Tuesday, 2 June 2015

-Vivienne Finch- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    இன்று காலை, உன் ஞாபகம்
    கண்ணாடியின்மேல் படிந்த சுவாசமாய் கரைகிறது
    குளிர்ந்த மெலிய கயலாய்
    உன் வாயின் இருன்மையான துவாரத்தினுள் கரைகிறது
    உறைபனியில் கரையும் வெம்மைபோல்
    இதயம் துடிப்பற்றுப் போக
    இயக்கமற்றிருத்தலில்
    பனிக்கட்டி
    இறுக்கத்தினுள் அதிர்ச்சியுறாது
    மிகையாக காணும் சுவர்களைப் போல்
    ஒரு நிரந்திர வளைவினுள் இடம் பெயர்கிறது
    சோகமுறும்,
    வெறுமையைச் சுற்றி
    இணைவில் மடக்கப்படும் கரங்கள்.
    வெம்மை சிறிதேனுமின்றி.
    ஞாபகம் பேச்சிலிருந்து
    தனியாக பிரிந்து வேறுபட்டிருக்க-
    நெடும் தொலைவாய்
    பனிவெளியிலிருந்து தனிமையடைய ,
    சுவர்களிலிருந்து கிளம்பும் எதிரொலியாய்,
    குளிர்மையிலிருந்து எதிர்த்து மீள,
    நீர்
    விரல்களின் மிது
    பனிக்கட்டியாக மாற்றமுறுகிறது
    இன்னுமொரு கூடுதலான பரிமாணத்தை கூட்ட
    தசைக்கு - இன்னும் ஓர் தடை
    தொடுதலின் உணர்விடையே
    உருகி இளகிய நீரல்ல
    அது ஆழ்பிளவு
    அந்தப் பனிப்பாறை
    இனி கரையப் போவதில்லை
    அது வார்த்தைகளின் நுனியை உறைய செய்கிறது,
    வளர்வின்மையுள்
    இந்த அசைவுறா காலைப் பொழுதின்
    கனமான பாய்ச்சல்
    அது
    இதனினும் ஆழ்- அமைதியுள் உறையாது,
    இதனினும் சோககவியும் புன்னகையால்
    துயரத்தைப் பிரதிபலிக்கவியலாது,
    இதைக்காட்டிலும் மிகையாய் கரையாது.
    -Vivienne Finch-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    கீழே நோக்கு
    அங்குள்ளது பனி.
    பனி எங்கு இறுதியுறுகிறதோ
    அங்கு கடல்,
    கடல் எங்கு உட்புகுகிறதோ 
    அங்கு கடல் முனையில் சாமபல் வண்ணம்,
    வேற்றுமையற்ற வான் போல்,
    விரலிலிருந்து விரலுக்கிடையே விழுங்குதல் நிகழ்கிறது,
    உயர்த்தபட்ட கரம்,
    பயணிகள் ,
    பனிக்கும் , கடலுக்கும்
    இடையேயான விளிம்பில்,
    நுணிதாய்,
    கபடமாய் மற்றும் வெளிப்படையாய்,
    அவர்களது தனிமைவாசம் தேர்வற்று
    ஒழுங்கமைவில் முடிவுறுகிறது,
    உரையாடலில்
    தீவிர நிலைகள் பண்பட்டிருக்க,
    சேகரத்திலுள்ள கனிகள் மீள்- அழைப்புறுகிறது -
    அவை
    குளிர்கால தீயால் கடிக்கப்பட்டவை .
    -Charles Tomlinson -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    News Feed

    நான் உன்வீட்டுத் தாவரம் ; நீ என்னை பேணி வளர்ப்பவன்
    நீ எனக்கு ஒத்தாசையாயிருப்பவன்,
    நான் உன் படர்தாவரக் கொடி.
    என்னை பறித் தெடு/ என்னை தொட்டியிலிடு/ 
    எனக்கு மக்கிய தாவர உரமிடு/எனக்கு உணவிடு/
    எனக்கு தண்ணீர் பாய்ச்சு/என்னுடன் உரையாடு/
    களையெடு/ என்னை வெதுவெதுப்பூட்டு/
    என்னை விதையிடு/பூக்களை அற்றிடசெய்/
    என்னை வனப்புற நறுக்கு/ என்னை ஒளியூட்டு/
    என்னை ஒவ்வொர் மணிநேரமும் நாடி அணுகு.
