Friday, 26 June 2015

ஒரு புத்திசாலி முக்கோணம் '''''''''''''''''''''''''''''''''''''''''' -Vasko Popa (Translator: Brammarajan)









Gouthama Siddarthan liked this.




அ. பிரபாகரன் added 2 new photos.
8 hrs ·



ஒரு புத்திசாலி முக்கோணம்
''''''''''''''''''''''''''''''''''''''''''
-Vasko Popa
(Translator: Brammarajan)


ஏதோ ஒரு காலத்தில்
ஒரு முக்கோணம் இருந்தது
அதற்கு மூன்று பக்கங்கள் இருந்தன
நாலாவதைத் தனது ஒளிரும்
மையத்தில் மறைத்துக் கொண்டது.

பகலின்போது தனது மூன்று
முகடுகளிலும் ஏறிக்கொள்ளும்
தனது மையத்தை வியக்கும்
இரவின்போது
தனது மூன்று கோணங்களில்
ஒன்றில் ஓய்வெடுக்கும்.

விடியலில் தனது மூன்று பக்கங்களையும் கண்காணிக்கும்
மூன்று ஒளிரும் சக்கரங்களாய் மாற்றப்பட்டு
திரும்புதலே இல்லாத நீலநிறத்தில் மறைந்துவிடும்.

தனது நான்காவது பக்கத்தை வெளியில் எடுத்து
முத்தமிட்டு மூன்று முறை ஒடித்து
மீண்டும் அதன் பழைய இடத்தில் மறைத்துவிடும்.

மீண்டும் அதற்கு மூன்று பக்கங்கள் இருந்தன.
மீண்டும் அது பகலில் தனது மூன்று முகடுகளில் ஏறிக்கொள்ளும்.

தனது மையத்தை வியக்கும்
மீண்டும் இரவில் அது ஓய்வெடுக்கும்
தனது மூன்று கோணங்களில் ஒன்றில்.