Sunday, 28 June 2015

-Ruben Dario - (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


Shanmugam Subramaniam
18 hrs · Edited ·


முதலில் நானொரு பவழ படுகையாயிருந்தேன்
பின்பு ஒரு அழகான இரத்தினம் ,
பின்பு பச்சையம் , தண்டில் சரியும் படர்கொடி;
பின்பு நானொரு ஆப்பிள்,
விளைச்சல் வெளியில் தழைக்கும் லில்லி,
நளிரிளம் நங்கை இணங்கும் தருண- இதழ்கள்,
புலர்காலையில் இசைத்திருக்கும் வானம்பாடி,
இப்போது நான்
யகோவாவின் ஒளியில் தங்கிய
பாம் மரம்,
ஒரு ஆன்மா , அல்லது
தளிர்க்காற்றுக்கு இசைக்கபடும் சங்கீதம் .


-Ruben Dario -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





இரவிலிழையும் மெளனம் ,வலிகனிந்த மெளனம்,
இரவுசார்ந்து ............என் ஆன்மா ஏனிப்படி நடுங்குகிறது?
என் குருதியின் தாழ் முனகலை செவியுற்றேன்.
என் கபாலத்தினுள் கடந்தோடும் ,
அமைதியான புயலை கூர்ந்து கவனிக்கிறேன்
துயிலின்மை! துயிலவியலாது , ஒருவேளை கனவுறலாம்.
கூறுபடும் ஆன்மிகத்தின்
தன்னுறும் பேச்சின் முழுமையாய்,
என் சிற்றூரும் -நானும்!
என் சோகத்தை கரைத்திடவும்
ஓர் இரவின் வைனில் ,
படிக இருன்மையின் திகைப்பாய் .................
பின் நான் வியப்பிலாழ்கிறேன் : எந்நேரம் இன்று விடியும் ?
ஒரு கதவு சற்றுமுன் அடைத்தது ..............
யாரோ ஒருவர் சாலையில் கடக்கிறார்..........
கடிகாரம் மூன்றென ஒலிக்கிறது........................
அவளாகத்தான் இருப்பாள்.


-Ruben Dario -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






அருகே கடவுள் கடந்திட , அருளுயிர்த்து
யாரோ ஒருவன் நடுங்குகிறான்,
கவிதையின் ஒற்றைவரி ஒளியாய் மொட்டவிழ்கிறது;
மூளையின் அடியாழத்தினுள் எது எஞ்சியிருக்கும்
பெண்ணின் முகம், வான்நீல கனவு!


-Ruben Dario -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)-







You are an Universe of Universes
and your soul
a source of songs.

-Rubén Darío-