    -Susan Wallbank -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    சூரிய ஓளி வீட்டினுள்ளும்
    அறைகளிலுமாக இருக்க
    அமைதியிலாழ்ந்த நாவாய்கள்
    இளகும் நீர்ம ஆவியினுள் நங்கூரமிடப்பட்டுள்ளன,
    கோடையின் புதிர்வழி அவிழ்த்து கொள்கிறது
    என்னுடைய கடல்சார் வாழ்வு துவங்குகிறது
    கடல் அது மட்டுமே தங்குகிறது
    மற்றவை அனைத்தையுமே முயன்றபின்
    கடல்தான் அது
    விழியின் அரை மூடலினூடாக
    நான் ஆழியை உன்னிப்பாய் கவனிக்கிறேன்,
    அதன் மூதாதை கொடிமரபையும் ,
    அதில்
    பெரும்பான்மையான முகங்கள்
    என்னின் முகத்தை பிரதிபலிக்கின்றன ,
    முகம்வாடியும், நகைத்தும் ..........
    அலையின் கீழ் துள்ளிகுதித்திடு , அவர்கள் சொல்கிறார்கள்,
    கீழே துள்ளி குதியென ..........
    அலையின் உட்புறமாய் நான் போகிறேன், பிறகு
    குழந்தையுடன் பெரிதாய்
    இக்கடலில் முழ்குதல் என்பாதாய் ஏதுமில்லை.
    இந்த அலைகளில் சுவாசத் திணறலில்லை.
    நான் ஆழியுள் சென்றாழ்கிறேன், அங்கு இடையறாது களித்திருக்க
    என் குழந்தை திரும்புவதை போல்
    எனதின் நீராழி சக்கர விசை மேல்
    நிலவின் வலையுள் சிக்குண்டு ,
    உப்பு மற்றும் என் குருதியியால் உணவூட்டப்பட்டிருக்கிறேன்.
    -Penelope Shuttle -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    துயிலளிப்பவன் போய்விட்டான்
    மென்மையாய் ,மெதுவாக,
    முற்பருவ மழையினுள் கடந்து போய்விட்டான் ,
    என்னை விடுத்து நாளின் தனிமையுடன்,
    நான் கூடையிலுள்ள குப்பைகளை அகற்றி தூர்க்க
    ஆடைகளை சீராக்கி, அலமாறிகளை ஒழுங்குபடுத்தி,
    விருந்தினை புனைந்துருவாக்க:
    துயிலளிப்பவன் போய்விட்டான்
    என்னை வாழ்வின் முரட்டு வண்ணங்களிடம் கையளித்துவிட்டு,
    அதி-பிரகாசமான நாளின் பொக்கிஷங்கள்,
    (ஓ , ஆனால் என் கனவுகளில்
    நான் வலுவிழந்திருக்கிறேன்,
    அல்லது
    பறவையாய் உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.)
    -Penelope Shuttle -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Like · Comment · 
    என்னுடைய விடை இசையாய் மட்டுமே இருக்க
    அது எப்போதுமே மறுப்புக்குரியதாயிருக்கிறது,
    நீயதைக் கேள்விக்குட்படுத்துகிறாய்,
    என்னுடைய மெளனத்துள்.
    அது நீரின் நிலப்பரப்பாயிருக்க , முதிர் மரங்கள்
    சில திட சித்தமற்ற பறவைகள். வானிலையும் மாறுதலாயிருக்க.
    சில தருணங்களில் ஒளி பொன் வண்ணமுற,
    இலைகள் காலம் வழுவியுள்ளன.
    சில தருணங்களில் உறைபனி சிவந்திருக்க,
    நிலா அதன்மேல் தொங்குகிறது,
    உரிக்கப்பட்ட சீன கனியாய்.
    மன்னியுங்கள்
    நான் இன்னும் கூடுதலாய் வெளிப்படுத்தவில்லை .
    நான் முயற்சிக்கும் தருவாயில்,
    வார்த்தைகள் அருவருப்பான எலிகளாய் மாறி
    அனைத்தின் ஒழுங்கையும் குலைக்கிறது,
    என்னால் அமைதியாக இருக்க முடியாது,
    அமைதியாயும் மற்றும் நேசமுடனும் இருக்கவே
    அதிகம் விழைகிறேன்.
    உனக்கு அதுதான் தேவையெனில் .
