Saturday 13 June 2015

-Frank O'Hara--, - Charles Simic -- (தமிழாக்கம் : எஸ்.சண்முகம்), -Robert Creeley-



உரைநடையிலும் கூட ,நான் அசலான கவிஞன்தான்.............

நான் ஒரு ஒவியனல்ல, நான் ஒரு கவிஞன்,
ஏன்? நானொரு ஒவியனாயிருக்கவே நினைக்கிறேன்.
ஆனால்; நான் அதுவல்ல,
சரி, ஒரு உதராணத்திற்கு சொல்வெதினில்,
மைக் கோல்ட்பெர்க் ஓவியமொன்றை வரையத் துவங்கினான்.
நான் வருகிறேன்.
அவன் “உட்கார்ந்து கொஞ்சம் மது அருந்தேன்” என்கிறான்.
நான் அருந்துகிறேன்; நாம் அருந்துகிறோம் ,
நான் பார்க்கிறேன்.
”அதனுள்ளே சார்டைன்கள் இருக்கின்றன.”
”ஆமாம் அதற்கு அங்கு ஏதோ தேவைப்பட்டது,”
ஓ, நான் போகிறேன் நாட்கள் நகர்ந்தன
மறுபடியும் நான் வருகிறேன்.
ஓவியம் தீட்டல் தொடர்கிறது, நான் போகிறேன் ,
நாட்கள் நகர்கின்றன. நான் வருகிறேன்.
ஓவியம் நிறைவடைகிறது. ”சார்டைன்கள் எங்குள்ளன?”
விடுபட்டவையெல்லாம் வெறும் எழுத்துகள்,
அது மிகையானதென மைக் சொல்கிறான்.


ஆனால்,
நான் ஒருநாள் வண்ணங்களை சிந்திக்கிறேன்:
ஆரஞ்சு வண்ணம்,
ஆரஞ்சு குறித்து ஒருவரி எழுதுகிறேன்.
வெகுவிரைவில் பக்கமுழுமையும் வார்த்தைகளாயின,
வரிகளல்ல..
பிறகு மற்றுமொரு பக்கம்.
அங்கு இன்னும் அதிகமாயிருக்க வேண்டும்,
ஆரஞ்சாக இருக்கவில்லை, வார்த்தைகள்,
எத்துனை கொடூரமானது ஆரஞ்சும், வாழ்வும் .
நாடகள் கழிந்தன.
உரைநடையிலும் கூட, நான் அசலான கவிஞன்தான்.
என் கவிதை முடிக்கப்பட்டுவிட்டது
ஆயினும் ஆரஞ்சை நான் குறிக்கவில்லை.
மொத்தம் பன்னிரெண்டு கவிதைகள்,
நான் அவைகளை ஆரஞ்சுகள் என அழைக்கிறேன்.
ஒருநாள் ஒவியக் கூடத்தில்
நான் மைக்கின் ஓவியத்தை காண்கிறேன்,
சார்டைன்களென அழைக்கப்பட்டிருக்கிறது.

-Frank O'Hara--
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)


I am the least difficult of men. 


All I want
is boundless love.

- Frank O'Hara-











உனது இமைகளின் கீழ் உண்மை இருளடைந்திருக்கிறது,
அதைக்குறித்து நீ என்ன செய்யப் போகிறாய்?
பட்சிகள் மெளனத்தில் திளைக்கிறது;
கேட்பதற்குக் அங்கு யாருமில்லை.
நாள்முழுவதும் ஓரக்கண்ணால் சாமப்ல வானை வெறிப்பாய்,
மென்காற்று வீசயலைவுற நீ வைக்கோலாய் நடுங்குகிறாய்.


சாதுவான செம்மறி குட்டியே நீ உனது கம்பளியை வளர்க்கிறாய்,
அவர்கள் பெரிய கத்தரிகளுடன் உன்னை பின் தொடரும்வரை,
பிளந்த வாயை ஈக்கள் மொய்க்கின்றன,
பின், அவை இலை தழைகளிலும் பறந்தலைகின்றன,
வெறுமை கிளைகள் அவைகள் பின் வீணில் எட்டிபிடிக்க..

குளிர்காலம் அணுகிவர,
தோல்விகண்ட இராணுவத்தின் ,வீரம்நிறை போர்வீரனாய்,
நீ உன் களத்தில் தங்கியிருக்கிறாய்,
முதல் பனித்துகளை தவிர்க்கும் சிரம்,
உன் அருகிருப்பவன் கூச்சலிட அணுகி வரும்வரை
நீ வானிலையைக் காட்டிலும் பித்தாயிருக்கிறாய், சார்லி.

- Charles Simic --
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)






What
has happened
makes

the world
Live
on the edge,


looking.

-Robert Creeley-