின் முனையில் ரத்தம் கண்டிருந்தது. வேட்டைக்காரன் உதத்தரவு கொடுத்துவிட்டான். கூட்டம் ஹோவ் என்று கூச்சலிட்டுக்கொண்டே காட்டைநோக்கி ஓடியது.

பூசாரிவிடும் அம்பு, அவர்கள் காட்டுக்குள் துரத்திவிட்ட பன்றியை அடித்து வீழ்த்திவிட்டது என்பதுதான் அந்த அம்பில் பட்டிருக்கும் ரத்தத்தின் ஐதீகம். ஒருவருடமும் ரத்தகாவு எடுக்காமல் மேலேபோன அம்பு கீழேவந்து விழுந்ததில்லை. பலபல வருடங்களுக்கு முன் ஒருமுறை அப்படியான போது, வேட்டைக்கு யாரும் போகவில்லை. ஊர்க்குத்தமாகிவிட்டது என மனச்சஞ்சலத்துடன் வீடு திரும்பினர்.

அந்தவருடம், காட்டுவிலங்குகள் ஊருக்குள் புகுந்து ஒரேயடியாய் துவம்சம் செய்த நினைவுகளை இன்னும் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறார் பொன்னுத்தாத்தா.

காட்டின் உட்பகுதியில் சனங்கள் இறைந்து கொண்டு ஓடஓட மான்களும், மயில்களும், முயல்களும் தாவித்தாவியோடின. பல்வேறு பறவைகள் ரெக்கைகளைப் பதற்றத்துடன் அடித்துக் கொண்டு பறந்தன.

முயல் ஒன்று செங்கம்புதரிலிருந்து ஓட, அதைத்துரத்தி வேட்டைத்தடிகளை வீசியடிக்கின்றனர் இளைஞர்கள். அவர்களிலிருந்து தனியாகப் பிரிந்து வந்தான் சிலம்பன். அவனது இலக்கு முயலோ நரியோ அல்ல. பன்றி; கோரைப்பற்கள் நீண்ட காட்டுப்பன்றி.

“டேய் தம்பி... தலையிலே உருமால் கட்டிட்டுப் போகாதே... நெழல் அழுங்கும், தலைவேட்டியைக் கழட்டிடு...’’ என்று தலைவேட்டி கட்டியபடி முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு இளைஞனை எச்சரிக்கை செய்தான் சிலம்பன். ஆனால் அந்தத் தலைப்பாக்கட்டுப் பையன் அந்தச் சொல்லைக் கேட்பதாக இல்லை. உருமால் தலையை ஆட்டிக்கொண்டு முன்னால் மிக வேகமாகப் பாய்ந்தோடினான் எதையோ துரத்திக்கொண்டு.

சிலம்பன் ஓரிடத்தில் உட்கார்ந்து மணலில் பதிந்திருந்த தாரைகளை உன்னிப்பாகக் கவனித்தான். அது நிச்சயமாகப் பன்றியின் காலடிதான். அது காலைச் சட்டென ஊன்றி நடந்தது போலத் தாரை அழிந்து போயிருப்பதை வைத்துப் பார்த்தால், இந்த வழியாகத்தான் ஓடியிருக்கிறது என்று மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டே அந்தத் தாரைகளைப் பின் தொடர்ந்தான்.

திரும்பியபுறமெங்கும் சங்கமுள்ளும் குடைவேலா முள்ளும் குழுமியிருக்கும் சங்கம்புதர்கள் நிறைந்த பகுதிக்கு வந்து சேர்ந்தான். காட்டுப்பன்றி மலத்தின் வாசனை அந்த இடமெங்கும் சுற்றிச்சுழன்றடிக்கிறது. தனது வேட்டைத்தடியை இறுகப்பற்றிக் கொண்டு எச்சரிக்கையாக காலின் ஒவ்வொரு எட்டையும் லாவகமாகவும் அலுங்காமல் எடுத்து வைத்து நடந்தான்.
ஒவ்வொரு புதரிலிருந்தும் கீரிப்பிள்ளையும் நரிகளும் ஓடுகின்றன. அவைகளைக் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் நடக்க தூரத்திலிருந்த முட்செடிகள் சடசடவென்று நொறுங்கி விழும் சத்தம் கேட்க, பக்கத்திலிருந்த சங்கம் புதருக்குள் நுழைந்து கொண்டான்.

புழுதியைக் கிளப்பியவாறு முட்செடிகளின் கிளைகளை ஒடித்துக் கொண்டு ஒரு பெரிய காட்டுப்பன்றி வாயைத்திறந்து கொண்டு ஓட, அதனுடைய கடைவாய்ப்பல் கூமாச்சியாய் நின்று அசைய, வாயிலிருந்து நுரை தளும்பியவாறு போகும் அந்தக் காட்சியைக் கண்ட சிலம்பனுக்கு லேசாக உடல் நடுங்கியது. நா வறண்டு போயிற்று. அதேநேரத்தில் இன்னொரு பன்றி அதைத் துரத்திக் கொண்டு இணை சேரும் முயற்சியில் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு கணம் திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தவன், என்னதான் நடக்குமெனப் பார்க்கலாமே என்று அந்தக்காலடித் தடங்களைப் பின் பற்றினான்.

***
ஓடிஓடிக் களைத்துப்போன தலைவேட்டி இளைஞன், எதிரில் ஓடிக்கொண்டிருந்த நீரூற்றில் தாகத்தைத் தணித்து அப்படியே திரும்பி மல்லாந்து படுத்து இளைப்பாறினான். கண்களைக்கூசும் சூரிய ஒளியில் ஏதோ அழுங்கியதும் சடக்கென எழுந்து சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு எதிரிலிருந்த முட்புதர்களுக்குள் நுழைந்திருந்தது ஒரு பன்றி.

