பனிக்காலத்தில் எரிகிறேன், கோடையில் உறைகிறேன்.................
இது காதலாக இல்லாதிருப்பின் , பிறகு இது வேறென்ன ?
ஆனால்; இதுவே காதலெனில் ,
இறைவனே , காதல் எதுவாயிருக்கும்?
நன்றெனில், எனகேன் இம்மாளுதலின் கசப்புணர்வு?
தீதெனில், பின் ஏனிந்த இனிமை வதைகளானது?
ஆனால்; இதுவே காதலெனில் ,
இறைவனே , காதல் எதுவாயிருக்கும்?
நன்றெனில், எனகேன் இம்மாளுதலின் கசப்புணர்வு?
தீதெனில், பின் ஏனிந்த இனிமை வதைகளானது?
நான் விருப்புற்று எரியுண்டால்,ஏனிந்த கையறவு பாடல்கள்,
விருப்பற்றிருப்பின், அழுதலில் என்ன பொருளுண்டு?
ஓ, உயிர்த்திருக்கும் மரணமே, களிமிகுந்த மரணத்துயரே,
இசைவின்றி நீ இத்துனையும் எப்படி நிகழத்துவாய்.
விருப்பற்றிருப்பின், அழுதலில் என்ன பொருளுண்டு?
ஓ, உயிர்த்திருக்கும் மரணமே, களிமிகுந்த மரணத்துயரே,
இசைவின்றி நீ இத்துனையும் எப்படி நிகழத்துவாய்.
நான் பிழையுற இசைந்தால் , துன்புறுவேன்
அத்தகைய துர்காற்றில் வலுவிழந்திருக்கும்
என் மரப்பட்டைகள் வீசப்பட்டு சிதையும்,
திறந்த கடல்வெளியில் திசையற்று அலைக்கழிந்திருப்பேன்.
அத்தகைய துர்காற்றில் வலுவிழந்திருக்கும்
என் மரப்பட்டைகள் வீசப்பட்டு சிதையும்,
திறந்த கடல்வெளியில் திசையற்று அலைக்கழிந்திருப்பேன்.
ஞானத்தின் ஒளியில் , பிறழ்தல் ஆழ்ந்து கீழறங்கியிருக்க,
எதனில் அவாவுற்றிருக்கிறேன், நான் அறிந்திருக்கவில்லை,
பனிக்காலத்தில் எரிகிறேன், கோடையில் உறைகிறேன்.
எதனில் அவாவுற்றிருக்கிறேன், நான் அறிந்திருக்கவில்லை,
பனிக்காலத்தில் எரிகிறேன், கோடையில் உறைகிறேன்.
-Petrarch -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
News Feed
ஒரு வியப்பார்ந்த தேவதை
தன் துரித-சிறகுகளுடன் வானிலிருந்து இறங்கினாள்
குளிருறிய ஆற்றின் பக்கமாய்
தனிமையிலாழ்ந்து நடையிடல் என் ஊழாகியுள்ளது.
தன் துரித-சிறகுகளுடன் வானிலிருந்து இறங்கினாள்
குளிருறிய ஆற்றின் பக்கமாய்
தனிமையிலாழ்ந்து நடையிடல் என் ஊழாகியுள்ளது.
நண்பனற்றும், வழிகாட்டியின்றியும் திக்கற்று உழன்றேன்
இதை கண்ணுற்று,
பாதையை பச்சையமாக்கிய புல்விரிப்பின் மீது
ஒரு பட்டு பொறியை பதித்தாள்.
இதை கண்ணுற்று,
பாதையை பச்சையமாக்கிய புல்விரிப்பின் மீது
ஒரு பட்டு பொறியை பதித்தாள்.
பின் நானதில் அகப்பட்டேனா,
பிறகு கவனமழிய ,
அதி-வெண்மையூறிய ஒளியால்
அவளது விழிகள் தகதகத்து மிளிர்ந்தன.
பிறகு கவனமழிய ,
அதி-வெண்மையூறிய ஒளியால்
அவளது விழிகள் தகதகத்து மிளிர்ந்தன.
-Petrarch -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
யாரால் பசும்புல்வெளியை அறிந்துணர முடியும்?
பசும்புல்வெளி வளர்கின்றன.
தன்னுள் பசும்புல்வெளிகளுக்கு
புகலளித்தவனை கடுந்துயர் கவ்வுகிறது.
தன்னுள் பசும்புல்வெளிகளுக்கு
புகலளித்தவனை கடுந்துயர் கவ்வுகிறது.
பசும்புல்வெளி எவ்வாறு வளரும்?
எப்படி வளருமென்பதை யோசிக்கவும் கூடவில்லை.
மாபெரும் கலைஞன் ஆர்பும்தான்.
நாணல் இதழ்களை துளிர்க்கிறது.
பசும்புல்வெளி தன் இதழ்களை வானுயற உயர்த்துகிறது.
எப்படி வளருமென்பதை யோசிக்கவும் கூடவில்லை.
மாபெரும் கலைஞன் ஆர்பும்தான்.
நாணல் இதழ்களை துளிர்க்கிறது.
பசும்புல்வெளி தன் இதழ்களை வானுயற உயர்த்துகிறது.
காற்று காற்றை கிளர்த்துகிறது.
புல்லிதழ் வேட்கையை நடுங்கி அதிரச் செய்கிறது.
சூரியன் புல்லிதழ்களை ஒளியேற்றுகிறது.
எனது நீலத்தை சூரியன் உருவூட்டுகிறது.
நிலத்தின் நறுமண அலை கமழ்ந்து பரவுகிறது.
யாரால் வளர்க்க இயலும்?
புல்லிதழ் வேட்கையை நடுங்கி அதிரச் செய்கிறது.
சூரியன் புல்லிதழ்களை ஒளியேற்றுகிறது.
எனது நீலத்தை சூரியன் உருவூட்டுகிறது.
நிலத்தின் நறுமண அலை கமழ்ந்து பரவுகிறது.
யாரால் வளர்க்க இயலும்?
யாரால் பசும்புல்வெளியை அறிந்துணர முடியும்?
நான் பசுபுல்வெளியை கனவுறுகிறேன்.
நான் பசுபுல்வெளியை கனவுறுகிறேன்.
-Kurt Schwitters -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)