    என் கூரிய சிந்தனைகள் கொலையாளிகளாய்
    உலர்ந்த கோதுமையுள் காத்திருக்கின்றன.
    அவைகள் பேசுகின்றன, இளிக்கின்றன,
    ஒருவேளை நீங்கள் அவைகளிடம் பேசவேண்டியிருக்கும்?
    -Elaine Feinstein -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    எதுவுமே நிகழவில்லை
    ஏதுமின்மை
    ஒரு துளிநீர்
    ஒசையின்றி சிதறுகிறது
    சிலந்தி இழை தளர்கிறது
    உபயோகிக்காத இவ்வெளிக்கெதிராக
    ஒரு பறவை
    யோசனையின்றி தன் குரலில் முயல்கிறது
    ஆனால் வேறெந்த பறவையும் செய்யவில்லை
    மிதியுற்ற தரையின் மீது
    காலடிச் சுவடுகள்
    ஒலியாயின்றி
    தாமே அதித- துடிப்பாய் உயிர்க்கிறது
    திரும்பி வரும் கணம்
    லேசாக மயக்குற்று
    காற்றினில்
    அதை உணர்ந்திருக்க,
    ஏதுமின்மை
    நிகழ்ந்தேறுகிறது.
    -Charles Tomlinson -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    • Ramakutty Ramasundaram

      Write a comment...
    ஒரு மதுக்கடையில் அமர்ந்திருந்தேன்
    மது கட்டற்று பாய்ந்து வழிகிறது
    எல்லோருமே கொண்டாட்டத்திலிருக்க
    அளவாய் உண்ணும் வயோதிக நான்
    பட்டினியாயிருக்கிறேன்,
    நான் ஒரு மூலையில்
    அமர்ந்திருக்க வேண்டியிருந்தது
    அனைத்தும் அமைதியாயிருக்க
    நீ காணும் சிக்கல்
    நான் உணவு கட்டுப்பாட்டிலிருக்கிறேன்
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    விஸ்கியும் அல்ல , ஜின்னும் அல்ல
    நான் இங்கு ஏன் வந்தேன்
    உழுபவன் உணவல்ல இது
    அந்த பேராசை கொண்ட கூட்டத்தைப்போல்
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    நான் அந்த மதுக்கூடத்திற்கு நடக்கட்டுமா
    அதிக தூரம் போகமாட்டேன்
    ஒரு பாக்கட் நொறுவைகள்
    ஒரேயொரு கோப்பை மது
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    பிறகு நான் யோசிக்கிறேன்
    இந்த சிகரெட்டை புகைத்தபின்
    எனக்கு ஒரு கூடையில்
    கொஞ்சம் சிக்கன் கொஞசம் சிப்ஸ் கிடைக்கும்
    நான் பட்டினியாயிருக்கிறேன்
    இல்லை
    என்னால் இனி அமைதியாக இருக்க இயலாது
    நான் உரக்க கூச்சலிடுவேன்
    உணவுக் கட்டுப்பாட்டை விட்டுத் தள்ளு
    நான் முழு பட்டினியாயிருக்கிறேன்.
    -Maureen Burge-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


    வேறு யாருமே அறிந்திருக்கவில்ல
    இதற்கிடையே நான் திரிய துவங்குகிறேன்
    பெர்ரிகளை சேகரிக்கிறேன்
    உன்மீதான என் காதலை அமைதியாக்க 
    உனது பதைகளின் மீது,
    ஓ பூமியே
    இங்குதான் ரோஜாக்களின் முட்களில்
    இனிமையான லிண்டன் மரங்கள் தனது நறுமணத்தை வார்கிறது
    பீச்கள் ஒருபுறமிருக்க , நண்பகலில் ,
    வெளிறிய ரை
    அடர்ந்து செழித்த மெலிய தண்டுகளோடு சலசலக்கிறது,
    அதன் செவிகள் பக்கமாக சாய்ந்தன
    இலையுதிர்காலத்தை போல்,
    ஆனால் மேலோங்கி உயரே வேய்ந்த ஓக்கின் கவின்மாடம்,
    நான் அகம்- நெகிழ்ந்து கவியுற
    வானத்தை வினவ , மணிகளின் ஓசை
    எனக்கு நன்கு தெரியும்
    தொலைவாய் ஒலிக்கும் பொன்மணிகள்
    பறவைகள் மறுவிழிப்புறும் நேரத்தில் .
    அவ்வாறாக நிகழ்கிறது.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)