உடலெங்கும் பதட்டம் ஊடுருவ, நீருற்றின் பாறை மடுவுக்குள் மறைந்து கொண்டு அதை எப்படி வீழ்த்துவது என்று வாகு பார்த்தான். தனது வேட்டைத்தடியை வீசினால், ஒரே அடியில் அது இறந்து போய்விடவேண்டும். இல்லையெனில், அதை உசுப்பி விட்டது போலாகி விடும். கையில எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும் நம்மை அது திருப்பித்தாக்க ஆரம்பித்தால் நம்பாடு அதோகதியாகி விடும் என்றெல்லாம் யோசித்தான்.

அதனுடைய உடம்பில் எந்த இடத்தில் வேட்டைத்தடி பட்டாலும் அந்த அடி பன்றிக்குச் சோதிக்காது. அதனால் அதன் உயிர்க்காலை நோக்கிக்குறி வைத்தான் இளைஞன்.

பன்றி கொட்டைகளைக் காட்டிக்கொண்டு ஆயாசமாய்ப் படுத்திருக்க ஒரே வீச்சில் இளைஞனின் வேட்டைத்தடி அதை நோக்கிப் போகும் கண்ணிமைக்கணத்தில் அது புரண்டு படுக்க, வேட்டைத்தடி அதன் முதுகில் பட்டுத் தெறித்து வீழ, “வீச்’ என்று கத்திக் கொண்டு அவன் இருந்த திக்கில் ஓடிவர, இளைஞன் சரேலென்று குதித்து ஓடி எதிரில் வெட்டி வைத்திருந்த சங்கங்குழிக்குள் குதித்தான்.

அவனுக்கு மேலாக அந்தக்குழியைத் தாண்டிக் கொண்டு, அந்தப்புறம் குதித்தோடிய பன்றியின் கருத்த வயிறும் பெரிய கருங்கல்லைப் போன்ற கொட்டைகளும் அவனது முகத்திற்கு நேரே பறந்து மறைந்து போயின.

ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டான்.

கொஞ்சநேரம் கழித்து மெதுவாக எம்பிக் குழியை விட்டு மேலே எழுந்து வந்தவன், தனது கால்களில் அப்பியிருந்த சங்கமுட்களைப் பதட்டத்துடன் வழித்தெடுத்தான்.

கையில் இப்போது வேட்டைத்தடியும் இல்லை. தன்இடுப்பில் ஆடிக்கொண்டிருந்த சூரிக்கத்தியை எடுத்து கருவேலம்போத்தை வெட்டியெடுத்து அதைக் கூர்மையாகச் சீவினான். அது நன்றாகச் சேகுபாய்ந்து சொரசொரப்பாக உறுதியாக இருந்தது. அதைக் கையில் வைத்து அப்படியும் இப்படியுமாக வாகுபார்த்தான்.
இன்றைக்கு எப்படியும் அந்தப் பன்றியோடுதான் ஊர் திரும்ப வேண்டும்.

ஒரு முடிவோடு கருவேலம்பூட்டை உயர்த்தினான்.

***
சிலம்பன் தன்னிடமிருந்த வேட்டைத்தடியை மேலும் கீழும் பார்த்துவிட்டு இதன் மூலம் பன்றியை வீழ்த்துவதென்பது நடவாத காரியம் என்று எண்ணினான். சற்றுத்தொலைவில் இலந்தை மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் இடுப்பு அரணாக் கயிற்றில் சொருகியிருந்த அருவாள் கண்ணில் பட்டது. அவரிடம் சென்று அதை வாங்கி எதிரில் தாறுமாறாய்ப் பரந்துகிடந்த இலந்தைமரத்தின் உறுதியான ஒரு கிளையைத் தரித்து அதைக்கூர் படுத்தினான். நன்றாகச் சீவியபிறகு அருவாளை வாங்கியவரிடமே தந்து விட்டு மீண்டும் சங்கம்புதர்கள் இருந்த பக்கம் நடந்தான்.

***
கண்ணில்படும் தூரத்தில் இரு பன்றிகள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த இளைஞன் தனது கருவேலம்பூட்டை வாகாகப் பிடித்துக் கொண்டு நடந்தான். அருகில் நெருங்க நெருங்க பீதி உடலெங்கும் கவ்விக் கொண்டது.

“இந்த முறை குறி தவறினால் நம் சாவு நிச்சயம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன், அவையிரண்டும் விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சமரத்திற்குச் சற்றுத் தள்ளி சடைசடையாய்த் தொங்கிய ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்துத் தொத்தி ஏறினான்.

அந்தக்கணத்தில் ஒரு திட்டம் அவனுக்குள் உதயமாயிற்று.

***
சிலம்பன் எதிர்பார்த்ததைப் போலவே அந்தப் பன்றி தனது இணையோடு விளையாடிக் கொண்டிருந்தது. இலந்தைப் பூட்டை இறுகப் பற்றினான்.

இந்த இரண்டில் எதைத்தாக்குவது...?

அவைகள் ஊஞ்சமரத்தின் நிழலில் களிப்பாறிக் கொண்டிருக்கும் நிகழ்வை மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தவன், அதற்கு எதிரிலிருக்கும் ஆலமரத்தையும் அதில் தொங்கும் விழுதுகளையும் பார்த்தான்.

சட்டென பின்பக்கமாக வந்து ஓசைப்படாமல் ஊஞ்சமரத்தின் மீது ஏறிப் பன்றிகளுக்குப் பக்கவாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

இங்கிருந்து வீசினால் ஒரே வீச்சு. காலியாகிவிடும். ஆனால் இரண்டு பன்றிகளும் இருக்கும் இடத்தில் எப்டியும் ஒரு சலனம் அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

இவைகளைத் தனித்தனியாகப் பிரிக்கவேண்டும்.
எப்படி?

