Thursday 4 June 2015

Keeping quiet - பாப்லோ நெருடா தமிழில் வ.கீதா

Lakshmi Manivannan liked this.
Keeping quiet by pablo Neruda...
இனி நாம் பன்னிரண்டு வரை எண்ணுவோம்
அனைவரும் அசைவின்றி இருப்போம்
இந்த பூமியில்
இந்த ஒரு முறையாவது
எந்த மொழியிலும் பேசாமல் இருப்போம்
ஒரு நொடியாவது-
கரங்களை ரொம்பவும் அசைக்காமால் -
அத்தகைய தருணமானது அலாதியானதாக இருக்கும்
அவதிஅவதி என்றில்லாமல், இஞ்சின்களால் இயக்கப்படாது
நாம் எல்லோரும்
திடீரென்று ஏற்பட்ட விநோதத்தில்
உடன்இருப்போம்
குளிர்க்கடலிலுள்ள மீனவன்
திமிங்கலங்களை துன்புறுத்த மாட்டான்
உப்பை திரட்டுபவன்
காயப்பட்ட தனது கைகளை பார்ப்பான்
பசுமைப் போர்களை தயாரிப்பவர் -
எரிவாயுவுடனான போர்கள், தீயுடனானவை
யாருமே உயிரோடு எஞ்சாது போன வெற்றிகளை தயாரிப்பவர் -
சுத்தமான ஆடைகளை அணிந்து
தங்களது சகோதரர்களுடன் நடப்பார்கள்
எதுவும் செய்யாமல்
ஏதும் செய்யாமலிருக்கும் செயலற்ற நிலையுடன்
நான் விரும்பும் இவற்றை சேர்த்து
குழப்பிவிடவேண்டாம்
இது வாழ்தல் பற்றியது
மரணம் சம்பந்தப்பட்ட எதுவும் எனக்கு வேண்டாம்
நமது வாழ்க்கையை எப்படியேனும் நகர்த்திச் சென்றே ஆக வேண்டும்
என்ற ஒற்றை கருத்தில் லயிக்காமல்
ஒரு முறையாவது எதுவும் செய்ய இயலாதிருந்தால்
நம்மை நாமே புரிந்து கொள்ள முடியாத
இந்த சோகத்தில்
பெரும் மௌனம் ஒன்று
ஒரு வேளை குறுக்கிடலாம்
இந்த பூமியும் ஒரு வேளை
நமக்கு பாடம் கற்பிக்கலாம்
மரித்தாற் போல் இருந்த அனைத்தும்
உயிரோடு இருப்பது உறுதிப்படுவது போல
இனி நான் பன்னிரண்டு வரை எண்ணுகிறேன்
நீ பேசாமல் இரு, நான் செல்கிறேன்.
பாப்லோ நெருடா
தமிழில் வ.கீதா