நீ இங்கிருந்திருந்தால் , அன்பே
நீ இங்கிருந்திருந்தால்
அந்த சோபா மீது நீ அமரந்திருந்தால்
நான் உன்னருகே அமர்வேன்
கைக்குட்டை உன்னுடையதாக இருக்கலாம்
கண்ணீர் எனக்குரியது,அது தாடையில் வழிந்திருக்க
இருப்பினும்
அது இன்னொருவிதமாகவும் இருக்கலாம்.
நீ இங்கிருந்திருந்தால் , அன்பே
நீ இங்கிருந்திருந்தால்
எனது காரில் நீயிருக்க விரும்புகிறேன்
நீ கியரை மாற்றுகிறாய்
நாம் வேறெங்கோ இருப்பதாக உணருகிறோம்,
முன்-அறியா கரையொன்றிலிருக்கிறோம்
அல்லது
இதற்கு முன்பெங்கிருந்தோமோ
அங்கு நம்மை இணைத்துக் கொள்கிறோம்.
நீ இங்கிருந்திருந்தால்
எனது காரில் நீயிருக்க விரும்புகிறேன்
நீ கியரை மாற்றுகிறாய்
நாம் வேறெங்கோ இருப்பதாக உணருகிறோம்,
முன்-அறியா கரையொன்றிலிருக்கிறோம்
அல்லது
இதற்கு முன்பெங்கிருந்தோமோ
அங்கு நம்மை இணைத்துக் கொள்கிறோம்.
நீ இங்கிருந்திருந்தால் , அன்பே
நீ இங்கிருந்திருந்தால்
நட்சத்திரங்கள் தோன்றும் கணம்
வான்சாத்திரம் அறியாதிருக்கவே விரும்புகிறேன்
நிலா நீரை கடைந்திடும் தருணத்தில்
பெருமூச்செறிந்து ஆழ்-உறக்கத்தில் பெயர்கிறது
உன்தொலைபேசி எண்ணில் அழைக்க
இன்னும் கால்மணிநேரமிருந்தால்.
நீ இங்கிருந்திருந்தால்
நட்சத்திரங்கள் தோன்றும் கணம்
வான்சாத்திரம் அறியாதிருக்கவே விரும்புகிறேன்
நிலா நீரை கடைந்திடும் தருணத்தில்
பெருமூச்செறிந்து ஆழ்-உறக்கத்தில் பெயர்கிறது
உன்தொலைபேசி எண்ணில் அழைக்க
இன்னும் கால்மணிநேரமிருந்தால்.
நீ இங்கிருந்திருந்தால் , அன்பே
நீ இங்கிருந்திருந்தால்
உலகின் இந்த அரைவட்ட கோளத்தில்
தாழ்வாரத்தில் நான் அமரந்திருக்க
பீரை சிறிது சிறிதாக பருகியபடி
மாலையாகிறது, சூரியன் அஸ்தமிக்கிறது
சிறுவர்கள் ஆராவாரிக்க கடற்பறவைகள் அழுகின்றன
மறந்துபோதலின் பொருளென்ன
அதனைத் தொடர்ந்து சாதல் நிகழும்போதும் .
நீ இங்கிருந்திருந்தால்
உலகின் இந்த அரைவட்ட கோளத்தில்
தாழ்வாரத்தில் நான் அமரந்திருக்க
பீரை சிறிது சிறிதாக பருகியபடி
மாலையாகிறது, சூரியன் அஸ்தமிக்கிறது
சிறுவர்கள் ஆராவாரிக்க கடற்பறவைகள் அழுகின்றன
மறந்துபோதலின் பொருளென்ன
அதனைத் தொடர்ந்து சாதல் நிகழும்போதும் .
-Joseph Brodsky-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
சருமத்திற்கெதிராக நீலம் காட்டுகிறது...............
அன்மைக் காலமாக நான்
காலை வேளைகளிலும் கூட.
நேரம் கடந்தே துயில்கிறேன்.
என் மரணம் ,
என்னை பரிட்சித்தும் -சோதித்தும் பார்ப்பதாக
எனக்குத் தோன்றுகிறது,
காலை வேளைகளிலும் கூட.
நேரம் கடந்தே துயில்கிறேன்.
என் மரணம் ,
என்னை பரிட்சித்தும் -சோதித்தும் பார்ப்பதாக
எனக்குத் தோன்றுகிறது,
சிறிதும் அசையாது சுவாசிக்கும்
எனது இதழ்களுக்கருகே
ஒரு ஆடியை வைக்கிறது,
இருத்தலின்மையை பகலில்
என்னால் சகிக்க கூடுமாவென பார்க்கிறது.
எனது இதழ்களுக்கருகே
ஒரு ஆடியை வைக்கிறது,
இருத்தலின்மையை பகலில்
என்னால் சகிக்க கூடுமாவென பார்க்கிறது.
நான் கொஞ்சமும் நகரவில்லை.
என்னிரு தொடைகளும் பனிப்பாளங்களாகின்றன.
கிளைத்து செல்லும் ரத்தநாளங்கள்
பளிங்கு வெண் சருமத்திற்கெதிராக
நீலம் காட்டுகிறது.
என்னிரு தொடைகளும் பனிப்பாளங்களாகின்றன.
கிளைத்து செல்லும் ரத்தநாளங்கள்
பளிங்கு வெண் சருமத்திற்கெதிராக
நீலம் காட்டுகிறது.