அவன் யோசிப்பதற்குள் எதிரிலிருந்த ஆலமரத்துத் திக்கிலிருந்து ஏதோ அரவம் கேட்டு ஒரு பன்றி அதை நோக்கிப்போக, இப்பொழுது சிலம்பனின் வீச்சுக்கு வாகாக இரண்டாவது பன்றி!

தனது கையிலிருந்த இலந்தைப் பூட்டை வீசுவதை விடவும் இங்கிருந்து நேராக அதன் மேலேயே குதித்துவிட்டால்... தப்பவே முடியாது...

இந்த நினைப்பு சிலம்பனுக்குள் வந்தவுடன் அவனுக்குள் உற்சாகம் பொங்கியது.

அடுத்த கணம், சரேலென்று அந்தப்பன்றியின் வயிற்றுப்பகுதியை குறிவைத்துக் குதித்தான் சிலம்பன்.

வேட்டைக்காரக் கடவுளே!

கண்ணிமைக்கும் நேரத்தில், அதேபோல மற்றொரு நிகழ்வும் நடந்தது.

ஆம்.

எதிரிலிருந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு நெட்டுக்குத்தலாக அந்தப் பன்றியின் மார்பில் குதித்துத் தனது கருவேலம் பூட்டைச் சொருகியிருந்தான் அந்த இளைஞன்.

“வீச் வீச்’ என்று கத்திக்கொண்டு ரத்தம் பீறிட்டடிக்க ஓய்ந்து போனது பன்றி.

அந்த மாயாஜால வேட்டையை நிகழ்த்திய இருவரும் பிரமித்துப் போனார்கள். சிலம்பனின் இலந்தைப்பூட்டு பன்றியின் இடது பின்னங்கால் சப்பையிலும், இளைஞனின் கருவேலம் பூட்டு அதன் வலது முன்னங்கால் சம்பையிலுமாகப் பதிந்து கிடந்தன.

அவர்களது உடம்புமுழுக்க ரத்தம் சீறிக்கிடந்தது.
கொஞ்சநேரம் ஒன்றும் புரியாமல் திக்பிரமையடித்தவர்களாய் நின்றிருந்தனர்.

கடைசியில் சிலம்பன் வாய் திறந்தான், “தம்பி, நாந்தா மொதல்லே கொன்னே... வேட்டை எனக்குத்தா...’’

“இல்லே தம்பி, என்னோடதுதா மொதல்லே அடிச்சது... அப்பறந்தா உன்னோடது...’’ என்றான் இளைஞன்.

சிலம்பனுக்குத் தன்னை தம்பி என்றழைத்ததும் கோபம் சிலீரென்று பொங்கியது.
“டேய், என்னடா ஒலர்ரே... நாந்தாண்டா கொன்னே... வேட்டை எனக்குத்தான் சொந்தம்... பேசாம போய்டு...’’ என்று சிம்பினான் சிலம்பன்.

“மரியாதையாப்பேசு... அப்பற நல்லாருக்காது...’’ என்று சுட்டுவிரலை ஆட்டி எச்சரித்தான் இளைஞன்.

சுட்டுவிரலை ஆட்டியதால் உடல் முழுக்கச் சூடேறியது சிலம்பனுக்கு.

“என்னடா செய்வே...’’ என்று கையை ஓங்கிக் கொண்டு அந்த இளைஞனின் மீது பாய்ந்து தள்ள, அவன் தடுமாறிக்கீழே விழ, தலையில் கட்டியிருந்த உருமால் அவிழ்ந்து போய் முடிந்திருந்த கூந்தல் அவிழ்ந்து தொங்கியது. அப்போதுதான் தெரிந்தது, இளைஞன் ஆண் வேடத்திலிருக்கும் மலாலா என்று.

“வேண்டாம்... எனக்கும் கை நீட்டத் தெரியும்...’’ என்று அலட்சியமாக கூந்தலை அள்ளிச் சொருகினாள்.

சிலம்பனுக்கு பொசுக்கென்றாகி விட்டது. “அட பொம்பளையா, பொம்பளைகல்லாம் வேட்டைக்கு வரக்கூடாது... செரிசெரி நீயே வெச்சுக்கோ...’’ என்று புறப்பட்டான்.

“ஏன் பொம்பளைன்னா அவ்வளவு எகத்தாளமா...? நான் தர்ரே நீயே வெச்சுக்கோ...’’ என்று இகழ்ச்சியாய்ச் சொன்னாள் மலாலா.

“ஓ, அப்பிடியா? செரி அப்ப நாம நம்ம பலத்தைப் பாத்துட வேண்டியதுதான்...’’ என்றவன், “யாரு ஜெயிக்கிறாங்களோ, அவுங்க இந்த வேட்டையை எடுத்துக்கலாம்...’’ என்று சிலம்பன் சொல்ல,

“நான் தயார்...’’ என்று தலையை அசைத்தாள் மலாலா.

இருவரும் பன்றியின் மீது குத்தி நின்றிருந்த தங்களது குச்சிகளைப்பிடுங்க, ரத்தம் அவர்கள் மீது சிலீரிட்டடித்தது.

அந்தக்கணத்தில் கொம்புகள் ஊதும் சத்தம் கானகமெங்கும் எதிரொலித்தது. வேட்டையைக் கைவிடுவதற்கான சங்க நாதம்!

ஒருகணம் தயங்கியவர்கள் சட்டென தங்களது குச்சிகளை உருவிக் கொண்டு திரும்பி நடந்தனர். ஏலெட்டு அடிகளுக்குப்பிறகு பின்னால் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நடக்க, கொம்புச்சத்தம் கானகமெங்கும் அலையடித்தது.

