Monday, 15 June 2015

நேசனின் கவிதை


Kandsamy Kamal
19 hrs ·

கல்குதிரையில் வந்த ‪#‎நேசனின்‬ இவ் கவிதை..... எனது பல இரவுகள் இந்த கவிதையின் ஊடாக என் நினைவில் உதிர்ந்தன....

உதிராத தொரு
கருகிய கயிறு போலும்
ஒரு சாம்பல் சிகரெட் போலும்
அத்தனை பலவீன இரவு
இருக்கிறது அவன் முன்னால்
மெல்லியது அவன் முன்னால்
மெல்லியதொரு காற்றோ அசைவோ
சிதைத்து விடக்கூடிய மென்மையுடன்
அதில்தான் அவன்
காதல் குறித்த
கடுமையான மனநிலைகள்
உருவாகியிருந்தன
சிறு அசைவோ பெரும்மூச்சோ
கூட இல்லாமல்
அத்தனை லேசில் ஒருவன்
காதலைக்குறித்த
எண்ணங்களில் மூழ்கியிருந்து
விட
முடியும்.
கண்டிப்பாக எனினும்
எரியும் அந்த இரவு
உதிரத்தான் போகிறது
விட்டு விடலாம் எந்த பரிதாபமும்
இல்லாமல் அந்த இரவை
ஒரு காதல் உதிர்ந்து
போவதை காட்டிலும்
அத்தனை கொடூரமானதா
என்னவோர் இரவு
உதிர்ந்து போவது.