Shanmugam Subramaniam
17 hrs · Edited ·
புவிதழ்களின் ஓரங்களில் ஓளியிருக்கிறது,
அதன் பின்புறம்,
ஓளியின் மறுபுறம் சில புவிதழ்கள் வசிக்கின்றன,.
கதிரொளி கம்பளத்தினுள் சரிவதைப் போல்
எவ்வுலகில் உள்ளோமென அறியாமல்.
சிறுபேழை நின்றிருக்குமிடத்தில்
மங்கலாய் தெளிவற்ற இலைகள்,
அறியா பிராணியிலிருந்து வளரும் ரோமங்கள்
செடிகளின் பச்சைய அகழ்வில் புதையுண்டிருக்க.
அல்லது, இந்த இல்லம் அமைந்திருக்கும் பூமி,
ஆழியிலிருந்து மட்டுமாய் விடுபட்டு
ஐந்து அன்றி ஆறாயிரம் ஆண்டுகள் கட்டற்றிருக்கிறது.
-Robert Bly-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
உரையாடல் நம்மை அன்மையடைய செய்கிறது!
உடலின் நீரலைவினை திறக்கிறது,
சூரியனினுக்கு அருகாமையில் கயலை கொணர்கிறது,
கடலின் முதுகெலும்பை விறைப்பாக்கிறது.
ஒரு முகத்தினில் மணிக்கணக்காக அலைந்திருக்கிறேன்,
இருன்மையான தணலினூடாக கடந்திருக்கிறேன்,
நானொரு உடலாய் நேரிட்டு எழுகிறேன்,
இன்னும் பிறந்திருக்கவில்லை,
உடலை சுற்றியிருக்கும் ஒளியாய் இருத்தலுறுகிறேன்,
அதனுடாக
சறுக்கும் நிலாவாய் உடல் நகர்ந்து பெயர்கிறது.
- Robert Bly-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
20 hrs · Edited ·
நானொரு சிறுவனாய் இருந்தபோது
பள்ளி முற்றத்தின் மூலையில்
தன்னந்தனியனாய் என்னுடனே விளையாடினேன்.
நான் விளையாட்டுகளையும் ,
பொம்மைகளையும் வெறுத்தேன்,
பிராணிகள் என்னிடம்
நட்பு பாராட்டவில்லை,
பறவைகளும் பறந்தோடின.
யாராவது என்னை தேடினால்
ஒரு மரத்தின் பின் ஓளிந்து கொண்டு
நானொரு அனாதையென உரக்க கரைவேன்..
இதோ இங்கிருக்கிறேன்,
பெருவனப்பின் மையமாய்!
இக்கவிதைகளை புனைகிறேன்!
கற்பனையுறுங்கள்.
-Frank O'Hara-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Like · Comment ·
Share