(இந்த வருட புத்தகக் காட்சிக்கு வெளிவர இருக்கும் எனது அடுத்த சிறுகதைத் தொகுப்பான
// வேகம் அருக்காணி வேகம் // நூலிலிருந்து )






$$$$$$$$$$$$$$$$









Gouthama Siddarthan
June 16 at 9:06pm ·



புதிர்க் கதை போடுகிறாள் பொம்மக்கா...

ஒரு பொழுது கடவுளுக்குச் சாகாவரம் கொண்ட நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதை ஒரு பூலோகவாசிக்குக் கொடுக்கலாமென முடிவு செய்து பூலோகம் வந்த கடவுள், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார். நாட்டையும் மக்களையும் எவ்விதக் குறையுமில்லாமல் காப்பாற்றி பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் ராசா. மதிநுட்பம் சொல்லிக் கொடுக்கும் மந்திரி. நாட்டு மக்களில் ஒருவரான ஒரு குடிமகன். மூவரையும் அழைத்து, ‘உங்களில் யார் பரிபூரணமாக் குளிச்சிட்டு ஆன்ம சுத்தியோடு முதலில் வந்து சேருகிறார்களோ, அவனுக்குத்தான் கனி’ என்று சொல்லி விட்டார்.


ராசா உடனே பாராசாரிக் குதிரையில் ஏறிக் கடிவாளத்தைச் சொடுக்க, காற்றாய்க் கடுகியது சவாரி. குடிமகன் வேட்டியை உருட்டிக் கட்டிக் கொண்டு ஏரிக்கரையை நோக்கி ஓட்டம் பிடிக்க, மந்திரியானவன் ஏதோ சிந்தனையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

நுரை தள்ளிக் கொண்டு வந்த குதிரை அரண்மனையை அடைய, ஒரே பாய்ச்சலில் அந்தப்புரம் போய் தாமரைத் தடாகத்தில் குதிக்க, பணிப்பெண்கள் அதிசீக்கிரமே சாந்தும் சவ்வாதும் பூசிக் கொளுவ, ராணி அகிற்புகை பிடிக்க, சடுதியில் மறுபடியும் குதிரை மீதேறிக் கடிவாளத்தைச் சொடுக்கிக் கண்ணிமைக்கும் பொழுதில் கடவுளிடம் போய்ச் சேர்ந்தான் ராசா.

குடிமகன் ஓட்டமும் நடையுமாக ஏரிக்கரை போய்ச் சேர்ந்தபோது, தண்ணீர் எடுக்க வந்த பெண் ஒருத்தியை முதலை இழுத்துப் போவதைப் பார்த்தான். கத்தியை எடுத்து ஒரே வீச்சில் முதலையை இரண்டு துண்டமாக்கி அவளைக் காப்பாற்ற அதற்குள் வெயில் உச்சிக்கு வந்து விட்டது. ஏரி முழுக்க ரத்த வெள்ளம் மிதங்கியது. ரத்தச் சகதி தெளிந்த பிறகு குளிக்கலாமென மரநிழலில் களைப்பில் உட்கார்ந்தவன், அப்படியே தூங்கிப்போய் எழுந்து பார்த்தால், இருட்டுக் கட்டியிருந்தது. அவசரமாக ஏரியில் முங்கி விட்டு எழுந்தால் மேலெங்கும் ரத்தவாடை அடித்தது. ஈரத்துணியோடு நடந்தால் காத்துக் கறுப்பு அடித்து விடும் என்று பயந்து, வழியில் உள்ள கோயில் மண்டபத்தில் படுத்திருந்து விட்டு, விடிகாலையில் எழுந்து, பொழுது ஏறுவதற்குள் கடவுளிடம் போய்ச் சேர்ந்தான்.

மந்திரி ஆற்றுக்குப் போகும் வழியில் பயிர்ப் பச்சையெல்லாம் வதங்கிக் கிடந்ததைப் பார்த்தான். வானம் பார்த்த பூமியில் குதிரைவாலியும், சாமையும், தினையும் சொங்கிப் போயிருந்தன. மனசுக்குள் வாப்பாடு போட்டுக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்து நின்று தலை துளும்பிக் கொண்டோடும் வெள்ளத்தை ஒரு பொழுது பார்த்தான். திரும்பி அரண்மனை போய் ஆள்களைக் கூட்டி வந்து, ஆற்றுத் தண்ணீரை வெள்ளாமை பூமிக்குத் திருப்பிவிட, கால்வாய் வெட்டச் சொல்லி வேலை நடத்த ஆரம்பித்தான். அவனது காக்காத் தலை நாரையாக மாறும் பொழுதுவரை வேலை நடந்தது. பல காலங்கள் நடந்து முடிந்த பிறகு, ஆசுவாசமாக ஆற்றில் இறங்கி முங்கினான். மேலெங்கும் அடிக்கும் மண்வாசம் தீராமல் உடல் தளர்ந்து போய்க் கடவுளிடம் சேர்ந்தான்.

ஆனால், அதென்ன மாயக் கூத்தோ... கடவுளிடம் மூவரும் ஒரே சமயத்தில்தான் போய்ச் சேர்ந்தார்கள்.

அப்படின்னா, கடவுள் இவர்களில் யாருக்கு அந்த நெல்லிக்கனியைக் கொடுக்கறது ஞாயம்?
விடுவியுங்க பாக்கலாம்.

(பொம்மக்கா சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

-Alexander Pushkin-. (தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)


க. மோகனரங்கன் added a new photo.
June 20 at 7:42pm ·





நான் உன்னை நேசித்திருக்கிறேன்,
அநேகமாக நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன்,
அநேகமாக தீச்சுடர் இன்னும் மாயவில்லை :
அது என் ஆன்மாவினுள் அமைதியாக கனல்கிறது,
இனியும் அதன்பொருட்டு நீ அவலமுறாதே
அமைதியாய் மற்றும் நம்பிக்கையற்று
நான் உன்னை நேசிக்கிறேன்,
சில தருணங்களில் பொறாமையுடனும்
ஒருசில சமயங்களில் கூச்சமடைந்தும் ,
இளகியும், வாய்மையாய், என்னைபோல்
உன்னை அகமுணர்ந்து நேசிக்கும்
இன்னொருவனை தேடியடைய
கடவுள் கொடையருளட்டும்.


