Thursday, 11 June 2015


அவன் உள்ளே வந்தபோது, அவள் அங்கிருந்தாள்.
அவள் அவனை நோக்கியதும்
அவன் சிறுநகை செய்தான்.
நிலைபேற்றின் கரையில்
உடையும் காலத்தின் அலையிடையே 
ஒளிதீபங்கள் உள்ளன.
ஒரு மேசையருகில் அமர்ந்திருக்க
அறையுள் நிரம்பியிருக்கும்
நிசப்தம் முறிவதற்கான தேவை எழவில்லை.
சப்தம் துறந்து அவர்கள் உரையாடினர்.
சிந்தை இசைவுற ஒளியெழுகிறது
மனதின் ஆற்றோட்டத்தில் பொற்-துகள் .
அவர்களுக்கிடையே ஈர்ப்பின் மின்னோட்டம் ஏதுமில்லையா?
பின் ஏன்?
அவன் இருன்மையாய் யோசிக்கையில்
அவளது இதழின் ஒரங்களில் நரம்புகள் ஆடிக்களித்தன?
இதய ஆழத்தின் நுண்மையென்ன?
அவளிடமும் ஆழங்கள் நிறைந்திருந்தன
சில தருணங்களில் - அவன்
அவைகளைக் கடந்து தரையிறங்கியிருக்கிறான்.
எனினும் மறுதலிக்கப்பட்டதில்லை.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
பறவைகளின் குரலிசை பொழிவில்
நாம் சந்தித்துக் கொண்டோம்.
ஐம்பதாண்டுகள் அழிந்தன
நேரத்திற்கு அடிமையாகும்
இந்த உலகத்தில்
காதலின் கணம்.
அவள் இளமையோடிருந்தாள்
திறந்தும் மூடியும் அவளது சுருக்கங்களில்
என் விழிகளால் முத்தமிட்டேன் .
தனது இறுதி நடத்திற்கான துணையாய் ,
மரணம் அவளை வா என்றழைத்தது
ஒரு பறவையின் அருளோடு, தன் வாழ்வில்
எல்லாவற்றையும் நிறைவாய் செய்திருந்தாள்.
அவள் தன் அலகை திறந்தாள்
இறகினும் லேசான
ஒரு பெருமூச்சை உதிர்க்க.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
நான் காயத்துடன் இங்கேயே தங்கியிருக்க வேண்டும்................
நான் இப்போது ஒரு மனிதனாயிருக்கிறேன்
எனது புருவங்களின் மீது
உனது கரங்களை கடக்கவிடு,
மூளை வளருமிடத்தை உன்னால் உணரமுடியும்.
நான் ஒரு மரத்தை ஒத்தவன்,
என்னிடம் வந்தடைய செய்யும் காலடித்தடங்களை
எனது மேலுயர்ந்த கிளைகளிலிருந்து காணவியலும் .
எனது நரம்புகளில் குருதி நிறைந்துள்ளது
கறையுறுதலற்று தெளிதாய் ஓடுகிறது
பல தண்டுலெம்புகள் இடையே குறுகியுள்ளது.
பின் எதற்காக; எனது கரங்கள் சிவந்திருக்கின்றன
மரித்தோர் பலரின் குருதியுடனிருக்க?
நான் தடமாறியது இங்குதானோ என்னவோ ?
எனது கரங்கள் ஏன் இவ்வாறிருக்கின்றன
நான் உரைப்பதை அவர்கள் வினையாற்ற மாட்டார்கள்?
நான் பிராத்திப்பதை எந்த கடவுளும் செவிமடுப்பதில்லை?
நான் செல்ல இடமேதுமில்லை
என் முழு-இருத்தலின் கடிகாரம் தொய்ந்திருப்பதை
வேகமுறும் செயற்கைக் கோள்கள் காண்பிக்கின்றன.
துவங்குவதற்கான காலம் தாமதமடைந்துள்ளது.
சென்றடையும் இடமும் இதயத்தினுடையதல்ல
நான் காயத்துடன் இங்கேயே தங்கியிருக்க வேண்டும்.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
பாறையிலுள்ள கவிதையும்
மனதிலுள்ள கவிதையும்
ஒன்றல்ல
மரித்தலில்
அவைகளை 
அவ்வாறாக்க நான் முயன்றேன்.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
எப்போதும் அதே மலைகள்
அடிவானை நெரிசலடைய செய்கிறது
அசைவற்ற காட்சியின்
தொலைதூர சாட்சியங்களாக.
முற்புறத்தில் அங்கு
நெடிதுயர்ந்த சிலுவை
வசிப்போரற்றும், துயருற்றும்,
உடலிற்காக வதையுறுகிறது
அது மீண்டும்
கன்னியின் கரங்களிலுள்ள தூளிக்கு திரும்புகிறது.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


மலைகளைக் குறித்து வாதிடுதல் பயனற்றது,
நீங்கள் அங்கு சென்றிருக்கலாம் அன்றி செல்லாதிருக்கலாம்.
பாதிவழியில் கண்ணுற்ற காட்சி யாருடைய காட்சியுமல்ல.
மலர்களில் மேன்மையான மலர்கள் பெரும்பாலும் மலையுச்சியிலிருக்கின்றன,
பாறைகளின் முகட்டின் கீழ், காற்றால் பேணப்பட்டிருக்கின்றன.
முகர்தலின் நல்லுணர்வு இங்கு முக்கியதுவமற்றிருக்கிறது.
சமன்பாட்டின் உணர்வைக் காட்டிலும் ,
மேகங்களின் மீது நடந்து
அதன் துளைகளினுடாக நாம் இவ்வுலகைக் காணலாம்
தனவான் ஒருவன் ஊசிதுவாரத்தின் ஊடாக கடக்க.
கண்டுணர-
மனம் தனக்கென ஒரு சமனை கொண்டிருக்கிறது.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

உன்னால் கற்பனையுற்றவை எதுவாயினும்
அது நடந்தேறியுள்ளது.
பேசா வார்த்தையென ஏதுமில்லை,
வினையேதும் அற்றிடவில்லை,
பூசை-கிண்ணத்தில் வைன் நஞ்சாகியுள்ளது
சடலங்கள் வன்புணர்வுற்றிருக்கிறது.
ஏசாயாவின் தேவதை
இருமருங்கிலும் -
அவனது வெம்மையுற்றிருக்கும் கரியுடன் பறக்கிறது.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

நிலவொன்று பிறக்கிறது
குழவியொன்று ஜனிக்கிறது,
நிலா மேகங்களுக்கிடையில் இருப்பதை போல்,
வெண்மயான துணியில் கிடத்தப்பட்டிருக்கிறது.
அவையிரண்டுமே ஜொலிக்கின்றன
ஆனால்,
ஒன்றிலிருந்து எழும் ஒளி,
உடைந்து நொறுங்கிய கண்ணாடியின் நடுவிலிருப்பதை போல்
பிரபஞ்சத்திற்கப்பாலிருக்கிறது.
-R.S.Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)