க. மோகனரங்கன் shared கடல் புக்ஸ்'s photo.
7 hrs ·
ஃபெர்னான்டோ பெசோவா
காலடி ஓசைகள் தயங்கி மறைகின்றன.
நிலா ஒளிக்கும் நிலா ஒளிக்கும் இடையே
காலடி ஓசைகள் புற்களில் தயங்கி மறைகின்றன.
எல்லாம் வாசனை மற்றும் கானகம்.
அது உணர்கிறது யாரோ ஒருவர் கடந்து செல்வதாய்.
கடந்து செல்லல்கள், லேசாக அடியெடுத்து வைத்தபடி
நிலம் தொட்டு நிலா சொல்லாது விட்டது,
ஒரு வெளிறிய மிடறில், அந்த லேசான அடிவைப்பின்
கனமின்மையை.
அது குறும்புத் தெய்வமா, குறளித் தெய்வமா, அல்லது தேவதையா,
எவரும் உட்காணாத வடிவமா?
நான் நினைவுகொள்கிறேன்ஙி எதுவுமே அங்கிருக்கவில்லை.
நான் உணர்கிறேன், மேலும் ஏக்கம் நம்புகிறது.