-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





மீண்டும் என்னிடம் வருந்தியிளைத்த
உன் ஜியார்ஜியாவின் பாடல்களை இசைக்காதே
அவை இன்னுமொரு வாழ்வையும் , தொலைதூர கரையையும்
நினைவினுள் கொணர்ந்து சேர்க்கிறது.


உன் இரக்கமற்ற பாடல்கள்
ஸ்டெப்பி புல்வெளியை - இரவை
தொலைவில் தென்படும்
பகட்டிலா யுவதியின் எழிலியல்புகளை
நிலவொளியில் அன்மைப்படுத்துகிறது,

நான் உன்னை காண்கிறேன்
அவளது எழிலியல்புகள் மறைகிறது
நீ இசைக்கிறாய்.............. உடனே
நான் அவளை கற்பனையடைகிறேன்.

மீண்டும் என்னிடம் வருந்தியிளைத்த
உன் ஜியார்ஜியாவின் பாடல்களை இசைக்காதே
அவை இன்னுமொரு வாழ்வையும் , தொலைதூர கரையையும்
நினைவினுள் கொணர்ந்து சேர்க்கிறது

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





விந்தையின் நுண்கணத்தை நான் ஞாபகமுறுகிறேன்:
நீ என்முன்னே தோன்றி உயிர்த்தாய்
ஒரு தற்காலிக உருவெளி காட்சியாய்
மாசில் அழகின் ஆவியுருவாய் .


நம்பிக்கையற்ற துயரின் ஒடுக்கத்தில்
இரைச்சலுறும் நோக்கற்ற அவதியுறுதலில்
உன் கனிந்திளகும் குரலை நெடிதாய் செவியுறுகிறேன்,
என் கனவில் நின்முகம் கண்டேன்,

ஆனால் வருடங்கள் மாய்ந்தன,
சுழன்றுழலும் கடும் காற்றில் கனவுகள் சிதறி கிடக்கின்றன
உன் கனிந்திளகிய குரலை ,உன் இறைமைநிறை முகத்தை
மறதியில் கரைத்தேன்.

தனித்திருத்தலின் வன்நிழலில்
என் நாட்கள் அமைதியாய் வலிந்து நீள்கிறது,
நம்பிக்கையற்றும் மற்றும் அகவுயிர்ப்புற்றும் ,
கண்ணீரற்றும், அன்றி வாழ்வும், அன்றி நேசமும் .

என் ஆன்மாவினுள் விழித்தல் நடுக்குறுகிறது:
நீ மறுபடியும் தோன்றி உயிர்த்தாய்
ஒரு தற்காலிக உருவெளி காட்சியாய்
மாசில் அழகின் ஆவியுருவாய் .

என் நெஞ்சம் மெய்யுறு பரவசத்தில் துடிக்கிறது
புதையுண்டவை அனைத்தும் மறு-ஜனனமடைகிறது,
நம்பிக்கை மீண்டும் அரும்பி துளிர்க்கிறது, அகவுயிர்ப்பும்.
வாழ்வும் , கண்ணீரும் , மற்றும் நேசமும்.

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)




என் சிந்தையுள் நான் தொலைந்திருக்கிறேன்...................

இரைச்சல்மிகு தெருக்களில் திரிந்தலைந்து,
நெரிசலுற்றிருக்கும் தேவாலயத்துள் நுழைகிறேன்,
முகமறியா இளைஞர்களிடையே அமர்ந்திருக்கிறேன்,
என் சிந்தையுள் நான் தொலைந்திருக்கிறேன்.


நான் என்னிடமே கூறிக்கொள்கிறேன்: வருடங்கள் பறந்தோடும்,
எனினும் இன்னுமிங்கு பலருள்ளனர்,
நாமெல்லோரும் நித்திய நிலவறைகளின் கீழறங்குவோம்,
யாரோ ஒருவனின் நாழிகை ஏற்கனவே கரங்களிலுள்ளது,

தன்னந்தனி ஓக் மரத்தில் பார்வையூன்றிட,
நான் யோசிக்கிறேன், இந்த குலத்தலைவன்,
எவ்வாறென் தந்தையர்களது வயதை
கடந்து உயிர்த்திருந்தது போல்
மறதியுள் தொலைந்த
என் வயதையும் கடந்து உயிர்த்திருப்பான்.

நானொரு மழலையை கொஞ்சி பேணும் தருணம்
விடைபெற! நான் முன்கூட்டியே எண்ணுகிறேன்,
என் புலத்தை உன் விளைச்சலுக்கு அளிக்கிறேன்,
இதுவே தருணம் ;
நான் மக்கி மறையவும் நீ முகிழ்க்கவும்,

ஒவ்வொர் நாளுக்கும் நான் விடையளிக்கிறேன்,
அவைகளில்
என் சாதலின் ஆண்டுவிழா எதுவாயிருக்குமென
யூக்கிக்க முயல்கிறேன்.
எங்கு எவ்வாறு நான் மரித்த்லில் நிறைவேன்.?

சண்டையிட்டும் மற்றும் அலைகளில் பயணித்தும்,
அல்லது;
அருகிருக்கும் பள்ளத்தாக்கு
குளிர்ந்த என் துகள்களை பெறுமோ?

ஆயினும் இவையெல்லாம் ஒன்றாயிருக்க,
உணர்தலற்ற யாக்கையினில்,
நான் நேசிக்கும் புலங்களின் அன்மையில்
ஓய்வாய் அமைய விரும்புகிறேன்.