-Joseph Brodsky-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
கனிந்த பள்ளத்தாக்கை அடைய வேண்டும்..................
நான் எதுவாகயிருக்கிறேன் என கேட்காதே
நான் ஏதுமின்மை,
எதையும் பிரதிநிதித்துவபடுத்தி நிற்கவில்லை.
நான் ஏதுமின்மை,
எதையும் பிரதிநிதித்துவபடுத்தி நிற்கவில்லை.
என் களிப்பை விடுத்து
எதையுமே அறிந்திருக்க்வில்லை.
அதை நான் ஈட்டவில்லை-
அதை பற்றிக் கேட்காதீர்கள்.
எளிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்
அது வளமையில் ஆழ்ந்திருக்கிறது.
எதையுமே அறிந்திருக்க்வில்லை.
அதை நான் ஈட்டவில்லை-
அதை பற்றிக் கேட்காதீர்கள்.
எளிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்
அது வளமையில் ஆழ்ந்திருக்கிறது.
சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக
இலக்கினை அடைந்தாக வேண்டும்,
அவளின்றி
நான் துரிதமுற்றிருக்கிறேன்
ஆனால் பிறழ்வாய் கணித்திருக்க,
இலக்கினில் மாளா ஏக்கமுற்றிருக்க
பல மணிநேரம் சுமையானது.
பாலை தரிசுவெளி கடந்து
மென்மையுற்று கனிந்த பள்ளத்தாக்கை அடைய வேண்டும்.
இலக்கினை அடைந்தாக வேண்டும்,
அவளின்றி
நான் துரிதமுற்றிருக்கிறேன்
ஆனால் பிறழ்வாய் கணித்திருக்க,
இலக்கினில் மாளா ஏக்கமுற்றிருக்க
பல மணிநேரம் சுமையானது.
பாலை தரிசுவெளி கடந்து
மென்மையுற்று கனிந்த பள்ளத்தாக்கை அடைய வேண்டும்.
-Paul Klee -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
இன்று காலை, உன் ஞாபகம்
கண்ணாடியின்மேல் படிந்த சுவாசமாய் கரைகிறது
கண்ணாடியின்மேல் படிந்த சுவாசமாய் கரைகிறது
குளிர்ந்த மெலிய கயலாய்
உன் வாயின் இருன்மையான துவாரத்தினுள் கரைகிறது
உன் வாயின் இருன்மையான துவாரத்தினுள் கரைகிறது
உறைபனியில் கரையும் வெம்மைபோல்
இதயம் துடிப்பற்றுப் போக
இயக்கமற்றிருத்தலில்
பனிக்கட்டி
இதயம் துடிப்பற்றுப் போக
இயக்கமற்றிருத்தலில்
பனிக்கட்டி
இறுக்கத்தினுள் அதிர்ச்சியுறாது
மிகையாக காணும் சுவர்களைப் போல்
ஒரு நிரந்திர வளைவினுள் இடம் பெயர்கிறது
மிகையாக காணும் சுவர்களைப் போல்
ஒரு நிரந்திர வளைவினுள் இடம் பெயர்கிறது
சோகமுறும்,
வெறுமையைச் சுற்றி
இணைவில் மடக்கப்படும் கரங்கள்.
வெம்மை சிறிதேனுமின்றி.
வெறுமையைச் சுற்றி
இணைவில் மடக்கப்படும் கரங்கள்.
வெம்மை சிறிதேனுமின்றி.
ஞாபகம் பேச்சிலிருந்து
தனியாக பிரிந்து வேறுபட்டிருக்க-
நெடும் தொலைவாய்
பனிவெளியிலிருந்து தனிமையடைய ,
தனியாக பிரிந்து வேறுபட்டிருக்க-
நெடும் தொலைவாய்
பனிவெளியிலிருந்து தனிமையடைய ,
சுவர்களிலிருந்து கிளம்பும் எதிரொலியாய்,
குளிர்மையிலிருந்து எதிர்த்து மீள,
குளிர்மையிலிருந்து எதிர்த்து மீள,
நீர்
விரல்களின் மிது
பனிக்கட்டியாக மாற்றமுறுகிறது
விரல்களின் மிது
பனிக்கட்டியாக மாற்றமுறுகிறது
இன்னுமொரு கூடுதலான பரிமாணத்தை கூட்ட
தசைக்கு - இன்னும் ஓர் தடை
தொடுதலின் உணர்விடையே
தசைக்கு - இன்னும் ஓர் தடை
தொடுதலின் உணர்விடையே
உருகி இளகிய நீரல்ல
அது ஆழ்பிளவு
அது ஆழ்பிளவு
அந்தப் பனிப்பாறை
இனி கரையப் போவதில்லை
இனி கரையப் போவதில்லை
அது வார்த்தைகளின் நுனியை உறைய செய்கிறது,
வளர்வின்மையுள்
இந்த அசைவுறா காலைப் பொழுதின்
கனமான பாய்ச்சல்
அது
இதனினும் ஆழ்- அமைதியுள் உறையாது,
வளர்வின்மையுள்
இந்த அசைவுறா காலைப் பொழுதின்
கனமான பாய்ச்சல்
அது
இதனினும் ஆழ்- அமைதியுள் உறையாது,
இதனினும் சோககவியும் புன்னகையால்
துயரத்தைப் பிரதிபலிக்கவியலாது,
துயரத்தைப் பிரதிபலிக்கவியலாது,
இதைக்காட்டிலும் மிகையாய் கரையாது.
-Vivienne Finch-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)