Saturday, 13 June 2015

யான் காப்லின்ஸ்கி
கிழக்கு ஐரோப்பிய நவீன கவிஞர்களில் தனித்த இடத்தைப் பெறுகிறார். 1996 ஆம் ஆண்டுக்கான நோபல் விருது பெறும் கடைசிப் பட்டியலில் காப்லின்ஸ்கியின் பெயர் இருந்திருக்கிறது. பிரசித்தமான எஸ்டோனிய நடனக் கலைஞரின் மகனாக 1941ஆம் ஆண்டு டார்த்து என்ற கிழக்கு ஐரோப்பிய நகரத்தில் பிறந்தவர். அவருடைய தாயார் எஸ்டோனியாவைச் சேர்ந்தவர். மாறாக ஸ்டாலினிச உழைப்பு முகாம்களிலிருந்து, காப்லின்ஸ்கி குழந்தையாக இருக்கும் போதே காணாமல் போன அவருடைய தந்தை, போலந்து நாட்டைச் சேர்ந்தவர். காப்லின்ஸ்கியின் கவிதைகள் மீதான பிரதான பாதிப்புகளாகத் தென்படுபவை ரஷ்யக் கவிதைகளும் ஆங்கில ரொமாண்டிக் கவிதைகளும். காப்லின்ஸ்கி டார்த்து பல்கலைக் கழகத்தில் மொழியியல், மானுடஆய்வியல், சூழல் சமன்இயல் ஆகிய துறைகளில் படித்துப் பட்டம் பெற்றார். ஸ்பானிய, ஆங்கில, போலந்து, ஸ்வீடன், ரஷ்யக் கவிஞர்களின் கவிதைகளை எஸ்டோனிய மொழிக்கு மொழிபெயர்த்து அறிமுகம் செய்திருக்கிறார். ட்டி.எஸ்.எலியட்டின் மரீனா கவிதையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆனால் எலியட்டினுடையதைப் போல அன்றி காப்லின்ஸ்கியின் கவிதைகள் கிராமங்களையும் இயற்கைûயும் சார்ந்தியங்குபவை. கவிதை எழுதுவது என்பது ரகசியமான ஒரு வேலை என்றும் அது பற்றித் தனக்கு ஒரு தர்மசங்கடமான உணர்வு இருக்கிறது என்றும் கவிதை எழுதாதது போல இருந்து கொண்டுதான் எப்போதும் அவர் எழுதி வந்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். உரைநடை எழுத்தாளனுக்கு கவிஞனை விடவும் கூடுதலான வெளிப்படை அணுகுமுறை சாத்தியங்கள் இருக்கின்றன என்கிறார்:
_________________________________________________________________
யான் காப்லின்ஸ்கி
ஒரு படகினைத் தீட்ட
நீ தண்ணீரைத்
வரைய வேண்டியதில்லை
ஒர புன்னகையைத் தீட்ட
நீ ஒரு முகத்தினைத்
தீட்டத் தேவையில்லை
மலர்வினைத் தீட்ட
நீ ஒரு மலரைத்
தீட்டத் தேவையில்லை
மேலும் நீ சொல்லலாம்
உலகின்அளப்பரிய எடையின்மையிலிருந்து
ஒரு தூசியை நீ தாங்க வேண்டியிருந்ததென்று.
(0)