கல்லறையின் நுழைவாயிலில்
இளம் வாழ்வு ஆடிக்களிக்கட்டும் ,
வேறுபாட்டை துறந்த இயற்கையின் எழில்
ஒளிர்தலை நிறுத்திடாது.

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)









ஒரு நங்கை தாழியை கீழே நழுவவிடுகிறாள் ,
பாறையின் மீது அதை உடைத்தாள்,
நங்கை வருந்தி அமர்ந்திருக்கிறாள் ,
காலியான சில்லை பிடித்திருக்கிறாள்,
மாயவசமாய் நீர் வற்றாதிருந்தது,
நங்கை காலமற்று அமர்ந்திருக்கிறாள்.
வரம்பிலா கால- ஓடையின் மீது சோகரூபமாய்.


-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)




என் பெயரில் உனக்கென்ன அப்படியொரு சுகமுறும் ஆறுதல்?
ஒரு நீர்பாய்வின் சப்தமாய் அழியும்,
இனமறியா கரையொன்றில் உடையும் அலையாகும்,
அடர்வனத்தில் செவியறியும் இரவின் ஒசைகளை ஒத்திருக்கும்.


உனது ஆல்பத்தின் ஏடுகள் மீது
ஒரு மாய்ந்த குறியீட்டை விட்டுச்செல்லும் ,
அறியா மொழியில் செதுக்கப்பட்டிருக்கும்.
கல்லறை கவிதையின் துல்லியமற்ற படிவங்களை
விடுத்துச் செல்லும்,

உனக்கென்ன அப்படியொரு சுகமுறும் ஆறுதல்?
நெடுங்காலமாய் மறந்தபோன,
நவமான உளக்கிளர்ச்சியின் சூறையினூடே,,
உன் ஆன்மாவிற்கு அவை ஏதுமளிக்காது,
பரிசுத்தமான மற்றும் தளிரிளம் ஞாபகங்கள்..

ஆனால் துன்புற்றாழும் மெளன நாளொன்றில்,
உன் துயரிடரில் என் பெயரை பேசு, சரியாக சொல்:
என்னின் ஞாபகம் உள்ளதென்று, சரியாக சொல் ,
நான் குடியிருக்கும் நெஞ்சமொன்று இவ்வுலகில் உண்டென.

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)








Roselia Santos : About the picture of Lobo Antunes in this post, I bet this is the gate of the garage where he used to work for a long time. The garage belonged to a friend and he had a desk at a corner, with all the mess there is usually in garages around him. He looks like a serene, absent person, but by reading his interviews you can see there sometimes is a turmoil inside his head made of worries, anxieties, even depressive thoughts, I think. His life are his books, that's what he lives for, and he gets really obsessed about them. He has no social life, hardly a private life. Even with his family he confesses he sometimes feels strange, because he is not like his brothers and the other members of his family. I've read a lot about him, interviews mainly, and there are always that perplexed me as he is so paradoxical.


-Rosélia Santos-
(Alenquer Portugal)




Agitated on the inside by disgust
but with nothing showing
in their immobile features, absolutely still,
as unmoving as those of landscapes,
of photographs, 
of summer sunsets,
nothing showing in their ever-horizontal features,
decomposing silently in the Formica chairs.
-António Lobo Antunes-
****************
Thanks my Dear Friend, Rosélia Santos/ for sharing on this author i was just left with one novel of his read ( The Inquisitors Manual) .
But you shared a lot on this author's narrative and his literary legacy . Thanks a Lot.I owe this to you.




நீ மறந்துவிட்டாயென நான் நினைத்தேன் , நெஞ்சே.
வலிநுகர்ந்து சகிக்கும் உன் திறன்,
அந்த எளியகொடை வந்தடையுமென, நான் நினைத்தேன்,
இனியில்லை, இனியில்லை!
ஆழிரக்கமும் அகப்பரவசங்களும் கடந்தேகின,
நீ நம்பித்துய்த்த அரைக்கனவுகளும்.......
இப்போது எனக்குத் தெரியும்,
பேரெழில் உயிர்த்திருக்கும்வரை
அத்துனைக் காலமும்
கடும்துயருறும் என் பேராற்றலும் வாழும்.


-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)






two sides of the same 'nothing'........................

"You love me, Isabel , don't you?"

I hesitating to say


"I love you "

as I hesitated to say

" I hate you"

because

"I love" and "I hate "

are two sides of the same 'nothing',

- António Lobo Antunes-
(The Inquisitors Manual)




"You love me , Isabel , don't you?"

the hoopoes depluming the oak tree,
thousands of hoopoes in the white,
white tree depluming the oak tree,
the belfry of the church moving back and forth ,
back and forth , like a pendulum ,
the woman sitting on the ground and
warding us off with her open palms


" What is the meaning of this, what is the meaning of this?"

- António Lobo Antunes-
(The Inquisitors Manual)


 ·


Nothing interests me,
I feel uncomfortable being still
but would feel even more uncomfortable
if I moved.


I don't know whether speaking is painful or just boring.

I sit here, staring straight ahead,
with no desires,
no needs,
hollow.
I'm not even sad.

I feel only passivity and indifference.

- António Lobo Antunes-




I suppose
I have become a sort of living monument in Portugal.

But I come from a family
with roots all over the world,
so the idea of patriotism is not very strong in me.


My country is the country of
Chekhov,
Beethoven,
Velasquez -
writers I like,
painters and artists I admire.

- António Lobo Antunes-





I'm just giving you some spiel,
the ludicrous plot of a novel,
a story I invented to touch your heart—
one-third bullshit,
one-third booze,
and one-third genuine tenderness,
you know the kind of thing.


