Monday, 29 June 2015

-Frantisek Halas - (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)


என்னால் சாபத்தை கவிதையாக உருமாற்றவியலும்
யாருக்கு நான் நன்றியறிவிக்க
முதிர்ந்திரா மற்றும் செறிந்த காலைப் பொழுதில்
யாருக்கு நான் நன்றியறிவிக்க


யாராலும் என்னை காணாபுலத்தினில்
இரகசியமாய் கனிந்தேன்
என் பிறப்பிட துயிலை நான் விடுத்து அகலவேண்டும்
முதுகுபுறமாய் சொர்க்கத்தின் கதவுகள் சாத்தப்பட்டன
நானறிந்த நிலம் வீணிலழிய கிடத்தப்பட்டுள்ளது

எனது அவலத்தையும் பிறனது உளத்துயரையும்
குழப்பத்திலாழ்த்தும் திறன் எனக்குண்டு
இழத்தலில் தேர்ந்தவனிடம் பயனில் பாடல்களை
நாளை எதிர்நோக்கியிருங்கள்.

-Frantisek Halas -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)








மகிழ்விலிருந்து புலம்பெயர்க்கப்பட்டேன்
அந்த இல்லம் என்னுடையதன்று
கனவின் விதைப் பயறுகளை
பகைமையுற்ற நகரத்தின் சுவர்கள் மீது எறிகிறேன்.
நான் நோக்குமிடமெல்லாம் அடரிருள்
நானொரு முள்ளம்பன்றியை காண்கிறேன்
நிலைபேறுடன் ஒவ்வொரு முள்ளின் கொட்டுதலுமிருக்க


ஓ என் முகத்தை சொந்தமாக்கிக் கொள்ளாதே
இது பிறிதொருவன் நெய்த முகத்திரை
நான் இரவலடைந்தேன்
என் பின்புற பெருவட்டியாளன்
பிணக்கிடங்கிலிருந்து களவிட விரும்புகிறான்
பிறனது கடன்களை நான் கண்டேன் - செலுத்திவிட-
முகங்களில் தோய்ந்த நகைப்பே இறுதி நிஜம் .

இழை இழையாக , அச்சமில்லாது,
முகத்திரையாயிருந்ததை நான் அவிழ்க்கிறேன்
காலத்தின் ஏமாற்றும் வஞ்சக சதியை நான் ஊடுருவியறிகிறேன்
என் குருதியை வட்டியாய் ஈந்திடேன் ஏனெனில்
என்னுடலம் காலத்தினது,வட்டி அவ்வாறன்று.

-Frantisek Halas -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



There's never one sunrise
the same or
one sunset the same.

-Carlos Santana-