- António Lobo Antunes-



Agitated on the inside by disgust

but with nothing showing

in their immobile features, absolutely still,

as unmoving as those of landscapes,

of photographs,

of summer sunsets,

nothing showing in their ever-horizontal features,

decomposing silently in the Formica chairs.



-António Lobo Antunes-




****************

Thanks my Dear Friend, Rosélia Santos/ for sharing on this author i was just left with one novel of his read ( The Inquisitors Manual) .

But you shared a lot on this author's narrative and his literary legacy . Thanks a Lot.I owe this to you.




Rosélia Santos About the picture of Lobo Antunes in this post, I bet this is the gate of the garage where he used to work for a long time. The garage belonged to a friend and he had a desk at a corner, with all the mess there is usually in garages around him. He looks like a serene, absent person, but by reading his interviews you can see there sometimes is a turmoil inside his head made of worries, anxieties, even depressive thoughts, I think. His life are his books, that's what he lives for, and he gets really obsessed about them. He has no social life, hardly a private life. Even with his family he confesses he sometimes feels strange, because he is not like his brothers and the other members of his family. I've read a lot about him, interviews mainly, and there are always that perplexe me as he is so paradoxical.
Rosélia Santos



நெடு நாட்களுக்கு முன்பு
நானொரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்
பெண்ணின் தாய்நாடு
அவள் காதலடைந்த இடம்தானென்று...


-Antonio Lobo Antunes--
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)






Write a comment...


News Feed




Shanmugam Subramaniam
Yesterday at 9:27pm ·


Whenever anyone declares
having read a book of mine
I am disappointed by the error.
That's because my books
are not to be read in the sense
usually called reading:
the only way it seems to me
to approach the novels that I write
is to catch them
in the same manner that one catches an illness.


-Antonio Lobo Antunes--





It's funny -
my wife is more jealous of my books
than of other women
because
I'm always working and thinking about my books.


-Antonio Lobo Antunes-







முத்தமிட தன் இடதுகையை அளிக்கிறாள்..................

என் மனைவி இடதுகை பழக்கத்தினள்.
மூர்க்கமான மன- திடமுள்ளவளென அது சுட்டுகிறது,
முழுநிறை அப்பாலை உலகினள்,
சற்றே விசித்திரமானவள் , பேபி,’
சிலர் எப்போதும் வித்தியாசமாக இருக்க முயல்வார்கள்
பாவம், மற்றும் வெட்கம் .


ஆயினும் , அவள் தன் வாழ்நாளெல்லாம் பொகிமியனாய் இருந்திருக்கிறாள்...................கறுமையான காலுறைகளில்
கட்டளைகளை ஏற்க மறுப்பவளாய்,
நான் பொருமையாக அமர்ந்திருக்கிறேன்,
எது சரியென அவளிடம் எடுத்துரைக்க முயல்கிறேன்.
உன் கரங்களிலுள்ள பென்சிலை எடுத்துவிடு,
நீ பின்னோக்கி எழுதுகிறாய்
எந்த பயனுமின்றி , மற்றும்

அது அவளது பணியில் பிரதிபலிக்கிறது.
இடதுகை காபி ,
இடதுகை முட்டைகள்,
இரவில் உள்ளே வரும்போது................
முத்தமிட தன் இடதுகையை அளிக்கிறாள், அட!

இத்தருணம் அவளது வயிறு இருக்கைமீது தாழ்கிறது.
கருவுற்றிருக்கிறாள் என்கிறார்கள் .இல்லை
என்னால் தீர்மானமுறவில்லை.

-Imamu Amiri Baraka -
(Leroi Jones)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





அவர்கள் யாரை குறிக்கிறார்கள் என வியக்கிறேன்?

என்னுள்ளிருக்கும் எதை நான் நேசமென நினைத்தேனோ,
அதில் ஆயிரம் சந்தர்ப்பங்களை அச்சமாகவே காண்கிறேன்,
(மரத்தின் நிழல் நாற்காலியை சூழ்ந்து முறுக்குகிறது,
உறைந்த பட்சியின் தொலைதூர இசை குளிரில் சலசலக்கிறது,)


எங்கெல்லாம் சென்று என் தசையை கோருகிறேனோ,
அங்கெல்லாம் ஆன்மாவின் நுழைவாயில்களிருக்க
அதன் இன்புறு- ஆறுதலகள் அருவருப்பாயிருக்க
நானதை புரிந்துகொள்ள திணறுகிறேன்.

நானொரு மனிதனாக இருப்பினும்
தனது வழிமுறையின் ஜனனத்தில் யார் உரத்திருக்கிறான்,
என் ஆன்மாவின் ஒவ்வொரு மாற்றத்தையும்
பகிரங்கமாய் மறு-வரையறுக்கிறேன்,
இவைகளை நான் முற்கூறியதாயும்,அதனால்
லாபமடைந்தும், வேதாமகத்த்தினுடே,
அவர்களின் உச்சாடனங்கள் பாரமாயிருக்க ,

என் முகத்தில் தடமழிந்துள்ளது பரிச்சயம்.
ஒரு வினாவை எண்ணுகிறேன், ,
ஒரு விடை ,
நீ மரணமுறும்வரை
அமர்ந்து நிமிடங்களை கணக்கிடுவது எதுவாயினும்,

“ இது மரணித்த ’லி ராய்’ ? என அவர்கள் சொல்ல,
அவர்கள் யாரை குறிக்கிறார்கள் என வியக்கிறேன்?

-Imamu Amiri Baraka -
(Leroi Jones)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





மீண்டும் யாவுமே தொடர்வினையாகும்வரை....................

முதலில் நேரம் என்ன என்பதை
ஒருமணி நேரத்திற்கு மறந்துவிடு
இதை ஒழுங்காக தினமும் செய்,


அடுத்து;
இது வாரத்தின் எந்நாளென்பதை மற
இதை ஒழுங்காக ஒருவாரம் செய்
பிறகு நீ எந்நாட்டில் வசிக்கிறாயென்பதை மற
இதையும் இன்னொருவரோடு இணைந்து
ஒரு வாரம் செய்து பழகு
பிறகு ஒன்றிணைந்து
ஒரு வாரத்திற்கு
சில நாட்கள் விடுத்து செய்,

இதைத் தொடர்ந்து;
கூட்டல் பெருக்கல் எப்படி செய்வதென்பதையும் மற
அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது
ஒரு வார காலத்திற்கு பிறகு
உன்னால் இவைகளை மாற்றவியலும்
பின் இவையிரண்டுமே
எப்படி கண்க்கீடு செய்வதென்பதை
மறந்திட உதவும்

கணக்கிடுவது எப்படியென்பதை மற
உன் வயது தொடங்கி
பின்னோக்கி கணக்கிடுதலையும்
இரட்டைபடை எண்களில் துவங்கி
ரோமன் எண்களில் துவங்கி
ரோமன் எண்களின் பின்னங்கள் துவங்கி
பழைய நாட்காட்டியில் துவங்கி
பழமை எழுத்துக்களில் தொடர
எழுத்துக்களில் தொடர
மீண்டும் யாவுமே தொடர்வினையாகும்வரை.

W.S.Merwin-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





நெடும் தொலைவுகளைப் பற்றி யோசிக்கையில்
நாம் இறவாமையினர் என
நீ நினைவுறுகிறாய்

அவர்கள் நம்மிலிருந்து விடுத்து போவதாக
அனைவருமே நம்மிலிருந்து விடுத்து போவதாக,
நீ நினைக்கிறாய்,
யாரும் மரிப்பதுமில்லை, யாரும் மறக்கப்படுவதுமில்லை


உலகெங்கிலும் அணைகளிருக்கின்றன
அவை தன் முதுகு புறமாய் சாய்ந்து
கடலை பற்றி யோசித்த வண்ணமாயிருக்கிறது.

-W.S.Merwin-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
June 17 at 9:48pm · Edited ·


ஒவ்வொரு வருடத்தையும் அறிந்துணராது
நாளொன்றை நான் கடத்துகிறேன்
அந்தமுறும் தீ என்னை நோக்கி கையசைத்து போகிறது,
மெளனம் விடுத்துப் போகிறது
அயர்வில்லா பயணி
ஒளியற்ற தாரகையின் மின் -கதிராயிருக்க,


இனி; எப்போதும் விநோதமான உடையில்
என் வாழ்வை நான் கண்டறியப் போவதில்லை
பூமியால் பெருவியப்புற்று
தனியொரு யுவதியின் நேசமும்
ஆண்களின் வெட்கமின்மையும்
மழையுள் ஆழ்ந்த மூன்று நாட்களுக்குப்
பிந்தைய பொழுதினில் எழுதுகையில்
சிறுபுள் இசைக்க வீழ்தல் நிறுத்தமுற
எதற்கென அறியாது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

-W.S.Merwin-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)




ஆன்மாவின் மேதைமையன்றி, பித்தமென்பதென்ன..................

இருன்மையின் பொழுதொன்றில், விழிகள் நோக்கத் துவங்கின,
ஆழ்மையுறும் நிழலினில் என் நிழலை சந்திக்கிறேன்;
எதிரொலித்திருக்கும் வனத்தினில்
என் எதிரொலியை செவியுற்றேன்,-
இயற்கை-தெய்வம் தருவிடம் அழுதிருந்தது,
மலை விலங்குகளுக்கும் குகை சர்ப்பங்களுக்கும்
நாரைக்கும் மற்றும் இசை- பட்சிக்குமிடைய
நான் வாழ்வடைகிறேன்,.


ஆன்மாவின் மேதைமையன்றி பித்தமென்பதென்ன,
சூழ்நிலையுடனான வேற்றுமைகள் எழ?
நாள் தீயினுள் அமிழ்கிறது,
தூய அவசத்தின் மீ-தூய்மையை நானறிவேன்,
வியர்த்திருக்கும் சுவரில் என் நிழல் குத்தப்பட்டுள்ளது,
பாறைகளுக்கிடையான நிலத்திலிருப்பதென்ன குகையா,
அல்லது சுழன்றெழும் பாதையா?
விளிம்பொன்றே என்னிடமுள்ளது.

தொடர்புகளின் இடையறாத பொழிவில்,
பட்சிகள் பாய்ந்தோடும் இரவில்,
விளிம்புகளழிந்த கந்தை நிலா,
விரிந்தகன்ற காலைப்பொழுதின் வெளிச்சத்தில்
நள்ளிரவு மீள்- சம்பவிக்கிறது!
தான் யாரென்ன அறிய ஒருவன் நெடும் தொலைவுற்றான்,
சுயத்தின் மரித்தல் கண்ணீரற்ற இரவாய் நீட்சியுற,
இயற்கையின் பன்-வடிவங்கள் செய்ற்கை ஓளியில் ஜுவாலையாக கிளர்ந்தெழுகிறது,

இருள்; இருளே என் ஒளி, மற்றும் இருளடர் வேட்கை,
என் ஆன்மா, வெப்பத்தில் பித்தமுற்ற கோடை பூச்சியாகி,
சன்னலில் ரீங்கரிக்கிறது, எந்த நான் என் நானாகவுள்ளது?
ஒரு வீழ்ந்த மனிதனாய்,
எனது அச்சத்துள்ளிருந்து நான் மேலேறுகிறேன்,
மனம் அதுவாகவே உள் நுழைகிறது, மற்றும்
கடவுள் மனமாய்,
ஒன்றென்பது ஒன்றாகவுள்ளது,
கிழித்தெறியும் காற்றில் கட்டற்றிருக்கிறது.

-Theodore Roethke-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)